இயற்கை மருத்துவம்

 

பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து; ஏன் தெரியுமா?

எடையைக் குறைக்க வேண்டும் என தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கத் தொடங்கிவிட்டீர்களா? எலுமிச்சை ஜூஸ் செரிமானத்தை அதிகரித்து எடையை குறைக்கும். இது சருமத்திற்கு நன்மை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் உண்மையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. என்ன ஆபத்து என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பலரும் தங்கள் எடையைக் குறைக்க தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கின்றனர். ஆனால், இந்த எலுமிச்சை ஜூஸ் அதிகம் குடித்தால் பங்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து உள்ளது.

எலுமிச்சை ஜூஸ் சுவையைத் தருவதோடு, அதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. அதைவிட அதில, அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. உடலில் உள்ள அனைத்து திசுக்களின் வளர்ச்சி, புதுப்பித்தலுக்கு தேவையான எலுமிச்சை ஜூஸில் உள்ள வைட்டமின் சி முக்கிய காரணியாக உள்ளது. எலுமிச்சை ஜூஸில் நன்மை உள்ளது என்பதற்காக குடிப்பதற்கு முன்னால், கொஞ்சம் யோசியுங்கள். எலுமிச்சை ஜூசைக் அதிகமாக குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

எலுமிச்சை ஜூஸ் அதிகமாகக் குடித்தால் எப்படி ஆபத்து ஏற்படும்?

ஒரு உணவு நல்லது என்று கூறினால், அதற்காக அந்த உணவை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அர்த்தமல்ல. அதைத்தான், தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழி உள்ளது.

“எலுமிச்சை ஜூஸ் குடித்தால் எடை குறையும், நீரிழிவைத் தடுக்கும், அஜீரணத்தைப் போக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால் ஆபத்தை விளைவிக்கும்” என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகிறார்கள்.

எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் 5 பக்க விளைவுகள்

  1. இது பல்லின் எனாமலை அரிக்கும் அல்லது பல் சிதைவை ஏற்படுத்தும்

எலுமிச்சை அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்கள் ஆகும். ஒருவர் எலுமிச்சை சாற்றை அடிக்கடி மற்றும் அதிகமாக உட்கொண்டால், எலுமிச்சையின் அமிலத்தன்மையின் காரணமாக, பல் கூச்சம் ஏற்பட்டு பல் சிதைவு ஏற்படும். பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாகப் படுவதைத் தவிர்க்க ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தலாம். எலுமிச்சை ஜூசை குடித்த பிறகு, பல் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை ஜூஸுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவைத் தடுக்கும்.

  1. தலைவலியை ஏற்படுத்தும் எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோஅமைன் உற்பத்தி செய்வதால் இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். நீங்கள் தீவிர தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். உறுதி செய்யப்பட்ட ஆய்வுகள் இல்லை என்றாலும், சிட்ரஸ் பழங்கள் ஒற்றைத் தலைவலிக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றன.

  1. அதிக அளவில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது வயிற்றுப் பிரச்சனைகளையும் நெஞ்செரிச்சலையும் அதிகரிக்கும்

சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், அமில வீச்சு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  1. வாயில் சதை வளர்ச்சி புண்களை மோசமாக்கும்

இது வாயில் சதை வளர்ச்சியால் ஏற்படும் புண்கள் அல்லது தொற்று இல்லாத வாய் புண்கள், வலி, வாயில் உருவாகும் சிறிய புண்கள். சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன் வாய் புண்கள் முழுமையாக குணமாகும் வரை காத்திருப்பது நல்லது.

  1. எலுமிச்சை தோலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு ஊக்கியாக செயல்படுகிறது

உணவகங்கள் பெரும்பாலும் எலுமிச்சை சார்ந்த பானங்களில் எலுமிச்சை பழத்தை மேலே வைக்கின்றன. இருப்பினும், பல்வேறு ஆய்வுகள் எலுமிச்சையில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக நிரூபிக்கின்றன. ஆபத்துகளைக் குறைக்க, உங்கள் பானத்தில் எலுமிச்சைத் தோல்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிடுவது நல்லது.

அதனால், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நல்லது என்று அளவுக்கு அதிகமாக குடித்து பக்கவிளைவுகளுக்கு ஆளாகாதீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

source https://tamil.indianexpress.com/lifestyle/lemon-water-too-much-drinking-ladies-can-be-harmful-side-effects-452735/ 


புற்று நோய், எயிட்ஸ் போன்ற நோயில் இருந்து நம்மை பாதுகாக்க இஸ்லாம் சொல்லும் அழகிய வழிமுறை


