Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 1 மே, 2017

அதிகாராப் போட்டியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது : சி.பி.எம் May 01, 2017

அதிகாராப் போட்டியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது  : சி.பி.எம்


அதிகார போட்டியால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டி உள்ளார். 

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 17 பேர் மட்டும் விவசாயிகள் தற்கொலை என அரசு நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அதிமுகவின் இரு அணிகளும் ஊழலில் திளைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஒரே மதம், ஒரே மொழி என்ற மத்திய அரசின் கொள்கையை ஏற்க முடியாது எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்