சிறுதொழில்


காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்
முதலீடு :
காளான் வளர்ப்புக்கு குறைந்தபட்ச முதலீடு 20,000
1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில்.
2)காளான் விதை .
3)பாலிதீன் பை
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
5)தண்ணீர் குறைந்தே பட்சம் 100 லிட்டர் / நாளைக்கு.
6)வைக்கோலில் உள்ள கிருமிகளை அழிக்க கெமிக்கல்
[ பார்மோலின் ,பெவிஸ்டின் ]
இந்த தொழில் ஒரு காய்கறி விவசாயம் போன்றது , முதலீடு என்பது ரூ.1000 ரூபாயிலும் தொடங்கலாம் . முதலீடு என்பது நாம் எத்தனை படுக்கை செய்கின்றோமோ அதை பொறுத்து மாறுபடும் . ஒரு காளான் படுக்கை செய்ய தேவையான செலவு ரூ.40- 50 வரை ஆகும்
செய்முறை:
வைகோலை பதப்படுத்த இரண்டு முறை உள்ளது :முதலில் வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும் . அதற்கு இரண்டு முறை உள்ளது . (கிருமிகளை அழிக்கும் முறை 1)
1)கொதி நீரில் அவித்தல் முறை
(கிருமிகளை அழிக்கும் முறை 2)
2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை
கொதி நீரில்அவித்தல்முறை (இது சிறிய அளவில் காளான் உற்பத்திக்கு )
நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து . இதனை ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும் இது முதல் முறையாகும்.
2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை . ( இது பெரிய அளவில் காளான் உற்பத்திக்கு )
நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து. அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் .இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும்,இது இரண்டாவது முறையாகும்.
* காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்*
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி\, வைகோலில் உள்ள கிருமிகளை அழித்த பிறகு .இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலரவைக்கவும் . ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.
இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
காளான் வளர்ப்பு பற்றிய முழு வீடியோ விரைவில் வெளியிடப்படும்......
தகவல்f#B
விவசாயம் காப்போம்

உங்களது குடும்ப உணவு தேவையை பூர்த்தி செய்யும் உணவு காட்டை எவ்வாறு வடிவமைப்பு? தாளாண்மை திரு.பாமயன் | உணவுக்காடு வடிவமைப்பு விதிமுறைகள் இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி facebook channel-க்கு லைக் செய்ய மறக்காதீர்கள்..

Credit FB page Sirkali TV

 இ-சேவை மையம் தொடங்குவது எப்படி?

தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அதில் வருவாய்துறை சான்றிதழ்கள் உட்பட சில சேவைகள் மக்கள் நேரடியாக தங்களுக்கான உள்நுழைவு ஐடியை குடிமக்கள் போர்டலில் பதிவு செய்துகொண்டு பெற முடியும். மற்ற சேவைகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே வழங்கப்படுகிறது.
இ-சேவை மையங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இ-சேவை மையங்கள் பொதுவாக தனியார் இ-சேவை மையம், மக்கள் கணினி மையம், கணினி மையம், இ-சேவை மையம், பொது இ-சேவை மையம், அரசு இ-சேவை மையம், அரசு பொது இ-சேவை மையம் என வெவ்வேறு பெயர்களில் மக்களால் அழைக்கப்படும். ஆனால் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் வழங்கக்கூடிய இ-சேவை ஐடிகளை வைத்துள்ள மையங்களே அரசு பொது இ-சேவை மையம் என அழைக்கப்படும்.
இ-சேவை மையத்தை தொடங்க என்னென்ன தகுதிகள் தேவை?
இ-சேவை மையத்தை நடத்த சிறிது கணினி அறிவும், தமிழ் ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தாலே போதுமானது. போதிய இட வசதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஆர்வமும் திறமையும் இருந்தால் சிறப்பாக செயல்பட்டு நல்ல வருமானம் ஈட்டலாம்.
இ-சேவை மையத்தை தொடங்கும் வழிமுறைகள் யாவை?
இ-சேவை மையங்களை தொடங்க கீழ்கண்ட படிகள் உள்ளன. முழுமையாக படிக்கவும்.
1. முதலில் இ-சேவை மையத்தை ஆரம்பிக்க தேவையான கீழ்கண்ட உபகரணங்களை வாங்கி கொள்ளவும்.
கணினி
ஸ்கேனர்
பிரிண்டர்
பயோமிட்ரிக் கருவி
வெப் கேமரா
இணைய வசதி
கண்காணிப்பு கேமரா
2. சிட்டா/பட்டா, வில்லங்க சான்று போன்ற பல சேவைகள் வழங்க எந்தவொரு ஐடியையும் பெற அவசியம் இல்லை. அவற்றை முதலில் தங்கள் மையத்தில் வழங்கலாம்.
3. தங்கள் மையத்தில் கூடுதல் சேவைகளை வழங்க அந்தந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து ஐடியை விண்ணப்பித்து பெற வேண்டும். உதாரணமாக டிஜிட்டல் சேவா ஐடி, இ-சேவை ஐடி, இ-டிஸ்டிரிக்ட் ஐடி, etc. பொதுவாக மத்திய அரசால் வழ‌ங்க‌ப்படு‌ம் சேவைகள் டிஜிட்டல் சேவா ஐடி மூலமும் மாநில அரசால் வழ‌ங்க‌ப்படு‌ம் சேவைகள் இ-சேவை ஐடி மூலமும் வழங்கப்படும்.
4. தனியர் இரண்டு வழிகளில் மின் ஆளுமை முகமையின் இ-சேவை ஐடியை பெற முடியும்.
5. ஒன்று, கேபில் டீவி நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மின் ஆளுமை முகமையின் இ-சேவை ஐடியை நேரடியாக பெறமுடியும். இந்த ஐடியை பெற மாவட்ட கேபில் டீவி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
6. இரண்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் CSC e-Governance அல்லது CSCSPV நிறுவனத்தின் மூலம் கிராம தொழில் முனைவோர் டிஜிட்டல் சேவா ஐடியை பதிவு செய்து பெறமுடியும். சிறப்பாக செயல்படும் கிராம தொழில் முனைவோர்களுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகவே மின் ஆளுமை முகமையின் இ--சேவை ஐடி பெற்று கிராம தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் (அவர்களின் தொடர்பு எண்கள் அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும்) அல்லது டிஜிட்டல் சேவா ஐடியை விண்ணப்பித்த பிறகு அவர்களே கள ஆய்வு மேற்கொள்ள மையத்திற்கு வருவார்கள் அப்போது தொடர்பு கொள்ளலாம்.
TNeGA இ-சேவை ஐடி பெற எவ்வளவு நாள் ஆகும்?
மேலே குறிப்பிடப்பட்ட ஐடிகளை பெற குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். ஆகவே பொறுமை மிக அவசியம். சேவை மைய முகவர்களுக்கேற்ப காலம் மாறுபடும். CSCSPV ஐடி பெற, முதலில் டிஜிட்டல் சேவா ஐடியை பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் பின்னரே பரிந்துரைக்கப்படுவீர். கேபிள் டிவி ஐடியை பெற, விண்ணப்பத்துடன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட மையங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மையங்களுக்கு ஐடி வழங்கப்படும்.
TNeGA இ-சேவை ஐடி பெற கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. TNeGA இ-சேவை ஐடி பெற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஐடியை இலவசமாகவே பெறலாம். கேபிள் டிவி ஐடியை பெறுவதற்கு மட்டும், குறிப்பிட்ட வைப்பு தொகை செலுத்த வேண்டும். அந்த வைப்பு தொகையானது ஒப்பந்தம் முடிந்த பின்பு திரும்ப வழங்கப்படும்.
அனைத்து இ-சேவைகளையும் வழங்க TNeGA இ-சேவை ஐடி கட்டாயமா?
இல்லை. மின்கட்டணம் செலுத்துதல், பத்திர பதிவு சேவைகள், டிக்கெட் புக்கிங் etc... போன்ற சேவைகளை வழங்க அந்தந்த இணையதளத்திலேயே ஐடியை பதிவு செய்து பெற்று கொள்ளலாம். சிட்டா/பட்டா, வில்லங்க சான்று போன்ற பல சேவைகள் வழங்க எந்தவொரு ஐடியையும் பெற அவசியம் இல்லை. டிஜிட்டல் சேவா ஐடி இருந்தால் மத்திய அரசின் பல திட்டங்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க முடியும்.
டிஜிட்டல் சேவா ஐடி மூலம் என்னென்ன சேவைகள் வழங்க முடியும்?
பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்துதல் (PMFGY)
ஓய்வூதியம் விண்ணப்பித்தல்(PMSYM)
இலவச டிஜிட்டல் கல்வி வழங்குதல்(PMGDISHA)
மின்கட்டணம் செலுத்துதல்
டிக்கெட் புக்கிங் (Flight/Train/Bus/Darshan)
பான் கார்டு(PAN Card) விண்ணப்பித்தல்
வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல்,
விவரங்களை திருத்தம் செய்தல்
ஆதார் சேவைகள்
பாஸ்போர்ட் (Passport) விண்ணப்பித்தல்
மொபைல்/DTH ரிச்சார்ஜ்
LED பல்ப் வழங்குதல்
ஓய்வூதியதாரர்களுக்கு உயிர் சான்றிதழ் வழங்குதல்
பாஸ்ட் டேக்(FASTTAG)
பைக்/கார் வாகனங்களுக்கு காப்பீடு வழங்குதல்
மருத்துவ சேவைகள்
ஆயுள் காப்பீடு பணம் செலுத்துதல்
திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல
தொலைதூர கல்வி (Tele Education) வழங்குதல்
தொலைதூர மருத்துவம் (Tele Medicine) வழங்குதல்
DigiPay மூலம் பண பரிமாற்றம்
வங்கி சேவைகள் (Bank Correspondence)
மேலும் பல சேவைகள்
TNeGA இ-சேவை ஐடி மூலம் என்னென்ன சேவைகள் வழங்க முடியும்?
வருவாய்த்துறை சான்றிதழ்கள்
திருமண உதவிதொகை
குழந்தை பாதுகாப்பு திட்டம்
இணையவழி பட்டா மாற்றம்
தற்காலிக பட்டாசு உரிமம்
இ-அடங்கல்
மின் கட்டணம் செலுத்துதல்
பட்டா/சிட்டா/புலப்படம்
குடும்ப அட்டை திருத்தங்கள்
காவல்துறை சேவைகள் (CSR/FIR Status, Lost Document Report etc.)
போக்குவரத்துத்துறை சேவைகள் (LLR Application)
பத்திரப்பதிவு துறை சேவைகள் (Online appointment for Marriage/ Document registration)
தீ மற்றும் மீட்பு துறை சேவைகள்
பிறப்பு/இறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
மாநகராட்சி/நகராட்சி குடிநீர்/சொத்து/தொழில் வரி செலுத்துதல்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சேவைகள் (Registration and Renewal)
சுகாதாரத்துறை சேவைகள் (மருந்து கடை உரிமம் விண்ணப்பித்தல்)
மீன்வளத்துறை சேவைகள் (Relief Assistance during Fishing Ban Period)
மேலும் பல சேவைகள்
TNeGA இ-சேவை ஐடிக்கு விண்ணப்பிக்கும் பொழுது நினைவில் கொள்ளவேண்டியவை யாவை?
மையத்தின் முகவரி, மையத்தை இயக்குபவர் (CSC Operator) விவரம் மற்றும் குறிப்பாக தங்கள் மையம் அமைந்துள்ள இடம் கிராம ஊராட்சியில் உள்ளதா அல்லது பேரூராட்சி உள்ளதா அல்லது நகராட்சி உள்ளதா என்பதை தெளிவாக குறிப்பிட்ட வேண்டும். ஏனெனில் பின்பு அந்த விவரங்களை மாற்ற இயலாது.
TNeGA இ-சேவை ஐடி பெற்ற பின்பு என்ன செய்ய வேண்டும்?
TNeGA இ-சேவை ஐடி பெற்ற பின்பு, பயோமெட்ரிக் உள்நுழைவு செய்ய ஏதுவாக தங்கள் ஐடியுடன் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படும். பின்பு இ-சேவைகளை மேற்கொள்ள தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். தங்கள் மையத்தில் அரசு இ-சேவை மையம் என பெயர் பலகை, சேவைகள் மற்றும் அரசு நிர்ணயித்த சேவை கட்டணங்கள் மற்றும் புகார் எண்கள் அடங்கிய பலகை வைக்கப்பட வேண்டும். அதன்பின் தங்கள் மையத்தில் இ-சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கலாம்.
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்.


 23 2 23

மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள்
தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து
80 ஆயிரம் ஏக்கரில் சம்பா,குருவை உள்ளிட்ட நெற்பயிர்களும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில்
உளுந்து பயிரும் சாகுபடி செய்யப்படுகின்றன. நகர்மயமாதலின் விளைவாக
விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில், நடவு இயந்திரம்,உழவு
இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் என்று இயந்திரங்கள்
மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் திரவ வடிவ மருந்துகள்
தெளிப்பதற்கு விவசாயிகள் இன்றும் கைத்தெளிப்பான்கள் மூலமே வயலில் நடந்து சென்று விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு கால நேரம் அதிகமாக செலவாகுவதுடன் ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இதற்கு ஒரு தீர்வாக ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டத்தின் கீழ் மத்திய அரசு  விவசாயிகளுக்கான ட்ரோன்களுக்கு 50% மானியம் வழங்குகிறது.

இதனை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையை அடுத்த அடியமங்கலம் பகுதியில்  உள்ள விவசாயி ஒருவரின் வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ட்ரோனின் மொத்த மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்குகிறது.

இதன் மூலம் மருந்து தெளிப்பதால் ஒரு மணி நேரத்தில் 5 ஏக்கர் வரை விரைவாக மருந்துகளை தெளிக்க முடியும் என்று செயல்முறை விளக்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


Agriculture Minister Narendra Singh Tomar inaugurates Conference on ‘Promoting Kisan Drones- Issues, Challenges and Way Forward’


Drones will have multi-faceted use in agriculture: Union Agriculture Minister

Union government to provide 50 percent subsidy to SC-ST, women and small and medium farmers to buy drones

Posted On: 02 MAY 2022 6:24PM by PIB Delhi

Union Minister of Agriculture and Farmers Welfare Shri Narendra Singh Tomar today inaugurated and addressed the conference on “Promoting Kisan Drones: Issues, Challenges and the Way Ahead” organized as part of Azadi Ka Amrit Mahotsav. Shri Tomar said that the government is promoting the use of drones for the convenience of the farmers, reducing the cost and increasing the income. For promoting use of Kisan Drones, the government is providing 50% or maximum Rs. 5 lakh subsidy to SC-ST, small and marginal, women and farmers of northeastern states to buy drones. For other farmers, financial assistance will be given upto 40 percent or maximum Rs.4 lakh, the Minister Added.

 


Speaking on the multi-faceted use of drones in agriculture, Union Agriculture Minister Shri Tomar said that Prime Minister Shri Narendra Modi has initiated the use of drones in agricultural activities in the wider interest of farmers. The government is promoting the use of 'Kisan Drone' for crop assessment, digitization of land records, spraying of pesticides and nutrients for which provision has also been made in the budget. Modernization of the country's agricultural sector is on the agenda of the government led by Prime Minister Shri Modi.


 

He said that To promote use of drones in agriculture and make drone technology affordable to the farmers and other stakeholders of this sector, financial assistance @ 100 % cost of drone together with the contingent expenditure is extended under Sub-Mission on Agricultural Mechanization (SMAM) to the Farm Machinery Training & Testing Institutes, Institutions of Indian Council of Agricultural Research, Krishi Vigyan Kendra (KVK) and State Agricultural Universities (SAUs) for its demonstration on the farmer’s fields. Farmers Producers Organizations (FPOs) are provided grants @ 75% for purchase of drones for its demonstration on the farmers’ fields.

In order to provide agricultural services through drone application, financial assistance @ 40% of the basic cost of drone and its attachments or Rs.4 lakhs, whichever less is also provided for drone purchase by existing and new Custom Hiring Centers (CHCs) under Cooperative Society of Farmers, Farmers Producer Organizations (FPOs) and Rural entrepreneurs. The agriculture graduates establishing CHCs are eligible to receive financial assistance @ 50% of the cost of drone up to a maximum Rs.5.00 lakhs. In addition to the already identified institutions for drone demonstration, other agricultural institutions of the state and central government, central public sector undertakings engaged in agricultural activities have also been brought in the eligibility list for financial assistance for farmers’ drone demonstration. The Union Ministry of Agriculture and Farmers Welfare is providing assistance to the State Governments through several schemes to promote agriculture across the country and to increase the production and productivity, besides reducing the human labor associated with various agricultural activities. The Government is also helping farmers access modern technology to improve the use efficiency of inputs such as seeds, fertilizers and irrigation.

Details Here https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822070

source https://news7tamil.live/mayiladudurai-agriculture-drone.html








சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் – விவசாயிகள் பயன்பெற தமிழக அரசு அழைப்பு

 31 10 2022

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேளாண் பெருமக்களின் நலனுக்காக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேலாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2021- 2022ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியை வேளாண் பணிகளுக்கு திறம்பட பயன்படுத்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். இந்த AC மற்றும் DC பம்புசெட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவசமாக பராமரிப்பு செய்வதுடன், காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://pmkusum.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். வேளாண்மை பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/surya-shakti-pumpsets-project-tamil-nadu-government-invites-farmers-to-benefit.html



நீங்களும் தொடங்கலாம் அஞ்சல் நிலையம்: இந்தியா போஸ்ட் அசத்தல் அறிவிப்பு! 5 6 2023
அஞ்சலகத்தில் முகவராக சேர்ந்து நீங்களே ஒரு அஞ்சலகம் போல் செயல்படுத்தலாம் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சலகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
அஞ்சல் துறை இமெயில், இன்டர்நெட் என பல தகவல் தொழில்நுட்ப வசதி தற்போது வந்திருந்தாலும் இன்னும் அஞ்சல் துறைக்கு என ஒரு மதிப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதிகாரபூர்வமான தபால்கள், அரசு தபால்கள் இன்னும் அஞ்சல் மூலம் தான் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அஞ்சல் நிலையம் மூலம் இளைஞர்களுக்கு சொந்த வணிகம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
இருப்பினும் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சல் நிலையங்கள் இல்லை. அஞ்சல் நிலையங்கள் தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கும் இடத்தை தேர்வு செய்து அதில் முகவராக சேரும் வாய்ப்பை அஞ்சல் நிலையம் தற்போது வழங்கியுள்ளது.
முகவர்கள் அதுமட்டுமின்றி தனிநபர்கள் அஞ்சல் நிலையத்தில் ஏஜெண்டுகளாக இருந்து தபால் தலை உள்பட அனைத்து அஞ்சலக பொருட்களையும் கிராமப்புறங்களில் விற்பனை செய்யும் உரிமையையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அஞ்சல் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதலீடு இதற்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டும் முதலீடு இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக கிளை தொடங்கும் வாய்ப்பு அல்லது முகவர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
அஞ்சல் நிலைய கிளை தொடங்க என்ன தகுதி?
அஞ்சலக முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் 18வயது நிரம்பி இருக்க வேண்டும்.
இந்தியக் குடிமகன்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு.
அஞ்சலக முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கனவே சிறிய கடைகளை கிராமங்களில் நடத்தி வருபவர்களும் முகவராக சேரலாம்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், புதிய தொழில்மையம், கல்லூரிகள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளிலும் அஞ்சல கிளையை தொடங்கலாம்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
அஞ்சல முகவராக வரும் தனிநபர்களுக்கு ஒரு பதிவு தபாலுக்கு மூன்று ரூபாய் கமிஷன் கிடைக்கும்.
அதேபோல் விரைவுத் தபால் புக் செய்தால் ரூ.5 கமிஷனும், மணிஆர்டர் செய்தால், ரூ.100க்கு ரூ.3.50 கமிஷனும், ரூ.200க்கு மேல் ரூ.5 கமிஷனும் கிடைக்கும். ஒரு மாதத்தில் 100 பதிவுத் தபால் செய்துவிட்டால், 20% கமிஷன் அதிகமாக கிடைக்கும். மேலும் அஞ்சல் தலை, கவர்கள், கார்டுகள் ஆகிய பொருட்களை விற்பதன் மூலம் 5 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும். ரெவன்யூ ஸ்டாம்ப் ரெவன்யூ ஸ்டாம்ப் விற்பனைக்கு 40% கமிஷன் தரப்படும். விரைவு பார்சல் ரூ.5 லட்சம் வரை புக் செய்தால் 10% கமிஷனும், பதிவுப் பார்சல் புக் செய்தால் 7% கமிஷனும் கிடைக்கும்.
ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.2.50 லட்சம் வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 15 சதவீதம் கமிஷன் மற்றும் பதிவுத் தபால் புக் செய்தால், 10% கமிஷனும் கிடைக்கும். 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரூ.ஒரு கோடி வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 20% கமிஷன் கிடைக்கும். அதேபோல் ஒரு கோடி முதல் ரூ.5 கோடி வரை ஸ்பீட் பார்சலுக்கு 25% கமிஷனும், ரூ.5 கோடிக்கு மேல் விரைவு பார்சலுக்கு 30% கமிஷனும் கிடைக்கும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
அஞ்சல் கிளை தொடங்கும் இடம் குறித்து விரிவான அறிக்கையை அஞ்சல் நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அஞ்சல் நிலையத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பம் செய்யலாம்.
அஞ்சலக் கிளையை தொடங்கும் இடம் குறித்த தகவல் விரிவாக இருக்க வேண்டும். விண்ணப்பம் அதன் பின் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்ட பின்னர் அஞ்சல்துறையும், முகவராக வருவோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பத்தை அளித்த பின்னர், விண்ணப்பதாரரை தேர்வு செய்வதோ அல்லது நிராகரிப்பதோ மண்டலத் தலைவர் அதிகாரத்துக்கு உட்பட்டது. விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து 14 நாட்களுக்குள் அஞ்சல் கிளை தொடங்குவதற்கான அனுமதி குறித்து முடிவு செய்யப்படும்.
source : TNTJ Student Wings / நன்றி:- https://tamil.goodreturns.in/

நீங்கள் பிஸினஸ் செய்ய பொருத்தமானவரா?
நீங்கள் பிஸினஸ் செய்ய பொருத்தமானவரா? புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களுக்கு பயனுள்ள காணொளி. #பாருங்கள் #பகிருங்கள் Speech By: Dr.M.ஹுசைன் பாஷா, MBA.,LL.B.,M.Sc(Psy).,MA(PMIR).,M.Phil.,Ph.D., உளவியல் நிபுணர், தமுமுக விழி மாநில செயலாளர்
youtube link :https://youtu.be/mY4K-q8n44U

நாட்டுக்கோழி வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்
காளான் வளர்ப்பு பற்றிய ஒரு தொகுப்பு
பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் , பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு ,தர்மபுரி,விழுப்புரம் மற்றும் மேட்டூர்.
[1]காளான் விதைகள் சாம்பிள் 1 கிலோ , [2] CD/ புத்தகம் , [3] 5 காளான் படுக்கை பாலிதீன் கவர்கள் வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் விலை ரூ.200. தேவைக்கு , உங்கள் முகவரியை மெசேஜ் /SMS அனுப்பவும் 9944858484.
திட்ட அறிக்கை :
1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை
3)பாலிதீன் பை
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
***ஒரு காளான் பை (12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 முதல்
ரூ .50 [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]
***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும் } [ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் அடுத்த அடுத்த அறுவடை ]
***200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60.
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான் பைக்கு )
அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான் பைக்கு )
***200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான் பைக்கு )
அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான் பைக்கு )
உற்பத்தி செய்யும் காளானை சந்தைபடுத்தும் முறைகள்
விற்பனை :
1)நீங்களாக மார்கெட் செய்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம் =>ரூ 450( ஒரு காளான் பைக்கு )

2)மொத்த வியாபாரியிடம் கொடுத்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம் =>ரூ 220( ஒரு காளான் பைக்கு )
உற்பத்தி செய்யும் காளானை சந்தைபடுத்தும் முறைகள்
1)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் வசிக்கும் சமையல் மாஸ்டர்களை அணுகவும் , ஒருமாதத்தில் நான்கு அல்லது ஐந்து விஷேசங்களில் வெசிடபள் /காய்கறி பிரியானிக்கு பதில் காளான் பிரியாணியை சமைக்க வலியுறுத்த சொல்லலாம் . சமையல் மாஸ்டர்களுக்கு ஒரு சிறு தொகையை
கமிசன் னாக குடுக்கலாம் . இதன் மூலம் வாரத்திற்கு 20 முதல் 30 கிலோவை சுலபமாக விற்கலாம் .
2) விஷேச பத்திரிக்கை அச்சு அடிக்கும் இடத்தில் எளிதாக விஷேச வீட்டுகாரர்களின் மொபைல் எண்ணை ஒரு வாரம் முன்னதாகவே பெற்று அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம் .
3)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் அதிக மக்கள் வந்து போக கூடிய இடத்தில் இருக்கும் ஒரு பெரிய மளிகை கடையை அல்லது மெடிக்கல் அனுகி "இங்கு காளான் கிடைக்கும்" என்ற கலர் பிரிண்ட்(காளான் படத்துடன்) எடுத்து மக்கள் பார்க்கும்படி ஒட்டவும் , மக்களே கேட்டு வாங்கி செல்வார்கள். ஒரு கடைக்கு 5 பக்கெட் என்றால் கூட பத்து கடைக்கு ஒரு நாளைக்கும் 50 பக்கெட் சுலபமாக மார்க்கெட் செய்யலாம். (கடைக்கு ஒரு பக்கெட்-ஐ ௫.35 என்ற விலையில் தந்து கடைக்காரர் 45 /50 விலையில் விற்கலாம்)
4)தற்போது மக்கள் பகிரியில் அதிகம் வெஜிடபள் பப்ஸ்-க்கும் பதில் காளான் பப்ஸ்-ஐ அதிகம் விரும்பி உண்ண தொடங்கி விட்டார்கள் , பாக்கிரிகளை அனுகி,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
5)உங்கள் பக்கத்துக்கு டவுனில் பஸ்டாண்டில் தள்ளு வண்டியில் காளான் சமைத்து விற்பார்கள், அங்கும் மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம். .
6)தற்போது பல இடங்களில் வெஜிடபள் சமோசா விற்பார்கள் , அங்கு காளான் சமோசாவை அறிமுகபடுத்தலாம் ,அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
7)தற்போது பல இடங்களில் கோழி/ஆட்டுகால் சூப் விற்பனை செய்கின்றனர் , அங்கு காளான் சூப் அறிமுகபடுத்தலாம், அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
8)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் நீங்களாக ஒரு சிறு ரூமை வாடகைக்கு எடுத்து ஒரு பரிட்சு(Fridge) ஒரு RS.3000 சம்பளத்தில் ஒரு பெண் வேலையாள் , கடை மேலே ஒரு பெரிய பேனர் "இங்கு காளான் கிடைக்கும், ஆர்டரின் பேரில் விஷேசங்களுக்கு சப்ளை செய்யப்படும்" என்று காளான் படத்துடன்பெரிய பேனர் வைக்கவேண்டும் , ஒரு நாளைக்கு 30 முதல் 50 பக்கெட் வரை சுலபமாக விற்பனை செய்யலாம்.
9)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் தினசரி மார்க்கெட் கண்டிப்பாக இருக்கும் அங்கு ஒரு ஆள் போட்டு சில்லரை விலையில்
(Rs.45/Rs.50 )அல்லது கடைகாரரிடம் மொத்த விலையில்(Rs.35 / Rs.40) விற்பனை செய்யலாம்.



ஜீவாமிர்த பாசன முறை



ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...


 கால்நடை
அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.
பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,
''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!

 ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி. மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.
''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.
''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.
ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன்.  இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.
மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி.
மணியுடன் தொடர்புகொள்ள : mrtmani@yahoo.co.in




நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா........?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா.....?
உங்களுக்கு ஓர் நற்செய்தி....

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

இன்றைய காலக் கட்டத்தில் விளம்பரம் என்பது வியாபாரத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது.இதில் நோட்டீஸ் அடித்து கொடுப்பது எளிய விளம்பர முறையாகும்.மேலும் அனைத்து வகையான விழாக்களுக்கும் அழைப்பிதழ் என்பது இன்றியமையாதது.இக்கால கட்டத்தில் ஆப்செட் பிரிண்டிங் ஒரு சிறந்த தொழிலாகும்.