மூலிகை மருத்துவம்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
பல் வலி💥
👍👍👍👍👍
இயற்கை மூலப்பொருட்கள்: பச்சை மிளகாய்-3,பனங்கல்கண்டு-50கிராம்.
உபயோகிக்கும் விதம்: பச்சை மிளகாயை நன்றாக அரைக்கவும்,பனங்கல்கண்டு 50கிராம் நன்றாக பொடி செய்து,ஒரு பட்டாணி அளவிற்கு பச்சை மிளகாயை எடுத்து பனங்கல்கண்டு பொடியில் உருட்டி சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைக்கவும்,10நிமிடத்திற்கு ஒரு முறை இதை போல் வைக்க குணமாகும்.
இயற்கை மூலப்பொருட்கள்: சுக்கு-10கிராம்,மிளகு-10கிராம்,கிராம்பு-10கிராம்,கடுக்காய்-100கிராம்,உப்பு-10கிராம். உபயோகிக்கும் விதம்: இவைகளை ஒன்றாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.இதிலிருந்து 1கிராம் அளவிற்கு எடுத்து பல் துலக்க வேண்டும்.
நன்றி.திரு.அரி
சிறுநீரக கற்களை கரைக்கும் நெரிஞ்சில்..!
ஈரலை பலப்படுத்த கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கவல்லதும், உயிரணுக்களை அதிகரிக்க செய்வதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டதுமான நெறிஞ்சில் தரையோடு படர்ந்து காணப்படும் செடி நெறிஞ்சில். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்கள் சிறிதாக இருக்கும்.
சிறு நெறிஞ்சில், பெரு நெறிஞ்சில், யானை நெறிஞ்சில் என 3 வகைப்படும். இவைகள் அனைத்தும் ஒரே மருத்துவ குணங்களை கொண்டவை. சிறுநீரகம், பித்தபையில் கற்கள் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நெறிஞ்சில் மருந்தாக விளங்குகிறது. நெறிஞ்சில் உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. அழற்சியை போக்க கூடியது.
ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். சிறு நெறிஞ்சில் செடியை துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது வெட்டி வேர், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக, பித்தப்பை கற்கள் கரைந்து வெளியேறும். கற்கள் வராமல் தடுக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை குணமாகும்.
நெறிஞ்சில் செடியின் பொடி மற்றும் நெறிஞ்சில் முள் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி ஆண் மலட்டு தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெறிஞ்சில் முள் பொடியுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கவும்.
இது, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாட்டை நீக்குகிறது. உயிரணு குறைபாடுள்ளவர்கள் 3 மாதம் தொடர்ந்து எடுத்துவர உயிரணு அதிகரிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. நெறிஞ்சிலை பயன்படுத்தி வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். நெறிஞ்சிலை பசையாக அரைத்து, அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.
இதனுடன் புளிப்பில்லாத கெட்டித் தயிர் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்போக்கு சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். உஷ்ணம் சம்மந்தமான பிரச்னைகள் சரியாகும்.உடல் சோர்வை போக்குவதற்கான மருந்து குறித்து பார்க்கலாம். அரை தேக்கரண்டி அளவுக்கு வெந்தயத்தை எடுத்து வறுத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் தேன் அல்லது பால், இனிப்பு சேர்த்து சாப்பிடும்போது உடல் பலம் பெறுகிறது. இதனால் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கிறது.
தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள்
இப்படி இதனை தினமும் சாப்பிட்டு வந்ததாலோ என்னவோ, நோய்கள் அவர்களை அண்டவே இல்லை எனலாம். அந்த அளவில் வெந்தயம் உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி வந்தது. அதிலும் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால், இதனை கோடையில் தினமும் சாப்பிட்டால் இன்னும் நல்லது.
சர்க்கரை நோய் :-
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்
மாரடைப்பு :-
வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
புற்றுநோய் :-
வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் . எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
மாதவிடாய் பிடிப்புகள் :-
வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.
உடல் சூடு :-
கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.
தாய்ப்பால் உற்பத்தி :-
பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வதனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு வெந்தயத்தில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் தான் முக்கிய காரணம்.
கொலஸ்ட்ரால் குறையும் :-
வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும் . இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
ஆர்த்ரிடிஸ் :-
இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி. இது கடுமையான வலியுடன், வீக்கத்துடனும் காணப்படும். ஆனால் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதுடன் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்கும்.
செரிமானம் :-
செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
எடை குறையும் :-
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
சிறுநீரக செயல்பாடுகள் :-
வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
கல்லீரல் :-
கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.
புற்றுநோயும் கோதுமை புல் சாறும்...!
இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே.
தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.
உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
சத்துக்கள் நிறைந்தது
பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எடையைக் குறைக்கும்
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
தலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..!
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்கனால் தலைவலி ஏற்படிகின்றது காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது வெகு நெரம் கம்பியூட்டரை உற்றுப் பார்ப்பது, சில மணங்களை நுகர்வது நித்திரை இன்மை மன அழுத்தங்கள் கூடுதலான உடல் சோர்வு, பசி முதலான பிரச்சனைகளினால் தலைவலி ஏற்படுகின்றது. இதற்கு தீர்வு தான் என்ன என்று புலம்புவர்களும் பலர் உண்டு. உங்களுக்காக சில இயற்கை மருத்துவக் குறிப்புகள்:
துளசி இலையுடன் சிறிது சுக்கும் கறுவா பட்டையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி குணமாகும்.
மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அகத்தி இலைச் சாற்றை எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
மஞ்சளை விளக்கெண்ணையில் தொட்டு நெருப்பில் சுட்டு அதன் புகைகை நுகர்ந்தால் தலைவலி நீங்கும்.
நெல்லிக்காய் சாற்றுடன் சிறிதளவு உப்புக் கலந்து அதனை மூன்று நாட்கள் வெய்யிலில் காயவைத்து பின்னர் தேங்காய் எண்ணையைக் கொதிக்க வைத்து அதனுடன் காயவைத்த நெல்லிச் சாற்றைக் கலந்து நுகர்ந்தால் தலைவலி குணமாகும்.
பூண்டை நன்கு இடித்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும் அது மட்டும் அல்லாமல் சிறிய துண்டு சுக்கையும் அதனுடன் சிறிய பெருங்காயத் துண்டையும் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் நல்ல நீர்வு கிடைக்கும்.
சூடான பாலில் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும் ஏனென்றால் வைட்டமிங்கள் நிறைந்த பழங்களோ அல்லது காய்கறிகளோ தலைவலியைக் குணமாக்கும் தன்மை கொண்டவை.
தலைவலி குணமாக பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து தூளாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகி விடும்.
கண்களுக்கு நன்கு ஓய்வு கொடுத்தாலே பாதித் தலைவலி தீர்ந்து விடும்.
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான் (Cardiospermum halicacabum)
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.
இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.
இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.
முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.
குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.
சுகப்பிரசவம் ஆக:
முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:
ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.
பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.
சுக பேதிக்கு :
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.
முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.
சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? அவற்றை சரி செய்ய எளிய இயற்கை மருத்துவங்கள் :-
கை விரல்கள் போலல்லாமல் கால் நகங்கள் நிறைய பேருக்கு அழுக்கடைந்து, உடைந்தும் சொத்தையாகவும் இருக்கும்.
இது சரியாக பராமரிப்பு இல்லாததால் ஏற்படுகின்றன. இறந்த செல்கள் நகங்களுக்கு அடியில் தங்கி நகங்களில் ரத்த ஓட்டம் குறைந்து சொத்தையாகின்றன
நகங்கள் பழுதடைந்தால், வலி ஏற்படும். சாக்ஸ் ஷூ அல்லது சாதரண செருப்பே போடமுடியாதபடி இருக்கும். நகங்கள் பழுப்பாக அல்லது மஞ்சளாக காணப்படும்.
ஆகவே இதனை சிறிது நேரம் எடுத்துக் கொண்டு தினமும் நகங்களை பராமரித்தால், நகங்கள் உயிர் பெறும். இங்கே உங்கள் நகங்களை சரி செய்ய சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை பயன்ப்படுத்திப் பாருங்கள்.
தேயிலை மர எண்ணெய் :-
இரவு தூங்குவதற்கு முன் தேயிலை மர எண்ணெயில் பஞ்சை நனைத்து நகங்களை சுத்தம் செய்யுங்கள். தினமும் செய்து வர, இறந்த செல்கள் அகன்று ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நகங்கள் புதுபிக்கப்படும்.
மஞ்சள் :-
தினமும் குளிப்பதற்கு முன், மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்து, நகங்களில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். இது நல்ல பலனைத் தரும். நகங்களில் ஏற்படும் தொற்றினை இது எதிர்க்கும்.
லாவெண்டர் எண்ணெய் :-
லாவெண்டர் எண்ணையில் சிறிது தேயிலை மர எண்ணெயை கலந்து, அதனுள் சில துளி ஆலிவ் எண்ணெயை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். இந்த எண்ணெயைக் கொண்டு நகத்தில் தடவி மசாஜ் செய்தால், நாளடைவில் சொத்தை மறைந்து நல்ல நகங்கள் உருவாகும்.
எலுமிச்சை சாறு :-
எலுமிச்சை சாறினை எடுத்து, ஒரு பஞ்சினால் எடுத்து, அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும்.
வேப்பிலை :-
வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து, ஒரு கப் அளவுள்ள நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும், வடிகட்டி, அந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த நீரில் சிறிது பூண்டு எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெயை ஊற்றி ,அனத கலவையை நகங்களில் தடவி வந்தால், சொத்தை மறைந்து, நகங்கள் பலம் பெறும்.
சாமந்தி :-
சாமந்தி பூக்கள் மருத்துவ குணங்கள் பெற்றுள்ளவை. சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்க்கும். சாமந்தி பூக்களை தனித் தனி இதழ்களாக பிரித்து, சுடு நீரில் போட்டு மூடி வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த நீரில் கால்களை அமிழ்த்துங்கள். இவை நகங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
அதிமதுரம் :-
அதி மதுரத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் நீர் வெதுவெதுப்பானவுடன் அந்த நீரில் பஞ்சை நனைத்து, மெதுவாய் நகங்கள் மீது தடவவும். இது நகத்தில் தங்கும் கிருமிகளை அழித்து, நகங்களை பாதுகாக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 1 பெரியது
கிரீன் ஆப்பிள் / ரெட் ஆப்பிள் – 1
இஞ்சி – 2 செ.மீ., துண்டு,
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
ka
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பாகற்காயை எடுத்துக் கொள்ளவும்
இரு முனைகளையும் வெட்டி எடுத்து விடவும்
பாதியாக வெட்டவும்
நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
விதைகளை நீக்கவும்
சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
ஒரு கிண்ணத்தில் அதை எடுத்துக் கொள்ளவும்
ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்
கைகளால் அதனை அழுத்தி பாகற்காயை மென்மையாக்கும்
பின்பு அதனை 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும்
ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும்
அதை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
மீண்டும் அவற்றை பாதியாக வெட்டவும்
விதைகளை நீக்கவும்
பின்பு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
இப்போது பாகற்காய் மென்மையாகி விட்டது
பாகற்காயை எடுத்து நன்றாக கசக்கி அதன் சாறினை நீக்கி விடவும்
பிழியப்பட்ட பாகற்காயினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் ஆப்பிள் சேர்க்கவும்
பின்பு இஞ்சி சேர்க்கவும்
பச்சை மிளகாய்சேர்க்கவும
அதனை மென்மையான விழுதாக அரைக்கவும்
பின்பு அதனை வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்
பின்பு குளிர்ந்த நீர் சேர்க்கவும்
பின்பு அதனை டம்ளரில் விட்டு குடிக்கலாம்
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!
பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் வெள்ளைபடுதல், மலச்சிக்கல், மாதவிடயாயின் போது ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பெண்களின் தசைகள் இறுக்கமாக எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொடுக்கவல்ல
எள்ளு உருண்டை;
செய்முறை!
*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.
*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).
*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.
*இரண்டு மணி பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார்.
*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.
தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும் ஜூஸ் - இயற்கை மருத்துவம்
ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான் . குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனையால் தான் இவ்வளவு கஷ்டம் என்று தெரிவதில்லை.
தைராய்டு என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது
இந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலின் மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும். தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் ஏற்படும்.
தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் அற்புத ஜூஸ்!
தைராய்டு பிரச்சனை வகைகள் கழுத்தின் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவை:
* ஹைப்பர் தைராய்டு
* ஹைப்போ தைராய்டு
ஹைப்பர் தைராய்டு :-
ஹைப்பர் தைராய்டு என்னும் நிலை தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுவதாகும்.
ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் :-
ஹைப்பர் தைராய்டு ஒருவருக்கு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அவை பெரிய கண்கள், அதிகமாக வியர்வை வெளியேறுவது, மிகுதியான சோர்வு, திடீர் உடல் எடை குறைவு, கவனச்சிதறல், வயிற்றுப்போக்கு போன்றவை.
ஹைப்போ தைராய்டு :-
தைராய்டு சுரப்பி போதிய அளவின்றி குறைவான அளவில் தைராய்டு ஹைர்மோன்களை சுரந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டு என்று அழைப்பர்.
ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் முகம் வீங்கி காணப்படுவது, உடல் பலவீனம், உடல் சோர்வு, மலச்சிக்கல், காரணமின்றி திடீரென்று உடல் பருமனடைவது, சரும வறட்சி போன்றவை ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
இப்போது தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :-
சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்
தண்ணீர் - 8 டம்ளர்
இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்
எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்
செய்முறை :-
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.
உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் :-
இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.
நாயுருவி !!!
சிறுநீர் சிக்கல்களுக்கு..செலவில்லாதத் தீர்வு...!
வீதியெங்கும் நாதியற்றுக் கிடக்கும் நாயுருவி பற்றி அறிந்து கொள்வோம்...
கடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு 'கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி... முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், மனிதர்களின் உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் இதன் விதைகள், வெவ்வேறு இடங்களில் விழுந்து பரவுகின்றன.
இயற்கைப் பற்பசை..!
'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?, எலுமிச்சை இருக்கா?’ என்று கேட்டு பல பற் பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இந்த பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும். கடுமையான பல்வலி இருப்பவர்கள்... மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடி விடும்.
'தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதில் பல் துலக்கினால்... முகம் பிரகாசமடையும். பேச்சு தெளிவாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து அகலும். ஆனால், இந்த நாட்களில் டீ, காபி, புகை, புலால் கூடாது என்கிறது’ சித்த மருத்துவம்.
யானை பலம் கிடைக்கும்!
நாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால், பசியே எடுக்காது. ஒரு வாரம் ஆனாலும், உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும். அத்துடன் உடம்பு இரும்பு போல உறுதியாகும். 50 கிராம் நாயுருவி அரிசியை உண்டால், இரண்டுவேளை பசியைத் தாங்கலாம். இந்தச் சோற்றை உண்டு பசியே எடுக்காவிட்டால், மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்து தண்ணீரில் காய்ச்சிக் குடித்தால் பசியெடுக்கும். மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து, ஒன்றாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கஞ்சி போல செய்து தினமும் உண்டு வந்தால்... யானை பலத்தையொத்த அபார உடல் திறனும், வனப்பும் கிடைக்கும்.
அட்டகர்ம மூலிகை!
காடுகளில் சுற்றித் திரியும் சித்தர்கள், இதன் வேர்களில் பல் துலக்கி, இதன் அரிசியை உண்டு பல நாட்கள் பசியில்லாமல் திரிவார்கள் என்பதால்... இதற்கு 'மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை 'அட்டகர்ம மூலிகை’ எனக் கொண் டாடுகிறார்கள், சித்தர்கள். நாயுருவியில் ஆண், பெண் இரண்டும் உண்டு. பச்சை நிற இலை, தண்டுகளை உடையது, ஆண் நாயுருவி எனவும்; சிவப்பு நிறத் தண்டு, பாகங்களைக் கொண்டது பெண் நாயுருவி எனவும் அழைக்கப்படுகிறது. இதை 'செந்நாயுருவி’ என்றும் அழைப்பார்கள். இந்த செந்நாயுருவியில்தான் மருத்துவ குணங் கள் அதிகம்.
மனநோய்க்கு மருந்து!
''இதன் வேர் மிகவும் வசியத்துவம் மிக்கது. நமது முன்னோர்கள், நாயுருவி வேரை வசிய மை தயாரிக்க, பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி... தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும்'' என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.
கண்ணாடியைக் கடிக்கலாம்!
100 கிராம் நாயுருவி இலையை, 500 மில்லி தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து... எண்ணெயில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து, மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறாதப் புண்கள், வெட்டுக் காயங்கள், சீழ்வடியும் புண்களின் மீது பூசி வந்தால்... உடனடி பலன் கிடைக்கும். இதன் இலைக்கு கண்ணாடியை அறுக்கும் தன்மையும் உண்டு. சித்துவேலைகள் செய்பவர்கள், இதன் இலையை மென்று விழுங்கி, தாடையில் கொஞ்சத்தை அடக்கிக் கொண்டு, கண்ணாடிகளைக் கடித்து துப்புவார்கள். ஆனால், இதைச் செய்ய முறையான பயிற்சி வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சிறுநீர் பிரச்னைக்கான தீர்வு!
சிறுநீர் சிக்கலுக்கும் செலவில்லாதத் தீர்வு நாயுருவி. கதிர்விடாத இளம்செடியின் இலையை இடித்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி... 3 மில்லி அளவு தினமும் மூன்றுவேளை குடித்து, அத்துடன் பால் அருந்தி வந்தால் தடைபட்ட சிறுநீர் பிரியும். சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். நாயுருவி இலை, காராமணி இரண்டையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து, நீர்கட்டுள்ளவர்களுக்கு தொப்புள் மீது பற்று போட்டால்... நீர்கட்டு நீங்கும். இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து, சமைத்து வாரம் இரு முறை சாப்பிட்டால்... நுரையீரலிலுள்ள சளி வெளியேறும். இருமல் குறையும். இலையுடன், சம அளவு துளசி இலை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு, தினமும் இருவேளை கொடுத்து வந்தால், வண்டு, பூச்சிக்கடி குணமாகும்'' என நாயுருவியைக் கொண்டாடு கிறது, சித்த மருத்துவம்.
மலச்சிக்கல், செரியாமை, பால்வினை நோய்கள், தோல் அரிப்பு, மூலம், தொழுநோய்... என மனித குலத்தின் நோய்களைச் செலவில்லாமல் விரட்டும் மருந்துக்கடையான நாயுருவி, அனைவரின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய ஒன்று.
புற்று நோயை குணமாக்கும் மஞ்சள்
புற்றுநோயை அழிக்கும் செல்கள், மஞ்சளில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.மஞ்சளில் இருக்கும் “குர்குமின்” என்ற வேதியல் பொருள், புற்று நோய் செல்களை அழிக்கிறது என்பதை, புதுச்சேரி பல்கலைக்கழக இணை பேராசிரியர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் பீட்டர் பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, பெருங்குடல் புற்று நோயை குணமாக்கும் சக்தி, மஞ்சளில் அதிகம் இருப்பது இப்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோயை எதிர்க்கும் கேரட்
கேரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் கேரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Carrot இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போதுகிடைத்திருக்கிறது.காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு என்று பெயர். இந்த நோயை ஒழிக்க எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத் தெரிந்த ஆரஞ்சுநிற காரட்டுகள் பதினெட்டு வாரங்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவிற்கு தேவையான அளவில் சேர்க்கப்பட்ட காரட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது குழுவிற்குன் அளவு அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவில் புற்றுநோய்க்கட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது அறியப்பட்டது.
நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிர்ஸ்டன் ப்ராண்ட் என்பவர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த எவ்வளவு தேவை என்பதை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்டர் ப்ராண்ட் கூறுகிறார். மேலும் காய்கறிகளைப் பயிரிடும்போதே மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.
பச்சைக்கேரட், சமைக்கப்பட்ட கேரட், கேரட்சாறு இவற்றை உணவில் சேர்க்கும்போது அவை புற்றுநோய்க்கட்டிகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் தொடருகின்றன.ன் அளவு அதிகரிக்கும்போது நச்சுத்தன்மையை விளைவிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால் ஒரே சமயத்தில் 400 கிலோ கேரட்டை சாப்பிடுவதால் மட்டுமே ஆபத்தான அளவிற்கு நச்சுத்தன்மையை உண்டாக்கப்படுமாம். என்னும் நச்சு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குள் தூண்டிவிடுகிறது என்பதுமட்டுமே இதுவரையிலான கண்டுபிடிப்பு.
நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.
எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.
சித்த மருந்து..
அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.
அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.
மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.
எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்
உண்ணும் முறை ; -
காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.
நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.
பத்தியம் ; -
குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.
வெங்காயப் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவ குணங்கள்..!
சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.
குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.
இஞ்சியின் மருத்துவக் குணங்கள்!
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
கடுமையான ஒற்றை தலைவலி நீங்க
One Sided Headache
அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.
இந்த தலை வலி நீங்க...
சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும். பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம்.
அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள்.
ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போம்.
கீரைகள்
கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.
மீன்
கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.
பால்
பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.
ஆளி
விதை இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.
காபி
உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.
ரெட்
ஒயின் தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.
தினை (millet)
முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.
ப்ராக்கோலி
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.
இஞ்சி
ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.
முளை கட்டிய தானிய உணவு :
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.
எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.
இப்படிபட்ட இயற்கையான நவதானியங்களினால் செய்யப்பட்ட நவதானிய உணவு பொருள்கள்
எங்களிடம் சொந்த தயரிப்பில் மொத்தமாக கிடைக்கும்....
நவதாணிய உணவு பொருள்கள்
💐💐💐💐💐💐💐
1) பிஸ்கெட்:
ராகி
கம்பு
சாமை
வரகு
குதிரை வாலி
ஓட்ஸ்
2) நூடுல்ஸ்:
ராகி
கம்பு
சாமை
சோயா
மல்டிமில்லட்
கீரைமில்லட்
3) தோசை மிக்ஸ்
ராகி
கம்பு
சோளம்
சாமை
வறட்சியைக் குறைக்க வேண்டுமா?
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது
அவசியம்.
* வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால்தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு.
* இவற்றை விட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. செரிமானம் தீவிரமாகும்.
* பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விஷேச ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்ட வெள்ளரி மிகவும் உதவும்.
* வெள்ளரிப்பிஞ்சை உட்கொண்டால் புகைப்பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேளை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது.
* நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
* கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் சிறியதாக அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திடுந்தால் கண் குளிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது.

