வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசும் ஆளுநர் -கடும் கண்டனம்

 இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசும் ஆளுநர் -கடும் கண்டனம் தேதி: 14.08.2025

இறைவனின் திருப்பெயரால்...
இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
இந்தியப் பிரிவினையின் போது பல இலட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், இந்த வன்முறையை முஸ்லிம் லீக் தான் திட்டமிட்டு கட்டவிழ்த்ததாகவும், மேலும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரை காஃபிர் என்று முத்திரை குத்தியதால் பல இலட்சக்கணக்கானோர் வேரறுக்கப்பட்டதாகவும், ராஜ் பவனின் x தளத்தில் பதிவிடப் பட்டுள்ளது
அறத்திற்கு அப்பாற்பட்ட வகையில், குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து கருத்துக்களை வெளியிடுவது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை, மத நல்லிணக்கத்தை குலைக்கும், வெறுப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர், அரசியல் மற்றும் மத பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டு, பக்க சார்பற்ற நடுநிலையாளராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் பதவியின் மதிப்பையும் மரியாதையையும் மீறி, குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமூகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவிப்பது உலகறிந்த விஷயமே!
தமிழகத்தில் இதற்கு முன்பு எந்த ஆளுநரும், இவ்வாறு மோசமான மற்றும் பாகுபாடான முறையில் கருத்து வெளியிட்டதில்லை.
நடுநிலையாளர் ஆக இருக்க வேண்டியவர், தன் சொற்களால் சமுதாயத்தில் விரிசல் உண்டாக்குவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல.
மேலும், இந்தியப் பிரிவினையின் போது இலட்சக்கணக்கான மக்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக அவர் தெரிவிக்கும் கருத்திற்கு நம்பகமான ஆதாரம் ஏதேனும் அவரிடம் உள்ளதா?
கொல்லப்பட்டவர்கள் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்? எங்கு, எப்போது, எப்படி என்ற உண்மையான விவரங்களை அவர் சமர்ப்பிக்க முடியுமா?
காஃபிர் என முத்திரை குத்தி, இலட்சக்கணக்கான மக்களை முஸ்லிம்கள் வேரறுத்தார்கள் என்ற அவரது கருத்திற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.
சமுதாயத்தில் அவதூறுகளை பரப்புவதன் மூலம் வெறுப்பை விதைக்க அவர் முயற்சிக்கிறார்.
மத நல்லிணக்கம், சகோதரத்துவம், மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை புறக்கணிக்கும் ஆளுநரின் இத்தகைய போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இப்படிக்கு,
முஜீபுர் ரஹ்மான்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
Date: 14.08.2025
In the name of God...
Governor R throws scandal against Muslims. My. Tamil Nadu Tawheed Jamaat strongly condemns Ravi
Posted on Raj Bhawan's x site that lakhs of children were killed during the Indian division, planned and unleashed the violence by Muslim League, and many lakhs were rooted for Muslims labeling other communities as kafir
Governor R publishes comments targeting a particular society beyond ethics. My. This is not the first time for Ravi. Many times before, he has published hatred comments that disturb religious reconciliation.
The governor of a state should be a side-dependent junior, beyond political and religious discrimination. But Governor R. My. Ravi, outrageous his post's value and respect, commenting in support of a particular community and against another community is the world known thing!
No governor in Tamil Nadu has ever commented in such a bad and discriminatory manner before.
Must be a neutral, cracking society with his words is not suitable for a democratic country like India.
Also, does he have any reliable proof for his comment that millions of people were killed by Muslims during the Indian division?
Which areas do the killed belong to? Can he submit real details of where, when and how?
There is no historical evidence for his opinion that Muslims rooted millions of people, labeling as Kafir.
He tries to sow hate by spreading scandal in society.
Tamil Nadu Tawheed Jamaat strongly condemns such a trend of governor to ignore religious harmony, brotherhood, and core values of Indian Constitution.
By,
Mujibur Rahman
General Secretary,
Tamil Nadu Tawheed Jamaat.