சிறப்பம்சங்கள் :-
v  திருமணம்,காதணி விழா,கோவில் திருவிழாக்கள்,அரசியல் நிகழ்ச்சிகள்,கடை விளம்பரங்கள் போன்ற அனைத்து விதமான நிகழ்சிகளுக்கும்  பத்திரிக்கைகள் அடிக்க பயன்படுத்த படுகிறது.
v  பத்திரிக்கைகள், பில் புக்ஸ், விசிட்டிங் கார்ட்ஸ் போன்றவற்றிற்கு ஆர்டர் கொடுத்த உடன் உடனடியாக தயாரித்து கொடுக்க முடியும்.,
v  இன்றைய நடைமுறை வாழ்கைக்கு மிகவும் தேவையான நல்ல லாபம் தரும் தொழில்..,
v  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு        – 13  லட்சம் ( 2 Machines)
நடைமுறை முலதனம் – 02  லட்சம்
அரசு மானியம் : 25% முதல்35% PMEGP Scheme & 25% NEEDS Scheme

Regards…

C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road, 
Subramaniya Puram, Trichy 620020 
Cell  9789737886, 9345104264,  
சிறிய முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில்
அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி
பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
ஹோம் மேட் சாக்லேட் தேவையான முதலீடு :
குறைந்த பட்சம் 10,000
லாபம்:
15 முதல் 20 சதவீதம் வரை
சாதகமான அம்சம்கள் :
பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை.
ஒரு சில நாள் பயிற்சியே போதும்.
மூலப் பொருள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள்.
மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்.
தரமாக செய்தால் ஒரு வருடம் வரை வைத்து விற்பனை செய்யலாம்.
பாதகம் :
24 மணிநேரமும் குளிர்சாதன வசதி வேண்டும் அதற்கு தடையில்லா மின்சாரம் தேவை.
சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும்.
முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மார்க்கெட்டிங் செய்வது.
எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல் , புதுப்புது சுவைகளை எல்லோரையும் கவரும் வகையில் பேக்கிங் செய்து , வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம்.
கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான வித விதமான அச்சுகள் சந்தியிலேயே கிடைக்கின்றன. சக்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள் , ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம்.
ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்ப்பனையாகிறது.

வெள்ளாடு வளர்ப்பு பண்ணை
வெள்ளாடு வளர்ப்பு பண்ணை ஆட்டு இறைச்சிக்கும் பெரிய அளவிலான சந்தை வாய்ப்பு உள்ளது. ஆடு வளர்த்தால் நம் இடத்துக்கே வந்து வாங்கிச் செல்ல பலர் தயாராக உள்ளனர்.
எந்தத் தொழில் தொடங்கினாலும் அந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் தொடங்கினால் வெற்றி பெற இயலாது. எல்லா தொழில்களிலும் ஏராளமான இடர்பாடுகள் இருக்கும். ஆக, நாம் தொடங்கும் தொழிலில் எதிர்கொள்ள வேண்டிய இடர்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒருவர் ஓரளவேனும் முன்கூட்டியே அறிந்திருந்தால்தான், அந்த இடர்பாடுகளை சரி செய்து தொழிலில் முன்னேறிச் செல்ல முடியும்.
இதையெல்லாம் அறிய வேண்டுமானால் தொழில் தொடங்குவதற்கு முன்பே அடிப்படையான பயிற்சி என்பது மிகவும் அவசியம். ஏற்கெனவே அதே தொழிலில் ஈடுபட்டுள்ள வெற்றியாளர்களின் விவரங்களை அறிந்து, அவர்களின் இடத்துக்கே நேரில் சென்று அவர்களின் அனுபவங்களை எல்லாம் கேட்டு வர வேண்டும்.
ஆடு வளர்ப்போர் இத்தகைய பயிற்சிகளைப் பெற்று தொழிலைத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி. புதிதாக ஆட்டுபண்ணை ஆரம்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது இரண்டு வருடமாவது இந்த தொழிலில் இருப்பவரின் ஆலோசனையை கேட்டு பிறகு இந்த தொழில் செய்வது நல்லது முக்கியமாக நீங்கள் ஆடுகளை பண்ணை சுழலில் இருந்து வாங்குவது நல்லது ஏனென்றால் குறைந்தது ஒரு வருடமாவது உங்களுக்கு ஏற்கெனவே பண்ணை வைத்திருப்பவரின் உதவி தேவை இந்த தொழிலில் உள்ள இடர்பாடுகள் அனைத்தும் ஒரே நாளில் தெரிந்துகொள்ள முடியாது மேலும் விபரங்களுக்கு s.விஜயகுமார் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு பற்றிய முழு விவரங்கள் அனைத்து ஜாயிற்றுகிழமை களிலும் எங்களது பண்ணையில் வழங்கபடுகிறது. 
தொழில் முனைவோருக்கு `டின்’ அவசியமா ?
வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்களது தொழிலை மாநில அரசிடம் பதிவு செய்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.
ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அதை முறைப்படுத்தப்பட்ட வகையில் செய்வதற்கு டின் நம்பர் அவசியம். உற்பத்தி, சேவை, வர்த்தகம் என எந்த தொழில் வடிவமாக இருந்தாலும் டின் நம்பர் அவசியம். மாநில அரசின் வணிகவரித் துறை மூலமாக இது வழங்கப்படுகிறது. தொழில் நிறுவனம் பதிவு செய்யப்படும் மாநிலத்தில்தான் டின் நம்பர் வாங்க வேண்டும்.
பிற மாநிலங்களிலும் தொழில் செய்ய வேண்டும் என்றால் தனியாக மத்திய விற்பனை வரி எண் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்தந்த பகுதி வணிகவரி அலுவலகங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த எண் பதினோரு இலக் கங்களைக் கொண்டது. ஒவ்வொரு இலக்கத்துக்கும் ஒரு குறியீடு உள்ளது. இந்த எண் மதிப்பு கூட்டு வரி விதிப்பு (வாட்) கணக்கோடு தொடர்பு கொண்டது.
ஏன் வேண்டும் டின்?
உற்பத்தியாளர்கள், முகவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதி செய்பவர்கள் என வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் இந்த அனுமதி வாங்க வேண்டும். அரசுக்கு வணிக வரியை முறையாக செலுத்திவிட்டு இந்த தொழிலை செய்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. ஒரு தொழில்முனைவர் தனது உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வரி கொடுத்துத் தான் வாங்குகிறார்.
அதுபோல பயனாளிகளிடம் வரியை வாங்கிக் கொண்டுதான் விற்பனை செய்கிறார். குறிப்பிட்ட டின் எண்ணி லிருந்து இந்த வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளருக்கும் அரசுக்கும் தெரியப்படுத்த இது உதவுகிறது.
டின் நம்பர் பெறுவதற்கான விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை நகல், PAN கார்டு நகல், சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல், வாடகை ஒப்பந்த பத்திரம் நகல் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
மேலும் வணிகவரி துறையின் Form F Form A விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். நாம் மேற்கொள்ள உள்ள தொழிலுக்கு ஏற்ப கட்டணங்கள் இருக்கும். இந்த கட்டணத்திற்கு மட்டும் வணிகவரித்துறை பெயரில் வங்கி வரைவோலை கொடுக்க வேண்டும். ஏற்கனவே டின் நம்பர் வைத்திருக்கும் இரண்டு நபர்களின் பரிந்துரைக் கடிதத்தை நமது விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு டின் நம்பர் நமக்கு வழங்கப்படும். ஒரே வாரத்தில் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் ஒரு பான் எண்ணுக்கு ஒரு டின் நம்பர் மட்டுமே வழங்கப்படும்.
இந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒருவர் பல தொழில்களையும் செய்யலாம். ஆனால், டின் எண் வாங்கியவரின் பெயரில்தான் இந்த தொழில்கள் தொடங்க வேண்டும். ஒருவரது பெயரில் வாங்கப்பட்ட டின் நம்பரை வைத்து கூட்டாகத் தொழில் செய்ய பயன்படுத்த முடியாது. ஒரே டின் எண்ணின் அடிப்படையில் புதிய தொழில் தொடங்கும்போது வணிக வரித் துறைக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்துவிட வேண்டும்.

டின் எண் வாங்குவது சிரமமான வேலையல்ல, இதற்கென உள்ள முகவர்கள் மூலமாக எடுத்துக் கொள்ள லாம். மேலும் தொழில் ஆலோசகர்கள், எம்எஸ்எம்இ அலுவலகங்கள், டான்ஸ்டியா அலுவலகங்கள் மூல மாகவும் டின் நம்பர் எடுத்துக் கொள்ளலாம்
முயல் வளர்ப்பு எதற்காக ? 
குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்
இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம்
முயல் வளர்ப்பு யாருக்கு ?
நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.
முயல் வளர்ப்பின் பயன்கள் என்ன ?
முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்
முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம்.
இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன.
முயல்களின் குட்டி ஈனும் திறன் மிக அதிகம்
முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச் சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8 %) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
முயல் இனங்கள் மற்றும் கிடைக்குமிடம்
இறைச்சி வகை இனங்கள்
அதிக எடை உள்ள இனங்கள் (4-6 கிலோ எடை)
வெள்ளை ஜெயண்ட்
சாம்பல் ஜெயண்ட்
பிளமிஸ் ஜெயண்ட்
வெள்ளை ஜெயண்ட் - அதிக எடையுள்ள இனம்
நடுத்தர எடை உள்ள இனங்கள் (3-4 கிலோ எடை)
நியூசிலாந்து வெள்ளை
நியூசிலாந்து சிவப்பு
கலிஃபோர்னியா
குறைந்த எடை உள்ள இனங்கள் (2-3 கிலோ எடை)
சோவியத் சின்சில்லா
டச்சு வகை
சோவியத் சின்சில்லா - குறைந்த எடையுள்ள இனம் உயர்தர வெள்ளை ஜெயண்ட் மற்றும் சோவியத் சின்சில்லா இனங்கள் கிடைக்குமிடம்
கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
04286 -266491, 266492
முயல் வளர்ப்பு முறைகள்
முயல்களை புறக்கடை வளர்ப்பில் வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவில் கொட்டகை அமைத்தால் போதுமானது. முயல்களை கடுமையான வெய்யில் மற்றும் மழை போன்ற தட்பவெப்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கவும், மற்ற விலங்குகளிடமிருந்து (பூனை, கீரி மற்றும் நாய்) பாதுகாக்க கொட்டகை அமைப்பது முக்கியம். முயல்களை இரண்டு வகை வீடமைப்பில் வளர்க்கலாம்
ஆழ்கூள முறை
இம்முறையில் முயல்கள் வலைகள் தோண்டாதிருக்க கான்கிரீட்டிலான தரை அவசியம். உமி, வைக்கோல் அல்லது மரத்தூள் போன்றவற்றினை ஆழ்கூளமாக 4 முதல் 6 அங்குல உயரத்திற்கு இட வேண்டும். இவ்வகையில் 30 இளம் முயல்களுக்கு மேல் ஒன்றாக வளர்க்ககூடாது. குறைந்த எண்ணிக்கையில் முயல் வளர்க்க விரும்புவோர்களுக்கு ஆழ்கூள முறை வளர்ப்பு ஏற்றது. குறிப்பாக ஆண் முயல்களை தனிமைப்படுத்தி வளர்க்கவேண்டும். இல்லாவிடில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும். இம்முறை தீவிர முறை வளர்ப்புக்கு ஏற்றதல்ல. நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இளங்குட்டிகள் பராமரிப்பும் கடினம்.
கூண்டு முறை வளர்ப்பு
கூண்டு முறை வளர்ப்பில் அதிக எண்ணிக்கையிலான முயல்களை வளர்க்க இயலும். இம்முறையில் முயல்களை பராமரிப்பதும் எளிது.
இட அளவு
வளர்ந்த ஆண்முயல் - 4 சதுர அடி
தாய் முயல் - 5 சதுர அடி
இளம் முயல் - 1.5 சதுர அடி
பெரிய முயல் கூண்டு
1.5 அடி நீளம், 1.5 அடி அகலம் மற்றும் 1.5 அடி உயரம் உள்ள கூண்டுகள் பெரிய மற்றும் வளரும் முயல்களுக்கு போதுமானது. இந்த அளவுடைய கூண்டுகளில் ஒரு பெரிய முயலினையோ அல்லது இரண்டு வளரும் முயல்களையோ பராமரிக்கலாம்
வளரும் முயல் கூண்டு
நீளம் - 3 அடி
அகலம் - 1.5 அடி
உயரம் - 1.5 அடி
இந்த அளவுள்ள கூண்டுகளில் 4 முதல் 5 முயல்களை மூன்று மாத வயது வரை ஒன்றாக வளர்க்கலாம்.
குட்டி ஈனும் முயல்களுக்கான கூண்டு
தாய் முயல்களுக்கான கூண்டுகள் வளரும் முயல்களுக்கான கூண்டின் அளவே இருக்க வேண்டும். இக்கூண்டுன் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டுப்பகுதி 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியால் ஆனது) வெல்டு மெஸ்ஸால் ஆனதாக இருக்கவேண்டும். இது இளங்குட்டிகள் கூண்டினை விட்டு வெளியே வராமல் தடுக்க உதவும்.
குட்டி ஈனும் பெட்டி
முயல்கள் குட்டி போடும் போது அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை அமைய குட்டி ஈனும் பெட்டி அவசியம். இப்பெட்டிகளை மரம் அல்லது துருப்பிடிக்காத இரும்புத்தகடு கொண்டு செய்யலாம். குட்டி ஈனும் பெட்டியினை குட்டி போடும் கூண்டினுள் வைக்கக்கூடிய அளவிற்கு செய்யவேண்டும்.
குட்டி ஈனும் பெட்டியின் அளவு
நீளம் - 22 அங்குலம்
அகலம் - 12 அங்குலம்
உயரம் - 12 அங்குலம்
குட்டி ஈனும் பெட்டி
குட்டி ஈனும் பெட்டிகள் மேல் பகுதியில் திறக்கக்கூடியவாறு செய்யப்பட வேண்டும். அடிப்பகுதி முழுவதும் 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியாலானதாக) வெல்டு மெஸ்ஸாலானதாக இருக்கவேண்டும். பெட்டியினுடைய நீளவாட்டுப்பகுதியில் பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் 15 செ.மீ விட்டம் உள்ள வட்டவடிவ ஓட்டை அமைக்க வேண்டும். இது குட்டி போட்ட தாய் முயல் உள்ளே போய் வரப்போதுமானது. மேலும் இந்த ஓட்டை பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் இருப்பதால் இளங்குட்டிகள் வெளியே வராமல் தடுக்கிறது.
புறக்கடை முயல் வளர்ப்பு கூண்டுகள்
இக்கூண்டுகள் தரை மட்டத்திலிருந்து 3 அல்லது 4 அடி உயரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் உள்ளே போகாதவாறு செய்ய வேண்டும்.
தீவனம் மற்றும் குடிநீருக்கான உபகரணங்கள்
பொதுவாக இவை துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்படுகின்றன. தீவன தொட்டிகள் "J" வடிவில் கூண்டின் முன்பகுதியில் வெளிப்புறமாக பொருத்தும் படி அமைக்கப்படவேண்டும். செலவினை குறைக்க சிறிய கிண்ணங்களை தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்கப் பயன்படுத்தலாம்
"J" வடிவ தீவன தொட்டிகள்

