Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 21 அக்டோபர், 2020

தமிழக ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு: 7.5% உள் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்!

 மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்தித்து மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மசோதாவை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தனர். இதில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தினர்