நாட்டின் வெப்ப அபாய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு: வெளியான ஷாக் ரிப்போர்ட்! 2 6 2025
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water - CEEW) நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, வெப்ப ஆபாயம் மிக அதிகமாகவுள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்கள் உயர்ந்த வெப்ப நிலையால் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன.
உண்மையில், தமிழ்நாட்டின் எந்த மாவட்டமும் மிகக் குறைந்த அல்லது குறைந்த வெப்ப அபாய வகைகளின் (very low or low heat risk categories) கீழ் வரவில்லை. சுமார் 11% மாவட்டங்கள் மிதமான வெப்ப அபாயத்தையும் (moderate heat risk), 43% மாவட்டங்கள் அதிக அபாயகரமானவை (high risk) எனவும், 46% மாவட்டங்கள் மிக அதிக வெப்ப அபாய வகையிலும் (very high heat risk category) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் பெரும்பகுதி கடுமையான மற்றும் பரவலான வெப்ப பாதிப்பை (severe and widespread heat vulnerability) எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.