Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 31 அக்டோபர், 2020

இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்… சென்னை வானிலை அறிக்கை!

  தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.