Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 30 ஏப்ரல், 2018

இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.

Image may contain: one or more people and outdoor

Image may contain: 1 person, smiling, text

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது
மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.
"இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது"- எனபேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார்.
பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது.
Jesus was a Muslim, claims U.S. religions professor
source: lankamuslim-org
குர் ஆன்
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள்

கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது! April 30, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார். 

கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை கல்லணையில் இருந்து நெய்வேலி வரை, பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு நிறுவனர் முத்துலட்சுமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் பரப்புரை பயணத்தை தொடங்குவதற்காக கல்லணைக்கு முத்துலட்சுமி உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், முத்துலட்சுமி மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தடை மீறி பரப்புரை மேற்கொள்ள முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். 

​இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி! April 30, 2018

Image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க உள்ளார். 

ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, அதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல்திட்டத்தை மே 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பிரதமரிடம் வலியுறுத்துமாறு, ஆளுநரிடம் முதல்வர் வேண்டுகோள் விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொமுச உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டம்! April 30, 2018

Image

சென்னையில் போக்குவரத்து துறை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒரு தலை பட்சமாக நடைபெறுவதாக கூறி தொமுசவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மூன்றாம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதில் போக்குவரத்து துறைக்கான கூட்டுறவுச் சங்கத்தின் வேட்பு மனு தாக்கல் பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும், தொமுச சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இதனால் அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வேட்பு மனுக்களை விநியோக்கிகாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறி தொமுச தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிப்பு


தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஓ.என்.சி உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனைபோன்று பதற்றமான பகுதிகளான கதிராமங்கல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள் பதற்றமாக பகுதியான அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு கலவா தடுப்பு போலீசார் கடந்த மாதம் திருவாரூரில் ஆய்வு பணி மேற்கொண்டு தஞ்சை மாவட்டம் வந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட மத்திய அதிவிரைவு கலவா தடுப்புப் படையினர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் முகாமிட்டு போராட்டம் நடைபெற்றால் எப்படி கட்டுபடுத்தலாம் என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி ஆட்சியில் ஊழல் அமைச்சர்களின் ஆதிக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு



டெல்லி: மோடி ஆட்சியில் ஊழல் அமைச்சர்களின் ஆதிக்கம் நடப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பணத்தை வைர வியாபாரி நீரவ் மோடி எடுத்துச் சென்றுவிட்டதாக டெல்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் மெகா கூட்டத்தில் ராகுல் கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்கள் பிரச்சனைக்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் நரேந்திர மோடி என ராகுல் காந்தி தெரிவித்தார். ரஃபேல் போர் விமானங்களை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார் மோடி என அவர் கூறினார். 8 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழல் புகாருக்கு ஆளானவரை கர்நாடக முதல்வராக்க முயற்சி எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். வங்கி பணம் மோசடி செய்த நீரவ் மோடியை மத்திய அரசு காப்பாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார். தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பிரதமர் மோடி அமைதி காக்கிறார் எனவும் அவர் கூறினார். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி சிறு வணிகர்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோவத்தில் உள்ளனர் என்று ராகுல் கூறியுள்ளனர். மோடி மீது நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர் என்றும் ராகுல் கூறினார். மேலும் ராகுல்காந்தி கூறியதாவது: பலாத்கார சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் கெட்டுப்போய்விட்டது. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வது அரசின் கொள்கையில் கிடையாது என நிதியமைச்சர் கூறுகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மறுத்துவிட்டார். ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினருக்காக காங்கிரஸ் கட்சி உழைக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பா.ஜ.க பொய் பிரசாரம் செய்தன. பண மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் குறித்து மோடி எதுவும் கூறவில்லை.

மக்களின் பணம் நிரவ் மோடியிடம் பைகளில் உள்ளது. பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில்லாமல் உள்ளனர். முக்கிய விவகாரங்களில் மோடி அமைதியாக உள்ளார். டோக்லாமில் சீன படைகள் உள்ளன நிலையில் இந்த விவகாரத்தை எழுப்ப கூட பிரதமர் நினைக்கவில்லை. பிரதமர் சீனாவில் மகிழ்ச்சியாக உள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது : ராகுல் காந்தி



Image
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு தலைநகர் டெல்லியில் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன போதிலும், தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

உச்சநீதிமன்றம் உட்பட ஜனநாயகத்தின் உயர்பீடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, நாடாளுமன்றமும் இயங்க அனுமதிக்கப்படுவதில்லை என விமர்சித்தார்.

