Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 11 நவம்பர், 2025

மருத்துவப் படிப்பில் உடனடி வாய்ப்பு: சென்னையில் 1,149 சான்றிதழ் இடங்கள் காலியாக அறிவிப்பு!

 

Stanley hospital

அந்தந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் துணை முதல்வரைச் சந்தித்து, நவம்பர் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் சித்தார்த்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இதில் மொத்தம் 1,149 இடங்கள் அவசர சிகிச்சை, மயக்க மருந்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், சுவாச சிகிச்சை, இதயவியல், இசிஜி, மனநலம் மற்றும் மருத்துவப் பதிவேடு போன்ற முக்கியப் பிரிவுகளின் டெக்னீஷியன் படிப்புகளுக்காகக் காத்திருக்கின்றன.

மருத்துவமனை வாரியாக காலியிட விவரம்:

மருத்துவக் கல்லூரி    காலியிடங்கள்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி    393

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (KMC)    319

சென்னை மருத்துவக் கல்லூரி (MMC)    254

கிண்டி கலைஞர் மருத்துவக் கல்லூரி    135

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி    48

மொத்தம்    1,149

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்தப் படிப்புகளில் சேர உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்வித் தகுதிகள்:

டெக்னீஷியன் சான்றிதழ் படிப்புகள்: பிளஸ்-2 அறிவியல் பிரிவில் 40 சதவீதத்திற்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவப் பணியாளர் படிப்பு: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்கள், அந்தந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் துணை முதல்வரைச் சந்தித்து, நவம்பர் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிடாமல் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


source https://tamil.indianexpress.com/education-jobs/government-medical-college-certificate-course-vacancies-1148-students-can-apply-immediately-10645880