ஹவுதிகளுக்கு பதிலடி; ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிபர் மாளிகை, எரிபொருள் நிலையம் சேதம் 25 08 2025
/indian-express-tamil/media/media_files/2025/08/25/yemen-2-2025-08-25-06-34-27.jpg)
ஹவுதிகளால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி, இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரைத் தாக்கியதாகக் கூறியதை அடுத்து இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Photograph: (Representational)
ஹவுதிகளால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி, இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரைத் தாக்கியதாகக் கூறியதை அடுத்து இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல், கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, ஹவுதி குழுவுடன் தொடர்புடைய எரிசக்தி வசதிகளைத் தாக்கியதாகக் கூறிய பிறகு, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகள், காசா மோதலின் போது பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி வருகின்றனர். மேலும், செங்கடலில் கப்பல்களையும் தாக்கி வருகின்றனர். இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் பெரும்பாலான ஏவுகணைகள் இலக்குகளை அடைவதற்கு முன்பே இடைமறிக்கப்பட்டுத் தடுக்கப்படுகின்றன.
இஸ்ரேலிய விமானப்படை அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், வெள்ளிக்கிழமை இரவு ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, கிளஸ்டர் குண்டு (cluster munition) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
2023-இல் ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவத் தொடங்கியதிலிருந்து, அவர்கள் ஒரு கிளஸ்டர் குண்டை பயன்படுத்தியது இதுவே முதல் முறை" என்று அந்த அதிகாரி ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இத்தகைய ஆயுதங்களை இடைமறிப்பது மிகவும் கடினம் என்றும், “ஈரான், ஹவுதிகளுக்கு வழங்கிய கூடுதல் தொழில்நுட்பத்தை இது குறிக்கிறது” என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.