வியாழன், 4 செப்டம்பர், 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி கோரிக்கை!

 வட இந்திய மாநிலங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர், உத்ரகண்ட் , இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும்  பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த வெள்ளப்பாதிப்பில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் அறுவடைக்கு தயாராகியிருந்த  3.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன.


மக்களவை எதிர்கட்சித்தலைவரும் காங்கிரச் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

மோடி அவர்களே, பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலையளிக்கிறது.

இதுபோன்ற கடினமான காலங்களில், உங்கள் கவனமும் மத்திய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற போராடி வருகின்றன.

இந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, ஒரு சிறப்பு நிவாரண நிதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/special-funds-should-be-provided-to-flood-affected-states-rahul-gandhi-demands.html