Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 19 மார்ச், 2022

மக்கள் அவதி… சென்னையில் இந்த 5 டோல்கேட்களை அகற்றுங்க!’ தமிழக அரசு அழுத்தம்

  சென்னையின் புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு (MORTH) தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையில் அமைந்துள்ள நல டோல் பிளாசாக்கள், அப்பகுதயில் வசிக்கும் மக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என தெரிவித்துள்ள அமைச்ர் எ.வ.வேலு அந்த டோல் பிளாசாக்களை விரைவல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார்.

இதில் செங்கல்பட்டு, சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர்,  திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட சில திட்டங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வேலு வலியுறுத்தினார்.

மேலும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைசசர் எ.வ.வேலு, மாதாவரம் சந்திப்பு சென்னை வெளிவட்ட சாலை மற்றும் கோவை சத்தியமங்கலம் ஆகிய சாலைகளை 6 வழி சாலைகளாக மாற்ற வேண்டும் என்றும், திருச்சி துவாக்குடி மற்றும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே உயர் மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மாநில அரசு என்எச்ஏஐ (NHAI) ஒப்பந்ததாரர்களுக்கு மின்கம்பங்களை மாற்றுவதற்கும், வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOCS) பெறுவதற்கும் மற்றும் நிலம் கையகப்படுத்தும் செயல்பாட்டில் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-letter-to-union-minister-for-toll-gate-closed-request-426738/