Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 12 ஜூன், 2022

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

 


12 6 2022 தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், வரும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 43 லட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 1 கோடியே 20 லட்சம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் நடைபெறும் முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/mega-vaccination-camp-across-tamil-nadu-today.html