சிறிய தண்ணீர் கிண்ணம்
தீவன மேலாண்மை
முயல்கள் அனைத்து வகையான தானியங்களையும் (சோளம், கம்பு மற்றும் இதர தானியங்கள்) பயறு வகைகளையும் (கொண்டை கடலை) நன்றாக சாப்பிடும். மேலும் இலை, பயறு வகை தாவரங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், அகத்தி, தட்டைப்பயறு போன்றவற்றையும் சமையலறை கழிவுகளான காய்கறி கழிவுகள் மற்றும் கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கள் மற்றும் அவற்றினுடைய இலைகளை விரும்பி உண்ணும்.
முயல்களின் உணவில் இருக்கவேண்டிய சத்துக்கள்
சத்துகளின் விபரம்
வளர்ச்சிக்கு
பராமரிப்பிற்கு
சினைக்கு
பால் சுரப்பிற்கு
செரிமானம் ஆக்கூடிய எரிசக்தி (கிலோ கலோரி)
2500
2300
2500
2500
புரதச்சத்து(%)
18
16
17
19
நார்ச் சத்து(%)
10-12
12-14
10-12
10-12
கொழுப்பு சத்து(%)
2
2
2
2
தீவன மேலாண்மையில் கவனிக்க வேண்டியவை
முயல்களின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றை அடர் தீவனம் மட்டும் கொண்டு வளர்க்க முடியாது
முயல்களுக்கு சரியான நேரத்தில் தீவனம் கொடுக்க வேண்டும். நேரம் தவறினால் முயல்கள் பரபரப்படைந்து உடல் எடை குறையும்
முயல்கள் பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை காரணமாக தீவனம் சாப்பிடாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். மேலும் இரவு நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே பசுந்தீவனங்களை இரவு நேரங்களில் தீவனம் அளிப்பது முயல்கள் அவற்றை வீணாக்காமல் சாப்பிடுவதற்கு ஏதுவாகும். முயல்களின் இந்த பழக்கத்தால் அடர் தீவனத்தினை காலை நேரங்களில் அளிக்கலாம்
அடர் தீவனத்தினை குச்சி தீவனமாக அளிக்கலாம். குச்சி தீவனம் கிடைக்காத இடங்களில் தூள் தீவனத்தினை தண்ணீரில் பிசைந்து சிறிய உருண்டைகளாக கொடுக்கலாம்
ஒரு கிலோ எடையுள்ள முயலுக்கு நாள் ஒன்றுககு 40 கிராம் அடர் தீவனமும் 40 கிராம் பசுந்தீவனமும் கொடுக்கவேண்டும்.
முயல்களுக்கு பசுந்தழைகளை புதிதாக அளிக்க வேண்டும். வாடிய தழைகளை முயல்கள் விரும்பி உண்ணாது. தரையில் பசுந்தழைகளை போடாமல் பக்க வாட்டில் சொருகி வைப்பது முயல்கள் அவற்றை நன்கு சாப்பிடும்
சுத்தமான சுகாதாரமான குடிநீர் முயல்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வகை
தோராயமான உடல் எடை
தீவன அளவு ஒரு நாளுக்கு
கலப்பு தீவனம்
பச்சை காய்கறி
வளர்ந்த ஆண் முயல்
4-5 கிலோ
100 கிராம்
250 கிராம்
வளர்ந்த பெண் முயல்
4-5 கிலோ
100 கிராம்
300 கிராம்
பால் கொடுக்கும் முயல் மற்றும் சினை முயல்கள்
4-5 கிலோ
150 கிராம்
350 கிராம்
குட்டிகள்
600-700 கிராம்
50-75 கிராம்
150 கிராம்
மாதிரி அடர் தீவனக்கலவை
மூலப்பொருட்கள்
அளவு
உடைத்த மக்காச்சோளம்
30 பாகம்
உடைத்த அரைத்த கம்பு
30 பாகம்
கடலைப்பிண்ணாக்கு
13 பாகம்
கோதுமைத் தவிடு
25 பாகம்
தாது உப்புக் கலவை
1.5 பாகம்
உப்பு
0.5 பாகம்
முயல்களின் இனப்பெருக்க மேலாண்மை
இனப்பெருக்க வயது
பெண்முயல் - 5-6 மாதங்கள்
ஆண் முயல்- 5-6 மாதங்கள் (ஆண்முயல்களும் 5-6 மாதங்களில் பருவத்தினை அடைந்தாலும் ஒரு ஆண்டிற்குப் பிறகு இனவிருத்திக்கு பயன்படுத்தினால் அதிகப்படியன தரமான குட்டிகள் கிடைக்கும்)
இனவிருத்திக்கான முயல்கள் தேர்வு செய்யும் முறைகள்
முயல்களை 5 முதல் 8 மாத வயதில் அதன் முழு உடல் எடையினை அடைந்த பின்பே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும்
இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் அதிக குட்டிகள் ஈனப்பட்ட ஈற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்
நல்ல ஆரோக்கியமான முயல்களையே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமான முயல்கள் நல்ல சுறுசுறுப்புடன் நன்கு உணவு உண்பதுடன் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். மேலும் ஆரோக்கியமான முயல்கள் தங்கள் உடல் பகுதியினை சுத்தமாக வைத்திருக்கும். அவற்றின் உரோமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஆண் முயல்களை தேர்வு செய்யும் போது மேற்கூறிய பண்புகளுடன் அதன் விதைப்பையில் இரண்டு நன்கு வளர்ந்த விதைகள் உள்ளனவா என்பதனை பார்த்தே வாங்க வேண்டும்
ஆண்முயல்களை தேர்வு செய்யும் பொழுது பெண் முயல்களுடன் இனச்சேர்க்கை செய்வதன் மூலம் அதன் ஆண்மை பண்பினை ஓரளவிற்கு அறியலாம்
பெண் முயலின் சினைப்பருவ அறிகுறிகள்
பொதுவாக முயல் இனங்களில் சினைப்பருவ சுழற்சி காணப்படுவதில்லை. எப்பொழுதெல்லாம் பெண் முயல் ஆண்முயலினை இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கிறதோ அப்பொழுது அவை சினைப்பருவத்தில் உள்ளதாக கணக்கில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பெண்முயலின் சிவந்த பெண் குறிகள் அவை சினைப்பருவத்தில் உள்ளதை குறிக்கும். ஆண்முயலுடன் பெண் முயலை அருகில் வைக்கும் போது பெண் முயல்கள் சினைப்பருவத்திலிருந்தால் அதன் முதுகு நடுப்புறம் வளைந்து உடலின் பின் பகுதி உயர்ந்த நிலையில் நிற்கும். அதே சமயம் பெண் முயல்கள் சினைப்பருவத்தில் இல்லாவிடில் உடல் குறுகி கூண்டின் ஒரு மூலையில் அமர்ந்து விடும். சில சமயங்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை தாக்கத் துவங்கும்.
இனச்சேர்க்கை
முயல்களுக்கான சில இனவிருத்தி விபரங்கள்
ஆண் பெண் விகிதம்
1:10
முதல்இனச்சேர்க்கையின்போதுவயது
5-6 மாதங்கள்
முதல்இனச்சேர்க்கையின்போதுதாயினுடையஉடல்எடை
2.25 முதல் 2.5 கிலோ
சினைப்பருவம்
28-31 நாட்கள்`
தாயிடமிருந்துகுட்டிகளைப்பிரிக்கும்வயது
6 வாரங்கள்
குட்டிபோட்டபின்புமீண்டும்இனச்சேர்க்கைக்குஅனுமதித்தல்
6 வாரங்களுக்குப்பின் குட்டிகளைப் பிரித்த பின்பு
விற்பனைவயது
12 வாரங்கள்
விற்பனையின்போதுஉடல்எடை
சுமார் 2 கிலோ அல்லது மற்றும் அதற்கு மேல்
சினை அறிகுறிகள் காணப்படும் பெண் முயலின் ஆண் முயல் இருக்கும் கூண்டிற்கு எடுத்துச்சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். சரியான பருவத்தில் இருக்கும் பெண் முயல் வாலை தூக்கி ஆண் முயலினுடைய இனச்சேர்க்கையினை ஏற்றுக்கொள்ளும். இனச்சேர்க்கை நடந்தவுடன் ஆண் முயல் 'கிரீச்' என்ற சப்தமிட்டு ஒருபுறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். இதுவே சரியான இனச்சேர்க்கையினுடைய அறிகுறியாகும். ஒரு ஆண் முயலினை ஒரு வாரத்தில் 3 முதல் 4 நாட்களுக்கு மேல் இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது. அதை போல் ஆண் முயலினை ஒரே நாளில் 2 அல்லது 3 முறைக்கு மேல் இனவிருத்திக்கு பயன்படுத்தக்கூடாது. ஆண் முயல்களுக்கு போதுமான ஓய்வும் நல்ல சத்தான உணவும் சிறப்பான இனச்சேர்க்கைக்கு அவசியமாகும். பண்ணையில் 10 பெண் முயல்களுக்கு 1 ஆண் முயல் என்ற விகிதத்தில் வைத்திருக்க வேண்டும். ஓரிரு அதிகப்படியான ஆண் முயல்கள் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இனவிருத்தி சமயங்களில் ஆண்முயல்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இந்த முயல்களை மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இறைச்சி முயலின் சினைக்காலம் - 28 -31 நாட்கள் ஆகும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 12 முதல் 14 வது நாளில் முயலின் அடிவயிற்றினை தடவிப்பார்த்து சினைப்பட்டதை அறியலாம். இதற்காக தாய் முயல் கூண்டின் மேல் வைத்து அது அமையதியடைந்த பின்னர், பின் கால்களுக்கு இடையில் வயிற்றப்பகுதியில் கை விரல்களால் மெதுவாக தடவிப்பார்த்தால் சிறிய நெல்லிக்கனி போன்ற உருண்டையான சதைக்கோளம் விரல்களில் தட்டுப்பட்டால் சினைப்பட்டதை உறுதி செய்யலாம். பதிநான்காம் நாள் சினை இல்லா முயல்களை மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். மூன்று முறைக்கு மேல் இனச்சேர்க்கை செய்த பின்னும் சினைப்படாத முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
சினைப்பட்ட முயல்களின் உடல் எடை சிறிது அதிகரித்து கணப்படும். சினைப்பட்ட 25 நாட்களுக்குப்பின் 500 முதல் 700 கிராம் வரை அதிகரித்து காணப்படும். இந்த எடை அதிகரிப்பினை முயல்களை தூக்கும் போதே உணரலாம். சினைப்பட்ட முயல்களை இனச்சேர்க்கை செய்யும் போது இனச்சேர்க்கையாகாது.
சினை முயல்களை பராமரிக்கும் முறைகள்
பதிநான்காம் நாள் சினை பரிசோதனையில் சினை என்று உறுதி செய்யப்பட்ட முயல்களுக்கு அதன் தீவனத்தின் அளவினை தினசரி100 கிராம் என்ற அளவில் இருந்து 150 கிராம் என்ற அளவிற்கு அதிகரிக்க வேண்டும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 25 வது நாளிலிருந்து குட்டி போடும் கூண்டிற்கு மாற்ற வேண்டும். குட்டி போடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே குட்டி போடும்.
பெட்டியினை கூண்டில் வைக்க வேண்டும். நன்கு வெய்யிலில் காய்ந்த தேங்காய் நார் அல்லது வைக்கோலினை குட்டி போடும் பெட்டியில் வைக்க வேண்டும். தாய் முயல்கள் இந்த நார் பொருட்களுடன் குட்டி போடுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக தன் அடிவயிற்றிலுள்ள பஞ்சு போன்ற உரோமத்தினை பிடுங்கி குட்டி போடுவதற்கான ஒரு கூட்டினை அமைக்கும். இந்த நேரத்தில் முயல்களை தொந்தரவு செய்யக்கூடாது. வெளிஆட்களை குட்டி போடும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது.
பெரும்பாலும் அதிகாலை வேலைகளில் தான் முயல்கள் குட்டி போடும். சராசரியாக 15 முதல் 30 நிமிடங்களில் முயல்கள் குட்டிகளை ஈன்று விடும். தாய் முயல்களே குட்டிகளை சுத்தம் செய்து விடும். தாய் முயல்கள் குட்டிகளை பராமரிக்கும் பணியினை அதிகாலையிலேயே செய்து விடும். குட்டி போடும் பெட்டியினை தினமும் காலையில் சோதனை செய்ய வேண்டும். சோதனை செய்யும் போது குட்டிகள் இறந்திருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். சோதனையின் போது தாய் முயல் பரபரப்படையும். எனவே தாய் முயலினை சோதனையின் போது அப்புறப்படுத்தி விடுவது நல்லது.
பிறந்த முயல் குட்டிகள் பராமரிப்பு
பிறந்த குட்டிகள் கண் மூடி உரோமமில்லாமல் இருக்கும். அவை குட்டி ஈனும் பெட்டிக்குள் தாய் முயலால் உருவாக்கப்பட்ட உரோம மெத்தையில் ஒன்றாக படுத்திருக்கும். தாய் முயல் சராசரியாக ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பால் கொடுக்கும். பொதுவாக அதிகாலை நேரத்தில் தாய் முயல்கள் பால் கொடுக்கும். வலுக்கட்டாயமாக நாம் பாலூட்டச்செய்தால் முயல்களில் பால் சுரப்பு இருக்காது. நன்கு பால் குடித்த குட்டிகள் தோல் சுருக்கமின்றி மினுமினுப்பாக காணப்படும். சரியாக பால் குடிக்காத குட்டிகள் தோல் வறண்டு சுருக்கமாகவும் உடல் வெப்பம் குறைந்து சோம்பலுடனும் காணப்படும்.
செவிலித்தாய் வளர்ப்பு முறை
சாதாரணமாக ஒரு முயலில் 8 முதல் 12 பால் காம்புகள் இருக்கும். இக்காம்புகளின் எண்ணிக்கைக்கு மேல் குட்டிகள் ஈனப்படும்போது சரிவர பால் கிடைக்காமல் குட்டிகள் இறக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தாய் முயல்கள் குட்டிகள் ஈன்ற பின்பு இறந்து விடுதல், தாய்மை பண்பற்ற தாய்க்கு பிறந்த குட்டிகள் மற்றும் கூண்டினை விட்டு கீழே விழுந்த குட்டிகள் எந்த தாய்க்குரிய குட்டி என்பதில் சந்தேகம் ஏற்படும் தருணங்களில் குட்டிகள் செவிலித்தாய் மூலம் வளர்க்கலாம்.
குட்டிகளை செவிலித்தாய்க்கு மாற்றும் போது கவனிக்கவேண்டியவை
ஒரு செவிலித்தாய்க்கு மூன்று குட்டிகளுக்கு மேல் மாற்றக்கூடாது. பிறந்த குட்டிகளுக்கும் செவிலித்தாயின் குட்டிகளுக்கும் வயது வித்தியாசம் 48 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது
குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தல்
இளங்குட்டிகள் பொதுவாக 3 வாரங்களுக்கு குட்டி போடும் பெட்டியினுள் இருக்க வேண்டும். அதன்பின் பெட்டியினை எடுத்து விடலாம். சுமார் 4 முதல் 6 வார வயதில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். குட்டிகளை பிரிக்கும் போது தாய் முயல்களை பிரித்துவிட்டு குட்டிகளை அதே பெட்டியில் மேலும் ஓரிரு வாரங்கள் வைத்திருந்து அதன் பின் பாலின வாரியாக பிரித்து ஒரு கூண்டு அறைக்கு இரண்டு குட்டிகள் வீதம் வைத்து வளர்க்க வேண்டும். தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கான உணவில் திடீரென மாற்றங்கள் செய்யக்கூடாது.
இளங்குட்டிகளில் இறப்பு விகிதத்தினை குறைக்கும் முறைகள்
குட்டிகள் பிறந்த நாள் முதல் 15 நாட்கள் வரை தாயின் பராமரிப்பில் வளரும். அதற்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும். இக்கால கட்டங்களில் குட்டிகளின் இறப்பிற்கு பெரும்பாலும் தாய் முயல் காரணமாக இருக்கும். பதினைந்து நாட்களுக்குப் பிறகு குட்டிகள் உணவு மற்றும் குடிநீரனை சாப்பிட துவங்கும் போது நோய்கள் பரவ வாய்ப்பாகிறது. குடிநீர் மூலம் பரவும் நோய்களே அதிகம். எனவே நன்கு கொதிக்க வைத்து சூடு ஆறிய குடிநீரினை குட்டிகளுக்கு கொடுக்க வேண்டும். குடிநீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலவையினை 10 லிட்டர் குடிநீருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து 20 நிமிடங்களுக்கு பின்பு பெரிய மற்றும் குட்டி முயல்களுக்கு அளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான முயல்களின் அறிகுறிகள்
தோல் மற்றும் உரோமம் பொலிவுடன் காணப்படும்.
ஓரிடத்தில் நில்லாமல் துறுதுறுவென்று இருக்கும்
தீவனம் போட்டவுடன் உடனே தின்று விடும்
கண்கள் பளபளப்புடனும் எவ்வித நீர்க்கசிவுகளும் இன்றி காணப்படும்
முயல்களின் புழுக்கைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்
முயல்களினுடைய உடல் எடை சீராக அதிகரிக்கும்.
நோயுற்ற முயல்களின் அறிகுறிகள்
சோர்வாகவும் தளர்ச்சியுடனும் காணப்படும்
முயல்கள் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும்.
அதிகமாக முடி கொட்டல் காணப்படும்
முயல்கள் அங்கும் இங்கும் திரியாமல் ஒரே இடத்தில் அடைந்து காணப்படும்
முயல்களின் தீவனம் எடுக்கும் அளவு குறைவாக காணப்படும்.
முயல்களின் மூக்கு, வாய், மலத்துவாரம் மற்றும் கண்களிலிருந்து நீர் அல்லது சளி போன்ற திரவம் வடிந்து கொண்டிருக்கும்
உடல் வெப்பநிலை அதிகரித்து வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்
முயல்களில் ஏற்படும் நோய்கள்
நீர்க்கோப்பு நோய்
குறைவான காற்றோட்ட வசதி, புழுக்கமான முயல் கொட்டகை, சுகாதாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை முயல்களை இந்நோய் தாக்கத்திற்கு உட்படுத்துகின்றன. தாய் முயலிடமிருந்து குட்டிகளுக்கு இந்நோய் பரவுகிறது.
அறிகுறிகள் :
நிரந்தர தும்மல் மற்றும் இருமலால் முயல்கள் முன்னங்கால்களால் மூக்கை துடைத்துக்கொண்டே இருக்கும். முயல்கள் மூச்சு விடும் போது கிலுகிலுப்பை போன்ற ஒலி உண்டாக்கும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் பெருமூச்சு வாங்குதல் போன்றவையும் காணப்படும். நீர்க்கோப்பு நோயுடன் இணைந்து தோலுக்கடியில் சீழ்க்கட்டி உண்டாதல், கழுத்து கோணல் நோய் போன்றவற்றையும் இக்கிருமி ஏற்படுத்துகிறது.
சிகிச்சை : பெரும்பாலும் சிகிச்சை பலனளிப்பதில்லை. பாதிக்கப்பட்ட முயல்கள் குணமடைந்தாலும் அவை நோய்க்கிருமிகளை மற்ற முயல்களுக்கும் பரப்புவதால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விடுவதே நோயினைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.
கழுத்துக்கோணல் நோய்
நீர்க்கோப்பு நோயினால் பாதிக்கப்பட்ட முயல்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன. இந்நோய் நடுக்காது மற்றும் மூளை ஆகியவற்றை பாதிக்கிறது. காதுகளின் நடுச்சவ்வு பாதிப்படைந்து காதுகளிலிருந்து சீழ் வடிவதால் அதிக வலியின் காரணமாக நோய் தாக்கிய முயல்கள் தலையை ஒரு புறமாக திருப்பிக் கொள்ளும். நீர்க்கோப்பு நோயினை முற்றிலும் குணப்படுத்துவதன் முலம் இந்நோயினை தவிர்க்கலாம்
கழிச்சல் நோய்
முயல்களில் கழிச்சல் நோயானது பல்வேறு வகையான நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. இந்நோய்க்கிருமிகள் திடீரென தீவனத்தை மாற்றுவதாலும் முக்கியமாக மாவுச்சத்து உள்ள தீவனத்தை அதிகமாக தருவதாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைகின்ற சமயங்களிலும் சுகாதாரமற்ற தீவனம் மற்றும் தண்ணீரினை தொடர்ந்து தருவதாலும் கழிச்சலை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட முயல்கள் வயிறு உப்பியும், தோல் மற்றும் உரோமங்கள் பொலிவிழந்தும் அதிகமான வயிற்றுப்போக்கினால் மிகுந்த நீரிழப்பு உண்டாகி துவண்டு போய் காணப்படும்
சிகிச்சை : தீவனத்தை படிப்படியாக மாற்றுதல், மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள தீவனத்தை தருதல், மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்
மடி நோய்
பாலூட்டும் முயல்களுக்கு இந்நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட மடியானது சூடாகவும், சிவந்தும், வீங்கியும் காணப்படும். தகுந்த எதிர் உயிரி மருந்துகளைக் கொண்டு இந்நோயினை கட்டுப்படுத்தலாம்
பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
டெர்மடோபைசிஸ் எனும் வகையினை சேர்ந்த பூஞ்சைகள் முயல்களில் படை மற்றும் சொறி நோயினை உண்டாக்குகின்றன. இப்பூஞ்சைகள் முயல்களின் காது மற்றும் மூக்குப்பகுதியில் திட்டு திட்டாக முடி உதிரச் செய்து சொறியினை உண்டாக்கும். அரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட முயல்கள் முன்னங்கால்களால் காது மற்றும் மூக்குப் பகுதிகளை தொடர்ந்து சொறிவதினால் அப்பகுதிகளில் புண்கள் ஏற்படும். பின்னர் மற்ற பாக்டிரியாக்களின் பாதிப்பினால் சீழ் உண்டாகும்.
சிகிச்சை : கிரிசியோபல்வின் அல்லது பென்சைல் பென்சோயேட் களிம்பினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். கிரிசியோபல்வின் மருந்தினை 0.75 கிராம் அளவு ஒரு கிலோ தீவனத்துடன் கலந்து இரண்டு வாரங்களுக்கு முயல்களுக்கு கொடுப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்
நோயினைத் தடுக்க முயல் பண்ணை சுகாதாரம்
முயல் பண்ணையானது உயரமான இடத்தில் நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்
முயல் கூண்டுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
முயல் கொட்டகையினை சுற்றி மரங்கள் இருப்பது அவசியம். முயல் கொட்டகைக்கு வருடம் இரு முறை சுண்ணாம்பு பூச வேண்டும்
வாரம் இரு முறை கூண்டுகளுக்கு கீழே சுண்ணாம்புக் கரைசலை தெளிக்க வேண்டும்
கோடைக்காலங்களில் கூண்டுகளின் மேலும் முயல்களின் மேலும் நீர் தெளித்து கொட்டகையின் வெப்பத்தை குறைத்தால் அதிக வெப்பத்தால் முயல்களில் ஏற்படும் இறப்பினை தவிர்க்கலாம்.
நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை முயல்களுக்கு குறிப்பாக குட்டி போட்ட மற்றும் இளவயது முயல்களுக்கு கொடுக்க வேண்டும்
பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த டெட்ராசைக்கிளின் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் வீதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும்
அட்டைப் பெட்டி தயாரிப்பு, பணம் கொட்டும் தொழில்.!
பேக்கிங் செய்யவேண்டிய பொருட்களைக் கையாள்வதில் அட்டைப் பெட்டிகள் அவசியமாகிவிட்டன. பெரிய பெரிய பண்டல்கள் முதல் சின்னக் கண்ணாடி பொருட்கள் வரை பாதுகாப்பாக அனுப்பிவைக்க அட்டைப் பெட்டிகள்தான் சரியான தீர்வாக இருக்கிறது.
உணவுப்பொருட்கள், சோப்பு முதற்கொண்டு எல்லாமே அட்டைப் பெட்டிகளின் ஆதிக்கம்தான். பொதுவான அளவுகளில் செய்து விற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஆர்டர்களுக்கேற்ப வேலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். எனவே, வணிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம்கொண்ட அட்டைப் பெட்டிகள் தயாரிப்பதும் லாபம் மிகுந்த தொழிலே. தவிர, இந்த அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தியபின் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதும், விலை குறைவானது மற்றும் எளிதாக கையாளுவதற்கு ஏற்ப குறைந்த எடை என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப ஆர்டர்களை எளிதில் பிடித்துவிட முடியும். எனவே, இந்த வாரம் இதுகுறித்துப் பார்ப்போம்.
மேல்பக்கமும், கீழ்பக்கமுமாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள், இடையில் ஓர் அச்சின் மூலம் வளைவு வளைவாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள். இந்தப் பேப்பர்களைப் பசை மூலம் ஒட்டவைத்து, அதன் முன்புறமும் பின்புறமும் இணைக்கப்படும். இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்ட தொழில். சரியாகச் செய்தால் லாபம் நிச்சயம்.
திட்ட மதிப்பீடு!
நிலம் : சொந்தமாக அல்லது வாடகை
இயந்திர வகை
(ஐந்து அடுக்கு பெட்டிக்கு) : ரூ.25 லட்சம்
மின்சாரம் மற்றும் இதர
செலவு : ரூ.5 லட்சம்.
நடைமுறை மூலதனம் : ரூ.7.50 லட்சம்.
இந்தத் திட்டத்துக்கு ‘நீட்ஸ்’ திட்டத்தின் மூலம் மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பட்டப் படிப்பு அல்லது பட்டயப் பயிற்சி மற்றும் ஐ.டி.ஐ. பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். வயது 45-க்குள் இருந்தால் ‘நீட்ஸ்’ திட்டத்தில் கடனுதவி கிடைக்கும்.
மூலதனம்!
நமது பங்கு (5%) : ரூ.1,50,000
மானியம் : ரூ.7,50,000
வங்கிக் கடன் : ரூ.21,00,000
உற்பத்தி!
ஐந்து அடுக்கு (ஃப்ளே) அட்டைப் பெட்டிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். 500 கிராம் எடை கொண்ட பெட்டிகள் எனில், ஒருநாளில் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். நாம் சராசரியாக 5,000 பெட்டிகள் உற்பத்தி செய்வதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி கணக்கிட்டால் மாதத்துக்கு 62.5 டன் உற்பத்தி செய்ய முடியும். நாம் இதை 60 டன் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு டன் பேப்பர் விலை ரூ.26,000 – ரூ.27,000 வரை ஆகும். நாம் ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம்.
பேப்பர்களின் இடையில் ஒட்டுவதற்கான பசை தேவைப்படும். இது பவுடராகக் கிடைக்கும். தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 60 கிலோ பசைமாவில் 300 கிலோ பசை கிடைக்கும். 1 டன் உற்பத்திக்கு 60 கிலோ பசை தேவை. இந்தப் பசை மாவு ஒரு கிலோ 35 ரூபாய். மாதத்துக்கு 60 டன் உற்பத்தி இலக்கு என்கிறபோது ரூ.1,26,000 தேவைப்படும் (60ஜ்60ஜ்35=1,26,000).
வேலையாட்கள்! (ரூ.)
மேலாளர்: 1X15,000 = 15,000
மேற்பார்வையாளர்: 2X10,000 = 20,000
ஆபரேட்டர்கள்: 10X8,000 = 80,000
துணை வேலையாட்கள்: 3X5,000= 15,000
விற்பனையாளர்கள்: 1X10,000 = 10,000
மொத்தம் = 1,40,000
மின்சாரம்: 65 ஹெச்.பி : 35,000
மூலப்பொருள்:
காகிதம் 1 டன் : ரூ27,000. ஒரு மாதத்துக்கான உற்பத்தி இலக்கு 60 டன் எனில் ரூ.16,20,000 செலவாகும்.
(60X27,000=16,20,000)
விற்பனை வரவு!
ஒரு கிலோ ரூ.38 – 40 வரை விற்பனை செய்யலாம். நாம் ரூ.38-க்கு விற்பனை செய்கிறோம் எனக் கொண்டால் ஒரு மாத விற்பனை வரவு ரூ.22,80,000
மொத்த செலவு! (ரூ)
மூலப்பொருட்கள் : 16,20,000
பசை : 1,26,000
வேலையாட்கள் : 1,40,000
மின்சாரம் : 35,000
கடன் வட்டி (12.5%) : 21,875
கடன் தவணை
(60 மாதங்கள்) : 35,000
நடைமுறை மூலதன வட்டி: 7,800
இயந்திரப் பராமரிப்பு : 10,000
மேலாண்மைச் செலவு : 10,000
விற்பனைச் செலவு : 10,000
தேய்மானம் : 38,000
_________
மொத்த செலவு : 20,53,675
_________
மொத்த வரவு : 22,80,000
மொத்த செலவு : 20,53,675
_____________
லாபம் : 2,26,325
_____________

லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு..!
பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம். உரிய முறையில் பேரிச்சையை சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம் ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம் சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது. அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.
நிச்சயம் இதில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில், இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கன்றுகளை பெற்றேன்.
முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28 மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில் இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.
ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம்.
இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால், இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.
முதலீடு
ஒரு பேரீச்சை கன்றின் விலை ரூ.3,500. ஒரு ஏக்கரில் 70 கன்றுகளுக்கான செலவு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம். சொட்டு நீர் பாசன குழாய்களுக்கான செலவு ரூ.30 ஆயிரம். ஆரம்ப கட்ட முதலீடு இவைதான். ஆண்டுக்கொருமுறை இயற்கை உரத்துக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம். தினசரி தண்ணீர் விட்டு, வண்டுகளை விரட்டவும், கனிகளை பறித்து பேக்கிங் செய்யவும் அதிகபட்சம் 2 பேர் போதும். கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் இருப்பதால், பறிக்க நிறைய பேர் தேவையில்லை. இவர்களுக்கு கூலி வருடத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.
லாபம்!
பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்க துவங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சீசன். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை தள்ளும். ஒரு குலையில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ கிடைத்தாலும், ஏக்கருக்கு 4200 கிலோ கிடைக்கும். கிலோ 300 ரூபாய்க்கு விற்றால், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலியாட்கள் செலவு, பேக்கிங் செலவு போக வருடத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம். தென்னை மரத்தை விட அதிகமாக 75 வருடங்களுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆண்டுகள் ஆக ஆக பழங்களின் எடையும் அதிகரிக்கும். ஆர்டரின்பேரில் குஜராத்தில் இருந்து நாற்றுகளை வாங்கி கொடுத்து கமிஷன் பெற்றும் வருமானம் ஈட்டலாம்.
சந்தை வாய்ப்பு!
உலக பேரீச்சை உற்பத்தியில் 36 சதவீதம் இந்திய சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீச்சைக்கு சந்தை வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருக்கிறது. பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். ஒருமுறை இதன் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்குவார்கள். கால், அரை, ஒரு கிலோ பாக்கெட்களாக விற்கலாம். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம்.
பயிரிடும் முறை!
ஒரு ஏக்கரில் சுமார் 70 கன்றுகளை நடலாம். ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் குறைந்தது 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப் பம் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையில் ஆரம்பத்தில் தினசரி ஒரு மரத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். படிப்படியாக இதை அதிகரித்து, நன்கு வளர்ந்த மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல், வடிகால் அமைக்க வேண்டும்.
மருந்து கூடாது!
வண்டுகளால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தடுக்க எவ்வித மருந்தும் தெளிக்க கூடாது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் மருந்து தெளிக்க கூடாது. தோட்டத்துக்கு 2 ஆட்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு வண்டுகள்தான் வரும். இதை அப்போதே கண்டுபிடித்து கொன்று விடுவது முக்கியம். இல்லையென்றால் வண்டுகள் தொல்லை அதிகரித்து விடும். இயற்கை உரமே இட வேண்டும். பேரீச்சை பழுத்ததும் வவ்வால், பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க குலையை சுற்றி பாலிதீன் கவர்களால் மூட வேண்டும்.
பர்ரியின் சிறப்புகள்!
பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பர்ரி பேரீச்சை பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3வது நிலை. இது கலால் எனப்படுகிறது. இதை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தம். பெரிய காய்களுடன் கூடிய பேரீச்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரக பேரீச்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

சுயதொழில் தொடங்குவது எப்படி? – சில முக்கிய ஆலோசனைகள்
தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்
ஆரம்பித்தால் வெற்றி பெறலாம்.
அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில்
சிறந்த பள்ளி ஒன் றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடு முறைக்கு தன் பாட்டி ஊரான காரை க்குடிக்குச் சென்றான்.
ஆனால் எந்த விடுமுறையினை இனி மையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும்ம றைந்தது. ஏன்? அங்கு சென் னையிலி ல்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்த து. அங்குள்ள அனைவரும் அவதிப்ப டுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில் லை. தான்தங்கியிருந்த அ றைக்கு சுயகண்டுபிடிப்பி ல் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்ப டி? தன் பாட்டி வீட்டிலிருந் த பசுமாட்டிலிருந்து 2கிரா ம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அத ற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினை க்கூட்டி மின் விசிறி ஓடச்செய் தான். அவனுடைய கண்டுபிடிப் பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரி சக்தி, பொறியியல் ஒலிம்பிக்கி ல் அவன் அமெரிக்கா டெக்ஸா சில் நடந்த பொ ருட்காட் சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவ னுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?K800_maxresdefault
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத் தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகா ரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார் ந்து விசிறியால் அல்லது கா லண்டர் அட்டையால் வீசிக் கொண்டு இருப்போம். ஆனா ல் அந்தச் சிறுவன் அந்தத் தே வைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள் ளான். அவன் கண்டுபிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற் பத்தி மாற்றுத் தொழில் ஏற்படுத்து வதிற்கும் வழி யாகும் அல்லவா? ஆகவே நமது சிறிய சேமி ப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமா ன வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக் கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு தொழில் மு னைவோருக்கு மானியம் வழங்குகிற து.
மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
1) மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2)தோல் சம்பந்தமான பொ ருட்கள் தயாரிப்பு
3) வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
4) மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5) சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6) ஏற்றுமதி ஆபரணங்கள்
7) மாசுகட்டுப்பாடு உபகரணங் கள்
8) விளையாட்டுப் பொருட்கள்
9) சிக்கன கட்டுமானப் பொருட் கள்
10) ஆயத்த ஆடைகள் தயாரிப் பு போன்றவைகள்
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படு கிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறை ந்த மின் அழுத்த மின்சாரம் வழங்க ப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக் கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆ ண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியி ல் ஈடுபடுத்தவும் நிறுவனங்க ளுக்கு கூடுதலாக ஐந்து சதவீ தம் அதிகபட்சமாக ரூபாய் ஐந் து லட்சம் வரை வேலை வாய் ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைக ள் பெற பின்தங்கிய வட்டங் கள் என அறிவிக்கப்பட்டுள்ள ன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொ ழில் மையங்கள் நிறுவப்பட் டு 1803 தொழில் நிறுவனங்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள்மூலம் அறிந்து தொழில் தொ டங்கலாம்.
தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி? வெறும் கையி னை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.உங்களிடம் தகுதி, திறமை, உழைப்பு மற் றும் விடா முயற்சி இருந்தா ல் கண்டிப்பாக உங்களுக்கு வங்கிகளில் இருந்து கடனு தவி கிட்டும்
சுயதொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய் யும் மனப்பான்மையுடன் உரு வாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடி ப்படையில் வறுமைக்கோட்டிற் குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உத விக்குழு தொடங்கலாம். அப்ப டி தொடங்கப்பட்ட குழு அங்கீக ரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத் தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வி யறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனரா கவும், மற்றும் இரண்டு பிரதிநிதிக ள் கொண்ட செயற்குழுவினை ஏற்ப டுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன் று மாதங்க ளில் சங்க சேமிப்பில் உறுப்பினர்க ளுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச்செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச்செலுத்து ம் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங் கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கட ன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூ பாய் 1,75,00 மானியமாகப் பெ றலாம். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல் லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர் களுக்கு ஏற்படுத்தலாமே!
ஒருங்கிணைப்பு:
முன்பெல்லாம் தொழில் தொட ங்க ஒவ்வொரு அலுவலமா க அலைந்து அனுமதி வாங்க வே ண்டியதிருந்தது. அதனை ஒரு ங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச்செய்து எளிதாக்கியுள் ளார்கள். கீழ்கண்ட மையத்தி ல் மனு செய்தாலே உங்களுக் குத் தேவையான அனுமதி கி டைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம் பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600 008
தொலைபேசி: 044-28553118, 285553866
ஃபேக்ஸ்: 28588364
தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத் தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கை யாளர்களை நம்முடைய அணு குமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதா ரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையி லுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங் குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மக ன் கவனித்து வந்தார்கள். வாடி க்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந் தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையி ட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவ ர் என்று கேள்விப்பட்டேன். வழக்கம்போல் வாங்கும் மளி கை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரி த்தபோது அது பூசனம் அடைந் திருந்தது. உடனே அதனை எடு த்துச் சென்று அந்த இளைஞரி டம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தர மறுத்து விவாதம் செய் தார். நானும் அதனை பெரிதுபடுத்த வில்லை. ஆனால் அந்த இளை ஞர் வந்து மூன்று மாதத்திற்கு ள் வாடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெ றும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தி னை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தி னர் இப்போது நடத்துகின் றனர்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற் றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணு குமுறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள்நண்பர்களுக்கும் பகிருங்கள். 
பேப்பர் கப் தயாரிப்பு
TUESDAY, APRIL 26, 2016
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.












சந்தை வாய்ப்பு!
டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!
முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.












மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும். கட்டடம்! இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்! பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.












மானியம்! பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .
உற்பத்தித் திறன்! ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.












வேலையாட்கள்! திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.
மின்சாரம்! ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.
பிளஸ்! * ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்! * பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம். -----------------------------------------------------------------------------------------------------
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!'' பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி












''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
- க.ராஜீவ்காந்தி

முதலீடு குறைந்த நூல்கோல் சாகுபடி ஆண்டு முழுவதும் வருமானம்

noolkol_2763378fமலைப்பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த நூல்கோல் சில ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கம்பம், அணைக்கரைப்பட்டி, கே.கே.பட்டி, என்.டி.பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட நூல்கோலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் சாகுபடி செய்து அதிக லாபம் சம்பாதித்துவருகிறார் கம்பம் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த நூல்கோல் விவசாயி எஸ். பொம்முராஜ். தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்:
கம்பம் பள்ளத்தாக்கில் நெல், திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுவந்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஆங்கிலக் காய்கறியான நூல்கோலை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஒன்றரை குழி நிலத்தில் (90 சென்ட்) சாகுபடி செய்தேன். விதை நடவு செய்த 60 நாட்களில் அறுவடைக்குத் தயாரானது. மேலும் செலவும் குறைவாக இருந்தது. 60 நாட்களில் லாபம் கிடைத்ததால் இதைத் தொடர்ந்து சாகுபடி செய்ய அதிகம் ஆர்வம் காட்டிவருகிறேன்.
நோய் தாக்குதல் குறைவு
செம்மண், கரிசல் மண் கலந்த நிலத்தில் நன்கு வளரும் நூல்கோலை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய மூன்று அல்லது நான்கு கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதை தரத்துக்கேற்ப ரூ. 840 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். விதை நடவு செய்த இரண்டு மாதங்களில் அறுவடை செய்து விடலாம். புதிதாக நூல்கோல் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அனுபவத்தைப் பொறுத்துப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.
ஆண்டு முழுவதும் இதைச் சாகுபடி செய்யலாம் என்பது இன்னொரு வசதி. கோடைக் காலத்தைத் தவிர மற்ற காலங்களில் சாகுபடி செய்வது நல்லது. குறிப்பாகக் குளிர் காலங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். நோய் தாக்குதல் மிகவும் குறைவு, கோடைக் காலத்தில் சாகுபடி செய்தால் வெள்ளை பூச்சி, பழுப்புநோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக இந்தக் காலகட்டத்தில் விளைச்சலும் கணிசமாகக் குறைந்துவிடும். விதை நடவு செய்வதற்கு முன்பு அடியுரமாக இயற்கை உரங்களை இட்டால் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
அதிக லாபம்
ஒரு ஏக்கருக்கு விதை, கூலி, வாகனப் போக்குவரத்து என ரூ. 20 ஆயிரம்வரை செலவு ஏற்படும். 60 நாட்களில் ஆயிரம் முதல் 1,200 கிலோ நூல்கோலை அறுவடை செய்யலாம். சராசரியாகக் கிலோ ரூ.10 என விற்பனையானாலும், செலவு போக ரூ.1லட்சம்வரை லாபம் சம்பாதிக்கலாம்.
அரிய மருத்துவப் பலன்கள்
நூல்கோலை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன் புற்றுநோய், ஆஸ்துமா நோய்களை வரவிடாமல் தடுக்கிறது. செரிமானத்துக்கும், ரத்தச் சுழற்சிக்கும் பெரிதும் உதவுகிறது. ரத்தக்கொதிப்பைச் சீராக வைத்திருக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என இதன் மகத்துவத்தை மருத்துவர்கள் பட்டியல் இடுகின்றனர்.

பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000...

‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.
விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!
இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.பி. சுப்பிரமணியன்,
செல்போன்: 99944-49696.

செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.

மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள்

banana

அதிகமாக விளையும் உணவுப்பொருட்கள் காய்கறிகள் பழங்கள், ஆகியவைகளை சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் தன்மையை மாற்றி பயன்படுத்தியோ அல்லது அதன் சக்தியை அதிகபடுத்தியோ அதன் மதிப்பை கூட்டுவதாகும். இதன் காரணமாக காய்கறிகள் பழங்கள் மற்ற உணவுபொருட்கள் கெடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருபதனால் அதிகபடியான பொருட்கள் வீணாகாமல் பாதுகாத்து கொள்ளமுடியும்.


