Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 9 டிசம்பர், 2025

8-வது நாளாக தொடரும் சிக்கல்; சென்னை ஏர்போர்ட்டில் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-airport-41-indigo-flight-cancelled-update-in-tamil-10893867

IndiGo flights delayed in Tamil

நாடு முழுவதும் இண்டிகோ (IndiGo) விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், 8-வது நாளாக இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 91 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய விமான பணி நேர கட்டுப்பாட்டு விதிகள், காரணமாக விமானிகள், விமான  பணிப்பெண்கள் ஆகியோர் அடங்கிய பணிக்குழுவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், இண்டிகோ விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பணிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக இந்த நிலை நீடித்து வருவதால், எப்போது சீராகும் என்ற கேள்வி எழுந்துள்ளது,

அதேபோல் விமானங்கள் ரத்து செய்ய்பபட்டதால் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுமா? எப்போது கொடுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம், உத்தரவிட்டிருந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பயண நேரத்தை மாற்றிக்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கூறியிருந்தது.

இதனிடையே 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-airport-41-indigo-flight-cancelled-update-in-tamil-10893867