கூடுதல் எண்ணெய் சேர்க்காமல் இறைச்சி சமைப்பது எப்படி?
ஒரு சிலர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சமைக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் சிலர் இணையத்தில் இருந்து சமையல் குறிப்புகளைப் பார்க்கிறார்கள். நீங்களும் அதில் ஒருவரா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். சிறந்த சமையல் பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படும் சில ரகசிய குறிப்புகள் இங்கே உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
ஆம்லெட் சமைக்க
ஒவ்வொறுமுறை சமைக்கும் போதும், ஆம்லெட் கடாயில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா? ஆம் எனில், இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆம்லெட் பெறுவதற்கான சிறந்த வழி, கடாயை சூடாக்கி, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து, பின்னர் முட்டையைச் சேர்ப்பதாகும். முட்டையை ஒருபோதும் குறைந்த அல்லது அதிக சூடான பாத்திரத்தில் சேர்க்க வேண்டாம்.
கூடுதல் எண்ணெய் சேர்க்காமல் இறைச்சி சமைக்க
இறைச்சியில் கூடுதல் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடாயை சூடாக்கி, ஒரு பக்கத்தில் மாமிசத்தைச் சேர்க்கவும், இதனால் கொழுப்பு வெளியேறும், மேலும் அதிகப்படியான எண்ணெய் இல்லாமல் இறைச்சி அதன் கொழுப்பில் சமைக்கப்படும்.
பஞ்சுபோன்ற உருளைக்கிழங்கு
நீங்கள் கிரீம் மேஷ்டு உருளைக்கிழங்கு விரும்பினால், வேகவைத்த உருளைக்கிழங்கை ஒரு வாணலியில் குறைந்த தீயில் உலர வைக்கலாம், இதனால் கொதித்த பிறகு மீதமுள்ள தண்ணீர் ஆவியாகிவிடும். ஆனால் அவற்றை வறுக்காதபடி கவனமாக செய்யுங்கள். பஞ்சுபோன்ற கிரீமி உருளைக்கிழங்கு கிடைக்கும்.
அடுத்தமுறை சமைக்கும்போது மறக்காமல், இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்!a
source https://tamil.indianexpress.com/lifestyle/cooking-hacks-fried-egg-recipe-dosa-butter-potato-meat-cooking-recipes-668842/
கேழ்வரகு மில்க் ஷேக் செய்யத் தேவையான பொருட்கள்
கேழ்வரகு – 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4
பேரீச்சை – 5
காய்ச்சியப் பால் – 200 மி.கி
ஏலப்பொடி – 1 தேக்கரண்டி
சர்க்கரை – சுவைக்கேற்ப
கேழ்வரகு மில்க் ஷேக் சிம்பிள் செய்முறை:
முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.
பின்னர், ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.
அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு மில்க் ஷேக் தயார். அவற்றை டம்ளரில் பரிமாறி ருக்கலாம்.
ஈஸி ஐஸ்க்ரீம்
கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………!
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – தேவைக்கேற்ப
சோள மாவு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது
செய்முறை:
* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.
* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
குறிப்பு:
நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
சர்க்கரை – தேவைக்கேற்ப
சோள மாவு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது
செய்முறை:
விடுமுறை விருந்து: கோபி மசாலா ரோஸ்ட்
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது தினமும் என்ன சமைப்பது என்ற யோசனை ஒரு பக்கம் என்றால் விடுமுறையில் அந்த யோசனை இருமடங்காகிவிடும். தவிர உறவினர்களின் வருகையும் நம் சமையல் பக்குவத்துக்குச் சவால் விடுக்கும். “நாம் தினமும் சமைக்கும் சோறு, குழம்பு வகைகளுடன் சில பொருட்களைக் கூட்டியும் குறைத்தும் புதிய சுவையில் சமைத்துப் பரிமாறினால் விருந்தினர்கள் அகமகிழ்ந்துவிடுவார்கள். குழந்தைகளின் குதூகலமும் அதிகமாகும்” என்கிறார் சென்னை போருரைச் சேர்ந்த ராஜகுமாரி. விடுமுறையைச் சிறப்பானதாக்க சில பிரத்யேக உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
கோபி மசாலா ரோஸ்ட்
என்னென்ன தேவை?