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா?
----------------------------------------------------
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான உணவுப் பொருட்களை உட்கொள்வதோடு, அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கலந்த நீரைக் குடித்து வருவதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்நீரைக் குடித்தால், வேறு சில உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
5 எலுமிச்சை, சிறிது பூண்டு மற்றும் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவைகளை துண்டுகளாக்கிக் கொண்டு, 2 லிட்டர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதிக்கும் போது, அதனை வடிகட்டி சேகரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நீரைக் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீராகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீரானால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.
இந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற்றப்பட்டு, அடிக்கடி சளி, இருமல் போன்றவை வருவது தடுக்கப்படும்.
இதயத் தமனிகளில் அடைப்பு ஏதேனும் இருந்தால், அதனை இந்த தண்ணீர் சரிசெய்யும். மேலும் இந்த கலவையை தினமும் குடித்து வந்தால், இரத்த நாளங்களில் இருக்கும் வேறு சில பிரச்சனைகளும் நீங்கும்.
தினமும் காலையில் இந்நீரை ஒரு டம்ளர் குடித்து வந்தால், இதுவரை உடல் சோர்வை சந்தித்த நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
முக்கியமாக இந்நீர் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்து உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
இந்நீரில் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும் பொருள் நிறைந்திருப்பதோடு, இதனை அன்றாடம் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!!!
நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து
இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்
மருந்து ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்
மருந்து இரண்டு
பாகற் காய் கூட்டு
மிதி பாகல் அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
மருந்து மூன்று
அகத்திக் கீரை பூண்டு சாறு
அகத்திக் கீரை சாறு .. ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு. .... .. ஒரு தேக்கரண்டி
தேன் ....... தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்
மருந்து நான்கு
வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மறுத்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது
மருந்து ஐந்து
வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங் கொழுந்து கறிவேப்பிலை பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளிஎறம்
மருந்து ஆறு
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்
மருந்து ஏழு
கீரை சூப்
சின்ன வெங்காயம் - இரண்டு
நல்ல மிளகு - இரண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்
சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.
மருந்து எட்டு
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
மருந்து ஒன்பது

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்
மருந்து பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
மருந்து பதினொன்று
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.
தகவல்;- நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்
சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்
பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.
சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.
ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.
அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.
அதீத தாகம்
சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
மங்கலான கண் பார்வை
அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.
எடை குறைதல்
இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.
சோர்வு
சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.
கைகள் மரத்துப் போதல்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.
சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்
இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.
சரும வறட்சி
புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.
எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்
நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.
வீக்கமடைந்த ஈறுகள்
கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
முருங்கை மகத்துவம்..!
முருங்கை வேரின் மருத்துவ குணம்
முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.
முருங்கை பட்டை
முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்
முருங்கை இலை காம்பு
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .
முருங்கை விதை
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்க வேண்டும் , பிறகு அதை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும் , ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் . உடல் வலுவடையும்
முருங்கை காய்
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது
முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
முருங்கை பிஞ்சு
முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.
முருங்கை பூ
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .
முருங்கை கீரை
முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்.
முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள் - தெரிந்துகொள்வோம்
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்போது முதுகு வலியை சரிசெய்வற்கான சில எளிய சிகிச்சைகள் முறைகளை பார்க்கலாம்.
* உங்களுக்கு முதுகு வலி கடுமையாக இருக்கும் போது, குப்புறப்படுத்து, கைகளை உடலை ஒட்டி வைத்துக் கொண்டு, தலையாணையை ஒரு பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையால் முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.
* நாற்காலியில் உட்காரும் போது சாய்ந்து உட்காராமல், தோள்பட்டை நேராக இருக்கும் வண்ணம் நிமிர்ந்து பார்க்கும் படியான நிலையில் அமர வேண்டும். நாற்காலியில் அமரும் போது, கால் மேல் கால் போட்டு உட்கார்வதைத் தவிர்த்து, கால்கள் 90 டிகிரியில் இருக்கும் வண்ணம் அமருங்கள். மேலும் இப்படி உட்காரும் போது, முதுகுத்தண்டுவடம் நேராகும். இதனால் முதுகு வலி வருவதைத் தடுக்கலாம்.
* தினமும் ப்ளான்க் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம் முதுகு வலியைத் தடுக்கலாம். அதற்கு தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் பெருவிரலை தரையில் ஊற்றி, உடலை வளைக்காமல் நேராக மேலே தூக்க வேண்டும். இப்பயிற்சியை செய்து வந்தால், முதுகு வலி நீங்குவதோடு, அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.
* எவ்வளவு வேலை இருந்தாலும், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்திடுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறு வாக்கிங் மேற்கொள்ளுங்கள். இதனால் முதுகு வலியைத் தவிர்க்கலாம்.
அலர்ஜி-தடுப்பதெப்படி?
அலர்ஜி இருப்பவர்களுக்கு சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
அறிகுறிகள்
* உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு கூட ஏற்படும்.
* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.
* குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி ஏற்படும்.
* அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
* சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
* சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.
* அமெரிக்காவில் 30-ல் ஒருவருக்கு அலர்ஜி இருக்கிறது. பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
* அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.
* வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்.
* முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
தடுப்பது எப்படி?
*அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.
* வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல் மேற்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.
* அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.
* நண்பர்கள், விருந்தினர் வீடுகளில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உங்களுக்கான உணவில் தவிர்க்க வேண்டியவை பற்றி கூறிவிடுங்கள். நீங்களாகவே தயார் செய்து எடுத்துச் சென்ற குழம்பை பயன்படுத்துவதும் சிறந்த வழிமுறை தான்.
* பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அத்தி
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
மருத்துவம்
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
தயிரின் அற்புதங்கள்
''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'
நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'
நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.
உணவைக் குறைத்து உடலை அழகாக்க..
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:
* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பழங்கள் சாப்பிடும் முறை:
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !
*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பார்வைத்திறனை மேம்படுத்தும் அத்தி !
50 கிராமில் 37 கலோரிகள் உள்ளன.
தினசரி நார்சத்துத் தேவையில் 6 சதவிகிதம் இதில் இருந்து கிடைக்கும்.
பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
மெனோபாஸைக் கடந்த பெண்களுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தினமும் மூன்று நான்கு அத்தி சாப்பிட்டுவந்தால், உடல் பொலிவுபெறும். முதுமையைத் தாமதப்படுத்தும்.
கெரோட்டினாய்டு உள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும்.
ஆக்ஸிலேட் நிறைந்துள்ளது, சிறுநீரகக் கல் நீங்க உதவும். தினமும் ஆறு அத்திகளை ஒரு கப் நீரில் ஊறவைத்து, மறுநாள் பருகிவரலாம்.
கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு நல்லது.
தினமும் இரண்டு மூன்று அத்தியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
வைட்டமின் சி நிறைந்துள்ளதால், தொண்டைப்புண்கள், குடல்புண்களை ஆற்றும்.
முடி அடர்த்தியாக வளர
பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.
மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:
1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.
8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.
9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

30 நாட்கள் தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து உண்டு வந்தால் பெறும் நன்மைக

downloadநமது சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் பலவன நமது உடலை அன்றாடம் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. இதில் இஞ்சி, மஞ்சள், மிளகு போன்ற சிலவன பண்டையக் காலம் முதலே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள்!!! இஞ்சி, மிளகு, மஞ்சள் இந்த மூன்றுமே அருமருந்து என கூறலாம். அதிலும் இஞ்சி உடலில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் தன்மை கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், இதய நலன், நீரிழிவு, இரத்த சர்க்கரை அளவு, செரிமானம், மூளையின் செயற்திறன் என தலை முதல் கால் வரை அனைத்து உடல் பாகங்களுக்கும் பலனளிக்கிறது இஞ்சி. உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!! இந்த அருபெருமை கொண்ட இஞ்சியை ஒரு மாத காலம் தொடர்ந்து அன்றாட உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் உண்டாகும் ஆரோக்கிய மாற்றங்கள் குறித்து இனிக் காணலாம்…. செரிமானம் செரிமானம் மற்றும் வாயுக் குழாய் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணமாக திகழ்கிறது இஞ்சி. 30 நாட்கள் தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து உண்டு வருவதால் உங்கள் உடலில் உள்ள ஜி.ஐ குழாய் சீராக நலன் பெற்று புத்துணர்ச்சி அடையும். வெறும் 1.2 கிராம் அளவு இஞ்சியை ஒரு மாத காலம் உட்கொண்டு வந்தாலே 50% செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண முடியும். குமட்டல் குமட்டல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சியை அப்படியே சாப்பிடுவது குமட்டலை தடுக்கும். மேலும், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உண்டாகும் காலை நேர உடல் சோர்வு அல்லது உடல்நலம் குன்றுதல் போன்றவற்றை சரி செய்ய தினமும் 1.5 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து வந்தாலே போதுமானது. வலிநிவாரணி ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அன்றாட உணவில் இஞ்சியை சிறிதளவு சேர்த்துக் உட்கொள்வது தசை வலிகளை 25% அளவு குறைக்க செய்கிறது என கண்டறியப்பட்டது. மேலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியை குறைக்கவும் கூட இஞ்சி பயனளிக்கிறது. அழற்சி மூட்டு பகுதிகளில் அழற்சி, மூட்டு சார்ந்த உடல்நலக் குறைபாடுகள், மூட்டு வலி போன்றவற்றில் இருந்து வெளிவர, சிறந்த நிவாரணம் பெற இஞ்சி சிறந்த மூலப்பொருள் ஆகும். கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் 45 நாட்கள் அன்றாட உணவு முறையில் 3 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து உண்டு வந்தால் கொலஸ்ட்ராலை கணிசமான அளவு குறைக்க முடியும். மேலும், கொலஸ்ட்ரால் காரணமாக அதிகரிக்கும் இதய கோளாறுகளையும் இது குறைக்க பயனளிக்கிறது. புற்றுநோய் இஞ்சியில் இருக்கும் 6- Gingerol எனும் மூலப்பொருள் புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகும். தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்கும்
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் ப...ித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்... "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.
உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

சிறுநீரகம் (Kidneys)
சிறுநீரகக் கல் கரையனுமா இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க....
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.
எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!
சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.
தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.
தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.
காளானின் மருத்துவ குணம் ('மஷ்ரூம்')..!
மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.
இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.
காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.
காளான் வகைகள்:
இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
காளான் மருத்துவ பயன்கள்:
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
குறிப்பு :
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.
காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
நரம்புத் தளர்ச்சிக்கு மருத்துவம்
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.
எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.
மருந்து..
அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.
அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.
மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.
எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்
உண்ணும் முறை ; -
காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.
நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.
பத்தியம் ; -
குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும்.

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் - இயற்கை மருத்துவம்
தேவையான பொருட்கள்:
* செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
* செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள்
* தேங்காய் எண்ணெய் – 1 கப்
* துளசி – 5 இலைகள்
* வெந்தயம் – சிறிதளவு
செய்முறை:-
1. செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3. பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