வாழைபழமானது அதிக மிருதுவாகவும் எளிதில் கெட்டுபோகும் தன்மை உள்ளதால், நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது .இதை மதிப்பூட்டபட்ட உணவுபொருட்களாக மாற்றினால் அதிக விளைச்சல் உள்ள காலங்களில் இதை மதிப்பூட்டப்பட்ட வாழைபழத்தை பயன்படுத்தி நீண்ட நாட்கள் கெடாமல் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
மருத்துவ பயன்கள் :
மனிதன் தோன்றிய காலம் முதல் வாழையின் ஒவ்வொரு பாகமும் மனித குலத்திற்கு உணவாகவும், மருந்தாகவும் , மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தபட்டு வருகிறது. வாழைபழத்தில் 75% நிர்ச்சத்தும், 25% திட பொருள்ளும் உள்ளன. இதில் நான்கு மடங்கு புரதம், இரண்டு மடங்கு மாவுச்சத்து ஒரு மடங்கு பாஸ்பரஸ், ஐந்து மடங்கு வைட்டமின் A மற்றும் இரும்புச்சத்தும், தாதுப்பொருட்கள் இதில் மாவுப் பொருள் அதிகமாக உள்ளதால் வாழைபழம் அதிக சக்தி தரும் உணவாக பயன்படுகிறது. மற்றம் டெனீஸ் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக சக்தி தருவதற்கு வாழைபழத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் கால்சியம் பொட்டாசியம், போலிக் அமிலம், வைட்டமின் B6 இருப்பதினால் ஏறத்த விருத்திக்கும், தொற்றுநோய் வராமல் இருக்கவும், பொட்டாசியம் இருப்பதனால் இதய சம்மந்த நோய் ஏதும் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும், பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக சிறந்த உணவாக பயன்படுகிறது. மலச்சிக்கல் உணவு மண்டலக் கோளறுகள் வராமல் தடுக்கப்படுகிறது.
தினமும் இரண்டு வாழைபழத்தினை உண்பதினால்இரத்த அழுத்தம் குறைவாகும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. வாழைப்பழத்தில் “ட்ரிப்டோபன்” என்ற புரதச்சத்து இருபதினால் உடலுக்கு சுறுசுறுப்பும், உற்சாகமும், உடல் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
வாழைப்பொருள்களை நான்கு வகைகளாக பதப்படுத்தலாம்:
  • சர்க்கரைக்கரைசலில் வாழைப்பழம்
  • வாழைப்பழ கூழ்
  •  வாழைப்பழபொடி
  • வாழைக்காய் பொடி
போன்ற பொருட்களை பதப்படுத்தி பின் அவற்றிலிருந்து அல்லது பதப்படுத்தாத புதிய வாழைப் பொருட்களிருந்து விலை குறைவான அதே சமயம் சத்துக்கள் நிறைந்த எண்ணிக்கையில் உணவுப்பொருட்களை இயற்கையில் மதிப்பூட்டுவதன் மூலம் தயாரிக்கலாம்.
  • வாழைப்பழ பானம்
  • வாழைப்பழ ஸ்குவாஷ்
  • வாழைப்பழ ஜாம்
  • வாழைப்பழ ஜல்லி
  • வாழைப்பழ அத்தி
  • வாழைப்பழ தோல் ஊறுகாய்
  • வாழைப்பழ பார்
  • வாழைப்பழ ஊறுகாய்
  • வாழைக்காய் சிப்ஸ்
  • வாழைப்பழ ஜாஸ்
  • வாழைப்பூ தொக்கு
  • வாழைத்தண்டு இனிப்பு மிட்டாய்
ஆகியவை குறைந்த செலவில் தயாரித்து வீட்டளவில் சிறு தொழில் தொடங்கி விற்பனை செய்யலாம். இதர வகைகளை மதிப்பூட்டபட்ட பொருட்களாக மாற்றினால் குறைந்தது 12 மாதங்கள் வரையில் கெடாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும்.
மேலும் சிறிய முதலீடு கொண்டு, விட்டியேலே தொழில் தொடங்க முடியும். தொழில் தொடங்க முழு விவரம் மற்றும் பயற்சி பெற தொடர்பு கொள்ளவும்.
திரு. P.சந்திரமோகன்
09489-56025, 09976572626

தொழில் முனைவோருக்குத் தேவையான 8 தகுதிகள்!

ஒரு சாதாரண சேல்ஸ்மேனில் துவங்கி வங்கி மேலாளர், ஹோட்டல் நிறுவனர், தொழில் முனைவோர் என எவ்வித நிலையில் இருந்தாலும் அவர்களுக்கான முக்கியமான  விஷயங்கள் இருக்கும். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் போது வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். மற்ற வேலைகளில் இருப்பவர்களை விடச் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் கட்டாயம் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். அவை என்ன  என்பதை பார்ப்போம். 
1.திட்டமிடல்! 

சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் என்ன வேலை உள்ளது, அந்த வேலைகளில் எதைக் கட்டாயம் முடிக்க வேண்டும், எந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அட்டவணைப்படுத்திக் கொள்வது அவசியம். அதாவது தன்னுடைய வேலைகளை டைரியில் அல்லது  கேட்ஜட்களில் அதில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. 

2. கருவிகள் 
இன்றைய சூழ்நிலையில் அனைத்து வேலைகளையுமே வேகமாக முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீங்கள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால்கூடிய வெற்றி வாய்ப்பு உங்களின் கையை விட்டுப் போகக்கூடிய வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலுக்குத் தேவையான கருவிகளை எப்போதுமே வைத்திருப்பது நல்லது. அதாவது லேப்டாப், செல்போன், சேல்ஸ் கிட் என தேவையானவற்றை நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டும். 
3. உடை! 
சொந்தமாகத் தொழில் செய்யும் போது பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எப்போதுமே அலுவலக உடையில் இருப்பது நல்லது. ஏனெனில் இதை வைத்தும் உங்களை மதிப்பீடுவர்கள். அதாவது உங்களுடைய நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரமால் இருப்பதால் இவர் எப்படிக் கொடுக்கும் வேலையில் கவனம் செலுத்துவர் என நினைக்கத் தோன்றும். தொழில் முனைவோர் கோட், சூட் வைத்துக்கொள்ள நல்லது. சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது இதை அணிவது சிறப்பு. மேலும் அதற்கேற்ப உங்களுடைய ஷூ, லெதர் பெல்ட் போன்றவை அணிவது கூடுதல் சிறப்பாக இருக்கும். 
4. பிசினஸ் கார்ட்ஸ் 
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரும் உங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் பிசினஸ் கார்ட் வழங்குவது முக்கியம். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் உங்களை எளிதாகத் தொடர்பு பிசினஸ் கார்ட் அவசியம் தேவை.பிசினஸ் கார்ட் என்பது வேறு ஒன்றும் இல்லை, விசிட்டிங் கார்ட்தான். 
5. கற்பனை திறன்! 
ஒவ்வொரு தொழிலிலும் போட்டியார்கள் கட்டாயம் இருப்பார்கள். போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உங்களின் பொருட்களை முன்நிறுத்துவதற்குத் தேவையான புதிய ஐடியாகள் அவசியம் தேவை. தொழிலில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்தையில் உங்களின் பொருட்கள் தனி அடையாளத்துடன் தெரிவதற்கான வேலைகளைச் செய்வது அவசியம். 

6. விடாநம்பிக்கை 
தொழிலில் நஷ்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நஷ்டம் ஏற்படும் போது நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அந்தச் சூழ்நிலையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
அதுமட்டும் இல்லாமல் உங்களின் உற்பத்தி பொருளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். எனவே எப்போதுமே தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. 
7. எதிர் கால இலக்கு 
தொழிலில் எப்போதுமே எதிர்கால இலக்குகளை வைத்திருக்க வேண்டும். அதாவது அடுத்த ஒருவருடத்தில் நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும். லாபம் எவ்வளவு இருக்க வேண்டும், உற்பத்தி அளவை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே இலக்குகளைத் தீர்மானிப்பது அவசியம். இலக்குகளை அதை நோக்கிய பயணச் செய்வது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும். 
8. சுய அறிவு..! 
தொழில் குறித்து எடுக்கும் முடிவுகள் என்பது உங்களின் முடிவாக இருப்பது அவசியம். அதாவது நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உந்துதலின் பேரில் எந்தவிதமான முடிவையும் எடுக்கக் கூடாது. 
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அந்த முடிவு சரியாக இருக்குமா, அதனால் எதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கவனித்து முடிவு எடுப்பது நல்லது. 

10 மாதங்களில் அறுவடை! ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!



















0
76
விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்.திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.
பசுமை விகடன்தான் வாத்தியார்
முதல் புத்தகம் வெளியான நாளிலிருந்தே இவர், தீவிரமான பசுமை விகடன் வாசகர் ஆகிவிட்டதாகவும் அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமாக சேர்த்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார். விவசாயத்தில் வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வாத்தியார், பசுமை விகடன்தான் என்கிறார். இப்பொழுது இவருடைய நண்பர் செல்லப்பாண்டியன், வெளியூர் போய் வரும் போது, மறக்காமல் பசுமை விகடன் வாங்கிவந்துவிடுவார் என்று உற்சாகமாக ஆரம்பித்த மாரிமுத்து.
சிறிய இடமே போதும் 
ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கரில் ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிகோம். இது போக அரை ஏக்கரில் 21 தென்னை இருக்கிறது. எல்லாம் ஏழு வயதான மரங்கள்.  நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். 6 சென்ட் குளம், 10 மாதம், 30 ஆயிரம் என்று விறு விறு லாபம் தரும் விரால் மீன் என்று சமீபத்தில் பசுமை விகடனில்  (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும்தான், சின்ன இடத்திலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது  அரை ஏக்கர் இருக்கின்ற தென்னைக்கு இடையில் ஏன் விரால் மீன்கள் வளர்க்கக் கூடாது என்று  நண்பர் செல்லப்பாண்டியனிடம்  கூறி அவரும் இதில் ஆர்வமானதும் இரண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.சேவியர் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குச் சென்று, விரால் மீன் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது பத்து மாதம் ஓடிவிட்டது. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கிறது என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.
நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் 
தென்னைக்கு இடையில், 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்தில் தனித்தனியாக இரண்டு குளங்கள் வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் தோட்டம் முழுக்கவே களிமண் பூமி என்பதால் வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லை. நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒரு மாத வயதுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனர். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள் என்று இரண்டு குளத்திலும் பத்தாயிரம் குஞ்சுகள்.
நிழல் கொடுக்க தாமரை 
மீன் குஞ்சுகளை, பறவைகளிடமிருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல் வலையைக் கட்டியிருக்கிறார்கள். தென்னை மரங்களோட நிழல் கிடைப்பதால், மீன்களுக்கு வெயிலின் பாதிப்பு அதிகளவில் இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கிறார்கள்.
கொழுக்க வைக்கும் கொழிஞ்சி
இரண்டு மாத வயது வரைக்கும், இரண்டு குளத்தில் இருக்கின்ற மீன்களுக்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு மூணு கிலோ கடலைப்புண்ணாக்கு போட்டுள்ளனர். இதை இரண்டாக பிரித்து காலையும் மாலையும் போடலாம். மூன்றாவது மாதத்துக்கு மேல் கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளாக கட்டி குளத்துக்குள் போட்டுள்ளனர். அது தண்ணீரில் அழுகியதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அதை மீன்கள் நன்றாக சாப்பிட்டு கொழுத்தது. இரண்டு குளத்துக்கும் சேர்த்து, ஒரு மாதத்துக்கு ஒரு டன் கொழிஞ்சி இலை தேவைப்பட்டதாக கூறுகின்றனர்.
ஆறு மாதத்துக்கு மேல் கோழிக்கழிவு 
ஆறாவது மாதத்துக்கு மேல் மீன்களுக்குக் கோழிக்கழிவுதான் தீவனம். கோழிக்குடல், கறி என்று கறிக்கடையில் வீணாகும் கழிவுகளை வாங்கி வந்து, வேக வைத்து குளத்துக்குள் ஆங்காங்கே போட்டுள்ளனர். இரண்டு குளத்துக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு நாப்பது கிலோ கோழிக்கழிவு போடுகிறார்கள். அதனால் மீன்கள் நல்ல எடைக்கு வந்திருக்கின்றன.
பற்றாக்குறைக்கு ஜிலேபி மீன்கள்  
1,000 விராலுக்கு 25 ஜிலேபி மீன் என்கிற கணக்கிலேயும் மீன்கள் குளத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரித்துக் கொண்டே இருக்கும். நாம் கொடுக்கும் உணவு பற்றாக்குறைக்கு இந்தக் குஞ்சுகளை விரால் மீன்கள் பிடித்து சாப்பிட்டுக்கொள்ளும்.
நோய்கள் தாக்காது 
விரால் மீனைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குவதில்லை. எப்பொழுதாவது அம்மை மாதிரியான கொப்பளம் வரும். அந்த சமயத்தில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவினால் சரியாகிவிடும். வயலுக்கான பாசன நீர், பம்ப் செட்டிலிருந்து முதலில் மீன் குளத்தில்தான் விழும். அதற்குப் பிறகுதான் வயலுக்குப் பாயும். அதனால் இந்தத் தண்ணீரே வயலுக்கு நல்ல உரமாகிறது என்ற மாரியப்பன், நிறைவாக விற்பனை வாய்ப்புகள் பற்றிச் சொன்னார்.
தேடி வரும் சந்தை வாய்ப்பு 
மீனைப் பிடித்து, சோதனைக்காக எடை போட்டுப் பார்த்தப்போது குறைந்தபட்சமாக முக்கால் கிலோவும் அதிகபட்சமாக ஒன்றே கால் கிலோ வரைக்கும் இருந்தது. 10 ஆயிரம் குஞ்சுகள் விட்டதில் இப்பொழுது, 8 ஆயிரம் மீன் வரைக்கும் குளத்துக்குள் இருக்கும் என்கிறார். பாதிக்குப் பாதி போனாலும், எப்படியும் 5 ஆயிரம் மீன்களுக்குக் குறையாது. தமிழ்நாட்டில், தேவையான அளவுக்கு விரால் மீன் உற்பத்தி இல்லாததால், வியாபாரிகளே பண்ணைக்குத் தேடி வந்து கேட்டுக்கிறார்கள். ஒரு மீன், முக்கால் கிலோ என்று வைத்துக் கொண்டாலும், பிடிக்கும்பொழுது மொத்தமாக, 3 ஆயிரத்து 750 கிலோ மீன் கிடைக்கும். மொத்த விலையில் ஒரு கிலோ 250 ரூபாய் என்று போகிறது. அதன்படி பார்த்தால், இரண்டு குளத்திலேயும் இருக்கின்ற மீன்கள் மூலமாக, 9 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக, எப்படி பாத்தாலும் ஆறு லட்ச ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். இந்த லாபம் பசுமை விகடன் எங்களுக்குக் கொடுத்த பரிசு என்றபடி நன்றிப் பெருக்கோடு விடை கொடுத்தார், மாரிமுத்து.
தொடர்புக்கு
govindaraj cell :8190815622     website:www.indian-farms.com

கயிறு தொழில் மேம்பாட்டிற்கான கயிறு தொழில் முனைவோர் திட்டம்
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும் , பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) :
மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA ) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .
நோக்கம் (Objective) :
கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்.
நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது .
கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.
தொழிலின் திட்ட மதிப்பு (Levels Of Funding Under COIR UDYAMI YOJANA):
தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் (working capital) தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.
அரசு மூலதன மானியம்(Rate of Subsidy) :
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.
தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Beneficiary’s contribution (of Project Cost)):
தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை பயனாளிகள் தொழிலில் முதலீடு (Investment) செய்ய வேண்டும்.
வங்கிக் கடன் (Bank credit ):
வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) 55% சதவிதத்தை வங்கி கடனாக வழங்கும்.
Beneficiary’s contribution (of Project Cost) Bank credit Rate of Subsidy (of project cost)
5% 55% 40%
பயனாளிகளின் தகுதிகள் (Eligibility conditions of the Beneficiaries):
18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) விண்ணபிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.
தென்னை நார் சம்மந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யபவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டம் பொருந்தும்.
தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள்
(Implementing Agencies):
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் (Coir Board) மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் (Regional Offices) விண்ணபிக்கலாம்.
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு :
Coir Board Regional Office,
Door No.103, Vallalar Street,
Venkatesha Colony,
Pollachi – 642001.
Tel/Fax : 04259-222450
http://coirboard.gov.in/
காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*********
முதலீடின்றி ஆன்லைன் பிசினஸ் Without Investment - Online Business 
சிறிய பெட்டிக்கடை வைக்க வேண்டுமென்றால் கூட சில ஆயிரங்களை சேலெவிட வேண்டும்.ஆனால் பைசா செலவில்லாமல் உங்கள் பொருட்களை ஆன்லைன் இல் விற்கலாம்.பொருளே இல்லை என்றாலும் கூட மற்றவர்களின் பொருட்களை விற்ரு
கமிஷன் பார்க்கலாம்.
இன்று உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் யை பிரபலப்படுத்தும் Amazon,Flipkart, Snapdeal, ebay இணைய தளம் உள்பட பல ஆன்லைன் கடைகள் இதற்கு வழி வகுக்கின்றன. பொருட்களை ஆன்லைன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் இத் தளங்களில் உங்கள் பிசினஸ் கென்று அழகாக பெயர் வைத்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.வீட்டில் பயன்படுத்ததா கணினி கேம்ஸ் ,எலெக்ட்ரானிக் பொருட்கள்,உடுத்ததா புதிய துணிகள்,செடிகள்,நாய்க் குட்டிகள் என எதை வேண்டுமானாலும் உங்கலௌக்கென்று கொடுக்கப்படும் ஆன்லைன் இடத்தில் பட்டியிடலாம்.நீங்கள் சொன்ன விலையின் அடிப்படையில் ஏலம் விடப்படும்.
இணைய தளத்துக்கு கமிஷன் போக மீத பணம் உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.பொருளே இல்லை என்றாலும் ஆன்லைன் இல் பொருட்களை விற்றுத் தரும் கமிஷன் ஏஜெண்டு ஆகவும் செயல்படலாம்.
இதற்கு கொஞ்சம் அதிகமாகவே நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் தகவல் மற்றும் வழிகாட்டி's photo.
*********
ஊதுவத்தி செய்தல்
ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்.
ஊதுவத்தி வகைகள்
ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்தி, மட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்தி, தாழம்பூ வத்தி, ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.
அடிப்படையான பொருள்
வழவழப்பான பலகை
ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சிமார் 60 செ.மீ நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.
மூங்கில் குச்சிகள்
சுமார் 15 செ.மீ முதல் 25 செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும்.
1. சந்தன வத்தி.
தேவையான பொருள்கள்
சந்தன பவுடர்-500கிராம்
சாம்பிராணி-500கிரம்
வெட்டிவேர் - 200கிராம்
கிச்சிலிக் கிழங்குப் பொடி -100 கிராம்
புனுகு -2 கிராம்
கஸாதூரி -2 கிராம்
பன்னீர் -100மில்லி
செயல் முறை
வெட்டிவேர் கிச்சிலிக் கிழங்குப் பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக்கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு அதனுடன் சந்தனப் பவுடர், வெட்டிவேர், கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கடைசியில் புனுகு, கஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
மூங்கில் குச்சிகளை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடிப் பாகத்தில் இரண்டு செ.மீ விட்டு தள்ளி மணைமீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும் ஒருநாளில் பழகிவிட்டால் ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.
பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை ந்ழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தோய்த்து விடுங்கள்.பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தோய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியேக் காட்டும்.
வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள், அட்டைக் குழாய்கள் தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 10, 50, 100 வத்திகளை மெல்லிய எண்னெய்க் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.
2. கதம்ப சந்தன வத்தி.
தேவையான பொருட்கள்
சந்தனப் பவுடர் -300கிராம்
சாம்பிராணி -100கிராம்
மட்டிப்பால் -75கிராம்
மைனாலக்கிடிப் பட்டை -150 கிராம்
கிச்சிலிக்கிழங்கு-75 கிராம்
கோரைக் கிழங்கு-75 கிராம்
வெட்டிவேர் -30கிராம்
விளாமிச்சம்வேர்-30 கிராம்
அன்னசிப் பூ -30கிராம்
ரோஜாப் பூ -30கிராம்
இலவங்கப்படை -30 கிராம்
இலவங்கம் -10கிராம்
கார்போக அரிசி -30கிராம்
ஜாதிப் பத்திரி-10 கிராம்
கிளியூரல்பட்டை-30 கிராம்
ஏலக்காய் -30கிராம்
மரிக்கொழுந்து -30கிராம்
தவனம் -30 கிராம்
ஜாதிக்காய்-இரண்டு
செய்முறை
இதற்கு பெரிய மூலதனம் தெவையில்ல.ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.ஊதுவத்தி தயாரிக்க சுறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.
சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும் மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள்.மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்.

******
தொழில் தொடங்குமுன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்..! 
1ஒருவர் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும்போது அதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் போவதினால், அடுத்தடுத்து தவறு செய்து, பெரிய அளவில் கையைச் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்புண்டு. தொழில் செய்வது அலுவலகத்தில் வேலை பார்க்கிறமாதிரி அல்ல. தொழிலுக்காக முழுநேரத்தையும், உழைப்பையும் தந்தால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும்.
2 பணம் இருக்கிறது அல்லது பணம் கடனாகக் கிடைக்கிறது. அதனால் தொழில் தொடங்க லாமே என்று நினைப்பது தவறு. ஒரு தொழிலைத் தொடங்கும்முன் அந்தத் தொழிலின் மீதுள்ள ஆர்வம், அனுபவம், பலம் பற்றி தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது.
3 முழுநேர தொழிலா அல்லது பகுதிநேர தொழிலா என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தொழில் தொடங்குவது தவறு. முழுநேர தொழிலாக இருந்தால், அதற்குத் தேவையான நேரத்தையும் நிதியையும் ஒதுக்கவேண்டும். இல்லையெனில், அது உங்கள் வருவாயை சமாளிக்க உதவும் ஒரு பகுதிநேர தொழிலாக இருக்குமே தவிர, அது உங்களை வளர்ச்சியடையச் செய்யும் தொழிலாக இருக்காது.
4. ஆரம்பத்தில் நிறையப் பணியாளர்களையோ அல்லது உயர்பதவிகளுக்கான ஆட்களையோ நியமிக்கும்போது சரியான விகிதத்தில் நியமிப்பது அவசியம். இந்த விகிதம் அதிகமாகும்போது, சம்பளத்துக்காகவே ஒருபகுதி தொகையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த விஷயத்தில் அதிகக் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக தொகையைச் சம்பளமாக வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்குப் பதில் பங்குகளாகத் தரும்போது பொறுப்பு அதிகரிக்கும். நிறுவனத்துக்குச் செலவும் குறையும்.
5. ஒருவரைப் பணியில் அமர்த்தும் போது அவரால் 1:5 என்ற விகிதத்தில் தொழிலுக்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். அதாவது, ஒருவருக்கு ஒருபங்கு சம்பளம் வழங்கினால், அவரால் தொழிலுக்கு 5. பங்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். இது தவறும்போது தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சேவைத் துறையில் இந்த 1:5 விகிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
6.உறவினரையோ அல்லது நண்பரையோ பங்குதாரராகச் சேர்க்கும்போது, அவருக்குப் பங்குகளை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களது பங்களிப்பு குறைவாக இருந்தும், குறைவான பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரரின் பங்களிப்பு அதிகமாகும்போது தேவையற்ற அதிருப்தியான சூழல் உருவாகும். இந்தத் தவறை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது.
7.மதிப்பிடலில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நம் தொழிலின் மீதுள்ள அதிக நம்பிக்கையினால், நம் தொழிலின் மதிப்பை அதிகமாக நிர்ணயிப்பது தவறு. அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்கள் அதை எளிதில் கண்டுபிடித்து, நம் தொழிலில் முதலீடு செய்யாமலே போய்விடுவார்கள். எனவே, சரியான மதிப்பை நிர்ணயித்தால்தான் மற்றவர்கள் நமது தொழிலில் முதலீடு செய்ய முடியும்!
8.வர்த்தகத்தில் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டம் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றுத் திட்டத்தை ‘பிளான் பி’ என்பார்கள். சிலர் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பார்கள். அது தவறு. ஏதோ ஒரு காரணத்தினால் அந்தத் திட்டம் செயல்படாமல் போகும்போது, பிளான் பி கைகொடுக்கும்.
9.மார்க்கெட் பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் அவசியம் தேவை. இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். மார்க்கெட் ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியும்.
10.ஆரம்பத்தில் விளம்பரங் களுக்கு அதிகம் செலவு செய்யவேண்டியிருந் தாலும், இது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டாமல் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் தொழில் சரியாக நடக்கவில்லையெனில், விளம்பரத்துக் காகச் செலவழிக்கப்பட்ட பணம் வீணாகாமல் இருக்கவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

*******
ஏக்கருக்கு ரூ.2.5 லட்சம்…இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்..! 
குறைந்த தண்ணீர், நிறைவான மகசூல்
திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல் கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இந்த வரிசையில் இணைகிறார் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான இலாபம் ஈட்டி வருகிறார்.Image result for மாதுளை
தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதை மேடு பகுதியில், பொட்டல் காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார். குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார் குரியன்.
தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமளி தேசிய நெடுஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சை நிற நிழல் வலை சுற்றப்பட்ட ‘ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.Image result for மாதுளை
அன்று மானாவாரிக் கரடு, இன்று மாதுளைத் தோட்டம்
குரியன் எர்ணாகுளத்தில் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்கிறார். விவசாயத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறு என்று கேரளாவை ஒட்டிய பகுதியாக இருப்பதால் தேடி அலைந்து இந்த இடத்தை வாங்கியுள்ளார். தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றியலும் மலைப்பகுதியாக இருப்பதால் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கும்பொழுது பொட்டல்வெளி. இந்த இடத்தை வாங்கியதும் இயற்கை விவசாயம்தான் என்று முடிவெடுத்திருக்கிறார். மொத்தம் இருப்பது 35 ஏக்கர். இதில் கிட்டத்தட்ட 30 ஏக்கரில் 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கின்றன. இதில், 7 ஆயிரத்து 500 செடிகள் மகசூல் வந்துகொண்டு இருக்கிறது. மற்ற இடங்களில் பண்ணைக் குட்டை, மாட்டுக்கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகைகள் இருக்கிறது. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையாக வடிவமைத்திருக்கிறார் என்றபடி மாதுளை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.
பராமரிப்பு தருமே பணம்
முழுக்க இயற்கை முறையில்தான் விளைவிக்கிறார்கள். அதனால் பழங்கள் வெடித்து கிழே விழுந்துவிடுகிறது. காய்களோட தோல் சொறி சொறியாக இருக்கிறது. நம்ம ஆட்கள் கடைக்குப் போனதும் பளபள என்று இருக்கும் பழங்களைத்தான் முதலில் எடுக்கிறார்கள். ஆனால் அது இரசாயத்தில் விளைந்தது என்று யாரும் எண்ணுவதில்லை. இவர் பழங்களை ஆரம்பத்தில் வாங்க தயங்கியவர்கள் உரித்துப் பார்த்தவுடன் தெளிவான முத்துக்களோடு இரத்தச் சிவப்பிலிருப்பதைப் பார்த்து வாங்கத் தொடங்கினார்கள். ருசியும் நன்றாக இருக்கிறது. இதை அறிந்துகொண்டதால் கேரளாவில் இருக்கின்ற கடைகளில் இவர் பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு ஆர்டரும் கிடைத்திருக்கிறது என்கிறார் குரியன்.
இந்த இரகத்திற்குப் பெயர் பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடி என்று ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில் நடவு செய்திருக்கிறார். உலகளவில் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்யும் நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்க வேண்டும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி இரண்டுமே பராமரிப்பில் தான் இருக்கிறது.
இயற்கை முறை மாதுளை சாகுடி
பண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேலாளர் ஜான் தாமஸ். இவர் மாதுளை சாகுபடி பற்றி விவரித்தார். இவர்களது பண்ணையில் கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் என்று நாட்டு மாடுகள் பத்து இருக்கிறது. இந்த மாடுகளின் சிறுநீர், சாணத்தை வைத்து ஜீவாமிர்தத்தை இவர்களே தயார் செய்கிறார்கள். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வைத்து கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கிறார்கள். தொழுவுரத்தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் சாகுபடிச் செலவு குறைகிறது. இவர்களது பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழ் இருக்கிறது என்கிறார் ஜான் தாமஸ். மாதுளை சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.
மாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்திற்குக் குழியெடுத்து ஆறவைத்து ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வர வேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடியில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்த பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்கு விட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்த சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை கவாத்து செய்து (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது.
ஒரு மாதம் ஓய்வு
பூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். டிசம்பர் மாத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் இருக்கும்போது, ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாட விட்டு தண்ணீர் கொடுப்பதால், செடிகள் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்தபிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜீலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.
மாதுளையை அதிகம் தாக்குவது பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்பு நிறத் துளைகள் இருக்கும். “ஃப்ரூட் போரல்” எனப்படும் இத்தாக்குதலை சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம் என்றார், ஜான் தாமஸ்.
ஒருங்கிணைந்த பண்ணை
பண்ணையில் நாட்டுக் கோழிகள், கூஸ்வாத்துகள், கினியா கோழிகள், முயல், மீன் என அனைத்தையும் தனித்தனியாக கூண்டுகளில் பராமரிக்கிறார்கள். இங்குள்ள காசர்காடு என்ற குட்டை ரக மாடுகள், நம் ஊர் கன்றுக் குட்டிகள் அளவுக்குதான் இருக்கின்றன. இந்த சிறிய ரக மாடுகளின் சிறுநீர், சாணத்தில் ஜீவாமிர்தம் தயாரித்து தெளிக்கும்போது, பயிர்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாகச் சொல்கிறார் குரியன்.
உர மேலாண்மை
தொழுவுரம், மண்புழு உரம், தென்னைநார்க் கழிவு உரம் ஆகியவற்றை சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்தாகக் கொடுத்து வர வேண்டும். தொழுவுரமாக இருந்தால், ஒவ்வொரு செடிக்கும் 10 கிலோவும், மற்ற உரங்களாக இருந்தால், 5 கிலோவும் வைத்தால் போதுமானது.
பாசனத்தில் இருக்கிறது வெற்றி
மாதுளைக்கு அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. காய்ச்சலும், பாய்ச்சலும் தான் மாதுளைக்கு உகந்தது. ஒரு முறைக்கு ஒரு செடிக்கு 15 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அந்த ஈரம் காய்ந்த பிறகே அடுத்த பாசனம் செய்ய வேண்டும். தினமும் தண்ணீர் கொடுத்தால், செடி நன்றாக வளரும் என நினைத்து, அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. அந்த பகுதியின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால், பூக்கள் உதிர்ந்து விடும்.
செடிக்கு 10 கிலோ
தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்தால் மட்டும் போதாது, எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். இவர் இதை சரியாக செய்ததால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது. ஒரு செடிக்கு வருடத்திற்கு 200 ரூபாய் செலவாகிறது. ஒரு செடியிலிருந்து 10 கிலோ பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ சராசரியாக 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமாக வருடத்திற்கு 1000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமாக 75 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்குக் குறையாமல் லாபம் வருகிறது என்கிறார் குரியன் ஜோஸ்.
தொடர்புக்கு
குரியன் ஜோஸ்
செல்போன் – 093886-10249
ஜான் தாமஸ் (மேலாளர்)
செல்போன் – 95780-72722
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.10.14 vikatan

