Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 25 செப்டம்பர், 2025

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாக பிரிக்கப்பட்ட லடாக்கும் காஷ்மீரும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும்  யூனியன் பிரதேசங்களாக  மாறின. அன்றிலிருந்து  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் அந்தந்த யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

24 09 2025

போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினரிடையே ஏற்பட்ட மோதலால்  வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து  போராட்டகாரர்கள் பாஜக அலுவலகம் தாக்கி தீவைத்துள்ளனர். மேலும்   ஒரு போலீஸ் வாகனமும் எரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.

போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளூர் நிர்வாகம் பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிரிவு 163 ஐ படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது, ஒப்புதல் இல்லாமல் ஊர்வலங்கள் மற்றும் பொது அமைதியைக் குலைக்கும் அறிக்கைகளை வெளியிடுவது ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனால் லடாக்கில் அசாதாரன சூழல் நிலவி வருகிறது.


source https://news7tamil.live/protest-in-ladakh-bjp-office-set-on-fire.html