வெள்ளி, 25 ஜூலை, 2025

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

 இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது மாநிலம் மணிப்பூர் . கடந்த 2023ஆம் ஆண்டு இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் மெய்தி இன மக்களுக்கும், சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில்  250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்துக்கு உள்ளேயே குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்


மணிப்பூரில் வன்முறையை தடுக்கத் தவறியதாக பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசு மீது இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.மேலும் பாஜகவை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள், பிரேன் சிங்கை பதவி நீக்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து 2025 பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்தார். இதனால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூலை 25) மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



source https://news7tamil.live/presidents-rule-extended-in-manipur-for-another-6-months.html