Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை ரத்து!

 

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. ரஷ்யாவை தவிர வேற எந்த நாடும் தாலிபான்கள் அரசை இதுவரை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது தாலிபானின் அனைத்து முன்னணி தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அடுத்த மாதம் இந்தியா வர திட்டமிடப்படிருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைக்குபின் தாலிபன் தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு விலக்கு பெற வேண்டும். தற்போது வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு கிடைக்காததால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முத்தாகியின் இந்த பயணம் நடந்திருந்தால், ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், இந்தியாவுக்கு அந்த நாட்டிலிருந்து வருகை தரும் முதல் தலைவராக முத்தாகி இருந்திருப்பார்.


source https://news7tamil.live/cancellation-of-indias-foreign-minister-of-india.html