சனி, 29 பிப்ரவரி, 2020

MK Patti - தர்ணா போராட்டம்


credit : POV

தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது : ப.சிதம்பரம்


29/02/2020.தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு  மத்திய அரசைக் காட்டிலும் டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது. கன்னையா குமார்  மற்றும் பிறர் மீது ஐபிசி பிரிவு 124 ஏ மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.   
credit indianexpress.com

தர்ணா போராட்டம்






தர்ணா போராட்டம் - நமது யூடியூபில் காண :https://www.youtube.com/channel/UCwx0YmAziDXywB-7-tS6oyA

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

Masjid-கள் தீயில் இரையானது போதும்... சிவன் கோவிலை காக்க முன்வந்த இஸ்லாமியர்கள் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட எங்கள் பகுதிகளில் எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.

Masjid-கள் தீயில் இரையானது போதும்... சிவன் கோவிலை காக்க முன்வந்த இஸ்லாமியர்கள் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட எங்கள் பகுதிகளில் எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றது. இதில் பலர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிறைய வழிபாட்டுத் தலங்களும் நொறுக்கப்பட்டன. கலவரத்தின் போது மூன்று Masjid கள் அடித்து நொறுக்கப்பட்டது. டெல்லியின் பழைய முஸ்தஃபாபாத்தின் பாபு நகரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு எந்தவிதமான சேதாரமும் வரக்கூடாது என இரண்டு மதத்தினரும் இரவும் பகலும் பாதுகாத்து வருகின்றனர்.






CREDIT INDIANEXPRESS.COM










aடெல்லி பல்கலைகழத்தில் பி.ஏ. படிக்கும் முகமது ஹசீன் (24) என்பவரும் இந்த கோவிலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். எந்த நேரத்திலும் வன்முறை கலவரங்களை எதிர் கொள்வதற்கு போதுமான அளவு பொதுமக்கள் இங்கே இருக்கின்றோம் என்றோம், எங்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது. எந்த காரணம் கொண்டும் அந்த ஒற்றுமையை நாங்கள் குலைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
credit : indianexpress.com







































வங்கி ஏ.டி.எம்.,களில் ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய நிதியமைச்சர்

வங்கி ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கியும் குறைத்து விட்ட நிலையில், வங்கி ஏஎடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என இந்தியன் வங்கி அண்மையில் தெரிவித்திருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை” என தெரிவித்தார்.
credit ns7.tv

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்: தமிழக அரசு

Image
அரசு ஊழியர்கள் பணிநேரத்தின்போது, கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பாலான அரசு அலுவலர்கள், பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாகவும், அது போன்ற புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அடையாள அட்டை அணிவது தொடர்பாக, துறை செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
credit ns7.tv

CAA-விற்கு எதிரான போராட்டத்தை கைவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.... February 28, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் கடந்த 15 நாட்களாக தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இரண்டாவது முறையாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிலுள்ள சில சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த விளக்கம் கிடைத்தவுடன் போராட்டக் குழுவுக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் எனவும் முதல்வர் கூறியதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
credit ns7.tv

பாத் பீகார் கி' சுற்றுப்பயணம்: பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு


‘பாத் பீகார் கி’ என்ற அரசியல் சுற்றுபயணத்தை கடந்த பிப்ரவரி 20ம் தேதி பிரசாந்த் கிஷோர் பீகாரில் தொடங்கினார். இந்த சுற்றுபயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த முதல் பத்து மாநிலங்கள் பட்டியலில் பீகாரை கொண்டு வரவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது.
அதற்காக, அடுத்த நூறு நாட்களுக்குள் குறைந்தது 10 மில்லியன் பீகார் இளைஞர்களை சந்திக்கும் வகையில் இந்த அரசியல் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாஸ்வத் கவுதம் என்பவர் பாடலிபுத்ர  காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரசாந்த் கிஷோரின் ‘பாத் பீகார் கி’ திட்டம் தன்னுடைய கற்பனையில் உருவானது என்றும், இந்த திட்டத்தை தான் விரைவில் செயல்படுத்த இருந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.
மேலும், தனது புகார் மனுவில், தானும், ஒசாமா என்பவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த பாத் பீகார் கி திட்டத்தை ,  பிரசாந்த் கிஷோரிடம் விவரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சாஸ்வத் கவுதம் புகாரை அடுத்து, பாடலிபுத்ர காவல்  துறை, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 420 (ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி அவரைத் தூண்டி, ஒரு சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தல்) 406 (நம்பிக்கையை மீறியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்துள்ளது.
இதுகுறித்து, பிரசாந்த் கிஷோர் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக தான் பயணித்த ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தார் பிரசாந்த் கிஷோர். இந்த ஆண்டு ஜனவரி இறுதியில்,அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், பிப்ரவரி 18ம் தேதி செய்த்கியாளர்கள் சந்திப்பில் ‘பாத் பீகார் கி’ என்ற சுற்றுப்பயணம் குறித்து அறிவித்தார். பீகார் சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
credit indinaexpress.com

செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள்

செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் - ஆய்வு ரிப்போர்ட் மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட நிலையில், மற்ற விஷயங்களோடு இப்போது, மன அழுத்தம் உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப்...

மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட நிலையில், மற்ற விஷயங்களோடு இப்போது, மன அழுத்தம் உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘செக்ஸ்’ என்ற வார்த்தையும், பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கான தேர்வும் பல நாடுகளில் வெறுக்கப்படுகின்றன. இது மக்களைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான உரையாடலைத் தடுக்கிறது. இதன் விளைவாக ஏராளமான இரண்டாவது தகவல் மற்றும் தவறான தகவல்களால், பாலியல் நோய்கள் (எஸ்.டி.டி) மற்றும் பாலியல் நோய்த் தொற்றுகள் (எஸ்.டி.ஐ) போன்றவை ஏற்படுகின்றன. இந்தியா உட்பட பல நாடுகளில் முறையான பாலியல் கல்வி முறை இல்லை. சிலர் ஒழுக்கநெறியில் இறங்குகிறார்கள். மற்றவர்கள், தங்கள் தனிப்பட்ட தேர்வுகளுக்காக குற்ற உணர்ச்சியையும் வெட்கத்தையும் உணர வலியுறுத்துகிறார்கள். இதில் பல இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், பெரிதும் வலியுறுத்தப்படுவது வியப்பாக இல்லை.
ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வின் படி – 18 வயது முதல் 39 வயது வரையிலான ஆஸ்திரேலியர்கள் இடையே பாலியல் நல்வாழ்வை மனதில் வைத்து, நாட்டில் உள்ள இளம் பெண்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒருவித தனிப்பட்ட பாலியல் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அதில், குழப்பம், குற்ற உணர்வு மற்றும் ஒட்டுமொத்தமான பாலியல் அதிருப்தி போன்றவை அடங்கும். ஆனால், பொதுவாக, தங்களைப் பற்றி குறைவான பாலியல் பிம்பமே அவர்களைத் தொந்தரவு செய்கிறது.
ஒரு பெண்ணின் தன்னைப் பற்றிய குறைவான பாலியல் பிம்பம் திரைப்படங்கள் மற்றும் பத்திரிகை அட்டைகளில் கவர்ச்சியான பெண்களின் படங்களை பார்க்க வேண்டிய பாதுகாப்பின்மையிலிருந்து தோன்றியதால் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது, ஒரு பெண்ணை பாதிக்கும். இதனால் அவளுக்கு ‘போதுமானதாக இல்லை’, அல்லது நிர்ணயிக்கப்பட்ட தரங்கள் ‘போதுமானதாக இல்லை’ என்று உணரக்கூடும்.
கருவுறுதல் மற்றும் மலட்டுத்தன்மை என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், குறைவான பாலியல் சுய பிம்பத்தை தவிர, பெண்கள் உணர்வுகளை தூண்டுதல், புணர்ச்சி, உச்சம், ஆசை, ஆகியவற்றால் 9 சதவீதம் வலியுறுத்தப்படுகிறார்கள். இதில் பதிலளித்தவர்களில் 3.4 சதவீதம் பேர் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிராக, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,000 பெண்களிடமிருந்து  பெற்ற தரவைப் பற்றிய ஆய்வில், வாரந்தோறும் அல்லது அடிக்கடி பாலியல் செயல்பாடு இருப்பதாகக் கூறியவர்கள், உடலுறவு, வாய்வழி செக்ஸ், பாலியல் தொடுதல் அல்லது சுய தூண்டுதல் உட்பட 28 சதவீதம் பேர் குறைவாக இருப்பதைக் காட்டியது. இவர்கள் எந்த வயதிலும் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவித்திருக்கிறார்கள்.
credit indianexpress.com

வியாழன், 27 பிப்ரவரி, 2020

ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது.

