திங்கள், 18 ஆகஸ்ட், 2025

தேர்தல் முறைகேடு: தேர்தல் ஆணையத்திற்கு, எதிராக புதுவை காங்கிரஸ் தீபந்த ஊர்வலம்!

 

Pudhg

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பாக தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பாஜக அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் இயக்கமாக முன்னெடுப்பதன் முதல் கட்டமாக "வாக்கு திருடனே, பதவி விலகு" என்று முழக்கத்தோடு தீப்பந்தம் ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

இந்தியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு தேர்தல் முறைகேடு செய்து பதவிக்கு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி வரும் நிலையில், நாடு முழுவதும் பல இடங்களில் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பாக தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பாஜக அரசின் சூழ்ச்சிகளையும் வெளி கொண்டு வரும் வகையில், தீப்பந்தம் ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பாஜக அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் இயக்கமாக முன்னெடுப்பதன் முதல் கட்டமாக "வாக்கு திருடனே, பதவி விலகு" என்று இந்த ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. வாக்கு திருட்டுக்கு உதவிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணி கொக்கு பார்க் தூங்கியது.முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எட்டி வைத்திலிங்கம் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன்  கலந்து கொண்டனர்

தேர்தலை நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறவும், மோடி பிரதமராக பதவி ஏற்கவும், வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பது நமது தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குப் பிறகு உறுதியாகியுள்ளது. வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பாக பேரணி  நடந்தது

பாபு ராஜந்திரன் புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/tamil-puducherry-youth-congress-rally-against-bjp-and-election-commision-9669905