Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 13 ஏப்ரல், 2020

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் - திமுக அறிவிப்பு

Image
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  மு க ஸ்டாலின் தலைமையில் வரும் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக இடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை போர் நடந்து வரும் நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. 
credit ns7.tv