காலிபிளவர் – ஒரு கப்
தக்காளி, வெங்காயம் – தலா 2
இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கடுகு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்
தோசை மாவு – 2 கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
முந்திரித் துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அதில் உதிர்த்த காலிபிளவரைப் போட்டு பத்து நிமிடம் வையுங்கள். புழு, பூச்சிகள் இருந்தால் வெளியேறிவிடும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரித் துண்டுகள் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்குங்கள். காலிபிளவரைச் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கலவை ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கிவையுங்கள்.
தோசை ஊற்றி நடுவே இந்த கோபி மசாலாவை 3 டீஸ்பூன் வைத்து மூடி, ஓரங்களில் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்துவிடுங்கள். இதைப் பச்சை தக்காளி சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
முட்டை மசாலா டோஸ்ட்
முட்டையை வைத்து பல சமையல் செய்யலாம் . இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் முட்டை மசாலா. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .
இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டை – 4,
கோதுமை பிரெட் – 5,
கரம் மசாலாதூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
உப்பு – கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்)
பூண்டு – 2 பல் சின்ன வெங்காயம் – 4 சேர்த்து அரைத்த விழுது – சிறிதளவு.
செய்முறை:
• கோதுமை பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள்.
• பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள்.
• மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.
சுலபமான செட்டிநாடு முட்டை மசாலா
என்னென்ன தேவை?
முட்டை – 3
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் -1
இஞ்சி பூண்டு விழுது
தேங்காய் தேவையான அளவு
சிவப்பு மிளகாய் 3
கிராம்பு 2
ஏலக்காய் 1
சோம்பு 1டீஸ்பூன்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
எப்படி செய்வது?
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பெரிய வெங்காயம் தக்காளி, சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் ஆற வைத்து மிக்ஸரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த பேஸ்ட் கலவையை கடாயில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த முட்டையை பாதியாக வெட்டி போட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறலாம்.

புகழ்பெற்ற தலப்பாக்கட்டு பிரியாணி
புகழ்பெற்ற…தலப்பாக்கட்டு பிரியாணி!!!
இந்தக்கடையின் சிறப்பு என்னவென்றால்…இரவில்தான் கடை!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
பஸ்மதி அரிசி – 3 கப்
சீரகம் தூள் – 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தனி தனியாக அரைத்து கொள்ள:
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2 பெரியது
புதினா + கொத்தமல்லி – 1 கப்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க:
அரைத்த இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தயிர் – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
உப்பு – தேவையான அளவு
முதலில் தாளிக்க:
எண்ணெய் + நெய் – சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,
பிரியாணி இலை பச்சை மிளகாய் – 4
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். சிக்கனை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 – 3 மணி நேரம் ஊறவைக்கலாம். வெங்காயம் + தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
புதினா, கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும். இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும்.
பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை. ) சிக்கன் வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.
(கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.) 2 – 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 – 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு , தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும் வரை வேகவிட்டால் போதும்.) சுவையான பிரியாணி ரெடி.
அனைத்து பொருட்களை வதக்கும் பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும். கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கும். சிக்கனில் செய்வதினை விட மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும். அரிசியினை நிறைய நேரம் ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள் ஊறினால் போதும்….!
பஸ்மதி அரிசி – 3 கப்
சீரகம் தூள் – 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 2 பெரியது
புதினா + கொத்தமல்லி – 1 கப்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தயிர் – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
உப்பு – தேவையான அளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,
பிரியாணி இலை பச்சை மிளகாய் – 4
உணவில் பெருங்காயத் தூள் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்
அன்றாடம் சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஓர் பொருள் தான் பெருங்காயத் தூள். இந்த பெருங்காயத் தூள் பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் சமையலில் அதனை சேர்த்து வருகிறோம்.
பெருங்காயத் தூளில் ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டீன், ரிபோஃப்ளேவின் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஆன்டி-வைரல் போன்றவையும் உள்ளது.