குடலைக் காக்கும் மருத்துவம்
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்.
செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் யாவை?
உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.
செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?
வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச் சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.
குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?
உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
வாயுத் தொந்தரவு என்றால் என்ன?
சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.
வயிற்று வலி வருவது ஏன்?
வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.
குடல் புண் வருவது எப்படி?
உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.
குடல் புண்ணால் ஆபத்தா?
இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க சித்தர்கள் சொன்ன யோசனைகள் என்ன?
மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்ற அளவிலே இருக்கவேண்டும் என்று சித்தர்கள் சொல்லிருக்கிறார்கள். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நாம் இப்போது சித்தர்கள் கூறிய முறையைக் கடைப்பிடிப்பதில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தில் குடல் புண்ணுக்கு மருந்து என்ன?
சித்த மருத்துவத்தில் குடல் புண், குன்மம் என்று அழைக்கப்படுகிறது. குடல் புண்ணைக் குணப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் இருக்கின்றன. திரிபலா சூரணம், திரிபலாக் கற்பம், ஏலாதி சூரணம், நன்னாரி சூரணம், சீரக சூரணம், சீரண சஞ்சீவி சூரணம், தயிர் சுண்டிச் சூரணம், சிருங்கிப் பேராதி சூரணம் ஆகியவை உள்ளன. இது தவிர நன்னாரி லேகியம், இஞ்சி லேகியம், இஞ்சி ரசாயனம், அதிர்ஷட ரசாயனம் போன்ற லேகியங்களும், மிளகு தக்காளி எண்ணெய் போன்ற எண்ணெய்களும், அயச் செந்தூரம், சங்கு பற்பம், சிலாச் சத்து பற்பம் போன்ற பற்ப செந்தூரங்களும் பெரிதும் பயன்படுகின்றன.
குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?
புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிட வேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.
மருந்தில்லா மருத்துவம்..!
முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன.
இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறலாம். இடது காலில் இதயத்திற்கான புள்ளியும் ஏனையை பகுதிகளுக்குமான புள்ளிகளும் காணப்படுகின்றன.
சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இத்தகைய புள்ளிகளிலேயே ஊசி குத்தப்படுகிறது, சிறிய கற்கள் நிறைந்த தரையில் வெறுங்காலுடன் நடப்பதும் நல்ல பலனைத் தரும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் - இயற்கை மருத்துவம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.
* கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
* செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
* கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
* கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
* சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
* பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
* அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
* தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
* மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
* கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
* முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
* இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. 
17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும். 
சைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்!
வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?
* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.
* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.
* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.
சிறந்த மருத்துவக் குறிப்புகள்
உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.
ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.
முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.
தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.
சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.
புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.
உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.
கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.
தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.
நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.
அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.
கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.
முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.
செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.
கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.
எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.
சீரகத்தின் பயன்கள்
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க ¬வத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்றுதின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்¬ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம்மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமு¬ற தடுப்புமுறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்தநோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்தஅழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்
.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாகசாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிதுசீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும்வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்துசாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது.
அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம்.
அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது.
மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.
எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.
தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?
பாமாயில்
1 கிராம் பாமாயிலில், 800 µg அல்லது mcg பீட்டா கேரட்டின் (விட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட் கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.
சூரியகாந்தி எண்ணெய்
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.
கடலை எண்ணெய்
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில் அளவுக்குக் கெடுதலானது அல்ல.
தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோம், அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.
நல்லெண்ணெய்
இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை கொண்டது.
ஆலிவ் ஆயில்
இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
கடுகு எண்ணெய்
ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது. கடுமையான வாசம் மற்றும் காரணமாக இருக்கும்.
மூல நோய்க்கு
நத்தை பற்பம் 20 gm,
ஜாதிக்காய் 20 gm,
கசகசா 50 gm,
கருப்பட்டி 300 gm,
தேன் 100 gm,
பால் 100 ml,
நெய் 100 gm ,
கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி கரைத்து வடிகட்டி,எடுத்து கொள்ளவும்.ஜாதிக்காய் கசகசா இவ்விரண்டையும்,தனி தனியே பால் விட்டு அரைத்து கொள்ளவும்.பிறகு இதை கருப்பட்டி பாகில் கலந்து அடுப்பில் எரிக்கவும்,நத்தை பற்பம்,தூவி ,கிண்டி கொதி வந்த பின் தேன் சேர்த்து கிளரி,பின் நெய் சேர்த்து கிண்டி இறக்கவும்.சூடு ஆறியபின் புட்டியில் பத்திர படுத்தவும்.
சாப்பிடும் அளவு :
5 முதல் 10 gm வரை உணவிற்கு முன் காலை,இரவு சுவைத்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
உள் மூலம், வெளி மூலம், கட்டி மூலம், முலை மூலம், இரத்த மூலம், சீழ் மூலம், ஆசன கடுப்பு, எரிச்சல், அரிப்பு முதலியவை நீங்கும்.
தகவல்: கட்செவி: சித்த மருத்துவம் : மருத்துவர் தேவேந்திரன் ஐயா
கண்கட்டி வராமல் தடுப்பது எப்படி?
தற்போது கத்திரி வெயில் தகித்து வருகிறது. வெப்பத்தால் தலை முதல் கால் வரை நமது உறுப்புகள் பாதிப்பை சந்திக்கின்றன. கண்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் கண்ணில் கட்டி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிகள் பற்றி விளக்குகிறார் கண் மருத்துவர் சித்தார்த்தன். கண்கட்டி என்பது கண்ணின் இமைப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் கொப்புளம் போல உருவாகும். இது வலி மற்றும் கண்ணில் உறுத்தலை உண்டாக்கும். சில நேரம் இந்த கட்டிகள் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெயில் காலத்தில் கண்கட்டி பிரச்னை அதிகமாக இருக்கும்.
வெயிலில் அலையும் போது, உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கண்கட்டி உருவாகிறது. அழுக்குகள், தூசுகளாலும் இது ஏற்படலாம். சாலையில் செல்லும் போது தூசு, புழுதி முகத்தில் படிகிறது. கண்களிலும் தூசுகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் கண்ணில் உடனே கிருமித்தொற்று உருவாகிறது. புழுதி, மண், புகை உள்ளிட்டவைகளுடன் உஷ்ணமும் சேர்ந்து கொண்டால் கண்ணில் கட்டிகள் எட்டி பார்த்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடல் உலர்ந்து போகிறது. கண்ணில் உள்ள கண்ணீர், விழிப்படலத்துக்கான ஈரப்பசையை கொடுக்கிறது.
வெயிலில் செல்லும் போது இந்த கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் உலர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் புறஊதா கதிர்களின் தாக்கம் வெப்ப காலத்தில் அதிகமாக இருக்கும். அவையும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரமான குளிர்க்கண்ணாடிகளை (கூலிங் கிளாஸ்)பயன்படுத்தலாம்.
வெயில் காலம் மட்டுமல்லாமல், எப்போது வெளியில் சென்றாலும் குளிர் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். பாதுகாப்பு முறை: வெயில் தலையில் பட்டு உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் தடுக்க தொப்பிகள் அணிவது நல்லது. எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் குடிநீரும் கையில் இருக்கட்டும்.
வெயிலால் கண் உலர்வு ஏற்படும் போது இந்த தண்ணீரால் கண்களை கழுவிக் கொள்ளலாம். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு கண் சொட்டுமருந்துகள் உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். வெயிலில் சுற்றுபவர்கள் அடிக்கடி முகத்தையும் கண்களையும் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இது கண்களில் தூசு படிவதையும், உலர்வதையும் தடுக்கும். கண்கள், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். கண்ணில் பிரச்னை வரும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
ரெசிபி
பாலக்பனீர்: 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கட்டு பாலாக்கீரையை 10 நிமிடம் வேக வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி போட்டு பனீர் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாலக்கீரையில் வைட்டமின் ‘ஏÕ சத்து உள்ளது. பனீர் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.
ராகிபழ அப்பம்: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், பொடியாக வெட்டிய 2 வாழைப்பழம் ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோசை பதத்தில் ஆப்பம் போல் சட்டியில் வார்த்து எடுக்கவும். இந்த இனிப்பு அப்பத்தில் நார்ச்சத்து உள்ளது. வாழைப்பழம் சேர்ப்பதால் உடலுக்கு குளிர்ச்சி.
பனீர் பொடிமாஸ்: இரண்டு கப் பனீரை ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அரை கப் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் அரை கப், கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றுடன் உதிர்த்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து தாளித்து வதக்கவும். இறுதியில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
பாட்டி வைத்தியம்
அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு 100 கிராம், தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் தீரும்.
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும்.
அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.
ஒரு கைப்பிடி ஆதொண்டை இலையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தைலம் தயாரித்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய் குணமாகும்.
இசப்கோல் விதையை பொடி செய்து தேனில் கலந்து சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூடு குறையும்.
வெங்காயத் தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து காய வைக்கவும். பின்னர் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் சூடு தணியும்.
வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.
டயட்
தொடர்ந்து வெயிலில் அலைவது, கண்களில் தூசுபடுவது போன்றவற்றை தடுப்பது அவசியம். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள கீரை வகைகளான அகத்திக் கீரை, பாலாக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரை, பால், வெண்ணெய், மோர், தயிர் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். உணவு தயாரிக்க கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயிலுக்கு பதிலாக நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
காய்கறிகளில் கேரட், மாங்காய், தக்காளி, மீன் ஆகியவற்றில் இருந்து அதிகளவு வைட்டமின் ‘ஏ‘ சத்து கிடைக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்கு பதிலாக மீன் அல்லது ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ப்பழங்களும் உஷ்ணத்தை குறைக்கும்.
கோதுமை மருத்துவக் குணங்கள்
* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.
வயிற்றுகோளாறை சரிசெய்யும் சுக்குமல்லி பானம் :
வயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: சுக்கு பொடி, மல்லி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால். கால் ஸ்பூன் சுக்குப் பொடி, அரை மல்லி விதைப்பொடி, சிறிது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
இதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம். இது உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக உள்ளது. உடல் வலியை குறைக்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். பல்வேறு நன்மைகளை கொண்ட தனியா, சிறுநீரை வெளியேற்றும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்குமல்லி பானத்தை குடித்துவர செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஆறும். மலச்சிக்கல் இல்லாமல் போகும். அற்புதமான பானமாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் சுக்குமல்லி பானம் பயன்படுகிறது.
லவங்கம், மிளகு, சீரகத்தை பயன்படுத்தி கொழுப்பை குறைக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: லவங்கப் பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், ஏலக்காய், பனங்கற்கண்டு. 5 முதல் 10 மிளகு, ஒரு துண்டு லவங்க பட்டை, ஒரு ஏலக்காய், 5 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
ரத்த அழுத்தத்தை தடுக்கும். மணத்தை தரக்கூடியதாக உள்ள இந்த பானம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். எலுமிச்சை புல்லை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல், இஞ்சி, தேன்.எலுமிச்சை புல்லை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியை தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், ரத்தம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
செரிமானத்தை தூண்டுகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. உடல் வலியை போக்குகிறது. வீக்கத்தை கரைக்கிறது. வாசனை புல் என்று அழைக்கப்படும் எலுமிச்சை புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதை காய வைத்து பயன்படுத்தலாம். எலுமிச்சை போன்ற வாசனையை கொண்டது. புல் வகையை சார்ந்தது.
உடல் சூட்டைக் குறைக்க இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக உள்ளது. ஒவ்வொருவரும் கோடையின் வெயிலால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உடல் வறட்சியால் ஒரு பக்க மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
சுரைக்காய்
கோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். இந்த சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் முன் உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் சூடும் குறையும். அதுமட்டுமின்றி, இந்த காய்கறியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
2 வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். குறிப்பா இரவில் படுக்கும் முன் இதனை உட்கொண்டால், உடல் வெப்பம் தணியும்.
3 பரங்கிக்காய்
பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும்.
4 பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இதிலும் நீர்ச்சத்து உள்ளதால், இதனை இரவில் உட்கொண்டு வர, செரிமான கோளாறுகள் மற்றும் உடல் சூடு போன்றவற்றில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
5 உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், இது உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
6 தயிர்
தயிரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. தயிரை இரவில் உட்கொள்வதன் மூலம், நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். மேலும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் உதவுவதால், அன்றாடம் கோடையில் தயிரை உட்கொள்ளுங்கள்.
7 தண்ணீர்
முக்கியமாக கோடையில் மற்ற காலங்களில் குடிக்கும் நீரின் அளவை விட அதிகமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
பித்தவெடிப்பு குணமாக:
பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்
எந்த மருந்தும் தேவையில்லை முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கும் முடக்காற்றான் .!
வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
*இரவில் நெல்லிக்காய்களைதண்ணீ ரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீ ரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து த லையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வள ரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
-இறை அருள் மாலிக்
முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் - இயற்கை மருத்துவம்
தேவையான பொருட்கள்:
* செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
* செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள்
* தேங்காய் எண்ணெய் – 1 கப்
* துளசி – 5 இலைகள்
* வெந்தயம் – சிறிதளவு
செய்முறை:-
1. செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3. பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
சித்த மருத்துவத்தில் அருகம்புல்
அருகம்புல்லின் ஊறல் நீரும், பாலுஞ்சேர்ந்து உட்கொள்ள கண் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவினால் சொறி சிரங்கு, படர்தாமரை குணமாகும்.
அருகின் கிழங்கால் தணியாத வெப்பமும், வாத பித்த கப நோய்களும் நீங்கும்.
உடல் பொலிவுடன் காணப்படும். அருகம் வேருடன் வெண் மிளகு பத்து வெந்நீரில் சேர்த்து வடிகட்டி உட்கொண்டால் மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, சிறுநீர்த் தாரை எரிச்சல் போன்றவை குணமாகும். தயிரில் அரைத்துக் கலந்து கொடுக்க நாட்பட்ட வெள்ளை நோய் நீங்கும்.
அம்மைநோயைத் தடுக்க!
அம்மைநோயைத் தடுக்கவும், அம்மைநோய் வேகத்தை தணிக்கவும், மேலும் பல நோய்கள் வரும் முன் தடுக்கவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அம்மைநோயைத் தடுக்க:
ஒரு முற்றிய கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
அம்மைநோய் வேகத்தை தணிக்க:
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தழும்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவிடும். தினம் சந்தனச் சோப்பு போடவும். செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
நரம்புத்தளர்ச்சிக்கு அருகம் புல்:
இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்த ஜெர்மானியர் சப்பாத்தியுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப் புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆருடம் கூறுகிறது.
உஷ்ணத்தைத் தணிக்கும் அகத்திக்கீரை:
அகத்திக்கீரை உள்ளே இருக்கும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வுப் பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம். தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை தின்றால் விரைவில் குணமாகும்.
அஜீரணசக்திக்கு:
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி சேர்த்து தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அரைக்கருப்பன் சரியாக:
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அதை நன்கு சுண்டக்காய்ச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும். பப்பாளிப்பழச்சாறும் பசும்பாலும் கலந்து பூசலாம். தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்துப் பூசினாலும் குணமாகிவிடும்.
ஆசனவாசல் குடைச்சலுக்கு:
இப்படியான அரிப்புக்குக் காரணம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்நோய் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவர்களுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும். அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும். கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால் அரிப்பு குணமாகும்.
ஆரோக்கியத்திற்கு:
தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்­ரும், கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற:
அரசம்பழத்தை பாலில்போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும். தளர்ச்சி நீங்கும். ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தளர்வு நீங்கும். இலுப்பைப்பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
மூல வியாதி குணமாக:
துத்திக் கீரை என்ற ஒன்றைகேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக்கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டுவந்தால் மூலநோய் தலைக் காட்டாது.எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்திஇலைமீது விளக்கெண்ணெய் தடவி, அனலில்காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட,கட்டி உடைந்துவிடும். மூல முனைகள்உள்ளுக்குச் சென்றுவிடும்.
காரமும், புளிப்பும் உணவில் அதிகம்சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜிஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலைஅடைக்கிறது. இதனால் மூலத்தில் புண்ஏற்பட்டுமூலநோயாக மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள்துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிதுசிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு,பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துநெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதியஉணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துமூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப்பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண்ணும் குணமாகும்.
ஆலிவ் (ஜைதூன் எண்ணெய்) ஆயில்
தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து வந்தால், அவை மூல வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும்.
கண்கட்டி, கண்வலி குறைய:
சோற்றுக் கற்றாழை தோலைச்சீவி அதன் சிறிது ஜெல்லை தண்ணிரில் கழுவி கண் இமைகளுக்கு மேலே வைத்து கட்டி 5 நிமிடம் கழித்து எடுக்க கண்ணில் கட்டி, கண் வலி குறையும். கண்கட்டி குணமாக சுண்ணாம்பு, வெள்ளைப்பூண்டு அரைத்து விழியில் படாமல் போட்டால் கண்கட்டிகுணமாகும்.
கண் பகுதியில் ஏற்படும் கண்கட்டி என்பதும் உடல் வெப்பத்தினால் உண்டாவதாகும். இதற்குக் கறிவேப்பிலையைப் பாலுடன் கலந்து அரைத்துக் கட்டியின் மீது தடவினாலோ, உமிழ்நீரைக் கட்டியின் மீது தடவினாலோ, கைவிரலை உள்ளங்கையில் தேய்த்து மிதமான சூட்டில் கட்டியின் மீது தொடர்ந்து வைத்தாலோ கண்கட்டி நீங்கிவிடும்.
: கண் பகுதியில் ஏற்படும் கண்கட்டி என்பதும் உடல் வெப்பத்தினால் உண்டாவதாகும்.
உடலின் சூட்டைத் தணிக்க:
👇🏻👇🏻👍🏻
அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு 100 கிராம், தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் தீரும்.
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும்.
அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.
ஒரு கைப்பிடி ஆதொண்டை இலையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தைலம் தயாரித்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய் குணமாகும்.
இசப்கோல் விதையை பொடி செய்து தேனில் கலந்து சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூடு குறையும்.
வெங்காயத் தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து காய வைக்கவும். பின்னர் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் சூடு தணியும்.
வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.
👉🏻டயட்👇🏻👍🏻
தொடர்ந்து வெயிலில் அலைவது, கண்களில் தூசுபடுவது போன்றவற்றை தடுப்பது அவசியம். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள கீரை வகைகளான அகத்திக் கீரை, பாலாக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரை, பால், வெண்ணெய், மோர், தயிர் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். உணவு தயாரிக்க கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயிலுக்கு பதிலாக நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
காய்கறிகளில் கேரட், மாங்காய், தக்காளி, மீன் ஆகியவற்றில் இருந்து அதிகளவு வைட்டமின் ‘ஏ‘ சத்து கிடைக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்கு பதிலாக மீன் அல்லது ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ப்பழங்களும் உஷ்ணத்தை குறைக்கும்.
சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா?
ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது.
முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.
இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது.
மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் ஆன்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள்.
வ¡யின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எத¢ர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாய¢னாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை (tonsillitis) ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும்.
சளித் தொல்லையை சரி செய்ய
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!
2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10. சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'உ' இருக்கிறது.வைட்டமின் 'உ' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது. 11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
15. சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். (இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)
16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
17. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்
என்று சொன்னால்,அது மீன் எண்ணெய் தான்,,,
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக
வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால்
இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும்.
அதிலும் மற்ற
எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால்,
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான
உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது.
நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும்
சாப்பிடுகிறார்களே தவிர,இதனைப் பற்றி முழுவதும்
தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது.
அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும்
தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும்.
இத்தகைய
மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.
ஆனால் இதில்
இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க
முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய்
மாத்திரைகள் விற்கப்படும்.
அதிலும் இந்த
மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும்.
அதிலும்
சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும்
கொலஸ்ட்ரால் இருந்தால்,அது இதயத்திற்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே இதை சாப்பிட்டால்,
இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த
ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள்
என்று தான் தெரியும்.
ஆனால் இந்த எண்ணெயை சமையலில்
பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல்
பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால்,
மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
ஏனெனில்
இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள்,
மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும்
ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள
EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும்.
மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால்
ஏற்படும் வலிகளை குறைக்கும்.
பெண்களின் இடுப்பு எலும்புகள்
நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால்,எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும்
ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக
இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில்
உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு,
மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக
பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்
போன்று இருக்கும்,,
தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.
* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.
* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
பூவரசன் வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் - 25 கிராம்
சிறுநாகப் பூ - 15 கிராம்
வெடியுப்பு - 10 கிராம்
புனுகு - 10 கிராம்
இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.
* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.
* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.
* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.
ஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....
ஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறுநீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு ஆப்பரேசன் செய்து நீக்கிவிட்டாலும் இதுவரை ஆப்பரேசன் செய்து கொண்டவர்களுக்கும் திரும்ப கற்கள் உருவாவதும் மீண்டும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு மூன்று முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டுள்ளது. நான்கு முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டன என்று கணக்குச் சொல்பவர்கள் தான் அதிகம்.
ஏன் இத்தனை முறை ஆப்பரேசன் செய்ய வேண்டி வந்தது? என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால் மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் அப்ரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே எனவே நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை நீ ஆப்பரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது மிக எளிமையான வழியும் கூட.
இதற்கு பீன்ஸ் வைத்தியம் என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குணமடைந்து விடுவார்கள். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தால் கூட அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும்?
அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக எரிய விடவேண்டும். கேஸ் அடுப்பு எனில் சிம்மில் வைத்து அதை வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும். விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும். சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு கூல்போல் அரைத்துக் கொண்டு ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூலைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்கிற அளவில் சிறிதளவு அதக் குடித்து விடவேண்டும். இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.
அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில் வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு மூன்று மணி நேரத்திருகுப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது. கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும் உடலும், மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட வழிமுறைகளுடன் செய்தால் சிறுநீரகக்கற்கள் கண்டிப்பாக கரையும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நிறையப்பேர் குனமடைந்திருக்கிறார்கள். ஒரே நாளில் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிட்டது என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் படி கிட்னி கற்கள் கரைந்துவிட்டது என்றும் அவை இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்றும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.
எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக் கையாண்டு ஆரோக்கியம் பெறலாம். சிறுநீரகக்கற்களைக் கரைப்பதற்கான வழிமுறைகளைப் பார்த்தோம். ஆனால் இதைவிடவும் சிறந்த வைத்தியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது. அது உருவாகாமல் தடுப்பதற்கு என்ன வழி என்பது தான் அது.
நமது அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை என்ற புத்தகத்திலும், டிவிடியிலும் இதுகுறித்து விளக்கமாகக் கூறி இருக்கிறோம். இருப்பினும் அதுபற்றி இங்கு சுருக்கமாக பார்த்துவிடலாம்.
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்.
1. உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும்.
2. உப்பு குறைவாக சாப்பிட்டாலும் வரும்.
3. தண்ணீர் அதிகமாகக் குடித்தால் வரும்.
4. தண்ணீர் குறைவாக குடித்தால் வரும்.
5. மனதில் பயம் இருந்தால் வரும்.
6. காற்றோட்டம் இல்லாத இடத்தில் உறங்கினால் வரும்.
7. கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யூடு போன்றவை பயன்படுத்தினால் வரும்.
8. ஏசி, ரூமில் இருப்பவர்களுக்கு வரும்.
மேற்சொன்ன காரணங்களைக் கவனமாக படித்துகொண்டு அதன்படி நடந்து வரவேண்டும். ஏசியைப் பயன்படுத்தவே கூடாது. கொசுவர்த்திச் சுருளில் உள்ள இரசாயான நச்சுக்கள் சுவாசத்தின் வழியே உள்ளே நுரையீரலுக்கு சென்று சிறுநீரகத்தில் கல்லாய் மாறுகிறது. எனவே கொசுவர்த்தியைப் பயன்படுத்தவே கூடாது.
மனதில் பயம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். எனவே மனதில் உள்ள பயத்தைப் போக்கி சிறுநீரகக் கற்களைக் கரைத்துவிட முடியும். அது எப்படி என்பதை இந்த இதழில் வெளியாகி கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிந்துகொள்வீர்கள்.
அடுத்ததாக நம் நாவிற்கு எந்தளவிற்கு உப்புச் சுவை தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். உப்பினைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. கூடுதலாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பில் தற்பொழுது பாக்கெட்டுகளில் வரும் போடி உப்பினைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதில் கல் உப்பினைப் பொடி செய்து பயன்படுத்தலாம். கல் உப்பினை பயன்படுத்துவதே முன்னர் சட்டியில் போட்டு வறுத்துப் பயன்படுத்துவது மிகமிக சிறந்தது.
தண்ணீரின் தேவை நமது தாகத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் செய்யும் வேலை, தட்ப வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து தண்ணீரின் தாகம் நமக்கு இருக்கும். எனவே தண்ணீரை தினசரி இவ்வளவு லிட்டர் தான் குடிக்கவேண்டும். என்று கணக்கு வைத்துக் கொண்டு தாகம் எடுக்காமல் தண்ணீர் குறைவாகவும் குடிக்கக் கூடாது? அதிகமாகவும் குடிக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் எப்பொழுது குடிக்கின்றன. எவ்வளவு தேவையோ அவ்வளவு குடிக்கின்றன. நாமும் அதைக் கடைப்பிடிப்போம்.
பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கு இந்த எட்டு காரணங்கள் இல்லாமல் இன்னொரு முக்கியமான விசயமும் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
அதிகமாக பேசினால் சிறுநீரகத்தில் கற்கள் வரும். ஆசிரியர்கள், பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள், தொலைபேசி அழைப்பாளர்கள் போன்றோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம். எவ்வளவு நேரம் அதிகளவு பேசிக்கொண்டு இருக்கிறோமோ சிறுநீரகத்தில் அவ்வளவு விரைவில் கற்கள் தோன்றும்.அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பதை தொழிலாகச் செய்பவர்கள் இனிமேல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் இந்தக் கட்டுரையின் மூலம் இரண்டு விசயங்களை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
1. சிறுநீரகக் கற்களை எவ்வாறு கரைப்பது?
2. சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
எனவே சிறுநீரகக் கற்கள் இனிவராமல் எப்படி பார்த்துக் கொள்வது என்பதும், இருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பது எப்படி என்பதையும் பார்த்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு என்றும் ஆரோக்கியமாக வாழ்வோம்.


