ஞாயிறு, 21 டிசம்பர், 2025

வாக்காளர் பட்டியலில் உங்க பெயரை செக் பண்ண

 sir

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விபரங்களைச் சேகரித்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் சுமார் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, வரும் தேர்தல்களில் வாக்களிக்க உங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். இதற்கு அலுவலகங்களுக்குச் செல்லாமல், உங்கள் மொபைல் போனிலிருந்தே கீழ்க்கண்ட எளிய முறையில் சரிபார்க்கலாம்:

1950 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது எப்படி?
வாக்காளர் பட்டியலில் உங்கள் விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை அறிய இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பிரத்யேக வசதியை வழங்கியுள்ளது.

உங்கள் மொபைலில் மெஸேஜ் பகுதிக்குச் செல்லுங்கள்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய 1950 என்ற எண்ணிற்கு மெஸேஜ் அனுப்பி தெரிந்துகொள்ளலாம். 

அதில் ECI < space> உங்கள் EPIC எண்( எ.கா:ECI SXT000001) என டைப் செய்யுங்கள். 

இந்தச் செய்தியை 1950 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

உங்களுக்கு கிடைக்கும் விபரங்கள்:
நீங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பிய சில நொடிகளில், பதில் குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். அதில் உங்கள் பெயர், பட்டியலில் உள்ள வரிசை எண் (Serial Number), பாகம் எண் (Part Number), தொகுதி (Constituency) போன்ற விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை தகவல் வரவில்லை என்றாலோ அல்லது பெயர் நீக்கப்பட்டிருந்தாலோ, உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிடலாம்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/check-if-your-name-is-in-the-draft-electoral-roll-via-sms-10927925