Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 14 டிசம்பர், 2017

பிரதமர் மோடி சாப்பாட்டுக்காக ஒருநாளைக்கு 4 லட்சம் செலவிடுகிறார் - அல்பேஸ் தாக்கூர் December 13, 2017

Image

தினமும் 4 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவிடும் பிரதமர் மோடியால் மாதம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாக, குஜராத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் அல்பேஸ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அல்பேஸ் தாக்கூர், பிரதமர் மோடி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான் சாப்பிடுவதாகவும், ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தார். அதனால் முன்னர் கறுப்பு நிறத்தில் இருந்த மோடி அழகாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.

தினமும் 5 காளான் சாப்பிடும் மோடியால் மாதத்துக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாகவும், இது கேலி கூத்து என்றும் அல்பேஸ் தாக்கூர் விமர்சித்துள்ளார்.