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்த ராகுல்காந்தி, அதனைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

அழிந்துவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்! April 28, 2018

மேட்டுப்பாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாக்க அப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வனசரக பகுதிக்கு உட்பட்ட பாலமலையில் பழங்கால பாறை ஓவியங்கள் அதிகளவு காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் இதன் தொன்மை அறியாமல் இப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சி மற்றும் வன கோவில்களுக்கு வரும் சிலரால் அழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

எனவே, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓவியங்களாக வரையப்பட்ட இந்த ஓவியங்களை தமிழக அரசும், இந்திய தொல்லியல் துறையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Image

சனி, 28 ஏப்ரல், 2018

FAKE NEWS FAKE NEWS FAKE NEWS பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.

FAKE NEWS FAKE NEWS FAKE NEWS பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.
சம்பந்தப்பட்ட ஆள, பிடிச்சி தூக்குல போடு.. யாரும், பிஜேபிRSS கும்பலை போல, குற்றவாளிக்கு ஆதரவா, பாரத் மாத்தாக்கீ ஜே ன்னு தேசிய கொடியோட ஊர்வலம் போகமாட்டாங்க.. இந்த சம்பவத்துல உண்மை என்னான்னா, குற்றவாளி மௌவ்லி இல்லை.. அந்த பெண் குடும்பத்துக்கு தெரிந்தவராம், அந்த மதராஸாவில் படிப்பவராம்.. இளம் குற்றவாளியாம்.. மேலும் கீதா என்பது அந்த பெண்ணின் பெயர் கிடையாது.. நிர்பையா போன்ற போலி பெயர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மையான பெயர் வெளியாகவில்லை.. எனவே, அந்த பெண் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதும் உறுதியாக தெரியாது.. எது எப்படி இருந்தாலும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்...



#என்னமோப்பா.

22-3-2018
புதுச்சேரி சபாநாயகர் உத்தரவு ரத்து -
#இந்திரா_பானர்ஜி
27-4-2018
தமிழ்நாடு சபாநாயகருக்கு உத்திரவிட முடியாது, தள்ளுபடி - #இந்திரா_பானர்ஜி


Image may contain: 1 person, text

ஒரே மாதிரியான பிரச்னையில் 2 விதமாக தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம் : நாராயணசாமி April 28, 2018

Image

புதுச்சேரி மாநில சபாநாயகர் உத்தரவில் தலையிடும் நீதிமன்றம், தமிழக சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை மத்திய அரசு வேண்டுமென்றே வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சபாநாயகர் விவகாரத்தில் ஒரே மாதிரியான பிரச்னையில் நீதிமன்றம் 2 விதமாக தீர்ப்பு வழங்குவதாக நாராயணசாமி குறிப்பிட்டார். 

, குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்... என்பது எங்கள் நிலைப்பாடு

பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.
சம்பந்தப்பட்ட ஆள, பிடிச்சி தூக்குல போடு.. யாரும், பிஜேபிRSS கும்பலை போல, குற்றவாளிக்கு ஆதரவா, பாரத் மாத்தாக்கீ ஜே ன்னு தேசிய கொடியோட ஊர்வலம் போகமாட்டாங்க.. இந்த சம்பவத்துல உண்மை என்னான்னா, குற்றவாளி மௌவ்லி இல்லை.. அந்த பெண் குடும்பத்துக்கு தெரிந்தவராம், அந்த மதராஸாவில் படிப்பவராம்.. இளம் குற்றவாளியாம்.. மேலும் கீதா என்பது அந்த பெண்ணின் பெயர் கிடையாது.. நிர்பையா போன்ற போலி பெயர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மையான பெயர் வெளியாகவில்லை.. எனவே, அந்த பெண் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதும் உறுதியாக தெரியாது.. எது எப்படி இருந்தாலும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்...

