Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 5 அக்டோபர், 2022

18 குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இயக்கத்தை தடை செய்ய வேண்டும்

 4 10 2022

மௌனம் காத்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பு, நீலச் சட்டை அணிந்து நடமாட முடியாது: திருமாவளவன் எச்சரிக்கை

Tamil Nadu News: 18 குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்துகிறார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

பாப்புலர் பிராண்ட் அப் இந்தியா என்ற ஒரு இயக்கத்தை அரசு தடை செய்திருக்கிறது. காரணம் என்னவென்றால் பயங்கரவாத இயக்கத்தினுடன் தொடர்பில் இருக்கிறார்கள், அந்த இயக்கமே ஒரு பயங்கரவாத இயக்கம் என்று கூறினார்கள்.

அப்படியென்றால், 18 குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஏன் இன்னும் தடை செய்யவில்லை”, என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், “தமிழ்நாட்டில் இது போன்ற கேள்வி எழுப்பவேண்டும். நாம் வழக்கம் போல் மௌனம் காத்தால், பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கருப்பு சட்டை, நீலச்சட்டை, மற்றும் சிவப்பு சட்டை போட்டு நம்மால் நடமாட முடியாது. நான் அச்சுறுத்திகிறேன் என்று எண்ணிவிட வேண்டாம். எதையும் யூகிக்காமல் ஆதாரத்துடனே கூறுகிறேன்”, என்று கூறுகிறார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/viduthalai-siruthaigal-party-leader-thirumavalavan-warns-about-rss-520261/