Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 26 ஜூலை, 2017

மதம் மற்றும் இனம் சார்ந்த மோதல்கள் 41 சதவீதம் அதிகரிப்பு July 26, 2017


கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் மதம் மற்றும் இனம் சார்ந்த மோதல்கள் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் இதனைத் தெரிவித்துள்ளார். லோக் சபாவுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், மதம் மற்றும் இனம் சார்ந்த மோதல்களில் பழிவாங்கும் நோக்கில், கடந்த 2014ம் ஆண்டு 336 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்ததாகவும் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் குறிப்பிட்டுள்ளார்.