தமிழ்நாடு தொழில் முனைவோர் தகவல் மற்றும் வழிகாட்டி's photo.
*********
4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!
‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்... என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை! இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகமில்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருக்கும் சதுப்பேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்.
சாத்துக்குடி, எலுமிச்சை, மா, மல்லிகை, முல்லை, முள்ளில்லா மூங்கில், தேக்கு ஆகிய பயிர்களோடு... ஆடு, கோழி என கால்நடைகளையும் வளர்க்கிறார், மணிவண்ணன். ஒரு காலை வேளையில், வாஞ்சையோடு ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
“10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, பெங்களூருல ஒரு கடையில மூணு வருஷம் வேலை பார்த்தேன். அங்க ஓரளவுக்கு எலக்ட்ரீசியன் வேலையைக் கத்துக்கிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி வந்து எலக்ட்ரிகல் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க கிராம சுத்துவட்டாரத்துல எலக்ட்ரீசியன் யாரும் இல்லாததால நல்ல வருமானம். அப்பா கூட சேர்ந்து 4 ஏக்கர்ல விவசாயமும் பார்த்தேன். கல்யாணம் ஆனதும் சொத்தைப் பிரிச்சாங்க. அதுல ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல மல்லாட்டை (நிலக்கடலை), உளுந்துனு பயிர் செஞ்சுக்கிட்டு இருந்தேன். பெருசா வருமானம் இல்லாட்டியும், ஆர்வத்தால விவசாயத்தை விடாம செய்துக்கிட்டிருந்தேன்.
ஒரு தடவை போளூருக்குப் பக்கத்துல இருக்குற பர்வதமலைக்குப் போயிருந்தப்போ ஒரு தோட்டத்துல ’ரெட் ரோஸ்’ சாகுபடி செய்திருந்தாங்க. அதைப் பார்த்ததும், எனக்கும் ஆசை வந்தது. உடனே, வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்ல இருந்து ரோஜா நாற்றுகளை வாங்கிட்டு வந்து, 40 சென்ட்ல நட்டேன். அது நல்லா வளர்ந்து தினம் 500 ரூபாய் அளவுக்கு (23 ஆண்டுகளுக்கு முன்பு) வருமானம் கொடுத்தது. அந்த சமயம் என்னோட அண்ணன் அவரோட நிலத்துல வாழை நட்டார். அதனால, பொதுக்கிணறுல தண்ணீர்ப் பற்றாக்குறை வந்துடுச்சு. அதனால, ரோஜா சாகுபடியை விட்டுட்டேன்” என்ற மணிவண்ணன் தொடர்ந்தார்.
வறட்சியைச் சமாளிக்க முல்லை!
“வறட்சியைத்தாங்கி வளர்ற பூக்களைப் பத்தி விசாரிச்சப்போ, முல்லைப்பூ பத்தி சொன்னாங்க. 33 சென்ட் நிலத்துல 300 முல்லைச் செடிகள நடவு செய்தேன். வீட்டுல இருக்குற ஆட்களே பராமரிச்சோம். மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சது. அந்த வருமானத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினோம். பிள்ளைகளையும் படிக்க வெச்சு கல்யாணம் செய்து கொடுத்தோம்.
சாத்துக்குடிக்கு ஊடுபயிராக மல்லிகை!
அப்பறம் ஒண்ணரை ஏக்கர்ல பங்கனப்பள்ளி, அல்போன்சா மா ரகங்கள்ல 100 செடிகளை நட்டோம். அதுல 30 செடிகள் பட்டுப்போச்சு. இப்போ 70 மரங்கள் நிக்குது. ஆட்கள் பிரச்னை அதிகமானதால, முல்லைச் செடிகள்ல இருந்து பூவெடுக்குறதை நிறுத்திட்டு, நாற்று உற்பத்திக்காக குச்சிகளை மட்டும் வெட்டி அனுப்புறோம். 40 சென்ட் நிலத்துல தண்டு மூலமா உருவாக்கின சாத்துக்குடியை நட்டு, அதுக்கு இடையில மல்லிகைச் செடிகளை ஊடுபயிரா நட்டுருக்கோம். சாத்துக்குடி ரெண்டரை வருஷத்துலேயே காய்ப்புக்கு வந்திடுச்சு. மல்லிகையிலயும் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. 10 சாத்துக்குடிச் செடிகள் பழுதாகிடுச்சு. அந்த இடங்கள்ல எலுமிச்சைச் செடிகளை நடவு செய்துட்டேன். இப்ப எலுமிச்சையெல்லாம் 5 வருஷத்து மரமா நிக்குது.
தோட்டத்துல திருட்டு அதிகமா இருந்ததால, 8 அடி உயரத்துக்கு நிலத்தைச் சுத்தி வேலி போட்டோம். வேலியை ஒட்டி 1,000 தேக்கு கன்னுகளை நட்டுருக்கோம். 4 வருஷம், 3 வருஷம், 2 வருஷ மரங்களா இருக்குது” என்று மணிவண்ணன் நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி.
2 கோழியிலிருந்து 200 கோழிகள்!
“வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற இடத்துல ஆடு வளர்க்கலாம்னு 19 தலைச்சேரி பெட்டை ஆடுகள், 1 போயர் கிடா வாங்கிட்டு வந்து பரண் அமைச்சு வளர்த்தோம். 40 மாசம் கடந்த நிலையில, 48 ஆடுகளா பெருகி நிக்குது. தாதுஉப்பு கொடுக்காததால 24 குட்டிகள் பிறந்து நாலு மாசத்துலயே இறந்திடுச்சு. சரியா பராமரிச்சிருந்தா இழப்பைத் தவிர்த்திருக்கலாம்.
ஆட்டுத்தீவனத்துக்காக கோ-4, வேலிமசால் வளர்க்கிறோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 3 கிலோ பசுந்தீவனமும், 60 கிராம் அடர்தீவனமும் கொடுக்கிறோம். தினமும் 5 கிராம் தாதுஉப்பையும், 10 கிராம் சமையல்உப்பையும் தண்ணில கலந்துகுடிக்கக் கொடுப்போம்.
தோட்டத்துக்கே குடிவந்த பிறகு, ரெண்டு கோழி வாங்கி வளர்த்தோம். அந்தக்கோழியில இருந்து கிடைச்ச முட்டைகள்ல வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தினது போக மீதியை அடை வைச்சு, 75 பெட்டைகள், 10 சேவல்கள்னு பெருக்கினோம். 6 மாசத்துக்கு முன்ன இன்குபேட்டர் வாங்கினோம். அதுல 200 முட்டைகளைப் பொரிக்க வெச்சதுல பாதி அளவுக்குத்தான் பொரிஞ்சுது. அந்தக் குஞ்சுகளுக்கு ரெண்டு மாசம் வயசாகுது. அதுக்கடுத்து பொரிச்ச குஞ்சுகள் புரூடர்ல இருக்கு. இப்போ 100 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சிருக்கோம்” என்று கால்நடைக் கணக்குகளைச் கச்சிதமாகச் சொன்னார் தமிழ்ச்செல்வி.
ஆட்டு எரு மட்டும்தான் உரம்!
தொடர்ந்த மணிவண்ணன், “வருஷத்துக்கு ரெண்டு முறை ஆட்டு எருவைத்தான் சாத்துக்குடிக்கும், பூஞ்செடிகளுக்கும் உரமா கொடுக்கிறோம். ஒவ்வொரு தடவையும் ஒரு சாத்துக்குடி மரத்துக்கு 10 கிலோ அளவுலயும், பூச்செடிகளுக்கு ஒரு கிலோ அளவுலயும் கொட்டிடுவோம். கோழிகளை மேய விடும்போது எருவைக் கிளறி விட்டு மண்ணோடு மண்ணா ஆக்கிடும். சாத்துக்குடிக்கு பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறதில்ல. பூச்செடிகளுக்கு மட்டும்தான் ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். இயற்கையான முறையிலேயே பூச்சிகளை விரட்ட முடியும்ங்கிற தகவல் தெரியும். ஆனா, அதை இன்னும் செயல்படுத்தி பார்க்கல. அடுத்து, மா மரங்களுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல.
மொத்தம் இருக்குற நாலு ஏக்கர் நிலத்துல ஒன்றரை ஏக்கர்ல மா; 40 சென்ட்ல சாத்துக்குடி, எலுமிச்சை, மல்லிகைப்பூ; 34 சென்ட்ல முல்லை; 65 சென்ட்ல பசுந்தீவனம்; 25 சென்ட்ல முள்ளில்லா மூங்கில்; 16 சென்ட்ல வீடு, ஆட்டுக்கொட்டகை, கோழிக்கொட்டகை இருக்கு. இப்போ தனியா, 30 சென்ட்ல சாத்துக்குடியோட மல்லியை நட்டு வெச்சிருக்கேன். 40 சென்ட் நிலத்தை மல்லாட்டைப் போடுறதுக்காக விட்டு வைச்சிருக்கேன்” என்றவர், வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
“70 மா மரங்களையும் வருஷத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்னு மூணு வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டிருக்கேன். 40 சென்ட்ல 40 சாத்துக்குடி மரங்கள் இருக்கு. ஒவ்வொரு மரத்துலயும் சராசரியா 120 கிலோ வீதம், 40 மரத்துல இருந்து 4 ஆயிரத்து 800 கிலோ காய் கிடைக்கும். சராசரியா கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்தாலே... ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். ஒரு எலுமிச்சை மரத்துல 1,000 காய்கள் வீதம், 10 எலுமிச்சை மரங்கள்ல இருந்து 10 ஆயிரம் காய்கள் கிடைக்குது. ஒரு காய் சராசரியா ரெண்டு ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. சாத்துக்குடி, எலுமிச்சை ரெண்டுலயும் செலவு போக... ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும்.
ஊடுபயிரா இருக்குற 500 மல்லி செடியில் இருந்து தினமும் 3 கிலோ முதல் 12 கிலோ வரைக்கும் பூ கிடைக்கும். சராசரியா தினம் 5 கிலோனு வெச்சுக்கிட்டா, மாசத்துக்கு 150 கிலோ. சராசரி விலையா கிலோவுக்கு 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டா 15 ஆயிரம் ரூபாய். இதுல, பறிப்பு, பூச்சிக்கொல்லிக்கு 6 ஆயிரம் ரூபாய் செலவு போக 9 ஆயிரம் ரூபாய் லாபம். ஒரு வருஷத்துக்கு சராசரியா 72 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும் (4 மாதங்களுக்கு மல்லிப்பூ பறிப்பு இருக்காது). 34 சென்ட் நிலத்துல இருக்குற முல்லைச் செடிக் குச்சிகளை நாற்று உற்பத்திக்கு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபம்” என்ற மணிவண்ணன் நிறைவாக,
“ஆடுகளை இதுவரைக்கும் விற்பனை செய்யல. அடுத்த வருஷத்துல இருந்துதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். தற்சமயம் 26 பெட்டை ஆடுகள் இருக்கு. ஒரு ஆடு 2 வருடங்களில், 3 முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் 2 குட்டிகள் வீதம் 2 ஆண்டுகளில் 6 குட்டிகள் கிடைக்கும். 26 ஆடுகள் மூலமா, ஒரு வருஷத்துக்கு 78 குட்டிகள் கிடைக்கும். குட்டிகள் வீதம் அதை 6 மாதம் வளர்த்து விற்பனை செய்தா ஒரு ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
வருஷத்துக்கு 1,500 நாட்டுக்கோழிகளை உருவாக்கி, நாலு மாசத்துக்கு வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். நாலு மாசம் வளர்க்கும்போது, ஒரு கோழி முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை வரும். ஒரு கிலோ உயிர் எடைக்கு 200 ரூபாய் கிடைக்கும்.
பயிர்களைப் பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் வருது. கால்நடைகள்லயும் எதிர்பார்த்தபடி விற்பனை அமைஞ்சிட்டா வருஷத்துக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் எடுத்துடுவேன்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
வாஸ்துக்கோழி!
நாட்டுக்கோழிகளுடன் சுற்றித்திருந்த அழகுக்கோழிகளை பற்றி பேசிய தமிழ்செல்வி, “இந்த வெள்ளைக் கோழிகளுக்கு வாஸ்துக்கோழினு பேரு. பார்க்குறதுக்கு அழகா இருக்கும். வாஸ்துப்பிரச்னை இருக்குற வீட்டுல இந்தக் கோழியை வளர்த்தா பிரச்னை தீரும்னு சிலர் சொல்றாங்க.
இதே மாதிரி மயில் கழுத்துக்கோழினு ஒண்ணு இருக்கு. இது பார்க்குறதுக்கு மயில் மாதிரியான நிறத்துல லேசான கொண்டையோட இருக்கும். இந்தக் கோழிகள் ஜோடி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுது” என்றார்.
மழைக்கால நடவு!
சாத்துக்குடி மற்றும் மல்லிகைச் செடி நடவு பற்றிப் பேசிய மணிவண்ணன், “சாத்துக்குடி, மல்லி இரண்டுக்குமே புரட்டாசி முதல் கார்த்திகை வரை உள்ள பட்டம் நடவுக்கு ஏத்தது. நிலத்தை களை நீங்கும் அளவுக்கு உழவு ஓட்டி வரிசைக்குவரிசை
20 அடி, செடிக்குச்செடி 18 அடி இடைவெளியில சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்யலாம். இரண்டு சாத்துக்குடிச் செடிகளுக்கு இடையில் நான்கு அடி இடைவெளியில மல்லிகைச் செடிகளை நடவு செய்யணும்.
சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்ய 2 அடி நீள, அகல, ஆழத்தில குழி எடுக்கணும். மல்லிகைச் செடிகளுக்கு ஒரு அடி நீள, அகல, ஆழத்துல குழி எடுத்தாலே போதுமானது. குழியை ஒரு வாரம் ஆறப்போட்டு, ஒரு கிலோ அளவுக்கு ஆட்டுச்சாணத்தையும், மேல் மண்ணையும் தள்ளி செடிகளை நடவு செய்யணும். பருவமழையிலேயே செடிகள் வேர் பிடிச்சு, துளிர்த்து வந்து விடும்.’’
15 ஆண்டுகளில் ரூ50 லட்சம்!
வேலி ஓர தேக்கு மற்றும் மூங்கில் பற்றிப் பேசிய மணிவண்ணன், “1,000 தேக்குக் கன்னையும், வளர்த்து மரமாக்கினால், 15 முதல் 20 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 50 லட்ச ரூபாய் கிடைக்கும். தண்ணீர் தேங்கி களை அதிகமாக முளைக்கும் 25 சென்ட் நிலத்தில முள்ளில்லா மூங்கில் இருக்கு. இதை 10 ஆண்டுகள் வளர்த்து ஒட்டு மொத்தமாக விற்பனை செய்தா 100 டன் மூங்கில் கிடைக்கும். ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 4 லட்ச ரூபாய் கிடைக்கும்” என்கிறார்.
தொடர்புக்கு,
மணிவண்ணன்,
செல்போன்: 93610-53327
காசி.வேம்பையன்
படங்கள்: கா.முரளி

தமிழ்நாடு தொழில் முனைவோர் தகவல் மற்றும் வழிகாட்டி's photo.
**********
அலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது ??


சேலம்:தற்போது சந்தைக்கு அதிகம் வரத் தொடங்கியுள்ள புது வகை ஏணிகள், பாதுகாப்பு அளிப்பதோடு, பெண்களும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மரக்கட்டையிலான ஏணிகளை, பொதுவாக எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதில் ஒரு கட்டை உடைந்தால் கூட, அதை கயிற்றால் கட்டி, மீண்டும் பயன்படுத்தி வந்தனர். சிலர், ஏணியின் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.அதை தவிர்க்க, தற்போது, பல்வேறு நிறுவனங்கள், இரும்பு மற்றும் அலுமினியத்திலான ஏணிகளை தயாரித்து வருகின்றன. குறிப்பாக, அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஏணிகளில், எந்தவித ஆபத்துமின்றி, யார் வேண்டுமானாலும் ஏற முடியும். பெண்கள், யாருடைய உதவியும் இல்லாமல் இந்த ஏணிகளில் ஏற முடியும்.
சேலம், கோட்டையில் உள்ள நியூ நேஷனல் அலுமினியம் உரிமையாளர் சந்தானம் கூறியதாவது:ஏணியின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. முன்பு, கட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஏணிகளையே பயன்படுத்தி வந்தனர். அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ஏணிகள் வந்த பிறகு, கட்டை ஏணிகள் பயன்பாடு குறைந்துவிட்டது. இரண்டு அடி முதல், 150 அடி உயரம் வரை அலுமினிய ஏணிகள் விற்பனைக்கு உள்ளன.
பெரிய பெரிய கட்டடங்கள், சர்ச்கள், கோவில்களில் சுண்ணாம்பு மற்றும் கலர் அடிப்பதற்கு பெரிய ஏணிகள் பயன்படுகின்றன. அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏணிகள், மடக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.ஏணியின் பக்கவாட்டில், ஏணியை தாங்கி நிற்கும் வகையில் ஸ்டாண்ட் உள்ளதால், பெண்கள் பயப்பட வேண்டியதில்லை. அதேபோல், குழந்தைகளும் ஏணி மீது ஏற முடியும். ஏணி கீழே விழ வாய்ப்பே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கு ஏற்ற ஏணிகள், 13 அடியில் இருந்து உள்ளன. அலுமினிய ஏணிகள், விவசாய பண்ணைக்கு மிகவும் உகந்தது. பாக்கு பறிப்போர் எளிதான முறையில், ஏணியில் ஏறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஏணிகள், தண்ணீரில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் துருப்பிடிக்காது. எல்லா வேலைகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஏணி, பாரம் அதிகம் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகளின் மேல் ரேக்கில் உள்ள மாத்திரைகளை எடுப்பதற்கு, அலுமினிய ஏணிகள் பயன்படுகின்றன. இவ்வாறு சந்தானம் கூறினார்.
செய்முறை
அலுமினிய<இது போல்டிங் செய்த சேனால்லக இருக்க வேண்டும் > சேனால் இருவது அடி அல்லது தமது தேவைக்கு ஏற்ப சமஅளவு எடுத்து கட்டிங் செய்து. குறுக்கு சட்டம்<இரண்டு கார்னர் டேபர் செய்து மடக்கி > ஒரு அடி கட்டிங் செய்து வைத்து கொள்ள வேண்டும் .
பின்னர் ரிவிட் அடிக்க வேண்டும் .இரண்டு கால்களுக்கும் ரப்பர் பட்டம் மாட்டவேண்டும் .
இது பாதுகப்பனது
Using a ladder and ladder safety:
- Before use, make sure that the functionality and the strength of the ladder match the kind of job you want to do.
- Periodically check if there are some cracks or broken joints in the ladder.
- Always set the ladder to stand stable on a flat surface.
- Never put the ladder on top of another object (table, …)
- When setting up a ladder, always spread it in the final position.
- If you need to lean to catch something, ask someone to hold the ladder.
- Always keep both feet on the ladder - never keep one foot on the ladder and the other foot on a different surface.
- If you have small children do not leave the ladder open, because the children can climb on it and fall. Step ladder is not a toy.
- The ladder is made to be used by one person.
- Do not use the ladder when closed
- Do not move or shift ladders while in use
- Do not use the top of a stepladder as a step.
To make sure that the ladder is firm, we recommend using hardwood (birch, oak...) and steel fasteners.
Causes of ladder accidents:
- Complacency about danger
- Dizziness and poor balance
- Fatigue and weak muscles and bones
- Poor vision
- Poor hearing (exposure to noise)
- Ladder touching live electrical conductors
- Ladder slipping at top
- Ladder slipping at base
- Ladder resting against moveable objects
- Falling materials


********
கேன் வாட்டர் பிஸினஸ்

சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது 'கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.


சந்தை வாய்ப்பு!
நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.
முதலீடு!
இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.
மூலப் பொருட்கள்!
தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை.
தயாரிப்பு!
கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது 'சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும்.
மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.
நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் 'ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.
இந்த டேங்கில் உள்ள தண்ணீர் 'ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை.
இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் 'ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம்.
கட்டடம்!
இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.
மின்சாரம்!
21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.
இயந்திரங்கள்!
மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர், புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.
வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.
பிளஸ்!
மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ்.
மைனஸ்!
12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.
லேப் பணிகள்!
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.


கட்டுப்பாடுகள்!
சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
* ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
* தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
* தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர்.
* மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது.
இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.

*********

இறால் மீன் வளர்ப்பது எப்படி? 
கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.
தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின் இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை செய்துட்டிருக்கேன்.
எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால, குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா இறால் வளர்த்துட்டுருக்கேன்
இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.
100 நாட்களில் வருமானம்!
''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால் வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை
குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும். கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.
தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.
தீவனம்... கவனம்!
குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். 8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.

38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.
ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்' தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன் நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
''அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.
தஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம். உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல, ஒரு ஏக்கர் குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.

**********

தேனீ வளர்ப்பு


தோட்டங்களில் தேனீ வளர்ப்பு...


