Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 31 அக்டோபர், 2020

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை!" - உமர் அப்துல்லா

 தாங்கள் நடத்தும் போராட்டம் நாட்டிற்கு எதிரானது அல்ல, பாஜகவிற்கு எதிரானது என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்துவதற்காக குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்கிற அமைப்பை ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவை இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இன்று லடாக்கின் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் என்கிற இடத்திற்குச் சென்று அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களையும், உள்ளூர் மக்களையும் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தாங்கள் போராட்டத்தை ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்றும், பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராகத்தான் தாங்கள் போராடி வருவதாகவும் நாட்டிற்கு எதிராக அல்ல என்றும் அவர் கூறினார்.