Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 7 மார்ச், 2018

​உத்தரபிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம்! March 7, 2018

Image

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்த கம்யூனிச தலைவர் லெனினின் சிலைகள் அகற்றப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இருந்த அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனை அடுத்து சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை இருந்த இடத்தில் புதிய சிலை நிறுவப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தததை அடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.