Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 7 மார்ச், 2018

​நாளுக்கு நாள் அழிந்து வரும் தென்னை விவசாயம் - விவசாயிகள் வேதனை March 7, 2018

Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. தென்னங்காய்கள் சுவையாக இருக்கும் என்பதால், ராமநாதபுரம் பகுதி தேங்காய்களுக்கு மவுசு உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், தென்னை மரங்கள் அனைத்தும் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

10 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வந்த தென்னைகள் வறட்சி காரணமாக காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளதால், தேங்காய் விலை உயர்ந்துள்ளது. 

முன்பு 20 ரூபாய் வரை விற்பனையாகி வந்த தேங்காய்கள், தற்போது, 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 

தென்னை விவசாயத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.