இப்போது உணவில் பெருங்காயத் தூளை சேர்ப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இனிமேல், அதன் நன்மை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
பெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-பயாடிக், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவற்றினால் சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, வறட்சி இருமல் போன்றவை குணமாகும். மேலும் இது நெஞ்சு சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு பெருங்காயத் தூளில், சுக்குப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மூன்று முறை உட்கொண்டு வாருங்கள்.
பெருங்காயத் தூள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணமாக்க உதவும். அதில் செரிமானமின்மை, வயிற்று பொருமல், வயிற்றுப்புழுக்கள், சீரற்ற குடலியக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே தினமும் சமைக்கும் போது உணவில் தவறாமல் பெருங்காயத் தூளை சேர்த்து வாருங்கள்.
பெருங்காயத் தூளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மையினால், இது அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். உங்களுக்கு தினமும் தலைவலி கடுமையாக வருமாயின், ஒரு டம்ளர் நீரில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை குடித்து வாருங்கள்.
பெருங்காயத் தூள் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்தும் நல்ல பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக இது ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்.
பெருங்காயத் தூள் காது வலியில் இருந்து விடுதலை அளிக்கும். அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் பெருங்காயத் தூளை சேர்த்து, அதனை காதில் சில துளிகள் விட காது வலி குறையும்.
பெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழித்து, ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் பெருங்காயத் தூளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா
திருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.
திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.
சப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.
சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால், முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.
சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.
டீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.
சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர் களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.
மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில் வட மாநிலங் களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு.
கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தேங்காய் லட்டு

பால் - 2 கப்
சீனி - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
பதாம் பருப்பு - 10
பட்டர் - 2 தேக்கரண்டி
நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
மறந்து போன மருத்துவ உணவுகள்
எல்லா வேலைகளுக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால், இயந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கட்டிய கோட்டைகளும் கோயில்களும் இன்றளவும் அவர்களின் உழைப்புக்கு சாட்சிகள். அவர்கள் உடல் பலத்துடன் இருந்ததால் இயந்திரங்கள் தேவைப்படவில்லை. அந்த உடல் பலத்துக்கு முக்கியக் காரணம், அவர்களுடைய உணவுப் பழக்கம். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே…
நெருஞ்சில் கஞ்சி
தேவையானவை: காய்ந்த நெருஞ்சில் – ஒரு கைப்பிடி, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், நொய்யரிசி – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: நெருஞ்சில், சோம்பு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தமான, பயன்படுத்தாத வெள்ளைப் பருத்தித் துணியில் முடிந்துகொள்ளவும்.
நொய்யரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் இந்த மூட்டையைப் போடவும். மூட்டை அவிழ்ந்துவிடாதபடி இறுக்கமாகக் கட்ட வேண்டியது அவசியம். அரிசி நன்றாகக் கொதித்துக் கஞ்சிப் பதத்திற்கு வரும்போது, மூட்டையை வெளியே எடுத்துவிட வேண்டும். அதில் உள்ள சாறு கஞ்சியில் இறங்கி இருக்கும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாட்டினின் அளவை முறைப்படுத்தும். சிறுநீரகச் செயல் இழப்பைத் தடுக்கும். சிறுநீரில் வெளிய£கும் யூரிக் அமிலம், அல்புமின், புரதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இளைத்த உடலைத் தேற்றும்.
கருங்காலி கஷாயம்
தேவையானவை: கருங்காலிக் கட்டை – 100 கிராம், பனை வெல்லம் – 50 கிராம், சுக்கு, மிளகு – தலா 10 கிராம், ஏலக்காய் – 10.
செய்முறை: கருங்காலிக் கட்டையைத் தூள் செய்துகொள்ளவும். சுக்கு, மிளகு, ஏலக்காயை ஒன்று இரண்டாகத் தட்டிக்கொள்ளவும். பனை வெல்லம் தவிர மற்ற அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டும்படி காய்ச்சவும். அதை வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்து மறுபடியும் சிறிது நேரம் காய்ச்சிக் குடிக்கவும்.
