Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 7 ஏப்ரல், 2018

ஐ.பி.எல். போட்டிக்கு தமிழகத்தில் தடைவிதிக்க கோரிக்கை! April 6, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், மீறினால் மைதானத்திற்குள் புகுந்து கலவரம் செய்து தடுப்போம் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மக்களின் போராட்ட மனநிலையை மாற்றி கிரிக்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பும் எனவும் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார். 

எனவே இந்த போட்டியை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மீறினால், கிரிக்கெட் நடக்கும் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம் என்றும் கருணாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.