Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 26 ஜூலை, 2018

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கியது சிறுமுகை பாலம்...! July 26, 2018

Image


மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய உயர்மட்ட பாலத்தால் நான்கு கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 10 நாட்களாக பெய்த மழையால் பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து அதிகரித்து அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது. தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளம் காரணமாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள காந்தையாற்று உயர்மட்ட பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் நான்கு கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது. 

காந்தவயல்,ஆலூர்,உளியூர் உள்ளிட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இந்த கிராமங்களில் இரண்டு அரசு ஆரம்பள்ளியும், ஒரு அங்கன்வாடி பள்ளியும் உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் விவசாயம் செய்யபட்டு இருந்த லட்சக்கணக்கான வாழைகளும் நீரில் மூழ்கி உள்ளன.