Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 10 செப்டம்பர், 2025

நேபாளம் பிரதமர் கே.பி.சா்மா ஓலி பதவி விலகினார்!

 


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் பிரதமராக கே.பி.சா்மா ஓலி உள்ளார். பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்த நிலையில்  நேபாளத்தில் கடந்த 4 ஆம் தேதி இன்ஸ்டாகிராம், யூடுயூப் உள்ளிட்ட 26 செயலிகளுக்கு அந்நாட்டு அரசு தடை வித்தித்தது. இதனை தொடர்ந்து இந்த தடை உத்தரவிற்கு எதிராக  நேற்று அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை கலைக்கு நேக்கில் காவல்துறை மேற்கொண்ட   துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். இப்போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.

தொடர்ந்து போராட்டமானது ஊழலுக்கான் போராட்டமாக மாறியது. பிரதமர் கே.பி.சர்மா ஓலி பதவி விலககோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆளும் அரசின்  அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.

இதனை தொடர்ந்து நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

9 9 25

source https://news7tamil.live/nepal-prime-minister-k-p-sharma-oli-resigns.html#google_vignette