கூடும் விளைச்சல்.....'கொட்டும்' வருமானம் !
பளிச்... பளிச்...
ஒரு தேனீப்பெட்டி
ஒரு தேனடை - ரூ.800
தேன் ஒரு கிலோ ரூ.125...
ஒரு பெட்டி மூலம் ஆண்டு வருமானம் ரூ.4,000.
கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே... தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கண்முன்னே வந்து நிற்கும். சாதகமான காலநிலை இங்கே நிலவுவதுதான் இதற்குக் காரணம்.
முக்கியப் பயிர்கள் பசுமைக் கட்டி கைகொடுப்பது ஒரு பக்கம் இருக்க... ஏதாவது ஒரு ஊடுபயிர் சாகுபடி செய்வதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். அதிலும்... மார்த்தாண்டம் பகுதியைச் சுற்றியுள்ளவர்களின் முக்கியத் தொழில் விவசாயத்தோடு இணைந்த 'தேனீ வளர்ப்பு'. வீட்டுப் புழக்கடை, தோட்டம் என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் தேனீக்களை வளர்த்து வருமானம் பார்க்கிறார்கள்.
சற்றேறக்குறைய 25 ஆயிரம் குடும்பங்கள், இப்பகுதியில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. குலசேகரத்தைச் சேர்ந்த அன்புச்செழியனும் அவர்களில் ஒருவர். தேனீ பராமரிப்பில் ஈடுபட்டிருந்தவரை காலைவேளையில் சந்தித்தோம். உற்சாகமாக ஆரம்பித்தவர், ''எங்க அப்பா, 40 வருஷமா குடிசைத் தொழிலா தேனீ வளர்ப்பைப் பண்ணிட்டுருக்காரு. தேனீ வளர்ப்பு பயிற்றுநராவும் இருக்காரு. நானும் பயிற்சி எடுத்துக்கிட்டுதான் இதுல இறங்கியிருக்கேன்.
தென்னை, வாழை, காய்கறி, பூந்தோட்டங்கள்னு வெள்ளாமைக்கு இடையில, தேனீ வளர்த்தா... அதிக அளவுல தேன் கிடைக்கிறதோட, அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பயிர்கள்லயும் மகசூலும் கூடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்ச மாதிரி வருமானம் பார்க்கலாம்.
அரை ஏக்கர்ல வாழை, தென்னை, கமுகு (பாக்கு) மரங்கள் நிக்குது. அதுல ஊடுபயிரா அன்னாசியும் போட்டிருக்கேன். தோட்டத்துல, வீட்டுப் புழக்கடைனு கிடைக்குற இடத்துல எல்லாம் தேனீப் பெட்டிகளையும் வெச்சுருக்கேன். மொத்தம் 70 பெட்டிகள்ல தேன் உற்பத்தி பண்றேன். இதுல கிடைக்கற தேனை நேரடியாவே விற்பனை செய்துகிட்டிருக்கோம்'' என்றவர், தேனீ வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் அடுக்கிய தகவல்களைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.
கவனம் தேவை... பெட்டித் தயாரிப்பில்!
முதலில் தேனீக்களுக்கானப் பெட்டியைத் தயாரிக்க வேண்டும். பல இடங்களில் பெட்டிகளைத் தயாரித்து விற்கிறார்கள். தேக்கு, வேப்பமரம், புன்னைமரம் என்று நல்ல மணம் வீசுகிற மரங்களில்தான் பெட்டியைச் செய்ய வேண்டும். வெளியில் வாங்கும்போது இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது என்பதால், நாமே பெட்டிகளைத் தயார் செய்வதுதான் நல்லது. இப்படிச் செய்வதால் செலவும் குறையும்.
இந்தப் பெட்டிகளில் இரண்டு வகை உண்டு. முதல் வகை நமது பகுதிகளில் உள்ள ஓட்டுவீடு தோற்றத்தில் இருக்கும். இதை ஐ.எஸ்.ஐ. என்று சொல்வார்கள். இரண்டாவது வகை பெட்டி, கான்கிரீட் வீடு போல மேல்தளம் சமமாக இருக்கும். இதை 'நியூட்டன்' என்றும், 'வெளிநாட்டு வகை' என்றும் சொல்வார்கள்.
ஒரு பெட்டி 500 ரூபாய்!
ஒரு பெட்டி தயாரிக்க, 500 ரூபாய் வரை செலவு பிடிக்கும். ஒரு தடவை பெட்டி தயாரித்தால், 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பெட்டியைத் தரையிலிருந்து இரண்டரை அடி உயரத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும். பெட்டிகளில் மேலும் கீழுமாக இரண்டு அறைகள் இருக்கும். மேல் அறையைத் தேன் சேகரிக்கவும், கீழ் அறையைக் குஞ்சுகள் மற்றும் தேனீக்களுக்காகவும் ஒதுக்கவேண்டும்.
பெட்டி தயார் செய்த பின்பு, தேனீக்கள் குடும்பமாக இருக்கும் தேனடைகளை வாங்கி, ஒவ்வொரு பெட்டியிலும் வைக்க வேண்டும். ஒரு தேனடையை ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த அடையை 'ராடு' என்றும், ஃபிரேம் என்றும் சொல்வார்கள். இதை, தேனீ வளர்ப்பு விவசாயிகளிடமே வாங்கிக் கொள்ளலாம். ஒரு அடையின் விலை, 300 ரூபாய். ஒரு குடும்பத்தில் 1,500 தேனீக்கள் இருக்கும்.
6 அங்குல நீளம் மற்றும்
10 அங்குல அகலம் இருக்கும் பெட்டி என்றால், குஞ்சுகளுக்கான அறையில் ஆறு அடைகளும், தேன் சேகரிப்பு அறையில் ஐந்து அடைகளும் அமைக்கலாம். கூடுதலாக அமைத்தால், வெப்பம் உருவாகி, தேனீக்களின் வளர்ச்சி பாதிக்கும். குஞ்சுகளுக்கான அறையில் ஒவ்வொரு அடைக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று மில்லி மீட்டர் இடைவெளியும், தேன் அறையில் இதைவிட சற்றே கூடுதலான இடைவெளியும் இருக்கலாம்.
ராணித்தேனீயின் ராஜாங்கம்!
ஒரு குடும்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ஆண் தேனீக்கள், ஒரேயரு ராணித்தேனீ மற்றும் ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். சமயங்களில் ராணித்தேனீக்களின் எண்ணிக்கை இரண்டு, மூன்று என்றுகூட அதிகரிக்கக்கூடும்.
ஒவ்வொரு தேனீயும், ஒவ்வொரு வேலையைச் செய்யும். ஆண் தேனீக்கள், இனப்பெருக்கத்துக்கு மட்டும்தான். இவற்றின் ஆயுள் ஆறு மாதம்தான். தன் வாழ்நாளில் ஒரேயரு முறை மட்டும்தான் ராணித்தேனீயுடன், ஆண் தேனீ உறவு கொள்ளும். பிறகு, இறந்துவிடும்.
ராணித்தேனீயும் வாழ்வில் ஒரே முறைதான் ஆண் தேனீயுடன் உறவு கொள்ளும். ஆயிரம் முட்டைகள் வரை இடும். ராணித்தேனீயின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்.
வேலைக்காரத் தேனீக்கள், வெளியில் சென்று தேன் சேகரிப்பது, மெழுகு உற்பத்தி செய்வது, சிறிய குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பது, பறவை, விலங்குகள் போன்ற எதிரிகளிடமிருந்து தேனைக் காப்பது போன்ற வேலையைச் செய்யும். இவற்றின் ஆயுள் ஓராண்டு.
ஒரு பெட்டியில் உள்ள ராணித்தேனீக்கு வயதாகிவிட்டால், கூட்டில் உள்ள ஒரு தேனீயைத் தேர்ந்தெடுத்து, அடுத்த ராணித்தேனீயாக பதவியில் அமர வைக்கும் வகையில் வளர்க்க ஆரம்பிக்கும். வயதான ராணித்தேனீ இறந்து விட்டால், இளம் ராணித்தேனீ பதவிக்கு வரும். வயதாகாத நிலையில், எதிர்பாராதவிதமாக ராணித்தேனீ இறக்கும் சமயங்களில், அதிகப்படியாக ராணீத்தேனீக்கள் இருக்கும் பெட்டியில் இருந்து இடம் மாற்றிவிடலாம். அப்படி கிடைக்கவில்லை என்றால், லார்வா மற்றும் தேனீக்கள் என்று இருக்கும் புதிய தேனடை ஒன்றை வாங்கி, ராணித்தேனீ இறந்துபோன பெட்டியில வைக்க வேண்டும். புதிய அடையில் இளவயதில் இருக்கும் வேலைக்கார தேனீக்கள், தங்களிடம் சுரக்கும் 'ராயல் ஜெல்லி' என்ற ஒரு வகை திரவத்தையும், தேனையும் தங்களிலேயே ஒரு வேலைக்காரத் தேனீக்குக் கொடுத்து, அதை ஆரோக்கியமான ஒரு ராணித்தேனீயாக உருவாக்கும்.
ஏக்கருக்குப் பத்துப் பெட்டி!
ஒரு ஏக்கருக்கு 10 பெட்டிகள் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிகமாக வைத்தால், தேன் கிடைப்பது குறையும் என்பதுடன், நம்முடைய பயிர்களில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதிலும் சிக்கல்கள் உருவாகும். தேனீ வளர்க்கும் பெட்டியின் மீது பாக்கு மரத்தின் பாளைகளை வைத்து மூடி விட்டால்... மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்புக் கிடைப்பதோடு, தேனீக்களுக்குக் குளிர்ச்சியும் கிடைக்கும்.
தேனீயை மயக்க, புகை!
தேனீக்கள் மற்றும் குஞ்சுகள் இருக்கும் கீழறையில்.. இறந்துபோனத் தேனீக்கள், அதன் கழிவுகள் மற்றும் மெழுகு ஆகியவை சேர்ந்திருக்கும். அதையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது பெட்டியில் இருக்கும் சில தேனீக்கள் நம்மைக் கொட்டும். அதைத் தவிர்க்க, காய்ந்த தென்னை நாரினை (சவரி) தீயிட்டுக் கொளுத்தி, புகையை ஊதிவிட வேண்டும். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, கையால் இயக்கும் புகைப்போக்கிகள் கடைகளில் கிடைக்கின்றன. இதன் மூலம் புகையைச் செலுத்துவது சுலபமான வழி. இந்தப் புகைக்கு, தேனீக்கள் மயங்கிவிடும். பராமரிப்பின் போதும்... தேனை எடுக்கும் போதும் இப்படி புகை அடிக்கலாம்.
கூடுதலான ராணித்தேனீக்களை அழிக்க வேண்டும்!
சில சமயங்களில் ஒரு பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட ராணித்தேனீ உருவாகிவிடும். அப்படி உருவாகும் ராணித்தேனீ, ஒரு கூட்டத்தைக் கூட்டி கொண்டு பெட்டியைவிட்டு வெளியே போய்விடும். இதனால் தேன் உற்பத்தி குறைந்து விடும். இதைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை பராமரிப்பு செய்யும்போதே, முட்டையிலேயே அடையாளம் கண்டு ராணித்தேனீக்களை அழித்துவிடவேண்டும். இந்த முட்டைகள், பார்ப்பதற்கு பட்டுப்புழுவின் கூண்டுப் பருவத்தைப் போல இருக்கும்.
தொடர் மழை மற்றும் வெயில் காலங்களில், அதாவது பூக்கள் பூக்காத காலங்களில், தேனீக்களுக்கு போதுமான உணவு கிடைக்காது. அந்த நேரங்களில் முறைப்படி உணவு கொடுத்து பராமரிக்காவிட்டால், உணவு இருக்கும் இடத்தை தேடி கூட்டமாக பறந்து சென்று விடும்.
கொஞ்சம் சர்க்கரையை தண்ணீரில் கரைத்து, கொட்டாங்குச்சியில் ஊற்றி பெட்டியில் வைக்க வேண்டும். கூடவே, தென்னை ஈர்க்குகள் சிலவற்றையும் (குச்சிகள்) கொட்டாங்குச்சியில் போட்டு வைக்க வேண்டும். தேனீக்கள் தடுமாறி உள்ளே விழுந்தாலும், இந்த ஈர்க்குகளைப் பிடித்து மேலே ஏறி வந்து விடும்.
'பூ பூத்தா தேன் கூடும்!'
தேன் உற்பத்தியைப் பொறுத்தவரை பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் வாரம் 4 கிலோவுக்கு குறையாமலும், சாதாரண சமயங்களில் ஒரு கிலோ அளவிலும் இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி 15 முதல் மே மாத தொடக்கம் வரை அதிகமாக தேன் கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு பெட்டியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
அடையில் உள்ள அறுங்கோண வடிவத்திலான சின்ன, சின்ன ஓட்டைகள் முழுமையாக அடைபட்டு, மெழுகால் மூடப்பட்டிருந்தால்... தேன் எடுக்க சரியான சந்தர்ப்பம் என்று புரிந்து கொள்ளலாம். தேனைப் பிழிந்தெடுக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு டிரம் உள்ளது. இதில் பல் சக்கரத்துடன் கூடிய கைப்பிடி இருக்கும். இந்த டிரம்மில் அடையை வைத்து, கைப்பிடியைச் சுற்றினால், தேன் வடிந்து டிரம்மில் சேகரமாகும். பிழிவதற்கு முன்பாக, அறுங்கோண வடிவ ஓட்டைகளை அடைத்துக் கொண்டிருக்கும் மெழுகைக் கத்தியால் லேசாக கீறி விடவேண்டும். அப்போதுதான் தேன் சுலபமாக வடியும்.
தேன் சேமிப்பில் அதிக அக்கறை!
இப்படிச் சேகரிக்கும் தேனை சூடுபடுத்த வேண்டும். வெப்பம் நேரடியாக தேன் மீது பட்டால், தேன் கருகிடும். அதனால், அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை வைத்து சூடாக்கி, சிறிய பாத்திரத்தில் தேனை ஊற்றி, அதை வெந்நீர் பானையில் வைத்து சூடாக்க வேண்டும். இப்படி கொதிக்க வைத்த தேனை, சுத்தமான வெள்ளை வேட்டியில் வடிகட்டினால், இறந்துபோன தேனீக்கள், மெழுகு, பூ, இலை என தேவையில்லாத கழிவுகள் தங்கிவிடும்.
வடிகட்டியத் தேனை மூன்று மாதங்கள் டிரம்மில் சேமித்து வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது கொஞ்சம் நுரை வரும். மகரந்தத் தூள்கள் தேனில் கலக்காமல் இருக்க, மிகவும் மெல்லியதாக இருக்கும் 100&ம் நம்பர் வாயில் வேட்டியில் மீண்டும் வடிகட்டி, மெழுகு பூச்சு கொண்ட டிரம் வழியாகச் செலுத்தி, குழாய் மூலம் சேகரிக்க வேண்டும். மெழுகுப் பூச்சு இல்லாவிட்டால் டிரம்மில் உள்ள இரும்புத் துகள்கள், தேனுடன் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இப்படிப் பக்குவம் செய்தால்... நீண்ட நாட்களுக்கு தேன் கெடாமல் இருக்கும். பக்குவப்படுத்திய சுத்தமானத் தேன் ஒரு கிலோ 125 ரூபாய் வரை விலை போகும்.
தேனீ வளர்ப்பில் செலவு என்று பார்த்தால்... பெட்டித் தயாரிப்பும், தேனீக்களும்தான். தேனீக்களோடு சேர்த்து ஒரு பெட்டிக்கான தயாரிப்பு செலவு, அதிகபட்சம் 800 ரூபாய் செலவாகும். ஒரு பெட்டி மூலம் ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

**************
அட்டைப் பெட்டிகள் 
பேக்கிங் செய்யவேண்டிய பொருட்களைக் கையாள்வதில் அட்டைப் பெட்டிகள் அவசியமாகிவிட்டன.  பெரிய பெரிய பண்டல்கள் முதல் சின்னக் கண்ணாடி பொருட்கள் வரை பாதுகாப்பாக அனுப்பிவைக்க அட்டைப் பெட்டிகள்தான் சரியான தீர்வாக இருக்கிறது.
உணவுப்பொருட்கள், சோப்பு முதற்கொண்டு எல்லாமே அட்டைப் பெட்டிகளின் ஆதிக்கம்தான். பொதுவான அளவுகளில் செய்து விற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஆர்டர்களுக்கேற்ப வேலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். எனவே, வணிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம்கொண்ட அட்டைப் பெட்டிகள் தயாரிப்பதும் லாபம் மிகுந்த தொழிலே. தவிர, இந்த அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தியபின் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதும், விலை குறைவானது மற்றும் எளிதாக கையாளுவதற்கு ஏற்ப குறைந்த எடை என்பதும் குறிப்பிடத்தக்கது.  உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப ஆர்டர்களை எளிதில் பிடித்துவிட முடியும். எனவே, இந்த வாரம் இதுகுறித்துப் பார்ப்போம்.
மேல்பக்கமும், கீழ்பக்கமுமாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள், இடையில் ஓர் அச்சின் மூலம் வளைவு வளைவாக இரண்டு கிராஃப்ட் பேப்பர்கள். இந்தப் பேப்பர்களைப் பசை மூலம் ஒட்டவைத்து, அதன் முன்புறமும் பின்புறமும் இணைக்கப்படும். இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்ட தொழில். சரியாகச் செய்தால் லாபம் நிச்சயம்.
திட்ட மதிப்பீடு!
நிலம் : சொந்தமாக அல்லது வாடகை
இயந்திர வகை
(ஐந்து அடுக்கு பெட்டிக்கு) : ரூ.25 லட்சம்
மின்சாரம் மற்றும் இதர
செலவு : ரூ.5 லட்சம்.
நடைமுறை மூலதனம்     : ரூ.7.50 லட்சம்.
இந்தத் திட்டத்துக்கு 'நீட்ஸ்’ திட்டத்தின் மூலம் மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பட்டப் படிப்பு  அல்லது பட்டயப் பயிற்சி மற்றும் ஐ.டி.ஐ. பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். வயது 45-க்குள் இருந்தால் 'நீட்ஸ்’ திட்டத்தில் கடனுதவி கிடைக்கும்.
மூலதனம்!
நமது பங்கு (5%) :    ரூ.1,50,000
மானியம் :     ரூ.7,50,000
வங்கிக் கடன் :    ரூ.21,00,000
உற்பத்தி!
ஐந்து அடுக்கு (ஃப்ளே) அட்டைப் பெட்டிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். 500 கிராம் எடை கொண்ட பெட்டிகள் எனில், ஒருநாளில் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். நாம் சராசரியாக 5,000 பெட்டிகள் உற்பத்தி செய்வதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி கணக்கிட்டால் மாதத்துக்கு 62.5 டன் உற்பத்தி செய்ய முடியும். நாம் இதை 60 டன் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு டன் பேப்பர் விலை ரூ.26,000 - ரூ.27,000 வரை ஆகும். நாம் ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம்.
பேப்பர்களின் இடையில் ஒட்டுவதற்கான பசை தேவைப்படும். இது பவுடராகக் கிடைக்கும். தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 60 கிலோ பசைமாவில் 300 கிலோ பசை கிடைக்கும். 1 டன் உற்பத்திக்கு 60 கிலோ பசை தேவை. இந்தப் பசை மாவு ஒரு கிலோ 35 ரூபாய். மாதத்துக்கு 60 டன் உற்பத்தி இலக்கு என்கிறபோது ரூ.1,26,000 தேவைப்படும் (60ஜ்60ஜ்35=1,26,000).
வேலையாட்கள்! (ரூ.)
மேலாளர்: 1X15,000    = 15,000
மேற்பார்வையாளர்: 2X10,000 = 20,000
ஆபரேட்டர்கள்: 10X8,000    = 80,000
துணை வேலையாட்கள்: 3X5,000= 15,000
விற்பனையாளர்கள்: 1X10,000 = 10,000
மொத்தம்   = 1,40,000

மின்சாரம்: 65 ஹெச்.பி  :    35,000
மூலப்பொருள்:
காகிதம் 1 டன் : ரூ27,000. ஒரு மாதத்துக்கான உற்பத்தி இலக்கு 60 டன் எனில் ரூ.16,20,000 செலவாகும்.
(60X27,000=16,20,000)
விற்பனை வரவு!
ஒரு கிலோ ரூ.38 - 40 வரை விற்பனை செய்யலாம். நாம் ரூ.38-க்கு விற்பனை செய்கிறோம் எனக் கொண்டால் ஒரு மாத விற்பனை வரவு ரூ.22,80,000
மொத்த செலவு! (ரூ)
மூலப்பொருட்கள் :  16,20,000
பசை :   1,26,000
வேலையாட்கள் :   1,40,000
மின்சாரம் :     35,000
கடன் வட்டி (12.5%) :    21,875
கடன் தவணை
(60 மாதங்கள்) :    35,000
நடைமுறை மூலதன வட்டி:     7,800
இயந்திரப் பராமரிப்பு :     10,000
மேலாண்மைச் செலவு :     10,000
விற்பனைச் செலவு :     10,000
தேய்மானம் :    38,000
_________
மொத்த செலவு : 20,53,675
_________
மொத்த வரவு : 22,80,000
மொத்த செலவு : 20,53,675
_____________
லாபம் : 2,26,325
_____________
***************

கலவை மீன்கள் வளர்ப்பு கலக்கல் வருமானம்

fish

அறிமுகம்
மீன் பழங்காலத்திலிருந்தே இயற்கை ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு மலிவான மற்றும் எளிதில் செரிமானத்திற்கு ஏற்ற புரதம் நிறைந்த மற்றும் மனிதர்களுக்கு ஏற்ற உணவாகும்.  எனினும், சுற்றுப்புறச் சூழல் கேடு மற்றும் அதிக சுரண்டல் காரணமாக மீன்களின் வரத்து குறைகின்றது, மீன் உற்பத்தியை பெருக்க நிறைய வழி முறைகளை கடைபிடிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.  கட்டுப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை முறையில் மீன் உற்பத்தியையம் நுகர்வையும் எளிதான முறையில் பெருக்கலாம். விவசாயிகள் எளிதான முறையில் கிராமத்தில் குளம், நீர் தொட்டி அல்லது மற்ற நீர் ஆதாரங்களிலும் மீன் வளர்ப்பை மேற்கொண்டு தங்களது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இது மேலும் மீன் வளர்ப்பில் முன் அனுபவ திறமை பெற்றிருந்தாலும், இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாக அமைகிறது. நம் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான மீன்களை வளர்ப்பது மீன் வளர்ப்பில் தற்போது உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் தான் கூட்டு மீன் வளர்ப்பு முறையாகும். இந்த தொழில்நுட்பம்  செயற்கை உணவு கொடுப்பதன் மூலம் கூடுதலாக குளத்தில், தொட்டியில் மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் பரவலாக உள்ளது. 2 மீட்டர்  ஆழம் உள்ள வற்றாத நீர் குளம், தொட்டி நீரில் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம். எனினும், குறைந்தபட்சம் ஒரு மீட்டருக்கும் குறைவான தண்ணீர் உள்ள பருவகால குளங்களில் குறுகியகாலம்  மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம்.

சிறுதொழில்முனைவோர்.காம்  இணைய இதழில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் : 80561 35035 


தெகுப்பு மீன் வளர்ப்பில் வளர்க்கப்படும் மீன் இனங்கள்
பொருந்தக் கூடிய மற்றும் மீன்கள் உணவு பழக்கம் வகையை பொறுத்து, பின்வரும் வகையில் இந்திய பிரபல மீன்  வகைகள் தொகுப்பு மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் பரிந்துரைக்கப்படுகிறது:
உணவு பழக்கம் தீவன மண்டலம்
இந்திய கெண்டை
பெயர்உணவு பழக்க  முறைகள்
கட்லாப்லான்க்டன் உண்ணிமேற்பரப்பு உண்ணிகள்
ரோகுஅனைத்துண்ணிஇடைப்பரப்பு உண்ணிகள்
மிர்கால்அனைத்துண்ணிகடைபரப்பு உண்ணிகள்
அயல்நாட்டு கெண்டைகள்

பெயர்உணவு பழக்க  முறைகள்
வெள்ளி கெண்டைஇலை ப்லான்க்டன் உண்ணிமேற்பரப்பு உண்ணிகள்
புல் கெண்டைதாவரஉண்ணிமேற்பரப்பு, இடைப்பரப்பு உண்ணிகள்
கெண்டைஅனைத்துண்ணிகடைபரப்பு உண்ணிகள்
செயலாற்றல் :
குளங்கள் மற்றும் நீர் தொட்டிகளில் மீன் வளர்ப்பு 2.85 மில்லியன் ஹெக்டேர் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. கூடுதலாக தேங்கிய நீர்,  மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற அளவில் நீர் கிடைக்காத விவசாய நிலங்களையும் மீன் வளாப்பு  பகுதிய மாற்றியதில் 0.78 மில்லியன் ஹெக்டேரிலும் கூடுதலாக மீன் வளாப்பு செய்யப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மீன் வளர்ப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது குளங்களிலிருந்து சராசரி உற்பத்தித்திறன் 2160 கிலோ / எக்டர் /ஆண்டு என்று மதிப்பிடப்படுகிறது. இது நாட்டின் மீன் வளர்ப்பை மிகப் பெரிய பரப்பை காட்டுகிறது. 1997-98 ல் அறிவியல் அடிப்படையில் 4.56 லட்சம் ஹெக்டேரில் தொட்டிகள், குளங்களில் மீன் வளர்ப்பு கிடைமட்ட விரிவாக்கம் மூலம் கூட்டு மீன் உற்பத்தி 16% ஆக இருந்தது.
தொழில்நுட்ப அளவுகள்
கூட்டு மீன் உற்பத்தியின் தொழில்நுட்ப கூறுகளாக தளம் தேர்வு, வளர்ச்சி பொருட்கள், முந்தைய மற்றும் பிந்தைய மீன் குங்சுகள் இருப்பின் நடவடிக்கைகள், இருப்பின் அளவுகள், கருத்தரித்தரித்தல், உணவு முதலியன இதன் தொழில்நுட்ப அளவுகளாகும்.
தொழில்நுட்ப அளவுருக்கள்
கூட்டு மீன் உற்பத்தி திட்டத்தில் பின்வருன தொழில்நுட்ப அளவு கூறுகளாக கருதப்படுகிறது.
குளம் தேர்ந்தெடுத்தல்
மண் தண்ணீர் தேக்கிவைக்கும் திறனும் மற்றும் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்படாத குளத்தை தோந்தெடுப்பது முக்கியமான  ஒன்றாகும். மீன் வளர்ப்பிற்காக சேறு சகதியுமான குளத்தை நன்றாக தண்ணீரின்றி உலர்த்தி, தூர் எடுத்து, நீர் உள்புறம் மற்றும் வெளிப்புறம் செல்வதற்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும். குளம் ஒருவடையதாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருந்தால்  இச்செயல்பாடுகள் குத்தகைகாலத்தை நீடிக்கும் போது அல்லது குத்தகை செலுத்தும் காலத்தில் செய்ய வேண்டும். குளத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1.குளங்களை தூர் எடுத்தல்
2.குளங்களை ஆழமாக்குதல்
3.புதிய குளங்களை தோண்டுதல்
4.கரையணையை பழுது பார்த்தல் /கட்டுமானம் செய்தல்
5.உட்புற வாயில் /வெளி புற வாயில் கட்டுமானம் செய்தல்
6.கட்டுமான அமைப்புகள், வாட்ச்மேன் குடிசைகள், தண்ணீர்கான ஏற்பாடுகள் / மின்சாரத்திற்கான   ஏற்பாடுகள் மேலும் இத்திட்டத்திற்கு தேவையை பொறுத்து  அமைகின்றது.

குளங்கள் மேலாண்மை
மீன் வளர்ப்பில் மிக முக்கியமாக மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கு முன்னும் பின்னும் குளத்தை மேலாண்மை செய்வது மிக முக்கியமாகும்.அவ்வாறு மேலாண்மை செய்வதில் பபின்வரும் பல்வேறு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
இருப்பு வைப்பதற்கு முன் மேலாண்மை
புதிய குளங்களில், மீன்களை இருப்பு வைப்பதற்கு முன் குளத்தின் நீரில் சுண்ணாம்புகலவையை கொண்டு கலக்க வேண்டும். எனினும், குளத்தில் உள்ள தேவையற்ற களைகள் மற்றும் கையால் அல்லது இயந்திம் மற்றும் ரசாயனம் கொண்டோ குளத்தை சுத்தம் செய்ய வேண்டும். பல்வேறு முறைகளில் இவ்வேலை செய்கின்றனர்.
  1. களைகளை கையால் /இயந்திரத்தால் அல்லது ரசாயன மூலம் நீக்குதல்
  2. தேவையற்ற பிற உயிரினங்கள் மற்றும் கொன்றுண்ணும் இயல்புடை மீன்களை  இலுப்பை பிண்ணாக்கு 2500 கிலோ /எக்டர் அல்லது குளத்தை சுத்தம் செய்து சூரிய ஒளியில் உலர்த்தி அப்புறப்படுத்தி விட வேண்டும்.
  3. சுண்ணாம்பு கலப்பு – குளத்தில் இயற்கையில் இருப்பதை விட அமில காரங்கள் குறைவாக இருக்கும் குளத்தில் தேவையான அளவு சுண்ணாம்பு கலவை கொண்டு pH அளவை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக சுண்ணாம்பு கலவையால் பின்வரும் பாதிப்புகள் எற்படுகின்றன
அ. pH அளவு அதிகரிக்கிறது.
ஆ.கார அமில அளவில் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கப்படுகிறது.
இ. இது மண்ணில் ஒட்டுண்ணிகள் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஈ. இதன் நச்சுத்தன்மையால் ஒட்டுண்ணிகள் கொல்லப்படுகிறது மற்றும்
உ. இது விரைவில் கரிம சிதைவு ஏற்படுகிறது.
சாதாரணமாக தேவைப்படும் சுண்ணாம்பு கலவை அளவு விகிதம் 200 – 250 கி.கி /எக்டர்.
சாதாரணசுண்ணாம்புஅளவுகள்கிலோ / எக்டர் 200 முதல் 250 வரைமாறுபடுகிறதுவிரும்பிய. எனினும், நீர் கார அடிப்படையில் உண்மையான சுண்ணாம்பு கலவை அளவு பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்.
மண் pHசுண்ணாம்பு (கிலோ / எக்டர்)
4.5-5.02,000
5.1-6.51,000
6.6-7.5500
7.6-8.5200
8.6-9.5
புதிய குளமாக இருந்தால் தேவையான அளவு சுண்ணாம்பு கலவை இட்ட பிறகு குளத்திற்கு தேவையான அளவு  மழை நீரை சேமிக்க வேண்டும் அல்லது பிற நீர் ஆதாரங்களிலிருந்து நீர் சேமிக்க வேண்டும்.
உரமிடுதல்
குளத்திற்கு உரமிடுவதால் குளத்தில் மீன் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. குளத்தின் மண் தரத்தை அறிந்த பிறகு குறத்திற்கு பொருத்தமான உரதிட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கரிம மற்றும் கனிம உரங்களை கலந்து தரும் போது அது சிறந்த பயனை அளிக்கும். மீன் குளத்தில் மீனின் வளர்ச்சி, மீனிற்கு கிடைக்கும் உணவு இருப்பு, இராசயன நிலைகள், கால நிலைகள் இவற்றை பொறுத்து  குளத்திற்கு உர வழங்கலை மேற்கொள்ள வேண்டும்.
கரிமம்
அ. கரிமம்
:
சுண்ணாம்பு கலவை இட்ட 3  நாட்களுக்கு பிறகு தான் இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும். மாட்டு சாணம் 5000 கிலோ /எக்டர் அல்லது இதற்கு சமமான மற்ற இயற்கை உரம்
ஆ. கனிமம்
:
இயற்கை உரம் இட்ட  15 நாட்களுக்கு பிறகு கனிம உரம் இட வேண்டும். நைட்ரஜன் அடங்கிய மற்றும் பாஸ்பேட் உரங்கள் கீழே குறிப்பிட்ட மண்வளத்தின் இயல்பு படி அவற்றின் தேவை மாறுபடும்.
எனினும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் உரங்கள் கீழே கொடுக்கப்பட்ட விகிதங்கள் அளவிற்கு கொடுக்க வேண்டும்.
கனிம உரம் இடுதல் ( கிலோ கிராம்/ எக்டர்/மாதம்)
மண்ணின் வளம்அமோனியம் சல்பேட்யூரியா
  1. தழைச்சத்து (மி.கி கி / 100 கி மண்)
அ. அதிகபட்சம் (51-75)
ஆ. நடுத்தரம் (26-50)
இ.குறைந்தபட்சம் (25 வரை)
70
90
140
30
40
60
  1. பாஸ்பரஸ் (மி.கி கி / 100 கி மண்)
அ.அதிகபட்சம் (7-12)
ஆ. நடுத்தரம் (4-6)
இ.குறைந்தபட்சம் (3 வரை)
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்
40
50
70
ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட்
15
20
30

ஆ.இருப்பு வைத்தல்
உரமிட்டு 15 நாட்களுக்கு பிறகு குளத்தில் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கலாம். 10 செ.மீ விரல் (தோராயமாக)அளவு உடைய மீன் குஞ்சுகளை ஒரு எக்டருக்கு 5000 எண்ணிக்கையில் இருப்பு வைக்கலாம். எனினும், சிறிய அளவிலான குஞ்சுகளை பயன்படுத்தும் போது, அவற்றில் சில இறந்த பிறகும் பொருத்தமான எண்ணிக்கையில் இருப்பு வைக்க வேண்டும். கிடைக்கும் மீன்கள் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் மீன் குஞ்சுகளை பின்வரும் விகிதத்தில் 3, 4, அல்லது 6 இனங்கள் இணைந்து இருப்பு வைக்கலாம்.
இனங்களின்  கூட்டு (விகிதம்)
இனங்கள்3 – இனங்கள்4-இனங்கள்6 – இனங்கள்
கட்லா4.03.01.5
ரோகு3.03.02.0
மிர்கால்3.02.01.5
இந்திய கெண்டை1.5
புல் கெண்டை1.5
சாதாரண கெண்டை2.02.0

