Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 21 அக்டோபர், 2020

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

 தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 91 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 40 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4ஆயிரத்து 403 பேர், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6 லட்சத்து 46 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளது.
 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.