மருத்துவப் பயன்: உடல் உறுதி பெறும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த விருத்தியை அதிகப்படுத்தும். இளமையிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தடுக்கும். இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவர சர்க்கரை நோய் வருவதைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள மாவுச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கும் தன்மைகொண்டது.
பூண்டுத் தேன்
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – தலா 2 கைப்பிடி, நறுக்கிய பூண்டு – ஒரு கைப்பிடி, எலுமிச்சைச் சாறு – 200 மி.லி., சுத்தமான தேன் – ஒரு கிலோ
செய்முறை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைச் சாறுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் நன்றாகக் கொதிக்கவைக்கவும். பின்னர் அதில் உள்ள சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்தச் சாறைக் கொதிக்கவைத்து நான்கில் ஒரு பங்கு ஆகும்படி நன்றாகச் சுண்டவிடவும். ஒரு பங்காக வந்ததும் தேனை அதில் ஊற்றி மறுபடியும் காய்ச்சவும். தேன் பதம் வந்ததும் சுத்தமான பாட்டிலில் அடைத்துப் பத்திரப்படுத்தவும். பெரியவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் பூண்டுத் தேனைக் கலந்து, காலை, இரவு குடிக்கலாம். சிறியவர்களுக்கு ஒரு டீஸ்பூன் போதும்.
மருத்துவப் பயன்: உடல் எடையைக் குறைத்து ‘சிக்’கென்று வைக்கும். உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அகற்றும். இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திருக்கும். மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சலைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்கு ஊட்டம் தரும்.
நாயுருவி ஊட்டச்சத்து மாவு
தேவையானவை: நாயுருவி விதை – 100 கிராம், சிவப்பு அரிசி – 100 கிராம், பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, வெள்ளரி விதை, பூசணி விதை, முந்திரிப் பருப்பு, கறுப்பு எள் – தலா 50 கிராம், ஏலக்காய் – 20.
செய்முறை: நாயுருவி விதையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, துணியில் வைத்துக் கசக்கினால், உமியும் விதையும் தனித்தனியாகப் பிரியும். உமியை விட்டுவிட்டு விதையை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும். ஏலக்காய் தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் இள வறுப்பாகத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை கஞ்சி, அடை செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இனிப்பு உருண்டையாகவும் சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்: உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பசியைத் தாங்கும் தன்மை கொண்டது. மூல நோயாளிகளுக்கு இது மிகச் சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உண்டாகக் கூடிய கற்களைக் கரைக்கும் ஆற்றல்கொண்டது. பற்களுக்கு வலிமை தரும்.
பச்சை இறால் வறுவல்
என்னென்ன தேவை?
இறால்- 500கிராம்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
இஞ்சி- 1துண்டு
பூண்டு-5 பல்
முட்டை-1
சோளமாவு- 1ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள்- 1ஸ்பூன்
எப்படி செய்வது?
கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி லைட்டாக அதாவது ஒரு வேக்காடு வேகவைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டிவிடவும். வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். காரத்திற்கு கரம் மசாலா அரை ஸ்பூன், சாட் மசாலா அரை ஸ்பூன், கருப்பு மிளகு அரை ஸ்பூன் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். அதில் பிரெட் தூள் 2ஸ்பூன், காலிப்ளவர் மாவு, தேவையான அளவு உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி 3-5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான பச்சை அறால் வறுவல் தயார்.
KFC சிக்கன் செய்யும் முறை (TYP 2)

ஊற வைக்க:
எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் - ஒரு கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி- ஒன்று (பெரியது)
இஞ்சி - மூன்று அங்குல துண்டு
பூண்டு - ஆறு பல்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கார்ன் ப்ளார் - கால் கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?
ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி – 1 டம்ளர் பீன்ஸ்,கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு – தேவைகேற்ப நெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – 20 கிராம்பு – 6 லவங்கப்பட்டை – 6 ஏலக்காய் – 6 வெள்ளைப் பூண்டு உரித்தது – 6 பல்லு பெரிய தேங்காய் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 2 உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித்தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி