Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 18 டிசம்பர், 2025

ஓட்டுப் போட முடியாத நிலை: 3 மாநிலம், 2 யூனியன் பிரதேசத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்- 71,428 பேருக்கு நோட்டீஸ்!

 


SIR Form 2025 – Easy Online Submission Guide in Tamil

Puducherry electoral roll| Final voter list February| India voter deletion| 1 crore voters removed

புதுச்சேரி:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவுப் பட்டியலில் இருந்து மொத்தம் 1 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் அதிக நீக்கம்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் மேற்கு வங்காளமே முன்னணியில் உள்ளது. அங்கு வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் நீக்கத்துக்கான காரணங்கள் விவரம்:

24 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட்டுப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

12 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், பதிவு செய்யப்பட்ட முகவரியில் நீண்ட காலமாக வசிக்காததால் நீக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தரமாக இடம்பெயர்ந்த 20 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட 1 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கணக்கீட்டு சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இதர சிக்கல்களால் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களின் நிலவரம்

ராஜஸ்தான்: அங்குள்ள 5.48 கோடி வாக்காளர்களில், 5.04 கோடி பேர் வரைவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சுமார் 44 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கோவா: 11.85 லட்சம் வாக்காளர்களில், 10.84 லட்சம் பேர் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 1.01 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

லட்சத்தீவு: 58 ஆயிரம் வாக்காளர்களில் 56,384 பேர் வரைவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் 1 லட்சம் பேர் நீக்கம்

புதுச்சேரியில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், இது முன்பு இருந்த வாக்காளர் எண்ணிக்கையில் 10 சதவீதம் ஆகும்.

  • நீக்கப்பட்டோர் விவரம்: இறந்தவர்கள் (20,798 பேர் அல்லது 2 சதவீதம்), இடம்பெயர்ந்தோர் மற்றும் அந்த இடத்தில் வசிக்காதோர் (80,645 பேர் அல்லது 8 சதவீதம்), பட்டியலில் இருமுறை இடம்பெற்றவர்கள் (2,024 பேர்) நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக காமராஜ் நகர் தொகுதியில் 6,525 பேரும், உழவர்கரை தொகுதியில் 6,139 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கைக்கான காலக்கெடு

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேரில், 2002 ஆம் ஆண்டு வாக்களித்த ஆவணம் தரப்படாத, கண்டறிய முடியாத 71,428 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து உறுதி செய்ய வேண்டும்.

ஏதேனும் காரணத்தால் வாக்காளராகப் பதிவு செய்ய விரும்பாதவர்கள் அல்லது தகுதி இருந்தும் விடுபட்டவர்கள், அடுத்த மாதம் (ஜனவரி) 15-ஆம் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைக் காலத்தில் வாக்காளர் பட்டியலில் தங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஆய்வுகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்படும்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

source https://tamil.indianexpress.com/india/puducherry-electoral-roll-final-voter-list-february-india-voter-deletion-1-crore-voters-removed-10917102