 ராஜ்யசபாவுக்கு 3 புதிதாக 3 பேரை அனுப்ப திமுக தயாராகி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு இடம் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. இந்த நெருக்கடியை தவிர்க்க திமுக துரிதமாக வேட்பாளர்களை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதிமுக.வின் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், அண்மையில் பாஜக.வில் இணைந்த சசிகலா புஷ்பா, திமுக.வின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோரே அந்த 6 பேர்!


ராஜ்யசபா எம்.பி.க்களை அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள். தமிழகத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்யப்பட 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போதைய தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கைப்படி அதிமுக சுலபமாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்துவிட முடியும். திமுக.வும் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஆகியோர் துணையுடன் 3 எம்.பி.க்களை தேர்வு செய்யலாம்.
இரு தரப்பும் தலா 3 பேரை நிறுத்து போட்டியின்றி 6 எம்.பி.க்களை தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம். இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 13, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்!
கடந்த 2019 ஜூலையில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞர் வில்சன், தேர்தல் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் வைகோ ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள். தேசத் துரோக வழக்கில் வைகோ ஓராண்டு தண்டனை பெற்றதால் அவரது மனு ஏற்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தபோது, மாற்று வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்தார். பின்னர் வைகோ மனு ஏற்கப்பட்டதால், என்.ஆர்.இளங்கோ வாபஸ் பெற்றார்.
அப்போதே என்.ஆர்.இளங்கோவுக்கு வாக்குறுதி கொடுத்த அடிப்படையில், இப்போது அவருக்கு நிச்சயம் எம்.பி. சீட்டை திமுக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற திருச்சி சிவாவையும் மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்க இருக்கிறது திமுக. எனவே மீதமுள்ள ஒரு இடத்திற்குத்தான் திமுக.வில் போட்டி!
இந்த இடத்தை சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் வழக்கறிஞர் ஜின்னா பெயரும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக யாரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, சிலர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்கிற குரலும் திமுக.வில் இருக்கிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் இந்த சீட்டைப் பெற போராடுகிறது. ஏற்கனவே 2019 ஜூலையில் காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களும் திமுக.வின் ராஜ்யசபா வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த முறை ஒரு எம்.பி. பதவியை காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. இதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.
ஆனால் தற்போதைய சூழலில் காங்கிரஸ் திமுக.விடம் அழுத்தம் கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. எனவே திமுக.வின் முடிவே இறுதியானது. நெருடல்களைத் தவிர்க்கும் விதமாக விரைவிலேயே திமுக தனது வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துவிடும் என்கிறார்கள், அறிவாலயம் வட்டாரத்தில்!

என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு.தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்!” என  தெரிவித்துள்ளார்.
credit indianexpress.com

124A படுத்தும் பாடு : வாதாட வக்கீல்களை பெற முடியாமல் போராடும் 4 மாணவர்கள்


நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு எதிராக பார் அசோசியேஷன்ஸ் நிறைவேற்றும் தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது.