இதய நோயை கட்டுப்படுத்தும் ‪#‎பாதாம்‬..!!
பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான்.
புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை.
பாதாம்
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது.
100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது.
ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!
இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம்.
எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.
பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.
சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம்.
நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமும் 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம்.
அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.
பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை.
வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.
நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம்.
முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது.
சரும நிறத்தை மேம்படுத்தும்.
சருமத்தைப் பளபளப்பாக வைக்கும்.
ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்.
வயோதிகத்தைத் தள்ளிப்போடும்.
கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.
பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும்.
சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்.
அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது.
ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.
.

தலைமுடியை பாதுகாக்கும் ‪#‎செம்பருத்தி‬

வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை ஏற்படும். வியர்வையால் தொல்லைகள் வரும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை காத்துக்கொள்வது அவசியம். செம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும். குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு போன்றவற்றால் தலையில் ஏற்படும் பொடுகு, கொப்புளங்கள் சரியாகும்.
முடி கொட்டுவது நிற்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். தலைமுடி ஆரோக்கியம் அடையும். மென்மையாக பட்டுப்போல முடி இருக்கும். செம்பருத்தி பூ பொடி நாட்டு மருத்துவ கடைகளில் கிடைக்கும். செம்பருத்தியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். நுண்கிருமிகளை அழிக்கும். எண்ணெய் பசையை போக்க கூடியது. கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: அகத்தி கீரை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்.அகத்தி கீரையை பசையாக அரைத்து கொள்ளவும். 2 ஸ்பூன் பசையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை தலைக்கு போட்டு குளிப்பதால் அழுக்குகள் வெளியேறும். உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். இது அதிகம் குளிர்ச்சி தரக்கூடியதால் மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளிப்பது நல்லது. வாரம் ஒருமுறை பயன்படுத்தும் குளியல் தைலம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வெந்தயம், சீரகம், பச்சரிசி, எலுமிச்சை, நல்லெண்ணெய்.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்வதற்கு முன்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பச்சரிசி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலையில் தேய்த்து குளிப்பதால் வெயிலால் ஏற்படும் மயக்க நிலை, தலையில் அரிப்பு, முடி கொட்டுதல், கண்கள் சிவந்துபோவது போன்றவை சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும்.
அருகம்புல் சாறுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து தலைகுளித்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கலாம். கோடை வெயிலால் தலைச்சூடு, கண்களில் எரிச்சல், வியர்குரு, சிறு கட்டிகள் போன்றவற்றை சரிசெய்ய மேற்கண்ட மருத்துவ முறைகள் பயனுள்ளதாக இருக்கும். மாதுளை, வாழை, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குளிர்ச்சிக்காக சாப்பிடுவோம். இதன் தோல்களை காயவைத்து பொடியாக்கி சீயக்காய், பாசிப்பயறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டு குளித்தால் உடல் ஆரோக்கியம் பெறும்

கேன்சரை தடுக்க உதவும் பழங்கள்

திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், ‘ரெஸ்வெரட்டோல்’ எனப்படும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் சிதைவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. ‘கேன்சர்’ செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, நிணநீர் சுரப்பிகள், கல்லீரல், வயிறு, மார்பகங்களில் புற்றுநோய் கட்டிகள் தோன்றுவதையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கவனிக்க வேண்டியது, பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தாத திராட்சையை சாப்பிடுகிறோமா என்பதுதான்.
ஆப்பிள்


இதில் உள்ள, ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ பெண்கள் உடலில், ‘ஈஸ்ட்ரோஜென்’ சுரப்பதில் உள்ள குறைபாட்டிற்கு எதிராக செயல்பட்டு, மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. 
தக்காளி:



இதில் உள்ள, ‘லைக்கோபின்’ என்ற ஒருவகை ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ ஆண்களுக்கு, ‘புராஸ்ட்ரேட்’ புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பெர்ரி:
E_1459901693


புளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி உட்பட பெர்ரி வகை அனைத்தும், மரபியல் காரணங்களால் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன.

பழங்கள் தவிர, இஞ்சி, பூண்டு, மஞ்சள், கிரீன் மற்றும் பால் கலக்காத தேநீர், பலவகையான புற்றுநோய்களை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து!!

* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச ்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.
* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகிடைக்கும்.
* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்
* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
* மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
* கல்லீரலைப் பலப்படுத்தும்.
*இளநரை வராமல் தடுக்கும்.
* புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
* சரும நோய்களைக் குணமாக்கும்.
*மாரடைப்பைத் தடுக்கும்.
*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
* சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.
* கொழுப்பைப் படியவிடாது.
* தொற்றுநோய்களைப் போக்கும்.
* பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.
* உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.
* மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.
* ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.
வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.
காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.
இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.
வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.
இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.
உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.
இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.
இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.
வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.
வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.
இரத்த விருத்திக்கு
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
1⃣உடல் வலி குணமாக
பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
[: 2⃣கர்ப்பிணிப் பெண்களுக்கு
கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
3⃣3⃣பெண்களுக்கு
மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
4⃣மலச்சிக்கல் தீர
மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.
5⃣வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.
6⃣இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.
7⃣தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.
8⃣குடல்புண் ஆற
அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
9⃣இதயத் துடிப்பு சீராக
சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
🔟சுகமான நித்திரைக்கு
தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.







Puradsifm's photo.

வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும் கோவைக்காய் - இயற்கை மருத்துவம்

கோவைக்காய், கொடிகளில் காய்க்கும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளரும்தன்மை கொண்டது. இது மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதாக வளரும். இதன் இலை, காய் பழம், வேர் போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது.
இந்தியாவில் பழங்குடி மக்கள் அதிகமாக கோவைக்காயை மருத்துவத்தில் பயன்படுத்தியதாக ஆவணங்கள் கூறுகின்றன. இது சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழ்கிறது. இதன் இலை, காயில் உள்ள குளுக்கோஸ் 6பாஸ்பேட் என்ற என்சைம் கல்லீரலில் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம். சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசும் வழக்கம் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும்.
வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும். பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம். உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும். கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும். பழத்தை மென்று வாய்கொப்பளித்தால் போதுமானது. கோவைக்காய் கொடியின் வேர் 20 கிராம் எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து குடித்தால் நீர்கட்டு நீங்கும். பித்தம் அதிகரிப்பதால் மூட்டுகளில் உண்டாகும் குத்தல் மற்றும் வீக்கத்திற்கும் இந்த நீரை பருகலாம்.
கோவைக்காய் அதிகம் கிடைக்கும் காலங்களில் அதை வெட்டி சிறிது உப்பு மஞ்சள்தூள் கலந்து அரை வேக்காடு வேக வைத்து வெயிலில் காய வைத்து வற்றலாக்கி தேவைக்கு பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கோவைக்காய் சிறந்த மருத்துவ உணவு. அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது அதை உணவில் சேருங்கள்.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.
எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,
முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,
எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.
எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

தொண்டை கரகரப்பு...தொடர் விக்கலா? இதோ மருத்துவம்

உடலில் ஏற்படும் சிலவித உபாதைகளுக்கு பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1) தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
2) தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
3) வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
4) உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
5) அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
6) குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
7) வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
8) வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
9) மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
10) தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

பெண்களே! முகத்தில் முடி வளர்ச்சியா? கவலை வேண்டாம்!

முடி வளர்ச்சி என்பது இரண்டு வகைப்படும்.
1. பிறப்பு முடி 2. பருவ முடி. ஆண், பெண் பருவ மாற்றங்களின் அறிகுறிகளாக பருவ முடிகள் முளைக்கிறது. பருவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இயற்கையான ஒரு பகுதியாக இது அமைகிறது. ஆண்களுக்கு பருவ முடி ஏறு முக்கோண அமைப்பில் மேல்நோக்கியும் பெண்களுக்கு இறங்கு முக்கோண அமைப்பில் கீழ் நோக்கியும் வளர்ந்து படர்கிறது. இந்த ஏறு முக்கோணமும் இறங்கு முக்கோணமும் எதிரும் புதிருமான ஒன்றுக்கொன்று பொருந்துகிற அமைப்பாக இயற்கை வடிவமைத்துள்ளது.
பெண்களின் பிரச்சனையும் வேதனையும்:அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பருவ முடி வளர்ச்சி ஏற்படும்போது பெண்கள் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படுவது பெண்களுக்கு தீராத பிரச்சனையாகி விடுகிறது. ஆண்களைப் போலவே சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி முடிகள் அடர்த்தியாக வளர்ந்து விடுகின்றன. சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதோடு கை கால்களிலும் அதிக ரோமங்கள் காணப்படுவதுண்டு. இவை பெண்மையை, பெண்மையின் நளினத்தை தட்டிப் பறித்து விட்டதாகக் கருதி பெண்கள் வேதனைப்படுகின்றனர்.
இம் முடிகளை எப்படியாவது அகற்றினால்தான் நிம்மதி என்று அழகு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தோல் நிபுணரிடம் சென்றோ பல்வேறு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இவ்விடங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதுமில்லை. சில பெண்களுக்கு இம்மாதிரியான சிகிச்சைகள் தோற்று… தேவைப்படாத முடிகள் அகற்றப்படுவதற்குப் பதில் ரோமக் காடாகப் பெருகிப் போவதும் நேரிடுகிறது.
காரணங்கள் என்ன?முளைக்கக் கூடாத இடங்களில் பெண்களுக்கு முடி முளைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாரம்பரிய (ஜீன்ஸ்) காரணங்களால் இப்படி வளர வாய்ப்புள்ளது. பாட்டிக் கும், அம்மாவிற்கும் முகத்தில் முடிகள் வளர்ந்திருந்தால் மகளுக்கும் பருவ காலத்தில் முகத்தில் முடிவளர்ச்சி தொடரும். ஆணிண் ஹார்மோன் பெண்ணுக்குள் அதிகரிக்கும்போது குரல், நடை, பழக்கம், முடி வளர்ச்சி, பாலியல் வளர்ச்சி போன்ற அனைத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். சிறிது ஆண்மைச் சாயல் ஏற்படக்கூடும்.
அதிகளவு மாதவிடாய் போக்கு ஏற்படும்போது அதனைத் தடுக்கவும் மார்பகங்களில் கட்டியோ ;, கழலையோ உருவாகி அறுவைச் சிகிச்சை செய்யும்போது வீர்யம் பெருக்கவும், ஆண் ஹார்மோனை பெண்ணுடலில் செலுத்துதல் வழக்கம். இதனால் தேவைப்படாத இடங்களில் ரோம வளர்ச்சி ஏற்படும்.
முகத்திலும், கைகால்களிலும், உடம்பிலும் தேவையின்றி பெண்களிடம் முடிகள் வளரும் தன்மையை ஆண் ஹார்மோன்கள் பெண் உடலில் செலுத்தப்படுகிறது. இதனால் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு ஆணின் ஹார்மோன் பெண்களிடம் அதிகரிப்பதே காரணம் என்ற போதிலும் அத்தகைய, அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களின் சுபாவம் ஏற்பட்டு விடுவதில்லை. அவர்களின் செக்ஸ் பழக்கங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு எல்லாம் மற்ற பெண்களைப் போலவேதான் அமைகின்றன. இவர்களில் சிலரது பழக்கம், குரல், நடத்தை போன்றவற்றிலும் சிறிது ஆண்மைச் சாயல் இருக்கக்கூடும். இருப்பினும் இவர்கள் பெண்மையின் பிரதான இயல்புகள் எதையும் இழப்பது இல்லை.
ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினால் பாதிக்கப்படும் பெரும்பாலான இளம் பெண்களுக்கு பெண்மை பிணியியல் நிபுணர்கள் அதிக அளவு ஹார்மோன் மருந்து, மாத்திரைகளை அளிப்பதாலும், தோலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் அடிக்கடியும் அதிக அளவிலும் உபயோகிப்பதாலும் (முடி என்பது தோலின் ஒரு பகுதிதானே!) பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும், (வாக்சினேஷன்) வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்துவதன் காரணமாகவும் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது.
ஆண் ஹார்மோன் என்பது என்ன?ஆண்ட்ரோஜன் என்பது ஆண் ஹார்மோன் ஆகும். ஆணின் விதைகளிலும் அட்ரினல் புறணியிலும் பெண்ணின் சினைப்பையிலும் சுரக்கக்கூடிய இயக்குநீர் இது. இரண்டாம் நிலைப் பாலியல் பண்புகளை குறிப்பாக குரல் தடித்தலையும், உடல் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கக் கூடியது.
சினைப்பையில் அல்லது அட்ரீனலில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால் ஆண்ட்ரோஜன் அதிகச் சுரப்பு நிகழும். அதிக ஆண்ட்ரோஜன் சுரப்பு ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
1. சினைப்பையில் உருவாகும் நீர்மக் கட்டிகள். இக்கட்டிகளால் ஓழுங்கற்ற மாதப்போக்கு, மலட்டுத் தன்மை, முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய நீர்மக் கட்டிகள் தோன்ற பரம்பரைத் தன்மை, தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் கோளாறும்,நீரிழிவும் காரணங்களாக உள்ளன.
2.அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் தோன்றினால் கூட ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.
3.வலிப்பு, மனநோய், கர்ப்பத்தடை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சில ஆங்கில மருந்துகளாலும் ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.
4.சிலரது உடலில் அதிக அளவு இன்சுலின் சுரப்பதுண்டு (இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்). இரத்த சர்க்கரையளவு இயல்பான நிலையில் இருந்தாலும், பரிசோதனை செய்து பார்த்தால் இன்சுலின் சுரப்பு அதிகம் காணப்படும். அதிக இன்சுலின் அதிக ஆண்ட்ரோஜனை சுரக்கச் செய்யும். மிகக் குறிப்பாக சினைப்பைகளில் தோன்றக்கூடிய நீர்மக் கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம்) தான் அதிகளவு ஆண் ஹார்மோன் சுரப்பதற்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. அதிக ஆண்ட்ரோஜன்தான் 70 முதல் 80 சதவீதப் பெண்களுக்குரிய ஹிர்சுசிசம் பிரச்சனைக்குக் காரணமாகும்.
தேவையற்ற முடி வளர்ச்சியை அகற்றுவது எப்படி?
தேவையற்ற முடிகளை நீக்க பெண்கள் 4 வித வழிமுறைகளை நாடுகின்றனர்.
1.சாதாரண சவரம் செய்தல்: மீண்டும் முளைத்தால் மீண்டும் மழித்தல்.
2.ப்ளீச்சிங் செய்தல்:இதன் மூலம் முடிகளைப் பார்வைக்குத் தெரியாமல் செய்தல்- இரசாயனப் பொருட்களை உபயோகித்து முடிகளை மெல்லிய நிறமாக்குதல்.
3.எலக்ட்ரோலைசிஸ்: மின் சக்தியைக் கொண்டு ஒவ்வோரு முடியின் வேரினையும் (ஹேர் பாலிக்குள்) அழித்தல்- இதன் மூலம் முடி மீண்டும் வளராமல் தடுத்தல். இது எண்ணற்ற முறை சிகிச்சை செய்ய வேண்டும். மிகவும் செலவு செய்ய வேண்டிய சிகிச்சையாகும்.
4.லேசர் முறை: லேசர் பயன்படுத்தி தனித் தனியாக முடிகளை அழித்தல்- இதற்கும் பலமுறை சிகிச்சைக்கு செல்ல வேண்டும், மிக அதிக பணச் செலவும் ஏற்படும்.
இந்தியாவைப் பொருத்தவரை ஹிர்சுசிசம் பாதிப்பு உள்ள பெண்கள் சுமார் 10 சதவீதம் பேர் உள்ளனர். அமெரிக்காவில் 22 சதவீதம் பெண்கள் உள்ளனர். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் நாடுவதில்லை. மிகக் குறைவான பெண்களே (மிக வசதி படைத்த பெண்களே) செயற்கைச் சிகிச்சை முறைகளை நாடுகின்றனர். மற்றவர்கள் முகச் சவரம் மூலம் அல்லது பிடுங்குதல் (பிளக்கிங்) மூலமே அகற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமே இப்பிரச்சனை கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது.
ஆங்கில மருத்துவத் தோல் நிபுணர்களால் பெண்களின் இப்பிரச்சினையை தீர்க்க இயலாது. அக்குப்பங்சர் மருத்துவம் இப்பிரச்சனைக்கு எளிய இனிய தீர்வளிக்கிறது.
ரோமங்களைப் பறிப்பதும், பொசுக்குவதும் சிறந்த முறைகள் இல்லை. இதனால் சிக்கல்களும், ஆபத்தும், எதிர்விளைவுகளும் மனச் சஞ்சலங்களும்தான் ஏற்படும்.
பெண்களே! முகத்தில் முடி வளர்ச்சியா? கவலை வேண்டாம்!

சிறுநீர் காலடியில் சிந்துகிறதா?