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தென் கொரிய வடகொரிய அதிபர்கள் சந்தித்துக் கொண்ட வரலாற்று நிகழ்வு! April 27, 2018

Image

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரிய எல்லையையையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தென் கொரிய எல்லையையும் கடந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கடந்த 1953ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை கடப்பதும், வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்தித்து கைகுழுக்கிக் கொள்வதும் இதுவே முதல்முறை.

கிம் ஜாங் உன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இருநாட்டு எல்லையில் நின்று கைகுழுக்கிக் கொண்டனர். பின்னர் மூன் ஜே இன், கிம் ஜாங் உன்-னை தென் கொரிய எல்லைக்கும், கிம் ஜாங் உன் மூன் ஜே இன்னை தென்கொரிய எல்லைக்கும் அழைத்துச் சென்றார்.

பின்னர், தென் கொரியாவிற்கு சென்ற கிம் ஜாங் உன், வருகையாளர் பதிவேட்டில் “புதிய வரலாறு தற்போது தொடங்கியுள்ளது. நாங்கள் தற்போது சமாதான காலத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்” என்று எழுதியுள்ளார்.

இந்த வரலாற்று நிகழ்வுக்கு தென் கொரிய மற்றும் வட கொரிய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த வரலாற்று நிகழ்வு உலகம் முழுவதும் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் - கமல்ஹாசன் April 27, 2018

Image
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை தமிழர்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சமீப காலமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. அதற்காக தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அவ்வாறு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மீண்டும் கால தாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை சுட்டிகாட்டியுள்ள கமல்ஹாசன்,  இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்றும்  தெரிவித்துள்ளார். 

ஆமாம்! நான் நகத் கான் தான்” ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய குஷ்பு! April 27, 2018

Image


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து தற்போது இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக குஷ்பு இருந்து வருகிறார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தன் அரசியல் கருத்துகளை விமர்சனம் செய்பவர்களுக்கும், தன் மீது தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவர்களுக்கும் பதிலடி கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை “khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP..”"குஷ்பு சுந்தர்.. பாஜகவிற்கு நகத் கான்" என்று திடீரென்று மாற்றியுள்ளார்.

ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு குஷ்பு என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக தனது ட்விட்டர் பெயரில் நகத்கான் என்ற தனது இயற்பெயரையும் சேர்த்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, குழந்தை நட்சத்திரமாக தனது 7வது வயதில் அறிமுகமானதிலிருந்து தனது பெயர் குஷ்பு தான் என்று தெரிவித்துள்ளார். தனது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களில் தனது பெயர் குஷ்பு என்கிற நகத் கான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இயக்குநர் சுந்தர்.சி யை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தனது பெயரை குஷ்பு சுந்தர் என்றே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், தனது பெயர் நகத் கான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும், தனது பெயரை கண்டு பிடிப்பதில் நேரத்தை வீண் செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, இதற்கு முன்பு யாரும் இதை பிரச்சனையாக மாற்றியதில்லை என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற பிரச்சனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 தனது அடையாளம் எளிதானது என்று தெரிவித்துள்ள குஷ்பு, அடிப்படையில் நான் மனிதன், என் உடலில் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது என்றும் பாஜகவினர் போல் அல்லாமல் தனக்கு 6 அறிவு இருப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம்போல் ஓடிய தண்ணீர்! April 27, 2018

Image

இங்கிலாந்தில், ராட்சத குடிநீர் குழாய் வெடித்ததில்  வீதிகளில் வெள்ளம் போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  

வெஸ்ட் மிட்லாண்ட் நகரில் உள்ள லீ புரூக் வீதியில், மின் கேபிளை பதிக்கும் பணி நடைபெற்றபோது, ராட்சத குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு எழுந்தது. இதானல் அப்பகுதி முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைப் போன்று சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருகியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தனர். 

கார்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. தகவலறிந்த தீயணைப்பு  மற்றும் மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். இதனைத்தொடர்ந்து ராட்சத குழாயை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

வியாழன், 26 ஏப்ரல், 2018

​பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் உயிரிழப்பு! April 26, 2018

Image

உத்தரபிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, அந்த வழித்தடத்தில்  வந்த ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. மேலும் பள்ளி வாகனம் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டது. 

இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 குழந்தைகள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த குழந்தைகளில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

இதனிடையே விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், உத்தரபிரதேச பள்ளி குழந்தைகள் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக  கூறியுள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். 


இதனிடையே விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.  

குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராமணர்களாக இருக்கிறார்கள்.


Image may contain: 1 person, sitting

குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராமணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ' எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்' என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள். கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக்கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம். . நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... "
----- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. ஷ்வேதாம்பரி ஷர்மா அவர்களின் பேட்டி

புதன், 25 ஏப்ரல், 2018

மிக மோசமான விளைவாக நான் பார்ப்பது பொருளாதார சீர்குலைவுகளையோ அல்லது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டங்களோ அல்ல

S Nowshath Ali
இந்த விஷயத்தை மக்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்...
பாஜக ஆட்சிக்கு வந்ததில் மிக மோசமான விளைவாக நான் பார்ப்பது பொருளாதார சீர்குலைவுகளையோ அல்லது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டங்களோ அல்ல. அடுத்தடுத்த அரசுகள் இதை மீட்டுவிட முடியும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் பாஜக நீதித்துறையை முடிந்த அளவிற்கு காவிமயமாக்கியது தான் நீண்ட கால நோக்கில் பொதுமக்களுக்கு மிகுந்த சேதத்தை விளைவிக்கும். இதை, மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளே பொதுமக்களிடம் வந்து வெளிப்படையாக பேசினாலும் அதற்குரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.
உத்திரப்பிரதேசத்தில் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்ததில் டாக்டர் கபீல் கானுக்கு எவ்வித தொடர்பும் பொறுப்பும் கிடையாது என்பதற்கு ஆதாரங்கள் அனைத்தும் பொதுவெளியில் இருக்கின்றன. சம்பவம் நடந்த அன்று அவர் விடுப்பில் இருந்ததற்கான ஆதாரமும் இருக்கிறது. ஆனால், குற்றப்பத்திரிகையில் அவர் சொல்லாமல் பணிக்கு வராததாக சொல்லியிருக்கிறார்கள். விடுப்பில் இருந்தாலும், சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் வேறு ஆக்சிஜன் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பேசியது, சிலிண்டர்களை மத்திய காவல் படை உதவியுடன் மருத்துவனைக்கு வரவழைத்தது, குழந்தைகள் இறப்பினை குறைக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்திற்குமே கால் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட ஆதாரங்கள் இருக்கின்றன.
இவ்வளவு ஏன், விசாரணை முடித்து உத்திரப்பிரதேச அரசு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையிலேயே 'ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதோ, அவர்களுக்கு பணம் வழங்குவதோ அல்லது பராமரிப்பதோ டாக்டர் கபீல் கானின் பொறுப்பு அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனாலும், அவர் எட்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளான ஜெயலலிதா, சல்மான் கான் போன்றவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜாமீன் பெற்றுவிடும் தேசத்தில் எந்த வித முகாந்திரமும் இல்லாத ஒரு பொய் வழக்கில் ஏன் எட்டுமாதங்களாக சிறையில் இருக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் வரை போராடி ஜாமீன் பெற முடியவில்லை என்றால் கூட சட்டநடைமுறைகள் பின்பற்றப்பட்டுவிட்டன என்ற ஒரு திருப்தி இருக்கும். ஆனால், உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்காமலேயே இருப்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது? ஜாமீன் மனு விசாரணையின் போது சில நேரம் அரசு வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே ஆஜராகாமல் இருக்கிறார்கள். அல்லது கூடுதல் தகவல்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள், மனுதாரர் தரப்பு தாக்கல் செய்த கவுண்டர் அபிடேவிட்டை நீதிமன்ற அலுவலகம் 'தேடி' க் கொண்டிருக்கிறது என்று மீண்டும் மீண்டும் ஒத்திவைத்துக் கொண்டே இருக்கிறது.
ஜாமீனை மறுப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. மறுத்தால் உச்சநீதிமன்றத்திற்கு சென்று மருத்துவர் எளிதாக ஜாமீன் வாங்கி விடலாம் என்பது தான் யோகி ஆதித்யநாத் அரசின் பயம். அதனால் தான் முடிந்தளவிற்கு சில்லறை காரணங்கள் காட்டி இழுத்தடிக்கிறார்கள்அரசு தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக ஒருவரை பழிவாங்குவது இருக்கட்டும், ஆனால் அடிப்படை உரிமைகளை காக்க வேண்டிய உயர்நீதிமன்றம், ஒருவரின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு சிறையில் இருக்கும் போது ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணையை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக நீதிமன்றம் கருதவேண்டும்?
எப்போது நீதிமன்றம் ஜாமீனை மறுக்கலாம்? புலன் விசாரணை முடியவில்லை, சாட்சிகளை கலைக்கலாம், ஆதாரங்களை அழிக்கலாம் என்று அரசு தரப்பு வாதிடலாம். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை உயர்நீதிமன்றமும் அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துக் கொண்டே இருப்பது நீதியின் குரல்வளையை நெறிப்பதற்கு ஒப்பானது. நீதித்துறையின் மீதான ஊழல் என்பது சாதாரண விஷயம். ஆனால், அரசு ஒரு சாமான்யனை பழிவாங்குவதற்கு நீதித்துறை உடன்படுவது என்பது பாசிச அபாயம்.
"அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை"
என்ற வள்ளுவனின் வாக்கு உண்மையென்றால் இவர்களுக்கு கூடிய விரைவில் பேரழிவு நிச்சயம்.

