வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வேலை வாய்ப்பு; 97 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

 8 12 2022

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 97 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பயிற்றுனர் (Coach)

காலியிடங்களின் எண்ணிக்கை : 97

பிரிவுகள் : Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics (sprints), Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu

சம்பளம் : ரூ. 35,600 – 1,12,800

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.sdat.tn.gov.in/pdf/12.12.2022_cr_Tamil.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-sports-development-authority-recruitment-2022-apply-97-coach-vacancies-554946/