செவ்வாய், 9 செப்டம்பர், 2025

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒரு மரணம்!

 கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மலப்புரம் வண்டூர் பகுதியை சேர்ந்த சோபனா (56) நோய் அறிகுறிகளுடன் கடந்த 4 ம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த இரண்டு மாதத்தில் இந்த அமீபிக் காய்ச்சலால் 5  பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து  உயிரிழப்புகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.



source https://news7tamil.live/another-death-due-to-amoebic-encephalitis-in-kerala.html