Breaking News
Loading...


தேக்கு மரம்... வெட்டுவதில், சிக்கல்... கைகொடுக்கும் தீர்வுகள் !

‘தேக்கு மரம் வளர்த்தால், காசு கொட்டும், செஞ்சந்தனம் வளர்த்தால், தங்கம் காய்க்கும், என்பன போன்ற கருத்துக்களை நம்பி, சொந்தத் தோட்டத்தில் எந்த மரங்களை வளர்த்தாலும், கடைசியில், அவற்றை வெட்டி விற்பனை செய்யும்போது, படாதபாடுதான் படவேண்டியிருக்கிறது. குறிப்பாக, தேக்கு உள்ளிட்ட சில மரங்களை வளர்க்கும் விவசாயிகள், வனத்துறையினரின் அலைக்கழிப்பால்... பட்டா நிலத்தில் விளைந்த மரங்களை, சொந்தப் பயன்பாட்டுக்குக்கூட எடுத்துச் செல்லக்கூட முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தன்னுடைய தோட்டத்தில் விளைந்த மரங்கள்தான் என்று, விதிகளின்படி வருவாய்த்துறையின் சான்றிதழ் வைத்திருந்தாலும், அவர்களை கெஞ்ச வைப்ப-தோடு, லஞ்சமாக சில பல ஆயிரங்களைப் பெற்றுக் கொண்டுதான் அனுமதியே வழங்குகிறார்கள் வனத்துறை ஊழியர்கள்.
இதைப்பற்றி புலம்பாத மரப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளே இல்லை என்கிற நிலையில்... இதற்கான தீர்வு தேடி, சென்னையில் உள்ள தமிழ்நாடு வனத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரி-களிடம் பேசினோம். பெயர், அடையாளம் மறைத்தபடி பேசிய நேர்மையான அந்த அதிகாரிகள், மரங்களை வெட்டுவதைப் பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
‘‘அரசுக்குச் சொந்த மான காடுகளில் உள்ள மரங்களையும், தனியார் நிலங்களில் உள்ள மரங்களையும், திருட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காகத்தான் இந்த விதிமுறை உருவாக்கப் பட்டது. இதில் பூவரசு, வேம்பு, வாகை, சவுக்கு, மூங்கில், தைலம், சிசு, இலவு உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் இடம்பெற்று இருந்தன. இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளான தால்... தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், ரோஸ்வுட் (ஈட்டி), கருங்காலி உள்ளிட்ட 5 மரங்களைத் தவிர, மற்ற 36 வகையான மரங்களுக்கு, 2007-ம் ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் மரங்களை, அவர்களே பாதுகாத்து கொள்கிறார்கள். மலைப்பிரதேசக் காடுகளில் உள்ள மரங்களைப் பாதுகாக்க தனிச்சட்டங்கள் உள்ளன.
இந்நிலையில், ‘தேக்கு, செஞ்சந்தனம், ரோஸ்வுட், கருங்காலி உள்ளிட்ட மரங் களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். இது நியாயமானதும் கூட. கண்டிப்பாக தமிழக அரசு இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இந்த விதிமுறை நீக்கப்பட்டால்தான், விவசாயிகள் இந்த மரங்களைத் துணிச்சலோடு வளர்ப்பார்கள். வனத்துறையில், உள்ள ஒரு சில லஞ்ச பேர்வழிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து, காப்பாற்றப்படுவார்கள்.
விவசாயிகள் வளர்க்கும் மரங்களை வருவாய்த்துறையினரின் ஆவணங்களில் பதிவு செய்து கொள்வது மிகவும் நல்லது. திருட்டுப்போனாலும் கூட, காவல்துறையில் புகார் தெரிவிக்க, இது உதவியாக இருக்கும். வனத்துறையினரின் மிரட்டலில் இருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இது உதவும். சந்தன மரங்களைப் பொறுத்தவரை, வனத்துறையினர்தான் வெட்டி, ஏலம்விட்டு, விவசாயிகளுக்கு பணம் கொடுப்பார்கள். இதனை தனியார் வெட்ட முடியாது.
தேக்கு உள்ளிட்ட 4 வகையான மரங்களை வெட்டுவதற்கு, 15 நாட்களுக்கு முன்பே மாவட்ட வனத்துறை அலுவலகத் தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பக் கடிதத்தோடு, ‘இந்த மரங்கள் தன்னுடையதுதான்’ என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழையும் இணைத்து, பதிவுத் தபாலில் அனுப்பி... அதற்கான சான்றையும் வைத்துக்கொள்ள வேண்டும். 15 நாட்கள் கடந்த நிலையிலும், வனத்துறையினர் வரவில்லை என்றால், உங்களுடைய மரங்களை வெட்டி, நீங்களே துண்டு போட்டுக் கொள்ளலாம். ஆனால், அதன் அளவுகளைத் துல்லியமாக அளந்து, குறித்துக் கொள்ள வேண்டும். அடிமரம், நடுமரம், நுனிமரங்களின் சுற்றளவு, நீளம் உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். மரத்துண்டுகளில் இது உங்கள் மரம்தான் என்பதற்கான குறியீடு இடவேண்டும்.
பிறகு, மாவட்ட வனத்துறை அலுவலகத் தில், தனியார் சொத்துக் குறியீடு கட்டணமாக 200 ரூபாய் பணம் செலுத்தி, ரசீது பெறவேண்டும். இதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தால், அரசாங்க கருவூலங்களில் பணத்தைச் செலுத்தி ரசீது பெறலாம். மரத்துண்டுகளின் அளவையும், சொத்துக் குறியீடு கட்டண ரசீதையும் இணைத்து, குறியீடு கோரும் விண்ணப்பத்தை மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
கண்டிப்பாக, 15 நாட்களுக்குள் சொத்துக் குறியீடும், அனுமதியும் கிடைத்துவிடும். அதற்கு மேலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு வனத்துறை தலைமை அலுவகத்துக்கு மேற்கண்ட ஆதாரங்களோடு பதிவுத் தபாலில் புகார் தெரிவிக்கலாம். இதற்கு, கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். அதற்கு மேலும் தாமதமானால், நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்றனர்.
இப்பிரச்னை குறித்து, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்கம்) இருளாண்டியிடம் பேசினோம். ‘‘மரத்தை வெட்டுவதற்காக விண்ணப்பித்த 15 நாட் களுக்குள் கண்டிப்பாக அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், விவசாயிகள் முதலில் எங்களுக்குப் புகார் தெரிவிக்கலாம். கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும்” என்று சொன்னார்.
முகவரி:
கூடுதல் முதன்மைத் தலைமை
வனப் பாதுகாவலர்,
தமிழ்நாடு வனத்துறைத் தலைமை அலுவலகம்,
எண்:1, பனகல் மாளிகை பில்டிங்,
8-வது மாடி, கலைஞர் வளைவு அருகில்,
ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை,
சென்னை: 600015
தொலைபேசி: 044-24348059
************
யார் இந்த பீட்டா?
--------------------------
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.
(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.
அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!
இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!
பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.
அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.
சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !
* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...
வாகன ஓட்டுநர் உரிமம்.. அடிப்படைத் தகவல்கள்!

ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி சான்றுதான் ஓட்டுநர் உரிமம். மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.இது தவிர, ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.

எத்தனை ஆண்டுகள் வரை வாகனம் ஓட்டலாம்?

உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது, ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது வரம்பு

வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

இலகு ரக வாகனங்கள்

இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன் படுத்த அடையாள அட்டை பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம்

பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்னரே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கல்வித் தகுதி

போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.

ஓட்டுநர் உரிமம் பெறும் முறை

ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு பதிவுச் சான்று, வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற அதிகபட்சமாக ரூ.400 வரை கட்டணம் செலுத்தவேண்டும்.

பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி

இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கே சென்றவுடன் வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே, பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை நம் நாட்டிலேயே வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது சிறந்தது.

இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஓட்டுநர் உரிமம் பெறலாம். இந்த ஓட்டுநர் உரிமம் வெளிநாட்டில் ஓராண்டு காலம் வரை செல்லத் தகுந்தவையாக இருக்கும்.

ஒருவர் நிரந்தர ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டுமே பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே பன்னாட்டு ஓட்டுநர் வழங்கப்படும்.
*******
எளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?: சில அடிப்படைத் தகவல்கள்

தாய் நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைவரும் பாஸ்போர்ட் பெறுவது அவசியம். பாஸ்போர்ட்களில் நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

குடிமக்கள் அனைவருக்கும் சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வழங்கப்படும். பிரதமர், முதல்வர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு ஜம்போ பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்கள்

1. இருப்பிடச் சான்றிதழ்

2. பிறப்புச் சான்றிதழ்.

* இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் இருப்பிடச்சான்றாக இணைக்கலாம்.

* பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாக இணைக்கலாம்.

* ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.

* விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.

* சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.

* அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவர் அல்லது முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

* விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே பாஸ்போர்ட் வழங்குவர்.

சிறுவர்-சிறுமியர்

சிறுவர்-சிறுமியர்களுக்கு (14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிப்பர்.

கட்டணம்

பொதுவாக சாதாரண பாஸ்போர்ட் பெற ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ பாஸ்போர்ட் பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும். சிறுவர்-சிறுமியர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும்.

தட்கல் திட்டம்

பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணைவியர் மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும். அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500 கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல்

பாஸ்போர்ட் பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.

தொலைந்து போனால்


பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.