* சூனியம் என்ற சொல்லே
'' சொல் வழக்கிலிருந்து
'' நீக்கப்படும் நாள் நெருங்கி விட்டது *
கடந்த 31-07-20014 அன்று திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த
அரோரி மணிகண்டன்
என்ற சூனியக்
காரருக்கும், தமிழ்நாடு தவஹீத் ஜமாத் மாநில
தலைவர் சகோ:
பி.ஜைனுல்
ஆபிதீன் உலவி
அவர்களுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் மூலமாக
நம்முடைய நினைவுக்கு
வருவது மூஸா
(அலை) அவர்கள்
காலத்தில் ஃபிர்அவ்ன்
அரண்மனையில் மூஸா(அலை) அவர்களுக்கும் எகிப்து
மாநகரின் மூளை,
முடுக்குகளில் உள்ள அனைத்து சூனியக்காரர்களுக்கும் இடையில் நடந்த சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலானப்
போட்டியின் இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஒட்டு
மொத்தமாக சத்திய
இஸ்லாத்தை ஏற்று
ஸஜ்தாவில் வீழ்ந்த
வரலாற்று சிறப்பு
மிக்க நிகழ்வு
தான் நினைவுக்கு
வருகிறது.
குறிப்பிட்ட நாளில்
குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.உடனே மூஸா
தமது கைத்தடியைப்
போட்டார். அவர்கள்
செய்தவற்றை அது விழுங்கி விட்டது.
சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்."மூஸா மற்றும்
ஹாரூனின் இறைவனாகிய
அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்'' என்றனர்.
திருக்குர்ஆன்.26:38,45,46,47,48.
அதேப் போன்று
இன்ஷா அல்லாஹ்
இந்த சூனியக்காரர்
மணிகன்டனும் தோல்வி அடைந்து சத்திய இஸ்லாத்தை
தன்னுடைய வாழ்க்கை
நெறியாக ஏற்றுக்
கொள்வதுடன், தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வெளியேயும்
உள்ள அப்பாவி
மக்களின் அறியாமையைப்
பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி எத்திப் பிழைக்கும்
சூனியக்கார கும்பல் அனைவரும் இஸ்லாத்தை ஏற்கும்
நிலை இன்ஷா
அல்லாஹ் உருவாகியேத்
தீரும். வல்ல
அல்லாஹ் தன்
ஏகத்துவத்தை நிலைநாட்டியேத் தீருவான்.
அசத்தியம் நிலைத்ததாக
வரலாறே கிடையாது,
சத்தியம் அசுர
வேகத்தில் மேல்
நோக்கி செல்லும்
போது அசத்தியம்
அதள பாதாளத்தில்
சென்று மண்ணை
கவ்வியேத் தீரும்
இன்ஷா அல்லாஹ்.
*அசத்தியத்தைக் கண்டு
அஞ்சா நெஞ்சம்
கொண்ட அறிஞர்
*
கடந்த 32 வருடங்காளக
சூனியம் இல்லை,
சூனியம் இல்லவே
இல்லை, சூனியக்
காரர்களே !. சூனியம் இருந்தால் என்னுடைய கை,கால்களை முடக்கி
செலிழக்கச் செய்துப் பாருங்கள் என்று பல
பொதுக் கூட்டங்களில்
பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் பிரகடனம் செய்து
வந்தார் அறிஞர்
பீ.ஜே.
அவர்கள். இதுநாள்
வரை எந்த
சூனியகாரனுக்கும் இது விஷயமாக சொரனை வந்ததே
இல்லை, இப்பொழுது
ஒரு சூனியக்காரனுக்கு
சொரனை வந்ததில்
நமக்கு சந்தோஷம்
தான்.
கடந்த கால்
நூற்றாண்டுகளுக்கு முன் அல்லாஹ்வுடைய
பள்ளியில் கூடாத
கூட்டம் அவுலியாக்களின்
தர்ஹாக்களில் கூடியது, அல்லாஹ் என்றதும் வராத
அச்சம் அவுலியா
என்றதும் வந்து
உடலையே நடுங்கச்
செய்து விடும்
அவுலியாக்களுடைய பக்தி தமிழகத்தை உலுக்கி எடுத்த
கால கட்டத்தில்
அவுலியாக்களிடம் எந்த சக்தியும் இல்லை, அனைத்து
ஆற்றலும் வல்லமை
மிக்க அல்லாஹ்வுக்கே
உரியது என்று
தர்ஹாக்களின் மினாராக்கள் விண்ணுயரத்தில்
எழுப்பி கட்டப்பட்ட
பிரசித்திப் பெற்ற ஊர்களில் மையப்பகுதியில் திறந்த
வெளியில் நின்று
கொண்டு நெஞ்சுரத்துடன்
முழங்கமிட்டார் அறிஞர் பீஜே அவர்கள் ஆனால்
எந்த அவுலிவாலும்
இதுவரை அவரை
எதுவும் செய்ய
முடியவில்லை.
அல்லாஹ்வின் மீது
அசைக்க முடியாத
நம்பிக்கைக் கொண்ட மிகச் சிறந்த இறையச்சமுடைய
அந்த அறிஞரை
திடீர் சொரனைப்
பிறந்த இந்த
மணிகன்டனின் சூனியம் ஒன்றும் செய்ய முடியாமல்
போவதுடன் இன்ஷா
அல்லாஹ் இத்துடன்
சூனியம் என்ற
சொல்லே 'சொல்
வழக்கிலிருந்து' நீக்கப்பட்டு விடும்.
* அல்லாஹ்விடம் அழுது
கேளுங்கள் *
ஏகத்துவ கொள்கை
சொந்தங்களே !
சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான
இந்த போட்டியில்
சத்தியம் வெல்வதற்கு
ஏக இறைவனாகிய
சர்வ வல்லமைப்
பொருந்திய அல்லாஹ்விடம்
அழுது துஆ
கேளுங்கள்.
நாம் சத்தியத்தில்
உறுதியாக இருக்கின்றோம்
அல்லாஹ் ஒருபோதும்
நம்மை கை
விட மாட்டான்
என்ற அசைக்க
முடியாத நம்பிக்கை
அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு இருந்தும் வெறுமனே
இருந்து விடாமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடத்திலே
ஸஜ்தாவில் விழுந்து
பத்ரு யுத்தத்தின்
வெற்றிக்காக அழுது கேட்டதை நினைவு கூர்ந்து
நாமும் ஒவ்வொருவரும்
இந்த வெற்றிக்காக
அழுது கேட்க
கடமைப் பட்டுள்ளோம்.
பத்ருப் போரின்போது
கூடாரமொன்றில் இருந்தபடி இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
, '(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ
கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், வாக்குறுதியையும்
(நிறைவேற்றித்தரும்படி) உன்னிடம் கோருகிறேன்.
இறைவா! (இந்த
விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை
(மட்டுமே) வழிபடுவோர்
(இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்''
என்று பிரார்த்தித்துக்
கொண்டிருந்தார்கள். அப்போது அபூ
பக்ர்(ரலி),
நபி(ஸல்)
அவர்களின் கையைப்
பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர்
அவர்களே! தங்கள்
இறைவனிடம் தாங்கள்
நிறையவே மன்றாடி
விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள்
கவசஉடையுடன் எழுந்து, 'இந்த (இறை நிராகரிப்பாளர்)
குழுவினர் அதிவிரைவில்
தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்''
எனும் (திருக்குர்ஆன்
54:45 வது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள்.
நூல் : புகாரி.
4874