Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 26 ஜூலை, 2017

மாணவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்! July 25, 2017




மாணவர்கள் செல்ஃபோன்களுக்கு அடிமையாகக் கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.

விஜயவாடாவில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், தேவைக்கு ஏற்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலங்களில் அனைத்துப் பணிகளும் இணையத்திலேயே நடைபெறும் என்பதால் விரைவில் பெரிய தகவல் மையம் விஜயவாடாவில் அமைய வாய்ப்புள்ளதாக தாம் கணித்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.