Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

மக்களின் பசியைப் போக்க மத்திய அரசிடம் உள்ள பணத்தை பிரதமர் தருவாரா என கவலையுடன் எதிர்பார்கிறேன் - ப.சிதம்பரம்

மக்களின் பசியைப் போக்க மத்திய அரசிடம் உள்ள பணத்தை பிரதமர் தருவாரா என கவலையுடன்  எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் உரையாற்ற இருப்பது குறித்து, ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,  பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போலவே நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.ஊரடங்கை வரும் 30-ஆம் தேதி வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு நீடித்தாலும், மக்கள் வாழ வேண்டுமே என கூறியுள்ள சிதம்பரம், 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பண உதவியை எதிர்பார்ப்பது இருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான செலவு பட்ஜெட்டில் 30 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது நாட்டுடைய பணம் என்றும், நம்முடைய பணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் இருக்கும் 30 லட்சம் கோடி ரூபாயில் 65 ஆயிரம் கோடி ரூபாயை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா, மாட்டாரா எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது நிறைவேற, நம்பிக்கையுடன் பிராத்தனை செய்வதாக கூறியுள்ள அவர், நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
credit ns7.tv