நீதிமன்றத்தில் சிலருக்காக வழக்காட மாட்டோம்  என்று வழக்கறிஞர்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது நியாயமற்றது, சட்டவிரோதமானது என்று கடந்த வாரம் கர்நாடக உயர்நீதிமன்றம் எடுத்துரைத்தது.
இருப்பினும், தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது அமுல்யா லியோனா,காஷ்மீரைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்களும், தங்கள் வழக்குகளில்  சட்டப்பூர்வ உதவிகளைப் பெற சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
பெங்களூரில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் அமுல்யா லியோனா “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற வாசகத்தை எழுப்பினார். இதனால் அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது.
கடந்த புதன்கிழமை, காவலில் எடுத்து விசாரிக்க  அமுல்யா லியோனாவை காவல் துறையினர் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.  லியோனாவை  நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றால் தாக்கப்படலாம் என்ற அச்சம் காவல் துறையினருக்கு இருந்ததாகவும்  காவல்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட முன் வராத காரணத்தால், அமுல்யாவின் ஜாமீன் மனு திங்களன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமுல்யாவை காவல்துறையினர் எடுத்து விசாரிக்கும் கோரிக்கையும் தடைபட்டது.
திங்களன்று, அவருக்காக வாதாட விரும்பிய ஒரு சில பெண் வக்கீல்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டயாத்திற்கு தள்ளப்பட்டனர். “நீதி மன்றத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்,” என்று ஒரு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அமுல்யாவிற்காக வாதாடுவதை எதிர்த்த ஒரு மூத்த வழக்கறிஞர், “அத்தகைய நபர்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டால், அதிகமான மக்கள் இதுபோன்ற வசனங்களை எழுப்ப தொடங்குவார்கள்” என்றார்.
காஷ்மீரின் பாரமுல்லா பகுதியைச் சேர்ந்த பாசித் ஆஷிக் சோஃபி, அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த தலிப் மஜீத், அமீர் மொஹியுதீன் வாணி ஆகியோரும்  இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
கல்லூரி மாணவர்களான இவர்கள் மூவரும் பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற சொற்களுடன் கூடிய பாடலை பாடுவதைக் காணலாம். பின்னர், இவர்கள் மூவரும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
ஹப்பல்லி  பார் அசோசியேஷன் சார்பில், உறுப்பினர் எவரும்”தேசிய விரோத” செயலின் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்காக  நீதிமன்றத்தில் வாதாட மாட்டார்கள் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. பிப்ரவரி 17 ஆம் தேதியன்று ,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அந்த மூன்று இளைஞர்களையும் ஒரு கும்பல் தாக்கியது.
மனித உரிமை வழக்கறிஞர்கள் 24 பேர் அடங்கிய குழு பார் அசோசியேஷனின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.  உயர்நீதிமன்றமும் இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்ற உத்தரவை பிறப்பித்தது.
பிப்ரவரி 20 ம் தேதி, தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவா ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,”நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு எதிராக பார் அசோசியேஷன்ஸ் நிறைவேற்றிய  தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது”.
இவ்வகையான தீர்மானம் அனைத்து சட்ட மரபுகளுக்கும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று ஏ.எஸ். முகமது ரஃபி Vs தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியது.
இத்தகைய தீர்மானங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பப்படி ஒரு வழக்கறிஞரால் பாதுகாக்கப்படுவதற்கான அரசியலமைப்பு உரிமையை பறிக்க முனைகின்றன.

டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன்.

டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன். 
டெல்லி கலவரம் :  புதிதாக திருமணம் ஆனவர், ஒரு கார்பெண்டர், ஒரு டி.ஜே., ஒரு தொழில் முனைவோர், கட்டிடத் தொழிலாளி, குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கச் சென்ற அப்பா… இது வரை டெல்லி கலவரத்தில் இறந்து போன 27 நபர்களில் இவர்களும் அடக்கம். கடந்த மூன்று நாட்களாக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர். செவ்வாய் கிழமை மாலை வரை 13 நபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் புதன் கிழமை அந்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. அதிக காயங்களால் பாதிக்கபட்டவர்கள், சிகிச்சை பலனின்றி போனதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
குரு தேக் பகதூர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீபக் குமார் (34), இஷாக் கான் (24), முகமது முதாஸ்ஸீர் (30), விர் பான் (50), முகமது முபாரக் ஹூசை (28), ஷான் முகமது (35), பர்வேஷ் (48), ஜாஹீர் (24), மெஹ்தாப் (22), ஆஷ்ஃபாக் (22), ராகுல் சோலான்கி (26), ஷாகித் (25), முகமது ஃபுர்கான் (30), ராகுல் தாக்கூர் (23), ரத்தன் லால் (42), அன்கித் ஷர்மா (26), தில்பார், மொஹ்ஷின் அலி (24), வினோத் குமார் (50). லோக் நாயக் மருத்துவமனையில் மஹ்ரூஃப் அலி (30), அமான் (17) ஆகியோரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதி உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஷ்ஃபாக் ஹூசைன், முஸ்தஃபாபாத் பகுதியில் வசித்து வந்த 22 வயது இளைஞனின் கழுத்தில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. அல் ஹிந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு அடுத்த நாள் காலை எடுத்து வரப்பட்டது.
அவருக்கு பிப்ரவரி 14ம் தேதி தான் திருமணமானது என்று கூறுகிறார் அவருடைய மனைவி தஸ்நீம். அவர் அன்று விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கலவரங்களின் காரணமாக அவரால் விரைவாக வீடு திரும்பவில்லை. மருத்துவமனையில் வெகு நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்பிய அவருடைய உறவினர்கள் இன்று ஆஷ்ஃபாக்கின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுச் செல்கின்றனர்.
பால் வாங்கச் சென்ற அமன் முகத்தில் குண்டு பாய்ந்துள்ளது. ஜஃப்ராபாத் மெட்ரோ ஸ்டேசன் அருகே நடைபெற்ற கலவரத்தில் இவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய கன்னத்தில் குண்டு பாய்ந்துள்ளது.  19 வயதான் விவேக் சௌத்ரி தலையில் வாட்டர் மோட்டர் செலுத்தப்பட்டிருந்தது. அதனை நியூரோ சர்ஜரி பிரிவில், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்துவருகிறார். அவருடைய சகோதரி பபிதா அவருடன் இருந்து, அவரை கவனித்து வருகிறார்.
பிரஹாம்பூரியில் மருந்துகளை வாங்கச் சென்ற நிதின் குமார் மற்றும் அவருடைய தந்தையை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கியுள்ளது. அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் தீக்கிரையானது. சாலையில் மயங்கிக் கிடந்த இருவரையும் யாரோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று நினைவு கூறுகிறார் குமார்.
ப்ரிஜ்பூரியில் அமைந்திருக்கும் இந்து முஸ்லீம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மெஹ்தப். பால் வாங்க சென்றிருந்தார். கலவரம் காரணமாக அந்த குடியிருப்பு பகுதியின் கேட்கள் பூட்டப்பட்டது. மெஹ்தப்பினை ஒரு குழு சரமாரியாக தாக்கியது. கேட்டில் இருந்து அவருடைய குடும்பத்தினர் கதறி கெஞ்சிய போதும் அவரை அந்த வன்முறை கும்பல் பயங்கரமாக தாக்கியது.
2 நாட்களாக வீடு திரும்பாமல் இருந்த மொஹ்ஷீன் அலியின் உடலை தேடிக் கொண்டு பிணவறைக்கு வந்தனர் அவருடைய குடும்பத்தினர். ஹர்ப்பூரை சேர்ந்த இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. தலையில் காயங்களுடன் அவர் பிணவறையில் இருந்தார்.
புதன்கிழமை மாலை வரை 5 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரிஜ்பூரி புலியான் பகுதியில் அமைந்திருக்கும் மசூதியில் பிரார்த்தனை செய்யச் சென்ற ஸக்கீர் சாய்ஃபியும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிட் வீச்சு