பின் இருப்பு செய்தல்

அ. கூடுதல் உணவு
இயற்கையில் குளத்தில் கிடைக்கும் உணவுகளை காட்டிலும் மீன்களுக்கு அதிக உணவு தேவைப்படும். மீன்கள் சம அளவில் தவிடு மற்றும் பிண்ணாக்கு கலவை தினமும் உணவாக எடுத்துக் கொள்ளும். உணவை ஒரு மூங்கில் தட்டில் வைத்து அத்தட்டை குளத்தின் அடியில் வைக்கலாம் அல்லது குளத்தின் மூலைகளில் உணவை தெளிக்கலாம். பரிந்துரைக்கப்படும் உணவு வீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
காலம்ஒரு நாளைக்கான அளவு கிலோ
I முதல் காலாண்டு1.5 – 3
II இரண்டாம் காலாண்டு3 -6
III மூன்றாம் காலாண்டு6-9
IV நான்காம் காலாண்டு9 – 12
மொத்தம் ( ஒரு வருடத்திற்கு)1,655 – 2,700
ஆ.தொழுவுரம் இடுதல்
1. கரிம உரம் மாத தவணைஅடிப்படையில் @ 1000கிலோ /எக்டர் என்ற அளவில் அளிக்கலாம்.
2. கனிம உரம் மாத இடைவெளியில் கரிம உரம் இடாத மாதத்தில் இட வேண்டும். எனினும் மாத உரங்களின் வீதம் குளத்தில் உற்பத்தி மற்றும் மீன்களின் வளர்ச்சியை சார்ந்தது.அதிகபடியான உரத்தினால் இயூட்ரோஃபிகேஷன் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இ.அறுவடை
அறுவடை பொதுவாக ஒரு வருட முடிவில், மீன்கள் சராசரி எடை 750 கிராமிலிருந்து 1.25 கிலோ அளவில் இருக்கும் போது அறுவடை மேற்கொள்ளப்படும். ஒரு வருடத்திற்கு 4 முதல் 5 டன் /எக்டர் என்றளவில் உற்பத்தி பெறலாம்.எனினும், பொருளாதார ரீதியில் பணிபுரியும் போது உற்பத்தி 3 டன் /எக்டர்/வருடம். குளத்தின் ஒரு பகுதியை நீரின்றி வறண்ட செய்து மற்றும் வலைகொண்டும் அறுவடை செய்யப்படுகிறது. சில சமயங்களில் குளங்கள் முழுமையாக நீரின்றி வறட்சியாக்கப்படுகிறது.
மீன் வளர்ப்பில் செங்குத்து விரிவாக்கம்
எக்டர் மீன் வளர்ப்பில் மீன் உற்பத்தியை அதிகரிக்க தற்போதைய தொழில் முனைவோர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். இதனை முக்கிய நடவடிக்கையாக முதல் ஆண்டில் மேற்கொள்ளும் போது மீனின் வளர்ச்சி எதிர்பாரா அளவிற்கு இருக்கும், அதிக இருப்பு மற்றும் அதிக அளவில் அறுவடையை மீன்கள் 500 கிராம் அளவிற்கு வளர்ச்சி பெற்ற பிறகு செய்ய வேண்டும், அதிகளவு இருப்பு மற்றும் அதிகளவு அறுவடை, குளத்தில் காற்று வசதிக்கு வழி செய்யும், ஆடு, மாடு, கோழி, பன்றி அல்லது வாத்து போன்ற  கால்நடை வளர்ப்பினுடனான ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பில்  மீன் குளத்திற்கு தினமும் அதிகபடியான இயற்கை உரம் கிடைக்கும். இது மேலே குறிப்பிட்டது போல் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வருடத்திற்கு எக்டருக்கு மீன் உற்பத்தி 7 முதல் 10 டன் உற்பத்தி அதிகரிக்கும்.
1 எக்டர் குளத்திற்கான வரவு செலவு
பொருட்கள்புதிய குளம் 1 மீட்டர் ஆழம் தோண்டுதல்
அ.மூலதனச் செலவு
1. குழி தோண்டு10,000 மீ3 @ ரூ.15/மீ3
2. உள்புறம் மற்றும் வெளிப்புறம் வழி அமைத்தல் (L.S)
3. கருவிகள் & கியர்ஸ் ((L.S)
4.மொத்தம்
150000   20000
5000
175000
ஆ. நடைமுறைச் செலவுகள்
1. சுண்ணாம்பு 500 கி @ ரூ.15/கிலோ
2. மீன் குஞ்சுகள் 5000 எண்ணிக்கை @ ரூ.400/1000 எண்ணிக்கை
3. இயற்கை உரம் (மாட்டுசாணம்) 15 டன்கள் @ ரூ.300/டன்
4. யூரியா 330 கிலோ @ ரூ.5 /கிலோ
5. ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட் 165 கிலோ @ ரூ.5 /கிலோ
6.கடுகு பிண்ணாக்கு கிலோ1350 கிலோ @  ரூ.6/கிலோ
7.அரிசி தவிடு 11350 கிலோ @ ரூ. 3 /கிலோ
8.காப்பீடு தொகை @ 4% விதை மற்றும் உரம்
9.இதர செலவுகள் அறுவடை, சந்தையிடல் செலவுகள் மற்றும் கண்காணிப்பு செலவுகள்
2500 2000
4500
1650
825
8100
4050
960
2415
2700
இ.வருமானம்
1. உற்பத்தி (இரண்டாம் வருடத்தில்)
2. விற்பனை விலை (ஒரு கிலோ)
3. மொத்த வருமானம்
3000 கிலோ
ரூ.30/-
ரூ.90,000/-
ஆதாரம் : TNAU
*************

இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு:
வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால் தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.
சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.
தயாரிக்கும் முறை
இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.
டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)
முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.
உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.
கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.
லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.
சந்தை வாய்ப்பு
இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது.
*********
சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்
“தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று கரூர் கலெக்டர் ஷாபனா அறிவித்துள்ளார்.
•நீர் பயன்பாட்டினை நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், பாசன அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டுநீர் பாசனத்தை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகைளில், மானியத்தை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
•அதன்படி, கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
•அந்த திட்டத்தின் படி கரூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 900 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியமும், 225 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
•தோப்புகளில் நடப்படும் பழமரங்கள், தென்னை, முருங்கை போன்ற மரவகை பயிர்கள் வரிசைகளில் நடப்படும் காய்கறிப்பயிர்கள் மற்றும் மரவள்ளி, மஞ்சள், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களும் சொட்டு நீர் பாசனம் மூலம் பாசனம் செய்ய ஏற்ற பயிராகும்.
•தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக மானியத் தொகை 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது.
•பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து நுண்ணீர் பாசனம் அமைத்து மானியத்தை பெறலாம்.
•குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்த பத்திர நகலை அளித்து பயன்பெறலாம்.
•சிறு, சிறு விவசாயிகளுக்கான சான்று, நிலத்தின் வரைப்படம், சிட்டா, அடங்கல் ஆகியவைகளை வருவாய் துறையினரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் கொடுக்க வேண்டும்.
•மேலும், குடும்ப அட்டை ஜெராக்ஸ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் மூன்று ஃபோட்டோ போன்ற ஆவணங்கள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்ப துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பு விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும், விபரங்களை தெரிந்து கொள்ள கரூர் தாந்தோணிமலையிலுள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 04324255289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு
மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம்.
இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும்.
இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறைதான் சில்பாலின் தொழில் நுட்பம்
•இந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் தயாரிக்கலாம்.
•விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய இடம் இருந்தால் போதும்.
•பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
•நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.
•பின் இதில் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட வேண்டும்.
•காலை, மாலைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
•தொட்டியின் மேல் பகுதியை கோழி மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூட வேண்டும்.
•டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழு தேவைப்படும்.
•இவ்வாறு செய்த பின் 45 நாட்களில் உரம் உருவாகும்.
•டன் ஒன்றுக்கு 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்.
•இதற்கு ஆகும் மொத்த செலவு 800 ரூபாய்.

Pakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு தொழில்

பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு 



து பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் Pakku Mattai Plate Machine Price Chennai Coimbatore Salem குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா.பிருந்தாதேவி  பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.


Pakku Mattai Plate Machine Price Chennai Coimbatore Salem







தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.

மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?

வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.

Our esteemed clients can purchase from us premium quality Pakku Mattai Machine. In order to manufacture this machine, our team of seasoned professionals makes use of excellent grade components with the help of latest technology in adherence to the defined industrial standards of quality. Used in the manufacturing of pakku mattai plate, the offered Pakku Mattai Machine is available with us in different specifications as per the demands laid down by our customers at a market leading price.
Features:

  • Maintenance free
  • Excellent functionality
  • Longer service life
  • High production capacity

Info Post
‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி… ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை.
இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு. சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பரமசிவம். ஒரு காலைப் பொழுதில் பண்ணை தேடிச் சென்றபோது, ஆடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்துக் கொண்டிருந்தார், பரமசிவம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
வழிகாட்டிய கருத்தரங்கம்!
“விவசாயம்தான், பரம்பரைத்தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்லை. மானாவாரி நிலம்கிறதால, கிடைக்கிற மழையை வெச்சு, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு சாகுபடி பண்றேன். எப்பவுமே அடியுரமா ஆட்டு, மாட்டு எருவைத்தான் போடுவேன். ஆரம்பத்துல இயற்கை விவசாயம்பத்தியெல்லாம் தெரியாததால, ரசாயன உரத்தைத் தான் போட்டுக்கிட்டிருந்தேன். இப்போ, ஏழு வருசமா ‘பசுமை விகடன்’ இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரசாயன உரத்தை விட்டுட்டேன்.
அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற கோவிலான்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்துல ஒரு பயிற்சி நடந்துச்சு. அதுல, மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயாரிக்க முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமையத்துல ஆடு வளர்ப்புப் பத்தி நடந்த கருத்தரங்குலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான் எனக்கு ஆடு வளர்ப்பு அறிமுகமாச்சு. தொடர்ந்து, பசுமை விகடன்ல வந்த செய்திகளையும் படுச்சு, ஆடு வளர்ப்பைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அஞ்சு வருஷமா ஆடு வளர்த்துக் கிட்டிருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த பரமசிவம், தொடர்ந்தார்.
செவலை, கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி!
 “ஆரம்பத்துல 20 ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். பசுந்தீவனம், உலர்தீவனம்னு கொடுத்தும் எடை வரவே இல்ல. ஆடுகளை விக்கிறப்பவும் வியாபாரிகள் கிட்ட நிறைய ஏமாந்தேன். அதுக்கப்பறம் நானே சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பதான், ஆடுகளை வாங்கறது, விக்கிறதுல இருக்குற நடைமுறை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். எப்படி ஆடுகளைத் தேர்வு செய்றது, எந்த சமயத்துல ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்குங்கிறது மாதிரியான வி9ஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, ஆடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.
இரண்டு முறைகள்ல ஆடு வளர்க்கலாம். தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விக்கிறது ஒரு முறை. கிடாக்களை வாங்கிட்டு வந்து வளர்த்து விக்கிறது, இன்னொரு முறை. நான் கிடாக்களை வாங்கி வளர்த்து வித்துட்டு இருக்கேன் இதுல கொஞ்சம் அலைச்சல் அதிகம். ஆனா, குறைவான பராமரிப்புல நல்ல வருமானம் பாக்கலாம். ஒவ்வொரு முறையும் சந்தையில 50 கிடாக்களை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வளர்த்து வித்துட்டிருக்கேன். 25 சென்ட்ல சூபாபுல், 20 சென்ட்ல வேலிமசால் பயிர் பண்ணியிருக்கேன். இதைத்தான் பசுந்தீவனமா கொடுத்துட்டு இருக்கேன். தென் மாவட்டங்கள்ல ஆடுகளை பலி கொடுக்குற கோவில்கள் அதிகமாக இருக்கறதால, பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தாம் அதிககிராக்கி. பலி போடுறதுக்கு கருப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமாக வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளாத்தான் வளர்க்குறேன்” என்ற பரமசிவம் ஆடு வளர்ப்பு முறை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
கொட்டகையே போதும்!
 “கிடாக்களை  வளர்க்க பரண் முறை தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாகத் தேவையில்லை. சாதாரண கொட்டகையில அடைத்து, நேரத்துக்கு தீவனம், தண்ணீர் கொடுத்து, மூன்று மாதங்கள் பராமரித்தால் போதும். கொட்டகைக்கும் அதிக செலவில்லாமல், தென்னை மட்டை, தகரம் ஆகியவை மூலமாக அமைத்தாலே போதுமானது.
புதிய ஆடுகள் கவனம்!
புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்துகளைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக்கொட்டகையில் வைத்திருக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன்விட வேண்டும்.
கொட்டகை சுத்த அவசியம்!
கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை நக்கிக்கொள்ளும். கோடைக்காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக 5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடானல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம், கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு, உடனே விற்பனை செய்யலாம்.
சுழற்சி முறையில் நல்ல லாபம்!
நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய பரமசிவம், “30 கிலோ எடை இருக்குற கிடாக்களை, உயிர் எடையா கிலோ 250 ரூபாய் விலைக்கு வாங்கிட்டு வருவேன். ஒரு ஆடு, 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை ஆகும். நல்ல தீவனம் கொடுத்து மூணு மாசம் வளர்த்தா, 45 கிலோ வரை எடை வரும். ‘கொழுகொழு’னு வந்ததும், உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வித்துடுவேன். சந்தைக்குக் கொண்டு போனா விலை குறைவாத்தான் போகும். ஆனா, பண்ணைக்குத் தேடி வர்றவங்ககிட்ட நல்ல விலை கிடைக்கும். குறைஞ்ச விலையா கிலோவுக்கு 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 45 கிலோ ஆட்டுக்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். இதுல, மூணு மாசத்துக்கு ஒரு ஆட்டுக்கு  தீவனம், மருந்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். கொள்முதல் விலை, செலவு எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் போனாலும் ஒரு ஆடு மூலமா மூணு மாசத்துல, 1750 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தடவைக்கு 50 ஆடுகள்னு வாங்கி வளக்குறப்போ, கணிசமான அளவுல லாபம் பாக்காலாம். தொடர்ந்து சுழற்சி முறையில வளர்த்தா, கூடுதல் லாபம் கிடைக்கும்” என்ற பரமசிவத்துக்கு 2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘சிறந்த ஆடு வளர்ப்பு விவசாயி’ விருது கிடைத்திருக்கிறது.
“ஆடு வளர்ப்பு விருது வாங்க டெல்லி போய், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கையால வாங்கினேன். டிரெயின்லகூட போகாத என்னை, ஏரோ பிளேன்ல போக வெச்சது இந்த ஆடுகள்தான்” என்று பெருமையோடு  சொன்னார்.
மேலும், சில தகவல்கள் அவர் கூறியது…….
எந்த நிற ஆடுகள் எந்த மாதத்தில் அதிகம் விற்பனையாகும்!
மாதம்                நிறம்
சித்திரை, வைகாசி    கறுப்பு
ஆனி, ஆடி           கரும்போர், செவலைப்போர்
ஆவணி, புரட்டாசி     கன்னி
மாசி, பங்குனி        நாட்டு ரகம்
கொட்டகை கவனம்!
கொட்டகையை, காலை, மாலை இரண்டு வேளைகளும் சுத்தம் செய்ய வேண்டும்.
                ********************************
ஒவ்வொரு முறையும் தீவனத்தட்டுகளை கழுவி, சுத்தம் செய்துவிட வேண்டும்.
                ********************************
குடிக்க வைக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
டயர் தட்டு!
பழைய லாரி டயர்களை பாதியாக வெட்டி, நன்றாகக் கழுவி காய வைத்து, தீவனம்வைக்கும் பாத்திரமாகப் பயன்படுத்துகிறார், பரமசிவம். இதன்மூலம், தீவனம் வீணாவது தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை வைக்கும்  தீவனத்தையும் ஆடுகள் சாப்பிட்ட பிறகு கழுவிவிட்டால், நோய்த் தொற்றுகள் இருக்காது. டயர் என்பதால், ஆடுகள் முண்டியடிக்காமல் வட்டமாக நின்று சாப்பிட வசதியாக இருக்கிறது.
எந்த ஊருக்கு எந்த நிறம்!
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலில் பலி கொடுக்க வெள்ளை தவிர்த்து, மற்ற நிற கிடாக்களை வாங்குகிறார்கள். திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சுத்த கருப்பு கிடாக்களை விரும்புகிறார்கள். இதற்கு அதிக விலை கொடுக்கவும் தயங்குவதில்லை. திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், உடம்பு  கருப்பாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும், முகத்தில் நாமம் இருக்கும் கன்னி ரக ஆடுகளை அதிகம் விரும்புகிறார்கள்.
அடர்தீவனம்!
மக்காச்சோளம்-40 கிலோ, கோதுமை-30 கிலோ, கம்பு-30 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொண்டால், 100 கிலோ தீவனம் கிடைக்கும். இதனுடன் 100 கிலோ பருத்திக்கொட்டை, 100 கிலோ சிவப்புச்சோளம் ஆகியவற்றையும் கலந்து, அடர்தீவனமாகக் கொடுக்கலாம். இந்த அடர்தீவனத்தை அதிக நாட்கள் இருப்பு வைத்தால், பூச்சி, வண்டுகள் வர வாய்ப்பு உண்டு. அதனால், தேவையான அளவுக்கு மட்டும் தயாரிப்பது நல்லது.
புதிய ஆடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!
தோல் ரப்பர் போல இருக்க வேண்டும். கடினமாக இருந்தால் எடை கூடாது.
                     ******************
கால்கள் திரட்சியாக இருக்க வேண்டும்.
                     *******************
ஒரே ஈத்தில் இரண்டு குட்டிகளுக்கு மேல் பிறந்திருந்தால், அந்தக் குட்டிகளை வாங்கக் கூடாது.
                     *******************
கொம்பு ஆங்கில ‘வி’ வடிவில் இருக்க வேண்டும்.
மாதம் 5 கிலோ எடை அதிகரிக்க, தீவனப் பட்டியல்! (ஒரு ஆட்டுக்கு)
காலை 9 மணி     –       காய்ந்த விதை நீக்கப்பட்ட கொத்தவரைப்
                           பொட்டுகள் அரை கிலோ + தண்ணீர்
காலை 11 மணி     –      வேலிமசால் அரை கிலோ
மதியம் 3 மணி      –      மக்காச்சோளம், கோதுமை, கம்பு கலந்த
                           கலவை 250 கிராம் + தண்ணீர்
மாலை 5 மணி      –      சூபாபுல் அரை கிலோ
மாலை 7 மணி      –           பருத்திக்கொட்டை, சிவப்புச் சோளம் 250 கிராம்


3
வெள்ளாடு வளர்ப்பு தொழில் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை வெள்ளாடுகள் உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல், நச்ச்சுத்தன்மையுடைய செடிகளை மேய்ந்து விடுவதால் உடம்பில் நச்சுத்தன்மை ஏற்படலாம். இதற்கு முதலுதவியாக நஞ்சு அல்லது விஷம் வயிற்றில் தங்காமல் இருக்க உப்பு கரைசல் அல்லது சோப்பு கரைசலை வாய் வழியாக கொடுக்கலாம். மேலும் அடுப்பு கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
ஆட்டுக் கொட்டகைகளில் தீப்பிடித்தால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். ஆட்டின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால், அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றி காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீப்பிடிக்காத பொருட்களை கொண்டு கொட்டகைகளில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும்.
 s
ரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால் தோல் மற்றும் தசை வெந்து விடும். அமில வகை திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்பு தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எந்த வகை ரசாயனம் என தெரியாமல் இருந்தால் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.


காளான்  வளர்ப்பு


சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..


                                                                             
                                                                                                                                                                                                                                                                       

தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் (video) காணவும்












 காளான் வளர்ப்பு வீடியோ கீழே 
|
|
|
V











திட்ட அறிக்கை :

1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை 
3)பாலிதீன் பை 
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]

***ஒரு காளான் பை (12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 முதல் 
ரூ .50  [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]

***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும்  } [ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது  3 நாட்கள் இடைவெளியில்  அடுத்த அடுத்த அறுவடை ]

***200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60. 
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )

---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

***200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த  விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான்  பைக்கு )


விற்பனை :

1)நீங்களாக மார்கெட் செய்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 450( ஒரு காளான்  பைக்கு )
                                

2)மொத்த வியாபாரியிடம் கொடுத்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 220( ஒரு காளான்  பைக்கு )



Star Global Agri Farms,Dharmapuri 

 Contact: 9944858484

Farm Located at Nerinjipettai, Mettur.

நேரடியாக பண்ணையை பர்வையிடலாம். பண்ணையில்

பயிற்சி  பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)



நீங்கள் வீடியோ மூலம் காளான்  வளர்ப்பை  புரிந்துகொண்டால் 

F நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம் 
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ )

சோதனைக்காக  1 கிலோ விலை ரூ 200.(Sample for Test)

ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் . 
இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை  பெறலாம் 


 Contact: 9944858484


சிப்பி & பால் காளான்  வளர்ப்பு  
சிப்பி காளான்  வளர்ப்பு  


இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளானின் ரகங்கள்:

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறை: நீரடியாட்க   சூரிய வெளிச்சம்  படாமல் இருக்க  வேண்டும் .

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.

சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.




விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
(Marketing)

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் ஐம்பது  ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 250 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு: 

செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.

காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!


தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.



பால் காளான் வளர்ப்பு 


இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.

சுத்தம் அவசியம்!

முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.
மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,
''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

siru tholil suya tholil suya thozhil ideas in tamil


சிப்பி காளான்  வளர்ப்பு  






siru suya tholil thozhil ideas in tamil


திட்ட அறிக்கை :

1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை 
3)பாலிதீன் பை 
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]

***ஒரு காளான் பை (12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 முதல் 
ரூ .50  [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]

***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும்  } [ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது  3 நாட்கள் இடைவெளியில்  அடுத்த அடுத்த அறுவடை ]

***200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60.


------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

***200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த  விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான்  பைக்கு )


விற்பனை :

1)நீங்களாக மார்கெட் செய்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 450( ஒரு காளான்  பைக்கு )
                                

2)மொத்த வியாபாரியிடம் கொடுத்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 220( ஒரு காளான்  பைக்கு )


Star Global Agri Farms,Dharmapuri 

 Contact: 9944858484

Farm Located at Nerinjipettai, Mettur.

நேரடியாக பண்ணையை பர்வையிடலாம். பண்ணையில்

பயிற்சி  பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)



நீங்கள் வீடியோ மூலம் காளான்  வளர்ப்பை  புரிந்துகொண்டால் 

F நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம் 
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ )

சோதனைக்காக  1 கிலோ விலை ரூ 200.(Sample for Test)

ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் . 
இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை  பெறலாம் 


 Contact: 9944858484


****************


 இங்க பாருங்க இத்தாலிய

அட, இங்க பாருங்க இத்தாலிய தேனீ!
தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம்... இத்தாலிய தேனீ வளர்ப்பு... ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை! அவர்களில் ஒருவராக சுறுசுறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்.
‘நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது... சாத்தியமும் இல்லை. இந்தியச் சூழல்ல வளரவே வளராது. அப்படியே வளர்ந்தாலும், சரிவர பராமரிக்க முடியாது. சீக்கிரத்துல வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிடும். தேனீக்களைப் பத்தி ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கற விஞ்ஞானிகள் நாங்க. ஆனா, எங்களாலேயே அதை வளர்க்க முடியல. சின்னப் பையனான உன்னால முடியாது' என்று பலரும் கழித்துக்கட்ட, அதை ஒரு சவாலாகவே ஏற்றுச் சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்தான் இந்த ஜெயக்குமார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், உடல் முழுவதும் 60 ஆயிரம் இத்தாலிய தேனீக்களை 24 மணி நேரம் படரவிட்டு ‘லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப் பவர். அடுத்தக் கட்டமாக 175 தேனீக்களை 3 நிமிடம் 7 வினாடிகள் வாய்க்குள் வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கவிருக்கிறார். இப்படி தேனீக்களை வைத்து வருமானத்தையும்... வெகுமானத்தையும் பார்த்துவரும் ஜெயக்குமார், தான் தேனீ வளர்க்க ஆரம்பித்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.
''அப்ப பதிமூணு வயசிருக்கும். எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். மேற்கு தொடர்ச்சி மலையில எங்க சித்தப்பா கண்ணனுக்கு எஸ்டேட் இருக்கு. அதுல தேன் எடுத்ததுதான் என்னோட முதல் அனுபவம். அங்க இருக்கற மலைச்சாதி மக்கள்கிட்ட பழகிப்பழகியே தேன் எடுக்கும் வித்தையை லாகவமா கத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு, இளம் வயசுக்கே உரிய கிரிக்கெட், சினிமா இதெல்லாம் அறவே இல்லாம போயிடுச்சி. பள்ளிக்கூடம், அதை விட்டா தேனீக்களைக் கவனிக்கறதுனு காலம் போச்சு. வீட்டுல தினசரி செலவுக்காக கொடுக்கற ரெண்டு ரூபாயைச் சேர்த்து வெச்சிக்கிட்டே வந்தேன். ஒரு கட்டத்துல அந்தக் காசை வெச்சி, தேனீ வளர்க்கறதுக்காக பழைய தேன் பெட்டி ஒண்ணை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். 'படிக்கற புள்ளைக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை'னு சத்தம் போட்டாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்திட்டு, தேனீ வளர்க்க ஆரம்பிச்சேன். அப்ப நான் பத்தாவது படிச்சிக்கிட்டிருந்தேன்.
ஒரு வாரம் கழிச்சிப் பார்த்தா பெட்டி முழுக்க தேன். அஞ்சரை கிலோ தேன் கிடைச்சுது. வீட்டுக்கு அரை கிலோ கொடுத்தது போக, மீதியை கிலோ 200 ரூபாய் வீதம் வித்தேன். ஆயிரம் ரூபாய் கையில வருமானம். இதைப் பார்த்து வீடே பெருமைப் பட்டுச்சி. அந்தக் காசைக் கையில வாங்கினதும் வானத்துல மிதக்கற மாதிரியான ஒரு பெருமிதம்'' என்று மகிழ்ச்சி பெருக்கெடுக்கச் சொன்னார் ஜெயக்குமார்.
அதன் பிறகு, சித்தப்பா கண்ணன் மூலமாக இத்தாலிய தேனீக்களைப் பற்றிய அறிமுகம் கிடைக் கவே, நறுமணப்பொருள் வாரியத்தின் (ஸ்பைஸ் போர்டு) மூலமாக கேரளா மாநிலம் கண்ணணூரி லிருந்து இத்தாலிய தேனீ பெட்டிகள் மூன்றை வாங்கிச் சேர்த்துள்ளார் ஜெயக்குமார். இந்தியத் தேனீ... இத்தாலிய தேனீ... இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன... குணநலன்கள் என்ன... என்பதை ஒரு பக்கம் கவனித்தவாறே, கலசலிங்கம் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்து முடித்திருக்கிறார்.