“அடிக்கடி சலம் போகுது, நித்திரை குழம்பிச் சினமாகக் கிடக்கு, நீரிழிவாக இருக்குமோ என்று யோசிக்கிறன். சலம், இரத்தம் சோ திச்சுப் பார்ப்போமோ” எனக் கேட்டார், அறுபது வயது மதிக்கக் கூடிய அந்த முது இளைஞர்.
ஆண்களில் சிறு நீர் அடிக்கடி கழிவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.
நீரிழிவு,
புரஸ்ரேட் சுரப்பி வீக்கம்,
மனம் அமைதியின்மை,
சிறுநீரில் கிருமித் தொற்று,
பிரஸர் மற்றும் இருதய நோய்களுக்கு உட்கொள்ளும் சில மாத்திரைகள் போன்ற பல.
சலப்பை, புரஸ்ரேட் ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்களும் காரணமாகலாம்
எனவே, அவரது சிறுநீர் எப்படிப் போகிறது என்பது பற்றி சற்று விபரமாக விசாரித்தேன்.
அறிகுறிகள்
” அடிக்கடி போக வேண்டும் போலிருக்கும். ஆனால் அதிகம் போவதில்லை”
“சலம் விட்டிட்டு வந்தாலும் முழுக்க போன உணர்வில்லை- கொஞ்ச நேரத்திலை திரும்பப் போக வேணும் போலிருக்கும்.”
“போக வேணும் போல இருக்கும், போனால் டக்கெண்டு போகாது கொஞ்சம் முக்கினால்தான் போகும்”
“முந்தின மாதிரி முழுவீச்சிலை போகாது. மெதுவாகத்தான் போகும்.
சிலவேளை காலடியிலை சிந்துகிற மாதிரி மிக மெதுவாகப் போகும்.”
சிறுநீரில் அல்லது விந்தில் இரத்தம் கலந்திருக்கக் கூடும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிவு இருக்கலாம்.
ஆண்குறி விறைப்படைவதில் சிரமம் இருக்கலாம்.
சிறுநீர் வெளியேற முடியாது தடைப்பதுவும் உண்டு.
அவர் கூறியவையும் ஏனவையுமான மேற்கூறிய அறிகுறிகள், பொதுவாக புரஸ்ரேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படுவன.
இவை பொதுவாக 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே தோன்றுவதுண்டு.
புரஸ்ரேட் என்பது எமது சலப்பைக்குக் கீழே, சலக் குழாயைச் சுற்றியிருக்கும் ஒரு சுரப்பி. ஆண்களில் மாத்திரம் இருக்கிறது. இதிலிருந்து சுரக்கும் திரவமானது உறவின்போது வெளியேறும் விந்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
வயதாக, ஆக அது சற்று வீக்கமடைவதுண்டு. அப்படி வீங்கினால் சிறுநீர் சுலபமாக வெளியேறுவது தடைப்பட்டு மேற் கூறிய அறிகுறிகள் வரக்கூடும்.
கையுறை அணிந்து, மலவாயின் ஊடாக விரலைச் செலுத்தி புரஸ்ரேட் வீக்கம் அவருக்கு இருப்பதை உறுதிப்படுத்தினேன். ஸ்கான் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டன.
“இது புற்று நோயாக இருக்குமோ” என்பது அவரது சந்தேகம்.
உண்மைதான்.
புரஸ்ரேட் வீக்கத்தில் வயதாகும் போது எற்படும் (Benign Prostrate Hypertrephy) சாதாரண வீக்கமும் உண்டு
அல்லது புற்று நோயும் இருக்கலாம்.
இவற்றைத் தவிர புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்றாலும் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. (Acute Prostatitis, Chronic Prostatitis)
மலவாயில ஊடாக விரல் விட்டுச் சோதித்த போது அவ்வீக்கம் மெதுமையாகவும் வழுவழப்பாகவும் இருந்ததால் புற்று நோயாக இருக்க வாய்ப்பில்லை.
இருந்தபோதும் இரத்தப் பரிசோதனை செய்து புற்று நோய் இல்லை என நிச்சயப்படுத்தினோம். இதற்கு PSA என்ற இரத்தப் பரிசோதனை உதவும்.
புரஸ்ரேட் வீக்கப் பிரச்சினையைக் குணப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சத்திர சிகிச்சை, மற்றது மாத்திரைகள்.
புற்றுநோயல்லாத சாதாரண புரஸ்ரேட் வீக்கத்திற்கு பொதுவாக மருந்து மாத்திரைகளே கொடுப்பார்கள். ஆயினும் இது மருத்துவர் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும்.
மாத்திரைகளை குறைந்தது ஆறுமாதம் உபயோகித்தால்தான் சுகம் தெரியும்.மேலும் தொடர்ந்து உபயோகிக்க நேரிடும்.
சிறு நீர் வாயிலூடாக குழாயைச் செலுத்தி, வெளிக்காயமின்றி சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. ஆபத்தற்ற, உடலுக்குத் துன்பம் விளைவிக்காத சத்திரசிகிச்சை, நோயின் நிலைக்கு உகந்த சிகிச்சை முறையை வைத்தியர் தீர்மானிப்பார்.
மேலே குறிப்பிட்ட நோயாளிக்கு சத்திரசிகிச்சை தேவைப்படவில்லை.
ஆண்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
* மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
* கல்லீரலைப் பலப்படுத்தும்.
*இளநரை வராமல் தடுக்கும்.
* புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
* சரும நோய்களைக் குணமாக்கும்.
*மாரடைப்பைத் தடுக்கும்.
*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
* சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.
* கொழுப்பைப் படியவிடாது.
* தொற்றுநோய்களைப் போக்கும்.
* பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.
* உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.
* மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.
* ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

சர்க்கரை நோயை உணவு மூலம் சரிசெய்யலாம் !!!

நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும், கத்திக்கொண்டு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பில்லை பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு சேர்க்கவும். இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு ஒரு டம்ளர் குடிநீர் சேர்த்து அரைக்கவும்.
தேநீர் வடிகட்டியால் வடிகட்டவும். இத்துடன் பத்து சொட்டுகள் எலுமிச்சை சாறு விடவும். ஒரு கரண்டி (பத்து மில்லி ) தேன் சேர்த்து கலக்கவும். காலை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் மெதுவாய் சப்பி சப்பி அருந்தவும். சாப்பிட ஆரம்பிபதற்கு முன் சர்க்கரை அளவை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து திரும்பவும் சர்க்கரை அளவை சோதிக்கவும். நிச்சயம் குறையும். உணவுதான் எனவே பயமின்றி தொடர்ந்து பயன் படுத்தலாம்

உடனே கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை

trfiyufNbabyஉடனே கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும்.
இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை.
இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.
100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.
நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.
மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.
மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.
அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.
சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும்.
அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.
சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை.
சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.
நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.
இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம்.
அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.
கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.
மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.
கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும்.
காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது.
மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.
புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.
இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும்.
உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது.
பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது.
ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.
தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.
நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.
மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம்.
வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

JkYHBDVhbannanaflower
மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலியை போக்க கழற்சிகாய் பயன்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீக்கத்தை கரைக்ககூடிய தன்மையை கொண்டது. 

மாதவிலக்கு சமயத்தில் இடுப்பு வலி, வயிறு வலி, மார்பக வலி ஏற்படும்போது, கழற்சிகாயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் வலி குறையும். முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும். 

இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும்.மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வில்வ இலை ஒருபிடி எடுத்து பசையாக அரைத்து எடுக்கவும். 

இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறிய பின்னர் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து குடித்தால் அதிக உதிரப்போக்கு சரியாகும். காலை, மாலை என 3 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.மாதவிலக்கு சீராக இருப்பது அவசியம். அதிக உதிரப்போக்கால் உடல் பலவீனம் ஏற்படும். 3 நாட்கள் வரவேண்டிய மாதவிலக்கு அதிகநாட்கள் தொடரக்கூடாது. இப்பிரச்னைக்கு வில்வ இலை அற்புத மருந்தாகிறது. ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். 

அருகம்புல் சாறு கால் டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அதிக உதிரப்போக்கு சரியாகும். வாழைப் பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வாழைப் பூவை பொரியல் செய்வது போன்று சுத்தப்படுத்தி நீர் விடாமல் பசையாக அரைக்கவும். ஒரு ஸ்பூன் வாழைப்பூ பசையுடன் ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கிற்கு இட்லி பூ மருந்தாகிறது. இதை தேனீராக்கி குடிப்பதால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.

உடலை மெருகேற்றும் தேன்

2wxk0Ln5hoதேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.
தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.
சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.
தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.
தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.

என்றுமேஇளமையாக இருக்க மாதுளம் பழச்சாறு

Loa8CBUmjuசிகப்பு நிற முத்துகளை வரிசையாக அடுக்கி வைத்தார் போல் காட்சியளிக்கும் மாதுளை பழம் எல்லா வகையிலும் பயனளிக்கும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அன்றாடம் மாதுளை பழம் ஜூஸ் அருந்துவதால் உடலில் இருக்கும் தேவையில்லாக் கொழுப்பு குறைகிறது. மேலும் இது இதயத்தை வலுப்படுத்துவதிலும் இதயம் தொடர்பான நோய்களை குறைக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்களை என்றுமே இளமையாக வைத்துக் கொள்ளும் தன்மையும் இந்த மாதுளம் பழத்திற்கு உண்டு. இதனால்தான் தற்பொழுது சந்தையில் மாதுளம் பழச்சாறு புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் நீங்கள் சுயமாகவே இந்த பழச்சாறை தயார் செய்யலாம்.
ஆண்டி ஆக்சிடண்ட் கொண்ட மாதுளம் பழம் பல்வேறுவகையான புற்று நோய்களை தீர்க்க வல்லது. பளபளப்பான தோலுக்கு மாதுளம் பழம் உதவி செய்வதால் தோல் தோல் தொடர்பான நோய்க்ளையும் குறைக்கலாம்.
நார்சத்து அதிகம் உள்ள இந்தப் பழம் மலச்சிக்களையும் தடுக்க வல்லது.

மாதுளம் பழச்சாறு தயாரரிக்கும் முறை
மாதுளம் பழம் – 1
தேன் – 2 டீஸ்பூன்
பால் – கப்

செய்யும் முறை

மாதுளம் பழ முத்துகளை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டவும். பின் இதனுடன் தேன் மற்றும் பாலை சேர்க்கவும். சுவையான மாதுளம் பழச்சாறு தயார். இந்த பழச்சாறை பருகி வர பித்தம் நீங்கும்.

ஆரோக்கியம் தரும் ஏலம்

SnPoU9UIelஆரோக்கியமம் தரும் ஏலம்
ஏலக்காய:-
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்கும். இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும். பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.
அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும். இதே போல ஏலக்காயை சூயிங்கம்மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு தீர்வு கிடைக்கும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும். அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய். இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர். குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். பசி எடுக்கவில்லை. சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

உடலுக்கு பலத்தை தரும் தினை

hதினை தமிழகத்தில் தொன்று தொட்டே இருந்து வரும் சிறு தானியமாகும். இதை ஆங்கிலத்தில் பாக்ஸ்டெயில் மில்லட் என்று அழைப்பார்கள். சிடேரியா இட்டாலிகா என்பது இதன் தாவர பெயராகும். தினை என்று சொல்கின்ற போதே தமிழ் நிலத்தில் உள்ள ஐந்து தினைகளை குறிப்பதை நாம் நினைவு கூரலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் தினை ஒரு அருமையான உணவு பொருளாக இருந்து வருகிறது. 

அரிசி,கோதுமை ஆகியவற்றை விட அதிகமான சத்துகளை உள்ளடக்கிய அருமையான தானியமாக தினை விளங்குகிறது. தினையை ஆயிரம் மைல்கள் தூரம் சோர்வின்றி பறக்கும் பறவைகள் விரும்பி சாப்பிடுகின்றன. எனவே தினையை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது உள் உறுப்புகள் பலம் பெறுகின்றன. நோயில்லாத வாழ்க்கைக்கு தினை மிகவும் உதவுகிறது. தினையை மேல் பூச்சு மருந்தாகவும், உள்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம். பல்வேறு நோய்களை போக்கக் கூடியதாக இந்த தினை விளங்குகிறது. 

இந்த தினையை பயன்படுத்தி நமது உடலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சில எளிய வகை உணவு பொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். தினையை பயன்படுத்தி பாயாசம் ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தினை, ஏலக்காய் பொடி, சர்க்கரை அல்லது வெல்லம், பால், நெய், முந்திரி பருப்பு. தினையை சமைப்பதற்கு முன்பாக சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் அதை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான அளவு வெல்லத்துடன் நீரை சேர்த்து பாகாக தயார் செய்து கொள்ள வேண்டும். வெல்லத்துடன் சில நேரம் மண் இருப்பது போன்று தெரிந்தால், தண்ணீரில் நன்றாக கரைத்து பின்னர் அதை வடி கட்டி எடுத்து பாகாக தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஏலக்காய் பொடி, தினை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்த தினை என்பதால் ஒரு கொதிக்கு பிறகு, இதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் நிறுத்திக் கொள்ளலாம். 

பின்னர் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்க்க மணமிகுந்த தினை பாயாசம் ரெடியாகி விடும். இது குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும், அதே நேரம் உடலுக்கு ஊட்டம் தருவதாகவும் அமைகிறது. இலக்கியங்களிலே வேட்டுவர்கள் தேனையும் தினை மாவையும் கலந்து சாப்பிட்டு விட்டு காடு மேடுகளில் நாள் முழுவதும் வேட்டையாடி திரிந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தினை மிகுந்த பலத்தை கொடுப்பதாக அமைகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியதாக தினை விளங்குகிறது. சிறுநீரை வெளித்தள்ளக் கூடியதாக, பசியை தூண்டக் கூடியதாக, வயிற்று கோளாறுகளை சரி செய்யக் கூடியதாக அமைகிறது.

அதே போல் தினையை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய லட்டு எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் தினை மாவு, ஏலக்காய் பொடி, சர்க்கரை, வறுத்து அரைத்து எடுத்து வைத்துள்ள தினை மாவுடன் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிது ஏலக்காய் பொடியை சேர்க்க வேண்டும். 

பின்னர் நெய்யை சூடாக உருக்கி தேவையான பதத்தில் இந்த கலவையுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக லட்டாக பிடித்துக் கொள்ளலாம். உருகிய நெய்யின் சூட்டிலேயே சர்க்கரை கரைந்து மாவுடன் இணைந்து விடும்.சூடு இருக்கும்போதே லட்டாக பிடித்தால் நன்றாக உருண்டையாக வரும். தேவைப்பட்டால் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்து இதனுடன் சேர்ப்பதால் சுவையும், உடலுக்கு ஊட்டமும் கிடைக்கக் கூடிய பண்டமாக இருக்கும். இது குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கும். 

ஆக்ரோஷம் பித்தம் தணிக்கும் பழையசோறு!

ht4267
அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம் ,வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம்சாமி!” -இது வெயில்காலத்தில், வேப்பமரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்  கூடியவசனம். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல 100 சதவிகிதம் உண்மை. ‘ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில் தான் அத்தனைசத்துகளும் இருக்கின்றன.

‘நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக்கலந்தது பழையசாதம். காலையில் ஒரு முட்டிகஞ்சியை, வெங்காயம், பச்சைமிளகாயோடு சேர்த்துக்குடித்துவிட்டு தான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப்பழஞ்சோறு தான் கொடுத்தது.

‘சாதத்தைவடித்து, அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால், மறுநாள் காலையில் அது பழையசாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததில் மண்பானை பழையசாதத்தில் தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும் போது அதில் நுண்ணுயிர்கள்(லாக்டிக்ஆசிட்பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால் தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச்சத்தும்(ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம்.

சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை விட,தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச் சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது. மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறு முட்ட சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, ‘பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும். பழையசாதத்தின் ஆயுள் 15 மணி நேரம் தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் பழையசாதத்தை அறையின் வெப்ப நிலையில் வைக்கக் கூடாது.சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்

பழைய சாதம் பற்றி, நம்பாரம் பரியமருத்துவம் என்னசொல்கிறது? 

‘அகத்தியர் குணவாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில்காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் ‘நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழையசோறு. ‘பிரமேயம்’ எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத்தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க் குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால் தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது. 
சுருங்கச்சொன்னால், ‘ஆற்று நீர் வாதம் போக்கும், அருவிநீர் பித்தம் போக்கும், சோற்றுநீர் இரண்டையும் போக்கும்’.

