Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 3 ஜூலை, 2025

ஐஐடி மெட்ராஸில் 10 புதிய சான்றிதழ் படிப்புகள்: பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!

 

ஐஐடி மெட்ராஸில் 10 புதிய சான்றிதழ் படிப்புகள்: பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!

iit madras

ஐஐடி மெட்ராஸில் 10 புதிய சான்றிதழ் படிப்புகள்: பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!

ஐ.ஐ.டி. மெட்ராஸ் (IIT Madras) School Connect Programme மூலம் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் 10 புதிய சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக 2 படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புதிய படிப்புகள் அனைத்தும் 8 வார கால அவகாசத்துடன் வழங்கப்பட உள்ளன.

என்னென்ன புதிய படிப்புகள்?

10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்தப் புதிய செயல்முறை அடிப்படையிலான படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு (Architecture and Design), கணிதம் மற்றும் கணினி (Maths and Computing), கணிதம் அன்ப்ளக்டு (Maths Unplugged), விளையாட்டுகள் மற்றும் புதிர்கள் (Games and Puzzles), சூழலியல் (Ecology), பொறியியல் உயிரியல் அமைப்புகள் (Engineering Biological Systems), சட்டம் (Law), விண்வெளி (Aerospace), மனிதநேயம் (Humanities). முன்னதாக, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Data Science and Artificial Intelligence), மற்றும் மின்னணு அமைப்புகள் (Electronic Systems) ஆகிய படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

திட்டமிடல் மற்றும் பதிவு விவரங்கள்:

இந்தக் கல்வி ஆண்டில் ஆகஸ்ட், அக்டோபர், மற்றும் ஜனவரி மாதங்களில் 3 கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பள்ளிகளும் மாணவர்களும் ஆண்டுக்கு மூன்று படிப்புகள் வரை தேர்வு செய்து படிக்க முடியும். ஆகஸ்ட் மாதத்திற்கான பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 25. பள்ளிகள் தங்கள் மாணவர்களைப் பதிவு செய்ய code.iitm.ac.in/schoolconnect/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

திட்டத்தின் நோக்கம்:

ஐஐடி மெட்ராஸின் Centre for Outreach and Digital Education (CODE)-ன் ஒருபகுதியான 'பள்ளி இணைப்புத் திட்டம்', பள்ளி கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே இந்தப் திட்டத்தில் இணைந்து பயனடைந்துள்ளனர். மாணவர்களின் செய்முறை அறிவை மேம்படுத்தும் வகையில், பயிற்சிகளும், விருப்பப் பாடங்களும் வழங்கப்படும்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி இதுகுறித்துக் கூறுகையில், "வளரும் துறைகளில் ஆரம்பகால வெளிப்பாடு மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, எதிர்கால புதுமை படைப்பாளர்களை உருவாக்கும். ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், எதிர்காலத்திற்குத் தயாரான தேசத்தில் நாங்கள் முதலீடு செய்கிறோம்" என்றார்.

CODE தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், "இளம் மனங்களுக்கு பல்வேறு துறைகளில் ஆரம்பகால வெளிப்பாட்டை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பாக ஐஐடி மெட்ராஸ் கருதுகிறது. மேலும் பல பள்ளிகள் எங்களுடன் இணைந்து, மாணவர்கள் தகவலறிந்த தொழில் தேர்வுகளை மேற்கொள்ள உதவ முன்வருமாறு அழைக்கிறோம்" என்றார்.


source https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-school-connect-programme-iit-madras-short-term-courses-9458090