Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 22 ஜூன், 2023

இரவு 12 மணிக்கு மேல் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு: உதவி எண்களை அறிவித்த தமிழக போலீஸ்

 21 6 23

women safety

பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 1091, 112 ஆகிய எண்களுக்கு அழைத்தால் ரோந்து வாகனம், பெண்களை இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 044-23452365 & 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம்.

காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

அனைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும்”, என்று அறிவித்துள்ளனர்


source https://tamil.indianexpress.com/tamilnadu/women-helpline-introduced-by-tamil-nadu-police-announcement-702613/