நீதியுள்ள மாமனிதர் அவ்ரங்கசீப் தகுந்த நீதி வழங்கினார் என்பது வரலாற்றில் உள்ளது.



 மன்னர் அவ்ரங்கசீப் படைகள் திரும்பி போய்க்கொண்டிருக்கிறது. வழியில் வாரணாசியை கடக்க வேண்டும். அருகே தங்கிச் செல்ல முகாம் ஏற்படுத்தப்படுகிறது. 

படைத்தளபதிகளுக்கு ஓர் எண்ணம். வாரணாசி வந்து விட்டோம். காசி விஸ்வநாதரை தரிசித்து அப்படியே கங்கை நீராடிவிட்டு செ
ல்லலாமே. மன்னரிடம் அனுமதி கேட்கப்படுகிறது. தன் மக்களின் மன ஓட்டம் அறிந்த மன்னர் உடனே சம்மதிக்கிறார். தானும் தன் குடும்பமும் தங்கிக் கொண்டு ஹிந்து மக்கள் அனைவரும் சென்று தரிசித்து வாருங்கள் என்று அனுமதியளிக்கிறார். 
உற்சாகமாக படையினர் தம் குடும்ப சகிதமாய் புறப்பட்டு கோவிலுக்கு சென்றனர். தரிசனம் செய்தனர். மாலை மயங்கி இரவு எட்டும் வரையும் உலாவினர். 
திரும்ப தொடங்கிய போது ஒரு தளபதியின் மனைவியை மட்டும் காணவில்லை. தேடினர். படை பரிவாரம் சேர்ந்து ஊரெங்கும் தேடியும் அந்தப் பெண் மட்டும் கிடைக்கவில்லை. செய்தியறிந்த மன்னரும் வருந்தினார். தேடுதலை துரிதப்படுத்தினார். நள்ளிரவு தாண்டியும் கிடைக்கவில்லை. அப்போது ஒரு புலனாய்வு தகவல் வருகிறது. 
விஸ்வநாத ஸ்வாமி சன்னதியின் கருவறை அடியில் பாதாள அறையில் ஒரு பெண்ணின் முனகல் கேட்கிறது. 
வெள்ளமென பாய்ந்து படைகள் உள் நுழைந்தன. அங்கே குத்துக் காலிட்டு தலைவிரி கோலமாய் நிர்வாணியாய் தேடப்பட்டப் பெண் அமர்ந்துள்ளார். 

மீட்டெடுத்து கேட்ட போது தலைமை பூசாரி பூஜையின் போதே கடத்தி கொண்டு போய் விட்டார். புகையும், கூட்டமும், ஆரவாரமும் பூசாரிக்கு சாதகமாக இருந்ததால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்கிறது.