டெல்லி கலவரத்தில் காயம் அடைந்தவர்களில் நான்கு பேர் ஆசிட் வீச்சினால் காயம் அடைந்துள்ளனர். சிவ் விஹாரில் ஒரு கடைக்கு தீயிட்ட கும்பல், அங்கிருந்த பொருட்களையெல்லாம் அள்ளிச் சென்றது. அந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்த நான்கு பேர் மீது ஆசிட் வீசியுள்ளனர். முகமது வக்கீல் முகத்தில் ஆசிடினால் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய 19 வயது மகள் அனம் மீதும் ஆசிட் பட்டுள்ளது.

85 வயது மூதாட்டி எரித்துக் கொலை

கர்மி கிராமத்தில் அக்பரி என்ற வயதான மூதாட்டி எரித்து கொல்லப்பட்டார். முகமது சயீத் சல்மானி என்பவர் அவருடைய இல்லத்தின் முதல் இரண்டு தளங்களிலும் துணிக்கடைகள் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய வீடு தீக்கிரையாக்கப்பட்டது. நான் பால் வாங்க வெளியே சென்ற போது எங்கள் ஏரியாவின் முன் 100 முதல் 150 பேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர். என்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவி அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்று கூறுகிறார் அக்பரியின் மகன்.

தமிழக போலிஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் : இணைவது எப்படி?

வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்களில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல போலி செய்திகள் பரவி வருகின்றன.
அதிலும், குறிப்பாக எய்ட்ஸ் நோயை பரப்பும் குழுக்களிடம் இருந்து ஜாக்கிரதை, குழந்தை கடத்தல் கும்பல்களிடம் இருந்து ஜாக்கிரதை, பெண்களுக்கான பிரத்தியோக கேப் சேவை போன்ற பொய்யான குறுந்தகவல்கள் தமிழக போலிஸ்  பெயரில் பகிரப்பட்டது. இது போன்ற அவதூறு செய்திகளில் தமிழ்நாடு காவல்துறையின் சின்னங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப் பட்டது . இந்த போலி செய்திகளை தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை எற்படுத்தவும் சென்னை காவல் துறை சிறப்புக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது
இந்நிலையில், வாட்ஸ்அப் கம்யூனிட்டி ப்ராட்கேஸ்ட் குரூப்பை தமிழக காவல்துரை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், சமூக ஊடங்களில் பரவும் போலி செய்திகளின் உண்மை நிலவரங்களையும், விழிப்புணர்வுகளையும் பொது மக்களுக்கு  கொடுக்க முடியும் என்று காவல்துறை நம்புகிறது.
இந்த குரூப்பில் எப்படி சேர்வது ? 
உங்கள் போனில் 9498111191 என்ற பத்து இலக்கு எண்ணை தமிழ்நாடு காவல்துறை என்று பதிவேற்றம் செய்து செய்து கொள்ளுங்கள். பின்னர், வாட்ஸ்அப் பின் மூலம் அந்த எண்ணிற்கு ‘JOIN’ என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனடியாக அந்த குரூப்பில் சேர்க்கப்படுவீர்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கிற்கு உங்களை அழைக்கின்றோம். குற்றத்தை இங்கே புகாரளிக்க வேண்டாம்.  அவசர தேவைகளுக்கு எண்.100-ஐ டயல் செய்யுங்கள். வழக்கமான புதுப்பிப்புகளைப் பெற இந்த எண்ணை உங்கள் தொடர்புகளில் சேமிக்கவும்.  உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள் என்ற குறுந்தகவல் உங்களுக்கு அனுப்பப்டும்.
எனவே, இந்த குரூப்பில் நீங்கள் புகார் அளிக்க முடியாது. காவல்துறையின் செய்திகளை மட்டும் பெறலாம்.
உறுப்பினர்கள் வழக்கமான அடிப்படையில் செய்திகளைப் பெறத் தொடங்குவார்கள். வதந்திகள் வரும்போதெல்லாம், அதற்கான விழிப்புணர்வு செய்திகள் இங்கே அனுப்பப்படும் ,”என்று அதிகாரிகள் தெரிவிகின்ர்கன்ர்.
இந்த முயற்சி, பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நாள் வரை குறைந்தது 10,000  மக்கள் இந்த குரூப்-ல் இணைந்துள்ளனர்.

டெல்லி கலவரம் ஒரு தேசிய அவமானம் – மன்மோகன் சிங்

டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்"  என்று  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார்.  - credit indianexpress.com

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம் - டெல்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை


Delhi violence : ஆம்புலன்ஸ்களை வன்முறையாளர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெஞ்சாத குறையாக கேட்டநிலையில், அவர்கள் அனுமதித்துள்ளனர்

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள அல் ஹிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனை, வன்முறை நிகழும் பகுதிக்கு அருகில் உள்ளதால், அங்கிருந்தவர்களை உடனே வெளியேற்றுமாறு டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் மீண்டும் பெரும் வன்முறை மற்றும் போராட்டமாக உருவெடுத்தது. பல வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைகளில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டில்லியின் வடகிழக்கு பகுதியில் அதிகளவில் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள அல் இந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, படுகாயமடைந்தவர்களை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ்களை வன்முறையாளர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெஞ்சாத குறையாக கேட்டநிலையில், அவர்கள் அனுமதித்துள்ளனர்.

டில்லி சந்த் பாக் பகுதியில் தீக்கு இரையான வாகனங்கள்..
ஆவணப்பட இயக்குனர் ராகுல் ராய், டாக்டர்கள் அடங்கிய குழு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. டில்லியில் வன்முறை அதிகம் நடக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்தனர். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நீதிபதிகள் எஸ். முரளிதர், மற்றும் நீதிபதி ஏ ஜே பம்பானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆம்புலன்ஸ்களை மறித்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அல் இந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற உத்தரவிட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
டெல்லி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது, இந்த உத்தரவு வந்தவுடன். அந்த மருத்துவமனையில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம். மற்றவர்களையும் மாற்றி வருகிறோம் என்று டெல்லி கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜ்னீஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் மறு விசாரணை, புதன் மதியம் நடைபெற உள்ளது.இதில் மேலும் பல முக்கிய உத்தரவுகள் வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வழக்கு : தலைநகர் டெல்லியில் வன்முறையை தூணடும்விதமாக பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அனுராக் தாகூர், பர்வேஷ் ஷாகிப் சிங், கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். டெல்லி போலீஸ் இந்த விவகாரத்தில் சொந்தமாக செயல்படுங்கள் என்று டில்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
credit : indianexpress.com