ஆஸ்துமாவை குணமாக்கும் தேன்

ht4214நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சிக்கொண்டு வந்து தேன்கூட்டில் அடைகிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு, தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய் தீர்க்கும் மருந்து தான் தேன். அந்த காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தோனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுத்து வருகின்றனர்.

தேனில் உள்ள சத்துக்கள்

இயற்கையாகவே சத்தும் சுவையும் உள்ள உணவு தேன். தேனில் வைட்டமின் B2,B6 H(biotin), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. 
200கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள் தேனில் உள்ளது. தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும் உடலுக்கு அது கசப்பு சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை. எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம் பெறுகின்றன.

மருத்துவம்
தேன் மூலம் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும். பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்ணும் முன் சுத்தமான தேனை ஒன்று முதல் 3 தேக்காரண்டி எடுத்து கொண்டு ஆறிய சுடுநீருடன் கலந்து குடித்து வந்தால் இரைப்பை அழற்சி, ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழம் சாறுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி சரியாகும். 
குடல் புண்கள், காய்ச்சல், இருமல், இருதய நோய்கள் போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம் சீதபேதி போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும். இதில் உள்ள பொட்டாஷியம் மூட்டு வலியை போக்குகிறது. 
வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் வயிற்று உபாதைகளை அனைத்தும் நீங்கிவிடும்.

தூக்கம் வரும்
குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். இருதயம், நுரையீரல் இரைப்பை ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். தோடு ரத்த நாளங்களிலும், குடலிலும் சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளாக வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. 
பழமும் தேனும்
தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடும் போது புது ரத்தம் உருவாகும். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும். ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும். நெல்லிக்காயுடன் தேன் கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.

கண் பார்வைக்கு
கண் பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வர வேண்டும். தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். 
இருமல்
இரவி்ல் தூங்கவிடாமல் தொடர்ந்து வரும் இருமலுக்கு மிளகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் வெகுவாக குறைந்து நிம்மதியாக தூக்கலாம்.
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல் தொண்டை வலி, மார்பு சளி, மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா 

அரை கிராம் கருப்பு மிளகை பொடிசெய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

ரத்தகொதிப்பு 
ஒரு தேக்கரண்டடி அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

கொழுப்பு குறைப்பு
ஒரு டம்ளரில் மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை பருகவும். இது ரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

தீப்புண்கள் 
தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவவேண்டும். தேனுக்கு காயத்தை ஆற்றும் தன்மையும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகம் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும். 

கல்லீரலை பலப்படுத்தும் சீரகம்

ht4173நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள் பலவற்றையும் அது பாதிக்கிறது. எனவே நீரை பயன்படுத்தி மருத்துவ முறையை மேற்கொள்ளும் முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இதற்காகத்தான் நெய்யை உருக்கு, மோரை பெருக்கு, நீரை சுருக்கு என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், நெய்யை நன்றாக உருக்கி பயன்படுத்த வேண்டும். மோரை நன்றாக நீர் மோராக மாற்றி நீர்க்கச் செய்து பருக வேண்டும்.

அதே போல் நீரை சுருக்கு என்றால், தண்ணீரை நன்றாக காய்ச்சி வடிகட்டித்தான் பருக வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நமக்கு அன்றாடம் கிடைக்கும் எந்த வகை தண்ணீராக இருந்தாலும் அது மிகவும் சுத்தமானதாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சுத்தமான குடிநீர் அவசியம் ஆகும். எனவே நாம் அன்றாடம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தண்ணீரை சுத்தமான, ஆரோக்கியமான குடிநீராக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சீரகம், சோம்பு, வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் அன்றாட குடிநீரையே மருத்துவ குடிநீராக மாற்றலாம். ஒரு டம்ளர் நீர் அளவுக்கு தயார் செய்வதற்கு, நாம் அரை ஸ்பூன் அளவுக்கு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக காய்ச்சிய நீரில் இட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். இதை சீரக குடிநீர் என்றும், சீரக ஊறல் நீர் என்றும் சொல்வார்கள். சீரகம் நன்றாக ஊறிய பிறகு இதை மீண்டும் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை டம்ளர் அளவுக்கு எடுத்து அதை ஒரு டம்ளராக சுருக்கிக் கொள்ள வேண்டும்.

இது மிகுந்த மருத்துவ குணம் உடையதாகும். உள் உறுப்புகளை சீர் செய்வதாலேயே இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. சீரகத்தை எந்த வகையில் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டாலும் அது உள்ளுறுப்புகளை சீர் செய்யும் குணம் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாக செரிமானத்தை தூண்டக் கூடியது. மலச்சிக்கலை போக்கக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடியது. சீரகம் உடலுக்கு உஷ்ணத்தை தந்து வியர்வையை வெளியேற்றக் கூடியது. கல்லீரலை பலப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்தக் கூடியது.

அதே போல் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தி மருத்துவ குடிநீர் தயார் செய்யலாம். தண்ணீரை நன்றாக காய்ச்சி எடுத்து அதில் 3 முதல் 4 மணி நேரம் வரை ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சோம்பை சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க செய்ய வேண்டும். பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பெருஞ்சீரகம் பித்த சமனியாக செயல்படுகிறது. வயிற்று கோளாறுகளை சோம்பு போக்குகிறது. மிக சிறந்த மலமிளக்கியாக சோம்பு செயல்படுகிறது. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது.

சர்க்கரை நோய்க்கு சோம்பு குடிநீர் மிகச் சிறந்த மருந்தாகிறது. சோம்பு வயிற்றில் ஏற்படும் புற்று நோய் கிருமிகளை முன் கூட்டியே வராமல் தடுக்கும் சக்தி உடையது. இதனால்தான் நமது கலாச்சாரத்தில் உணவுக்கு பிறகு சோம்பை வாயில் இட்டும் மெல்லும் பழக்கம் உள்ளது. இது போல் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களையும் கொண்டு மருத்துவ குடிநீரை தயார் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மரவள்ளிக்கிழங்கு பெண்களுக்கு நல்லது!

ht4208கிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், மற்ற கிழங்குகளுடன் ஒப்பிடும் போது, மரவள்ளியில் மருத்துவக் குணங்கள் அதிகம்!

எப்போதும் உருளைக்கிழங்கே கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு மாற்றாக மரவள்ளிக் கிழங்கில் விதம் விதமான 
உணவுகளை செய்து கொடுக்கலாம். உருளையில் செய்ய முடியாத பல உணவுகளை இதில் செய்ய முடியும் என்பதும், ஆரோக்கியமாக சமைக்கலாம் என்பதும் கூடுதல் தகவல்கள்’’ என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.மரவள்ளிக்கிழங்கின் மகத்துவம் பற்றிச் சொல்லும் அவர், அதை வைத்து ஆரோக்கியமான 3 ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார்.

பிரேசிலில் பிறந்த மரவள்ளிக்கிழங்கு மெதுவாக டிராபிகல் நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. உணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் – குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான  மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு  உதவுகிறது. ஆசிய நாடுகளில் இதைப் பதப்படுத்தி வீட்டிலேயே கஞ்சி மாவு செய்து குழந்தைகளுக்கு ஊட்டுவார்கள். எளிதில் ஜீரணமாகும் இந்தக் கஞ்சி குழந்தையின் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்… முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.

அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது. அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.

என்ன இருக்கிறது?  (100 கிராம் அளவில்)


உருளைக்கிழங்கைப் போன்ற சுவை உடைய மரவள்ளிக்கிழங்கு அதை விட சத்தானது.
 
பச்சை மரவள்ளிக்கிழங்கில்…


ஆற்றல்    157 கிலோ
கலோரிகள்
புரதச்சத்து     0.7 கிராம்
கொழுப்புச்சத்து      0.2 கிராம்
மாவுச்சத்து     28.2 கிராம்
நார்ச்சத்து    0.6 கிராம்
கால்சியம்    50 மி.கி.
பாஸ்பரஸ்    40 மி.கி.

       
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்


ஆற்றல்    338 கிலோ
கலோரிகள்
புரதச்சத்து    1.3 கிராம்
கொழுப்புச்சத்து      0.3 கிராம்
மாவுச்சத்து      82.6 கிராம்
நார்ச்சத்து    1.8 கிராம்
கால்சியம்    91 மி.கி.
பாஸ்பரஸ்    70 மி.கி.


பச்சை மரவள்ளியைவிட, மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், எண்ணெயில் வறுத்து சாப்பிடாமல் அவனில் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது (முக்கியமாக பருமன் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்).

ஆரோக்கிய ரெசிபி


சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு

என்னென்ன தேவை?


வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப், பச்சை சுண்டைக்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க, பூண்டு – 10 பல், வெங்காயம் – 2, தக்காளி -1, உப்பு – தேவைக்கேற்ப, குழம்பு மிளகாய்தூள்- 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு சுண்டைக்காயை சேர்த்து வதக்கி, மரவள்ளிக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக சிறிது நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.

ஆரோக்கிய ரெசிபி
மரவள்ளிக்கிழங்கு புட்டு

என்னென்ன தேவை?

வேக வைத்து, ஆற வைத்து நீளமாகத் துருவிய மரவள்ளிக் கிழங்கு – 100 கிராம், வெல்லம் அல்லது பனைவெல்லம் – 50 கிராம், தேங்காய்த் துருவல்- 50 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு- சிறிது, ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


மரவள்ளிக்கிழங்கை  வேக வைத்து ஆறியதும் துருவுங்கள். அப்போதுதான் நன்றாகத் துருவ வரும். அத்துடன் மற்ற பொருட்
களைக் கலந்து, அப்படியே பரிமாற 
வேண்டியதுதான்.

ஆரோக்கிய ரெசிபி
மரவள்ளிக்கிழங்கு அடை

என்னென்ன தேவை?

தோல் நீக்கி, அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – சிறிது, எண்ணெய் – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

எப்படிச் செய்வது?


பருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாக வார்க்கவும். வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் பரிமாறவும். 

சுக்கு மருத்துவக் குணங்கள்

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

இதய நோய் மற்றும் இரத்த அழுத்தை குணபடுத்தும் தேனில் ஊறவைத்த பூண்டு செய்வது எப்படி..?

இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது.....
தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20.
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.
பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.
பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.
நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

நரம்பு சுருட்டல் கட்டுப்படுத்துவது எப்படி?

நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins)என்கிறோம். இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்.பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது. குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும். இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள், தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது.
காரணங்கள்: அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை. ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்.
அறிகுறி:இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்னை ஏற்படும். கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்
பிரச்னைகள்: தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும். டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும். இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும் மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.
சிகிச்சை: ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது. ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும் அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும் சிகிச்சை மூலம் பலன்பெறலாம்.
ஆயுர்வேத சிகிச்சை:தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம், புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி, மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு போன்றவை நல்ல பயன்களை தருகிறது. ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது.
தவிர்ப்பு முறை:அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும். இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம். தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.
வீட்டு வைத்தியம்: வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும். புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

குடற்புழுக்கள் நீங்கிட

குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் :-

1) தொண்டை கரகரப்பு :-
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
2) தொடர் விக்கல் :-
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
3) வாய் நாற்றம் :-
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
4) உதட்டு வெடிப்பு :-
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
5) அஜீரணம் :-
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
6) குடல்புண் :-
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
7) வாயு தொல்லை :-
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
8) வயிற்று வலி :-
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
9) மலச்சிக்கல்:-
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
10) தேமல் :-
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.
தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

க்ளென்சராக செயல்படும் நெல்லி

10380968_1093280167397439_1562540544932811055_nநெல்லிப் பொடியைத் தண்ணீரில் கலந்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், பொடுகு முற்றிலும் நீங்கிவிடும். மருதாணிப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, அவுரிப் பொடி மூன்றையும் கூந்தலில் பூச, இளநரை மறைந்து, இயற்கையான கருமை நிறம் கிடைக்கும். இதில் வைட்டமின் சி சத்து இருப்பதால், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.
சருமத்துக்கு க்ளென்சராக செயல்படும். தினமும் காலை, ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர, முடி உதிர்தல் பிரச்னை நிற்கும். நெல்லிச் சாற்றை முகத்தில் தடவினால், அதில் உள்ள கொலஜன் (வெண்புரதம்) சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

எதற்காக பச்சை பட்டாணி சாப்பிட வேண்டும்?

green_peace_003பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன.
பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு.
100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது.
பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம்.
ஃபோலேட் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது.
பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விட்டமின் சி நிறைய உள்ளது.
இதில் உள்ள விட்டமின் கே, எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதில் விட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
நியாசின், தயாமின் மற்றும் பைரிடாக்சின் ஆகிய பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கால்சியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, துத்தநாகச் சத்து மற்றும் மாங்கனீஸ் சத்துகளையும் உள்ளடக்கியது பட்டாணி.
பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், தேன் முதலியவற்றைக் கூட உண்ணாத பழக்கமுள்ளவர்களின் புரதத் தேவையை ஈடுகட்டுவதில் பச்சைப் பட்டாணிக்கும் பெரிய பங்கு உண்டு.
இவற்றின் மூலம் தரமான, போதுமான புரதச்சத்து கிடைக்கும்.
முளை கட்டிய பட்டாணி இன்னும் சத்தானது. தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்.பட்டாணியில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் (Phytosterols), உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
*****
Puradsifm's photo.

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறத
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

********

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.


Puradsifm's photo.**********

பாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.
வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன.
வேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை சாப்பிடலாம்.
இதில் தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
குறிப்பாக பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இதய நோய்கள் வராமல் பாதுகாப்பதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
இதில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையுடன் இருக்கவும் வழி வகுக்கிறது.
மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். இதில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
இதனை கொண்டு வேர்க்கடலை குழம்பு செய்து சாப்பிடலாம்.
செய்முறை
முதலில் வேர்க்கடலையை இரண்டு மணிநேரம் ஊறவைத்து, வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் புளிக் கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும், இதனுடன் தேவையான அளவு சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்தவுடன் வேக வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து இறக்கினால் சுவையான குழம்பு ரெடி.

Puradsifm's photo.
**********

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.
***********

🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
**************


சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது.
மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்

********