Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 1 மே, 2017

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! May 01, 2017

தமிழகத்தில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு, இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 

2017-18 கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

அதன்படி அப்பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் இன்று முதல் மே 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் www.annauniv.edu இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பும் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும், ஜூன் 27-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் எனவும், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.