கற்பிழந்ததையும் கதறியதையும் கண்ணீரோடு அப்பெண் சொன்ன போது படையே பதறியது. " கோவிலின் கருவரையில் காம வெறி" தீர்த்த தலைமை பூசாரி தேடப்பட்டார். கிடைத்த இடத்திலேயே படைத்தளபதி வெட்டிச் சாய்த்தார். கலங்கம் கறேயேறிவிட்டதா?
மன்னரை சந்தித்து படையினர் முறையிடுகின்றனர். 
காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதம் போய் விட்டது. ஆகம விதிப்படி இனி அங்கு பூஜை செய்யவோ, வழிபடவோ இயலாது. எனவே இந்த கோவில் முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. 
இந்து ஆகம விதிகளோ, சம்பிராதாயங்களோ என்னால் தீர்ப்பளிக்க முடியாது. எனவே இந்து மத வேதாந்திகள், வல்லுனர்கள் என்ன சொல்கிறார்களோ அப்படி செய்யுங்கள் என மன்னர் சொல்லி விட்டார். ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்பட்டது. கோவிலை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும். மன்னர் ஏற்றுக் கொண்டார். படைத்தளபதிகளான இந்துக்கள் முன் நின்று அந்த கோவிலை அகற்றினர். தொடர்ந்து மன்னர் அவ்ரங்கசீப் அளித்த அரசு பெருங் கொடையில் அந்த கோவில் முன்னைவிட அழகாக, பெரிதாக கட்டப்பட்டது. 

இந்துத்வ வாதிகள் இங்கே நின்று பேசுவார்கள். அவ்ரங்கசீப் கோவிலை இடித்தார் என்று பழி சொல்வர். ஆனால் இந்த நிகழ்வை மறைப்பர். கேட்டால் கோவிலில் இப்படி நடந்ததென்று பொய் சொல்கிறார்கள் என்பர். 

காஷ்மீர் குழந்தை ஆசிபாவின் மீது நடத்தப்பட்டவைகள் யாவும் இன்று போல அன்றும் நடந்தது உண்மை என்பதை புரிய வைக்கிறது. வரலாறு தன்னை புதுப்பித்துக் கொண்டு பொய்யர்களின் புரட்டு அழுக்குகளை வெளியே தள்ளியுள்ளது. 

அன்று படைத்தளபதியின் மனைவிக்கு ஏற்பட்ட கொடுமை இன்று சிறுமி ஆசிபாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

அன்று நீதியுள்ள மாமனிதர் அவ்ரங்கசீப் தகுந்த நீதி வழங்கினார் என்பது வரலாற்றில் உள்ளது. 

அதை புரட்டும் புரட்டர்கள் இன்று என்ன செய்யப் போகிறார்கள், நீதி வழங்குவார்களா?

காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா


Image may contain: one or more people

காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.
எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
காயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என்கிறார். அறிந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ன சொல்கிறார்?
''எங்களுக்குள் அந்த இந்து-முஸ்லிம்கிற ஃபீலிங்சே கிடையாது. நான் பிராமினா இருந்தா கூட Im very much attached with Qaide Millath. அந்த மாதிரியே பழகிட்டேன் அவர்கிட்ட. அதனால அவர் வீட்டில எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் இருந்தது. So, His very helpful எனக்கு. காயிதே மில்லத் எனக்கு உதவி செய்தது போல் வேறு யாரும் இங்கு இருக்கிறவர்கள் எனக்கு உதவி செய்யல. அதனால அவரை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவர் இறந்தபோது அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒரு அன்கான்சியஸ் ஸ்டேஜுக்கே வந்துவிட்டேன்.''
கிருஷ்ணமூர்த்தி அய்யரின் இந்த வாக்குமூலம் ஒன்று போதும்; காயிதே மில்லத் யார் என்பதை உலகம் உணர்வதற்கு!
ஆளூர் ஷாநவாஸ்

சாம்ராஜ்யங்களை யார் தட்டிக் கேட்பது?

