வெள்ளி, 19 டிசம்பர், 2025

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

 

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


12-ஆம் வகுப்பு:

செய்முறைத் தேர்வு: பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14 வரை.

பொதுத்தேர்வு: மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை.

தேர்வு முடிவுகள்: மே 8-ஆம் தேதி (உத்தேசமாக).

10-ஆம் வகுப்பு:

செய்முறைத் தேர்வு: பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 28 வரை.

பொதுத்தேர்வு: மார்ச் 3 முதல் மார்ச் 27 வரை.

தேர்வு முடிவுகள்: மே 20-ஆம் தேதி (உத்தேசமாக).

கடந்த 2018 மார்ச் முதல் 2026 ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மார்ச் 3 முதல் 27 வரை நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கேற்கலாம். இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் 21 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநிலக் கல்விக் கொள்கையின் (SEP) அடிப்படையில், நடப்புக் கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத்தேர்வு 7,513 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 8.07 லட்சம் மாணவர்கள், 3,317 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல 10-ஆம் வகுப்பு தேர்வு 12,485 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 8.70 லட்சம் மாணவர்கள், 4,113 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-public-practical-exam-class-10-and-12-timetable-10922617