Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 7 ஏப்ரல், 2018

மு.க. ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணம்! April 7, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இன்று தொடங்குகிறார்.

சென்னையில் கடந்த 1-ம் தேதி திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்குகிறார். முன்னதாக, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நேற்று அவர் வாழ்த்து பெற்றார். மேலும், காவிரி உரிமை மீட்புப் பயணம் குறித்த விவரங்களை கருணாநிதியிடம் அவர் எடுத்துக் கூறினார்.