இந்த ஒப்பீடு கொடுமையானது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறுமி ஆசிஃபாவைச் சீரழித்த மதவெறியர்கள் குறித்துப் பதிவிட்டபோது உடனே சில இந்துத்துவர்கள், “ஏன் மௌலவிகள் மதரஸாக்களில் சிறுவர்களை வன்புணர்வு செய்வதில்லையா?” என்று கேட்டார்கள்.
கண்ணியம் கருதி அத்தகையப் பதிவுகளைக் கடந்துசென்று விட்டேன்.
இப்போது சாமியார் ஆசாராம் குறித்து எழுதும்போதும் அதே கேள்வியை முன்வைக்கிறார்கள்..“மதரஸாக்களில் சிறுவர்கள் வன்புணர்வு செய்யப்படுவதில்லையா? என்று.
பதில் சொல்லிவிடுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.
இருக்கலாம். மதரஸாக்கள் எல்லாம் தவறுகளே நடக்காத, புனிதங்கள் மட்டுமே பூத்துக்குலுங்குகின்ற மகோன்னத பீடங்கள் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.
ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்.
மதரஸாக்களில் நடைபெறும் தவறுகள் மிக மிக அபூர்வமானவை.
ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவை.
போலி சாமியார்களையும் மௌலவிகளையும் ஒப்பிடுவதே கூட சரியானது அல்ல.
ஏனெனில், ஏழு ஆண்டுகள் ஓதி முடித்தும் மிகக் குறைந்த சம்பளத்தில் மதரஸாக்களில் பணியாற்றுபவர்கள் மௌலவிகள்.
அவர்கள் தவறு செய்தது தெரியவந்தால் அடுத்த நிமிடமே தூக்கி எறியப்படுவார்கள்.
அப்படிப்பட்ட மௌலவிகளையும், கோடிக் கணக்கான ரூபாயில் ஆசிரம சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்களையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது என்பதே கொடுமையானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.
தவறுகள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க மதரஸாக்களில் வழிகள் உண்டு.
ஆனால் சாமியார்களின் சாம்ராஜ்யங்களை யார் தட்டிக் கேட்பது?
-சிராஜுல்ஹஸன்

மரணத்தின் விளிம்பில் ஸ்வாதி_மாலிவால்...


இந்தியாவில் பாஜகவின் ஆட்சியால் நாடெங்கும் தொடர் கற்பழிப்புக்கு நடை பெறுவதை கண்டித்தும், சிறுமி ஆஷிபாவிற்கு நீதி கேட்டு டெல்லியில் தொடர் உண்னாவிரதம் இருந்து வருகிறார்.ஊடகம் திட்டமிட்டு மறைக்கிது

Image may contain: 1 person

பாஜக இரட்டை வேடம் போடுவதாக தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு! April 25, 2018

Image

எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்திருத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னையில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

முன்னதாக போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்வதாகவும், 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கேட்டுக்கொண்டதாகவும் திருமாவளவன் கூறினார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்! April 24, 2018

Image

ரதமர் மோடியின் வருகையின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

அவர்களை விடுவிக்கக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல்லாவரம் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே மன்சூர் அலிகான் உட்பட 18 பேருக்கு ஜாமின் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மறுஉத்தரவு வரும் வரை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் கையெழுத்திடவேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

​இந்தியாவிலுள்ள போலி பல்கலைக் கழகங்கள்; மாணவர்கள் எச்சரிக்கை! April 24, 2018

Image

இந்தியாவிலுள்ள போலி பல்கலை கழகங்களின் விவரத்தை UGC(University Grants Commission) தனது இணையதளத்தில் இன்று(www.ugc.ac.in) வெளியிட்டுள்ளது. 

மொத்தம் 24 பல்கலைக் கழகங்களின் பெயர்களைக் கொண்ட இந்த பட்டியலில் தலைநகர் புதுடெல்லியிலிருந்து 8 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து பீகார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், ஒடிஷா  மற்றும் பாண்டிச்சேரியிலும் போலி பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

போலி பல்கலை கழகங்களின் பெயர்ப் பட்டியல் இதோ!

1. மைதிலி பல்கலைக் கழகம் / விஷ்வாவித்யாலயா, பீகார் 

2. கமர்ஷியல் பல்கலைக் கழகம், டெல்லி 

3. யுனைடட் நேஷன்ஸ் பல்கலைக் கழகம், டெல்லி 

4. வொகேஷனல் பல்கலைக் கழகம், டெல்லி 

5. ஏ.டி.ஆர் - சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக் கழகம், டெல்லி  

6. அறிவியல் மற்றும் பொறியியல் இந்தியன் கல்லூரி, டெல்லி   

7. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக் கழகம், டெல்லி  

8. அத்யாத்மிக் விஷ்வாவித்யாலயா, டெல்லி  

9. படகன்விசர்க்கார் உலக திறந்த நிலை பல்கலைக் கழகம், கர்நாடகா. 

10. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், கேரளா 

11. ராஜா அரேபிய பல்கலைக் கழகம், மஹாராஷ்டிரா 

12. மாற்று மருந்து இந்தியன் பல்கலைக் கழகம், மேற்கு வங்காளம்

13. மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேற்கு வங்காளம்

14. வாரணாசிய சம்ஸ்கிருத விஷ்வாவித்யாலயா, வாரணாசி, டெல்லி 

15. மஹிலா க்ராம் வித்யாபித் விஷ்வாவித்யாலயா பெண்கள் பல்கலைக் கழகம், உத்திரப் பிரதேசம்  

16. காந்தி ஹிந்தி வித்யாபித், உத்திரப் பிரதேசம்

17. தேசிய எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக் கழகம், உத்திரப் பிரதேசம் 

18. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக் கழகம், உத்திரப் பிரதேசம்

19. உத்திரப் பிரதேச விஷ்வாவித்யாலயா, உத்திரப் பிரதேசம்  

20. மஹாரண பர்டாப் சிக்ஷா நிகேதன் விஷ்வாவித்யாலயா, உத்திரப் பிரதேசம்

21. இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷாத் நிறுவனம், உத்திரப் பிரதேசம் 

22. நபபாரத் சிக்ஷா பரிஷாத், ஒடிஷா  

23. வேளாண் தொழிற்நுட்ப பல்கலைக் கழகம், வடக்கு ஒடிஷா

24. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, பாண்டிச்சேரி  

மேலும் UGC, மேற்கண்ட பட்டியலிலுள்ள எந்த பல்கலைக் கழகங்களிலும் சேர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு! April 25, 2018

Image

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஆசாராம் பாபுவிற்கான தண்டனை விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் மணாய் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஆசாராம் பாபு, தம்மை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கடந்த 2013-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆசாராம் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, ஜோத்பூரில் உள்ள எஸ்.டி., எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோத்பூர் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற நீதிபதி மதுசூதன் சர்மா, ஆசாராம் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அவர்கள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபணமாகியுள்ளநிலையில், மாலை 3 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறையை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் ரத்தக்கறை காங்கிரஸ் கைகளிலும் படிந்திருக்கிறது - சல்மான் குர்ஷித் April 24, 2018

கிரஸ் ஆட்சியின் போது மதக்கலவரங்களை கட்டுப்படுத்த கட்சி தவறியதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்திடம் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது 1984 சீக்கிய கலவரம், பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களின் போது, காங்கிரஸ் கட்சியின் கரங்களில் படிந்த முஸ்லிம்களின் ரத்தக் கறையை காங்கிரஸ் கட்சி எவ்வாறு போக்கும் என்று Amir Mintoee என்ற மாணவர் தனது கேள்வியை சல்மான் குர்ஷித்திடம் முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், “நானும் காங்கிரஸின் ஒரு அங்கம் என்பதால், இதனை நான் ஒத்துக்கொள்கிறேன், எங்களின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக் கறை படிந்துள்ளது. அதே நேரத்தில் உங்கள் கரங்களில் ரத்தக் கறை படியக்கூடாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

நீங்கள் அவர்களை தாக்கினால் உங்கள் கரங்களிலும் ரத்தக் கறை படியும், வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும், இதே பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் 10 ஆண்டுகள் கழித்து வரும் போது இதே கேள்வியை வேறு யாரும் உங்களைப் பார்த்து கேட்டுவிடாத அளவிக்கான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று சல்மான் குர்ஷித் அந்த மாணவருக்கு பதிலளித்தார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான பி.எல்.பூனியா சல்மான் குர்ஷித்தின் கருத்தை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது என்றார்.
 
தனது கருத்தால் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சல்மான் குர்ஷித், “இந்த விவகாரத்தில் ஒரு மனிதனாக எனது கருத்தை தெரிவித்தேன், நான் காங்கிரஸின் பிரதிநிதி அல்ல, நான் தான் காங்கிரஸ், எனவே நான் என்ன கூறினேனோ அதனை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்” என்றார்.

அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த போது அது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.