Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 13 ஏப்ரல், 2020

ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதை தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டி அட்டூழியம்!

Image
பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவை மீறியதை தட்டி கேட்ட காவலரின் கையை வெட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே ஊரடங்கு உத்தரவை மீறி சீக்கியர்கள் சிலர் காரில் சென்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சமூக இடைவெளியை அறிவுறுத்தி கூட்டமாக செல்லக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த அந்த கும்பல்,திடீர் வன்முறையில் ஈடுபட்டு போலீசாரை தாக்கியுள்ளது. இதில் காவலர் ஒருவரின் கையை, கத்தியால் அக்கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டியதில், அவரது கை துண்டாகியது. இதனையடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 9 பேர் அடங்கிய கும்பலை கைது செய்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 
credit ns7.tv