 ''என்னதான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்னாலும் என்னோட ஆர்வமெல்லாம் தேனீ மேலதான். அதனால தேனீ வளர்ப்பை தீவிரமா செய்ய ஆரம்பிச் சிட்டேன். இப்ப, இந்திய தேனீப் பெட்டி 800, இத்தாலி தேனீப் பெட்டி 55 வெச்சிருக்கேன். ஈரோடு, மேட்டுப்பாளையம் இங்கல்லாம் கிளை அலுவலகங் களைப் போட்டு, அந்தந்தப் பகுதியில தேன் பெட்டிகளை வெச்சி பராமரிக்கிறேன்.
ஆடு, மாடு, கோழியெல்லாம் வளர்த்தா அதுக்கு தீனி, தண்ணி, தங்குற இடம் எல்லாத்தையும் நாமதான் தேடிக் கொடுக் கணும். தேனீக்களுக்கு அப்படியில்லை. நமக்குச் சொந்தமா தோட்டம் இல்லைனா கூட, பிறரோட தோட்டத்துல, அவங்களோட அனுமதி வாங்கி தேனீப் பெட்டிகளை வெச்சி பராமரிக்கலாம். இதனால தோட்டக் காரருக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. சொல்லப்போனா லாபம்தான். அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்கும். சொந்தமா விவசாயம் இல்லாததால உறவுக் காரங்க தோட்டத்துலதான் தேன் பெட்டிகளை வெச்சி பராமரிக்கிறேன். அவங்களும் ஆர்வத்தோட இடம் கொடுக்கறாங்க. தேன் எடுக்கறதுக்குக் கருவி, புகை போடுறதுக்குக் கருவினு தொழில்ல ஏக முன்னேற்றம் வந்தாச்சு'' என்று சந்தோஷப்பட்டார்
தமிழகம் மற்றும் கேரளாவில் எங்கெங்கு... எந்தெந்த மாதங்களில் அதிகமாக பூக்கள் பூக்கின்றன. குறிப்பாக சூரியகாந்தி, காஃபி, ரப்பர் போன்றவற்றை அட்டவணைப் படுத்திக்கொண்டுதான், குறிப்பிட்ட தோட்டங் களில் தேன் பெட்டிகளை வைத்து பலரும் தொழில் செய்கின்றனர். தேனீப் பெட்டிகள் வைக்கப்படும் தோட்டங்களில் மகசூல் கூடுவதால், தேன் பெட்டிக்களின் வரவை தோட்டக்காரர்கள் ஆவலுடன் எதிர்நோக்கு கின்றனர். இந்த வகையில், தான் எடுத்துவரும் தேனை, அக்மார்க் முத்திரை பெற்று 2002-ம் ஆண்டிலிருந்து விற்பனை செய்துவருகிறார் ஜெயக்குமார். 25, 50, 100, 250, 500 மில்லி அளவுகளிலும் 1, 25 கிலோ அளவுகளிலும் தேனைப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்.
''தேனீ வளர்க்க உள்ளார்ந்த ஆர்வமிருக்கணும். தேனீக்கள் கிட்ட பயம் இருக்கக்கூடாது. தேனீ கொட்டினா தாங்கிக்கற தைரியம் வேணும். எல்லாத்துக்கும் மேல தேனீக்கள் மேல பிரியம் இருக்கணும். ஆனா, அரசாங்கத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு வேலை பார்க்குற அதிகாரிங்ககிட்ட இதை எதிர்ப்பார்க்க முடியுமா... அதனாலதான் இத்தாலி தேனீங்கறது இன்னமும் இந்தியாவுல பெரிய அளவுல வளர்க்கற விஷயமா மாறல. ஆனா, மனசு வெச்சா சாதிக்கமுடியும்னு நான் ஜெயிச்சிக் காட்டியிருக்கேன். ஆர்வம் உள்ளவங்க மனசு வெச்சா ஜெயிக்கலாம்'' என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னார்.
அதிக உடல் உழைப்பு தேவைப்படாத, சொந்த நிலம் தேவைப்படாத, வேலையாட்கள் தேவைப்படாத, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய, மிகமுக்கியமாக விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக உள்ள தொழில் தேனீ வளர்ப்பு. இது குறித்தான பயிற்சிகளையும் ஆலோசனை களையும் வழங்க ஜெயக்குமார் தயாராகவே உள்ளார். ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழு மற்றும் மலைவாழ் மக்களுக்கு இத்தகைய பயிற்சிகளைக் கொடுத்த அனுபவம் உள்ளவர். நீங்களும்தான் பேசிப்பாருங்களேன்... தொடர்புக்கு அலைபேசி: (அலைபேசி: 94433-02674).
இந்தியத் தேவைக்கு ஏற்ப இங்கே தேன் உற்பத்தி இல்லை. எனவே, அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இங்கேயே உற்பத்தி செய்தால் நிச்சயம் சந்தைக்குப் பஞ்சமில்லை!
ரகளையான ராயல் ஜெல்லி!
தேன் பெட்டிகளிலிருந்து ‘தேன்’ மட்டும் கிடைப்பதில்லை. ராயல் ஜெல்லி, மகரந்த தூள், புரோபலிஸ் எனும் ஒருவகை பிசின், தேனீ விஷம், தேன் மெழுகு போன்றவையும் கிடைக்கின்றன. ராயல் ஜெல்லி என்பது ராணித் தேனீக்களுக்கான சிறப்பு உணவு. இந்த உணவை வேலைக்காரத் தேனீக்கள் தயார் செய்யும். மற்ற தேனீக்கள் மூன்றி லிருந்து நான்கு மாதம் மட்டுமே உயிர் வாழும். ராயல் ஜெல்லியை உண்பதால் ராணித் தேனீ மூன்று முதல் நான்கு ஆண்டுகள் உயிர் வாழும். இது மனிதர்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் அரிய மருந்து என்பதால் உயரிய விலை கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு கிலோ ராயல் ஜெல்லியின் விலை ரூ.30,000.

தேனீ கொட்டினால் தேக ஆரோக்கியம்!
தேனீ நம்மை கொட்டினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகின்றது என்கிறார்கள். நரம்பு தளர்ச்சி குறையும், மூட்டு வலிகுறையும். வாத நோய் வராது என்றெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள் சொல் கின்றன. இப்படி தேனீக்களைக் கொட்டவிடுவதன் மூலம், அபூர்வமாக சிலருக்கு அலர்ஜி வருமாம். இத்தாலிய தேனீயை உடலில் கொட்டவிட்டு செய்யப் படும் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வீனோம் தெரபி (Venom Therapy) எனப்பெயர். சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது ஏகப் பிரபலம். ஒரு தேனீயை வைத்து கொட்ட விடுவதற்கு ரூ.200 வரை வாங்குகின்றனர். ஆனால், தேனீ தான் பாவம். ஒரு முறை கொட்டியதும் அது இறந்துவிடும்.
எதிரிகள் ஜாக்கிரதை!
தேனீ வளர்க்க நினைப்பவர் கள் எறும்புகள், பல்லி, கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்ற வற்றிடம் உஷாராக இருக்க வேண்டும். இவையெல்லாம் தேனீக்களின் எதிரிகள்.
தேனீக்களுக்கு கறுப்பு நிறம் பிடிக்காது. அதனால்தான் கண்ணில் அசைந்துகொண்டே இருக்கும் கருவிழியைப் பார்த்து கொட்ட வரும். அதற்கு பிடித்த நிறம் வெள்ளை. அதனால்தான் வெள்ளை நிறமான அடையில் தேனைச் சேகரிக்கின்றன.
நம்புங்கள்.. உண்மைதான்!
தேனீக்களால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரித்து பயிர்களில் கிடைக்கும் மகசூலின் உயர்வு அதிசயக்கத் தக்கதாக இருக்கிறது. கடுகு பயிரில் 43% அதிகரிக்கிறது. இதேபோல, எள் 32%, சூரியகாந்தி 38 முதல் 48%, பருத்தி 17 முதல் 19%, வெள்ளரி 66%, தர்பூசணி 52%, ஆப்பிள் 44%, திராட்சை 37%, ஏலக்காய் (கேரளா) 29-39%, என்று மகசூல் அதிகரிக்கும்!
சோம்பல் இல்லாத சுறுசுறுப் புமிக்க தேனீக்களிடமிருந்து நாம் தேனை மட்டும்தான் எடுக்கின்றோம். கடமை உணர்வு, பண்பு, ஒற்றுமை, ஒழுங்கு, கீழ்படிதல், கூட்டுறவு, தொலைநோக்கு பார்வை, பிறர் நலம் பேணுதல், சிக்கனம், சேமிப்பு ஆகிய நல்ல குணங்களையும் அவற் றிடமிருந்து எடுத்துக் கொண்டால்... உலகில் நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!

******************

பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு!

டந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.
ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.
சந்தை வாய்ப்பு!
உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. 
தயாரிப்பு முறை!
மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.
அனுமதி!
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கட்டடம்!
ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
இயந்திரம்!
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

மற்ற செலவுகள்!
ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தண்ணீரும் மின்சாரமும்!
20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

மூலப்பொருள்!
இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.
வேலையாட்கள்!
இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.
முந்தைய செலவுகள்!
பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.

செயல்பாட்டு மூலதனம்!
முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
ரிஸ்க்!
ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.
சாதகமான விஷயம்!
பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது. பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?
********************
NATTU KOZHI's photo.
NATTU KOZHI's photo.
NATTU KOZHI's photo.
NATTU KOZHI's photo.


மண் இல்லா தீவன வளர்ப்பு..

.
மண் இல்லாமல் பயிர் வளருமா? வளராது என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும் கருத்து. ஆனால், மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டது. ஆஹா, அப்படியா? அது நிச்சயம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.
கேரள மாநிலம், கோட்டயம் செல்லும் வழியில் பலா என்ற சிறு ஊரின் அருகில் வசிக்கும் என் நண்பர் திரு.டோனி மைக்கேல் அவர்களைச் சந்தித்தபோது, அவர் அப்போதுதான் மண் இல்லா தீவன அமைப்பை நிறுவியிருந்தார். தினமும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அந்த இயந்திரத்தின் அப்போதைய (2010-ல்) விலை சுமார் ரூபாய் 6.5 லட்சம். ஏகப்பட்ட கலர் கலர் பட்டன்கள், மீட்டர்கள் என பார்க்கவே பயமுறுத்தின.
சரி, வந்துவிட்டோம். பத்திரிகைக்கு ஒரு பேட்டி எடுக்கலாமே என்று நினைத்து அவரைப் பேட்டி கண்டு, ஒரு வேளாண்மைப் பத்திரிகையில் வெளியிட்டதில், வாசகர்களிடையே அமோக வரவேற்பு. அதற்குப் பின், பல முறை பல தரப்பிலான நண்பர்களுடன் அவரது பண்ணையைப் பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ரூ.6.5 லட்சம் முதலீட்டில், ஒவ்வொரு முறையும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய இந்த முறையை, சாமானிய கால்நடை வளர்ப்பவர்களும் எளிய முறையில் பயன்படுத்த முடியுமா என்று பலமுறை யோசித்தேன். அதுபற்றி நண்பர் டோனியிடம் கேட்டேன். முடியாது, நிச்சயம் முடியாது, முடியவே முடியாது என்று அவர் உறுதியுடன் சொன்னபோது, மண் இல்லா தீவனப் பயிர் வளர்ப்பை எளிய முறையில் செய்ய வேண்டும் என்ற உறுதியை என் மனத்தில் விதைத்துக்கொண்டேன்.
2013-ல் கடுமையான தீவன பற்றாக்குறை. மேல் மழையில்லை. கிணறு வறண்டுபோகும் நிலை. போதுமான உலர் தீவனமும் இருப்பு இல்லை. பசுக்கள் தீவனத்துக்கு ஏங்கி இளைத்துவிடும்முன் விற்றுவிடலாம் என முடிவு செய்து பசுக்களை விற்கத் தொடங்கினேன். தலைமுறை தலைமுறையாக மாடு வளர்க்கும் நாம், தீவன விஷயத்தில் எந்த இடத்தில் தோற்றோம் என ஆராய்ந்தேன். கவனக் குறைவு, சரியான திட்டமிடல் இல்லாதது, தீவன சேமிப்பில் அக்கறை காட்டாதது, இயற்கையின் சதி என பல காரணங்கள் வரிசை கட்டி நின்றன.
எல்லாப் பசுக்களையும் விற்க முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு சோனிப் பசுக்கள், ஒரு வண்டிக் காளையை விற்க முடியவில்லை. என் வீட்டோடு தங்கிவிட்ட இந்த மூன்று வாயில்லா ஜீவன்களை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயச் சூழல். போனதெல்லாம் போகட்டும். இனி இருக்கும் ஜீவன்களை காப்பாற்ற என்ன செய்யலாம் என யோசிக்கும்போது, ஹைட்ரோஃபோனிக்ஸ் என அழைக்கப்படும் மண் இல்லா தீவன வளர்ப்பை எளிய முறையில் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.
மனத்தில் ஏற்கெனவே விதைக்கப்பட்டிருந்த உறுதியுடன், இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடினேன். கென்யாவில் ஒருவர் எளிய முறையில் மண் இல்லா தீவன உற்பத்தியைச் செய்வதாகத் தெரிந்தது. அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பேசியதில், தெளிவான பதில் கிடைக்கவில்லை. 2000 அமெரிக்க டாலர் (சுமார் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்) அனுப்பினால், தொழில் ரகசியத்தைச் சொல்கிறேன் என்றார். அவ்வளவு பெரிய தொகையை யாரோ கண்ணுக்குத் தெரியாத ஆப்பிரிக்கருக்குக் கொடுப்பதைவிட, அந்தப் பணத்தை வைத்து நாமே முயற்சிக்கலாமே என்று முடிவு செய்தேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, மண் இல்லா தீவன வளர்ப்பு முறையைப் பற்றிப் படித்தேன். குறிப்புகள் எடுத்தேன். கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் எனப்படும் முகநூல் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் செய்திகள் சேகரித்துக் கொடுத்தனர்.
ஒரு சுபயோக சுபதினத்தில் எனது முயற்சியைத் தொடங்கினேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும் என்பது மண் இல்லா தீவன வளர்ப்பில் நான் கண்ட உண்மை. முதல் தட்டு தீவனம் உற்பத்தி செய்த நாளில் என் மனத்தில் தோன்றிய உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் என்ன செய்தேன், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டேன், எது சரி, எது தவறு? கடைசியில் வெற்றியை ருசித்தது எப்படி...
உங்களுக்கும் சொல்கிறேன்.
இந்த மண் இல்லா தீவன வளர்ப்புக்கு...
* குறைந்த இடம்
* குறைந்த தண்ணீர்
* குறைந்த நேர கவனிப்பு
* குறைந்த உடல் உழைப்பு
* குறைந்த முதலீடு
* பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் எதுவும்
தேவையில்லை.
இப்படி குறைவாகப் பயன்படுத்தி, குறைந்த இடத்தில் அதிக அளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள வெற்றியே. இது எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும். அது, விடாமுயற்சி.
எங்கள் வீட்டு மாட்டுக்கொட்டகையில் 10 * 8 அடிக்கு ஓர் இடம் இருந்தது. ஓடு வேய்ந்த இடம். ஓட்டுக் கூரை தூசி கீழே விழாமல் இருக்க, சீலிங்குக்குப் பச்சை நிழல் வலை அடித்தேன். உள்ளே வெளிச்சம் வர வேண்டும், ஆனால் உள்ளே இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் மாறக்கூடாது என்பதற்காக ஒளி ஊடுறுவும் கனமான பாலிதீன் ஷீட்டால் சுற்றிலும் மூடி, உள்ளே சென்று வர ஒரு கதவு. இதுதான் மண் இல்லா தீவன வளர்ப்புக்காக நான் அமைத்துக்கொண்ட அறையின் அமைப்பு.
இந்த முறைக்கு செங்குத்தான விவசாயம் (Vertical Farming) என்று பெயர். ஆகவே, இதில் தட்டுகளை வைக்க ஸ்டாண்ட் (Stand) செய்தேன். இந்த ஸ்டாண்டின் ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் இடையே ஒரு அடி உயர இடைவெளி தேவை. மொத்த ஸ்டாண்டின் உயரம் ஆறு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஸ்டாண்டின் நீளம், அறையின் அளவு மற்றும் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். இதுதவிர, ஒரு அடிஅகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகள் (டிரேக்கள்) தேவை. தண்ணீர் தெளிக்க ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முறைப்பு கட்ட கோணிச் சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர் நிலையை அறிய ஒரு தெர்மாமீட்டர் ஆகியவையும் தேவை.
பசுந்தீவன வளர்ப்பு அறை
மக்காச்சோள விதை
ஈர கோணிச் சாக்கில் முளை கட்டப்படுகிறது.
பிளாஸ்டிக் தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் விதைகள்
மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளை இந்த மண் இல்லா தீவன முறையில் வளர்க்கலாம். இதில், சிறிய விலை ஏற்ற இறக்கத்துடன் ஆண்டு முழுவதும் கிடைப்பது மக்காச்சோளம் மட்டுமே. கோதுமை, பார்லி இரண்டும் விலை அதிகம். சோளம் பயிரிட்டால், இளம் சோளப் பயிரில் நச்சுத்தன்மை இருக்கும். அதனால், அதைத் தவிர்ப்பது நல்லது. கம்பு, ராகி போன்ற சிறுதானியப் பயிரில் போதுமான பயிர் வளர்ச்சி கிடைக்கவில்லை. ஆகவே, மண் இல்லா தீவன வளர்ப்புக்கு மக்காச்சோளமே சிறந்தது.
விதைகளை விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும் மக்காச்சோள விதைகளை வாங்காதீர்கள். விவசாயிகளிடம் கிடைக்கும் மக்காச்சோளமே போதும். புதிய, நன்கு, காய்ந்த, பூசனம் பிடிக்காத, நன்கு விளைந்த, முனை முறிந்து உடையாத மக்காச்சோளத்தை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் மக்காச்சோளமே நன்கு முளைத்து அதிகபட்ச தீவனத்தை கொடுக்கும். ஆப்ரிக்கன் டால் எனப்படும் தீவன மக்காச்சோள ரகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஆனால், ஆப்பிரிக்கன் டால் மக்காச்சோள விதை எல்லா இடத்திலும், வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. இருப்பதில் சிறந்தது மக்காச்சோளமே. இல்லை, வேறு தானியத்தைத்தான் பயன்படுத்துவேன் என்று சொல்பவர்கள், சோளத்தை மட்டும் தவிர்த்து வேறு எந்தத் தானியத்தையும் தனது வசதி வாய்ப்புக்கு ஏற்ப விளைவிக்கலாம். அது அவரவர் விருப்பம்.
அடுத்த தேவை, வளர்ப்பு அறை. அளவான எண்ணிக்கையில் பசுக்கள் இருந்தால், பசுக்கள் இருக்கும் கொட்டகையிலேயே ஒரு இடம் போதும். பத்து பசுக்களுக்கு மேல் இருந்தால், கிரீன் ஹவுஸ் எனப்படும் பசுமைக் கூடாரம் அமைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் நீடித்த, நிலைத்த உற்பத்தியை எடுக்க முடியும். சூரிய ஒளி நன்கு கிடைக்கக்கூடிய இடத்தைத் தேர்வு செய்யுங்கள். பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக மிக அவசியம். சூரிய ஒளியைக் கடத்தக்கூடிய, புற ஊதாக் கதிரால் பாதிப்பு ஏற்படுத்தாத கெட்டியான பாலித்தீன் ஷீட்டால் சுற்றி மூடலாம். அல்லது 90 சதவீத பச்சை வலையையும் பயன்படுத்தலாம். ஒளி உட்புக வேண்டும். அதே சமயம், வளர்ப்பு அறைக்குள் இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் வெளியேறக்கூடாது.
உங்கள் வசதிக்கு ஏற்ப, நீள அகலத்தில் ஸ்டாண்டுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆள் உயரத்துக்கு மேல் ஸ்டாண்ட் இருந்தால் வேலை செய்வது சற்று கஷ்டமாக இருக்கும். ஸ்டாண்டுகளை இரும்பு அல்லது பிவிசி பைப் அல்லது மரத்தால் செய்துகொள்ளலாம். தினமும் பலமுறை தண்ணீர் தெளிக்கப்படுவதால், தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத பொருள்களால் ஸ்டாண்ட் அமைத்துக்கொள்வது நல்லது. வளர்ப்பு அறை எப்போதும் குளுகுளுவென்று இருக்க வேண்டும். அதற்காக, பயிர் வளர்ப்பு அறையின் தரையில் குறைந்தது அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.
அறையும் ஸ்டாண்டுகளும் தயார். ஒரு அடிஅகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகளின் அடியில் 3.5 மில்லிமீட்டர் அளவுள்ள 12 துளைகள் இட வேண்டும். அதிகப்படியான தண்ணீர் இந்தத் துளைகள் வழியே வெளியேற வேண்டும்.
பயிர் வளர்ப்பு முறை...
ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவுக்கு மக்காச்சோள விதை போதுமானது. மக்காச்சோளத்தின் திரட்சி மற்றும் சைஸை பொறுத்து, இந்த அளவைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம். நமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ அதைப்போல் எட்டு மடங்கு தட்டுகள் வாங்க வேண்டும். உதாரணமாக, நமது ஒரு நாளைய தேவை பத்து தட்டுகள் தீவனம் என்றால், 80 தட்டுகள் வாங்க வேண்டும்.
பத்து தட்டுகளுக்குத் தேவையான மூன்று கிலோ மக்காச்சோளத்தை நன்கு நீரில் மூழ்கும்படி ஒரு பிளாஸ்டிக் வாளியில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இந்த ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இந்த ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்துப் பார்த்தால், விதைகளில் சிறு முளை விட்டிருக்கும்.
முளைத்து வரும் விதைகள் - 1

முளைத்து வரும் விதைகள் - 2
முளைத்து வரும் விதைகள் - 3

பசுந்தீவன வளர்ப்பு - விதை முதல் தீவனம் வரையிலான படி நிலைகள்
முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம், இடைவெளியின்றி, ஆனால் ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி, சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்கவும். பிறகு, தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து, ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை புகைபோல் தெளிக்க வேண்டும். தண்ணீரை ஊற்றிவிடக்கூடாது. மண் இல்லா தீவன வளர்ப்பில் தண்ணீர் தெளிப்பது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய பணி. தண்ணீரின் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் கெடுதல்தான். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் மாறாமல் வைத்திருக்க வேண்டும். சிறிய அளவிலான கைத்தெளிப்பான், பூச்சி மருந்து தெளிக்கப் பயன்படும் கையால் இயக்கும் தெளிப்பான், மிஸ்ட் தெளிப்பான் அல்லது ஃபோக்கர் (Fogger) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மண் இல்லா தீவனப் பயிருக்குத் தண்ணீரின் தேவை குறைவுதான். ஆனால், அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிக அவசியம்.
அறையின் வெப்ப நிலை 24 - 25 டிகிரி வரையிலும், காற்றின் ஈரப்பதம் (Relative Humidity) 80 - 85 சதவீதமாகவும் பராமரித்தால், விளைச்சல் பிரமாதமாக இருக்கும். அளவுகள் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. அறையின் வெப்ப நிலையைக் குறைக்க, அறையின் தரையில் மணல் பரப்ப வேண்டும். வசதி இருந்தால் ஏர்கூலர் பயன்படுத்தலாம். ஏர்கூலர் பயன்படுத்தினால் பயிர் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மக்காச்சோளத்தை மண்ணில் விதைத்து தண்ணீர் தெளித்து வந்தால், வெள்ளி ஈட்டிபோல் முளைத்து வர ஏழு முதல் எட்டு நாட்களாகும். ஆனால், மண் இல்லா தீவன வளர்ப்பு முறையில் ஏழு நாட்களில் 25 முதல் 30 செ.மீ. உயரப் பயிராக வளர்ந்துவிடுகிறது. கீழே வேர்களெல்லாம் பின்னிப்பிணைந்து வெள்ளை மெத்தைபோல் ஆகிவிடும். போடப்படும் விதையின் எடையைவிட எட்டு மடங்கு எடையில் தீவனம் கிடைப்பது, வெறும் ஏழு நாள்களில் நடைபெறும் அதிசயம்.
வேர் விட்டிருக்கும் பசுந்தீவனம்

தண்ணீர் தெளிப்பதை முறைப்படுத்த உதவும் மின்னணு கடிகாரம்

ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தட்டுக்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது - 1

ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தட்டுக்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது - 2
பெரிய பிளாஸ்டிக் தட்டுகளில் வளர்த்தால், மாடுகளுக்கு எடுத்துப் போடுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். ஒரு அடிஅகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டு என்பதால் ஆடு, மாடு, கோழி என நம் வீட்டுப் பிராணிகளுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதை எளிதில் முடிவு செய்துவிடலாம்.
மண் இல்லா தீவன வளர்ப்பு முறையில், ஆண்டு முழுவதும் தினமும் ஒரே அளவில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். இந்த அமைப்பை எங்கு வேண்டுமானாலும் நிறுவி, தீவனம் தயார் செய்ய முடியும். தண்ணீரின் தேவை மிக மிகக் குறைவு. பச்சைப் பசேல் என்று இருக்கும் தீவனம், வருடம் முழுவதும் ஒரே சுவை, ஒரே சத்துடன் கால்நடைகளுக்குக் கிடைக்கும்.
மக்காச்சோளத்தை மாவாக்கிப் போடுவதைவிட, இவ்வாறு முளைக்க வைத்துப் போடுவது கால்நடைகளுக்கு நல்லது. ஹைட்ரோஃபோனிக்ஸ் எனப்படும் மண் இல்லா பசுந்தீவனத்தில் உள்ள சத்துகள்...
புரதம் - 35.5 சதவீதம்
ஈதர் - 3.4 சதவீதம்
ஈரப்பதம் - 84 சதவீதம்
சாம்பல் - 3.6 சதவீதம்
நார்ச்சத்து - 15.2 சதவீதம்
நார்ப்பொருள் - 19 சதவீதம்
தழைச்சத்து - 61.3 சதவீதம்
மெட்டபாலிசபிள் சத்து - 11.40 மிகி/கிலோ
வைட்டமின் பி1 - 0.2 மிகி/100 கிராம்
வைட்டமின் ஏ1 - 0.4 மிகி/100 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 1.50 மிகி/100 கிராம்
செம்புச் சத்து - 1.30 மிகி/100 கிராம்
இரும்புச் சத்து - 7.2 மிகி/100 கிராம்
பொட்டாசியம் - 180 மிகி/100 கிராம்
மக்னீசியம் - 150 மிகி/100 கிராம்
சோடியம் - 36 மிகி/100 கிராம்
பாஸ்பரஸ் - 150 மிகி/100 கிராம்
துத்தநாகம் - 4.6 மிகி/கிராம்
மண் இல்லா தீவனப் பயிரின் இலை, வேர், விதைப்பகுதி என மூன்றையும் பசுக்கள் நன்றாக அசைபோட்டு ஜீரணம் செய்கின்றன. மண்ணில் பயிர் நடவு செய்து 25 - 30 செமீ உயரம் வளர்ப்பதற்கு எவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோமோ அதில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி அதே அளவு தீவன மகசூல் எடுக்க முடியும். அதனால், கடும் வறட்சி நிலவும் இடங்களிலும், காலங்களிலும்கூட பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். தினமும் விலை உயர கொண்டே போகும் அடர் தீவன செலவைக் குறைக்கலாம். உற்பத்தி செலவு குறைவதால், கால்நடைகள் மூலம் பால் உற்பத்தி செய்பவர்களுக்குக் கிடைக்கும் நிகர லாபம் அதிகரிக்கும்.
மண் இல்லா தீவன உற்பத்தியை சிறிய அளவு, பெரிய அளவு என்று இல்லாமல் எந்த அளவிலும் இதனை உற்பத்தி செய்யலாம். பெரிய பண்ணையாளர்களால்தான் முடியும், சிறிய அளவு விவசாயிகளுக்குச் சாத்தியமே இல்லை என்பது இங்கே கிடையாது. மனம் இருந்தால் எல்லோராலும் சாத்தியமே.
செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் பசுந்தீவனம் - 1

செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் பசுந்தீவனம் - 2

கோழிக் குஞ்சுகளுக்கு தீவனமாகக் கொடுக்கப்படும் பசுந்தீவனம் - 1

கோழிக் குஞ்சுகளுக்கு தீவனமாகக் கொடுக்கப்படும் பசுந்தீவனம் - 2
அசைபோடும் பிராணிகளோடு அசைபோடாத முயல், குதிரை, பன்றி போன்றவற்றுடன் கோழி, வான்கோழி, வாத்து போன்றவற்றுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம். அனைத்துக்கும் மேலாக, இதை 100 சதவீதம் இயற்கையாகவே உற்பத்தி செய்யலாம். 19:19:19 தண்ணீரில் கரையும் ரசாயன உரத்தைத் தெளித்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், இந்தக் கலவை அதிகமாகப் படுகிற இடத்தில் பயிர் கருகிவிடும். இதற்குப் பதிலாக, பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாம். அல்லது, திறமிகு நுண்ணியிரி (Effective Micro Organism) கரைசலை தெளித்து இயற்கையாகவே வளர்க்கலாம்.
இந்தப் பசுந்தீவனத்தைப் பசுக்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், பாலின் அளவு அதிகரிக்கும். சுவையும் கூடும். வெண்ணெய்யின் அளவும் அதிகரிக்கும். சினை பிடிப்பது எளிதாகும். உடல் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
பனி மூடிய நிலையில் பசுந்தீவனம் கிடைக்காத சூழல் வரும்போது தீவனத்தை உற்பத்தி செய்ய ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் பல காலமாக இந்த முறை தொழிற்சாலைபோல் செயல்பட்டு வருகிறது. அதன் அமைப்பு... செலவு... எல்லாம் கற்பனைக்கு எட்டாதது. எல்லோரும் செய்ய இயலாதது. ஆனால், மிகக் குறைந்த செலவில், குறைந்த இடுபொருளில் தீவனம் வளர்க்கும் இந்த முறையானது, சாதாரண மக்களும்கூட செய்யக்கூடியது.
இன்று தமிழகத்தில் ஆங்காங்கே செய்யப்பட்டு வரும் இந்த மண் இல்லா தீவன வளர்ப்பு, நிச்சயம் தீவன உற்பத்தியில் ஒரு மௌனப் புரட்சி செய்யும் என்பதில் ஐயமில்லை.