வியாழன், 30 ஜூன், 2022

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - 25.06.2022

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - 25.06.2022 10, +2 முடித்த மாணவர்களுக்கான உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி உரை : ஜாவித் அஷ்ரப் B.TECH,.(gold medalist), MS (IITmadras) உரை : ஷாகுல் M.COM.,(Senior consultant) What to do after 10th class | Which group to choose? | Confused ? | Complete details in Tamil. Students Wing TNTJ https://youtu.be/5PbmppZkK2Y

உதய்ப்பூர் படுகொலை ஓர் பார்வை

உதய்ப்பூர் படுகொலை ஓர் பார்வை செய்தியும் சிந்தனையும் - 29.06.2022 #Udaipur | உதய்ப்பூர் | நுபுர் ஷர்மா | முஸ்லிம்கள் | பின்னணி | #PMModi தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! https://youtu.be/CQQ3-k4aulw

இணைவைப்பை வேரறுக்கும் இஸ்லாம் - பொதுக்கூட்டம்

இணைவைப்பை வேரறுக்கும் இஸ்லாம் - பொதுக்கூட்டம் செங்கோட்டை N.ஃ பைசல் (மாநிலச் செயலாளர்,TNTJ) செந்தலைப்பட்டினம் - தஞ்சை தெற்கு மாவட்டம் - 11.06.2022 https://youtu.be/iDd1u6AkKKE

நபிமார்களை இழிவுப்படுத்தும் அல்லிஃப் பைனகுமா துஆ..!

நபிமார்களை இழிவுப்படுத்தும் அல்லிஃப் பைனகுமா துஆ..! அமைந்தகரை ஜுமுஆ - 03-06-2022 உரை : K.M.A. முஹம்மது மஹ்தூம்

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 29.06.2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 29.06.2022 பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களை பதிவு செய்த புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் குறித்து உங்கள் நிலை என்ன? சுன்னத் வல் ஜமாஅத்தினர் தங்களது அடையாளமாக தொப்பி, ஜிப்பா போன்றவற்றை அணிவது போல் தவ்ஹீத்வாதிகள் தங்கள் அடையாளமாக தவ்ஹீத் ஜமாஅத் கொடி கலரில் மோதிரம் பிரேஸ்லெட் போன்றவற்றை அணியலாமா? கடமையான தொழுகையை பிற்படுத்தி தொழுவது பித்அத்தாகுமா? https://youtu.be/RmaFgkO9cF4

குர்பானியின் பெயரால் புகுந்துவிட்ட புதுமைகள்

குர்பானியின் பெயரால் புகுந்துவிட்ட புதுமைகள் முஹம்மது ரிஸ்வான் (நான்காம் ஆண்டு மாணவர்) நரகில் தள்ளும் பித்அத் - 28.06.2022 பாகம் - 14 https://youtu.be/gOhBnpOJHMU

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி

இஸ்லாம் இனிய மார்க்கம் என்றால் முஸ்லிம்கள் அப்படி நடந்து கொள்கிறார்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )

ஸ்லிம் பெண்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதில்லையே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

ஐவேளை தொழும் முஸ்லிம்களில் சிலர் வரதட்சனை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் மறுமை நிலை என்ன? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

தவ்ஹீத்வாதிகளில் சிலர் இணைவைப்பு பள்ளிகளில் தொழுகின்றனர். இது சரியா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

தஜ்ஜால், யஃஜூஜ் மஃஜூஜ் போன்றவர்கள் தற்போது வந்துவிட்டதாக யூடியூப் சேனலில் சிலர் பேசி வருவது சரியா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

துஆ கேட்கும் போது கைகளை பிரித்து வைத்து கேட்கலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

மண்டபத்தில் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? மண்டபத் திருமணங்களின் விருந்துகள் வீட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா? எந்த காரணமும் சொல்லாமல் வரதட்சனை திருமணங்களை புறக்கணிப்பது தீமையைத் தடுத்தலாகுமா? பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

ஒரே நாளில் கொண்டாடுவதற்கு பதிலாக இரண்டு பெருநாள் வரக் காரணம் என்ன? பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

மக்தப் மதரஸாக்களை மேம்படுத்துவது பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

மறுமையே நிலையானது

மறுமையே நிலையானது அமைந்தகரை ஜுமுஆ - 17-06-2022 உரை : ஃபஹத் எம்.ஐ.எஸ்.ஸி

சீரழிக்கும் செல்போன்கள்!

சீரழிக்கும் செல்போன்கள்! ஷபீனா ஆலிமா - திருவண்ணாமலை ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 20.06.2022 https://youtu.be/irMBgxlwlqY

மதம் மாறி திருமணம் செய்தல் அங்கிகரிப்பதில்லையே ஏன்?சுன்னத் செய்தல் அவசியமா?

மதம் மாறி திருமணம் செய்தல் அங்கிகரிப்பதில்லையே ஏன்?சுன்னத் செய்தல் அவசியமா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.be/l8hNAv7YXbk

இஸ்லாம் கூறும் பயனுள்ள கல்வி!

இஸ்லாம் கூறும் பயனுள்ள கல்வி! K .அக்தர் M.I Sc (பேச்சாளர்,TNTJ) துறைமுகம் ஜுமுஆ - 25.06.2022 https://youtu.be/jgRMtCnhnUo

திருமணத்தில் அரங்கேறும் பித்அத்கள்!

திருமணத்தில் அரங்கேறும் பித்அத்கள்! மாநிலத் தலைமையக ஜுமுஆ - 24.06.2022 உரை : கே. தாவூத் கைசர் (மாநிலச் செயலாளர், TNTJ)

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள் அமைந்தகரை ஜுமுஆ - இரண்டாம் உரை - 24-06-2022 உரை : ஃபஹத் எம்.ஐ.எஸ்.ஸி

பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?

பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? அல்ஹுதா பெண்கள் கல்வியகம் பட்டமளிப்பு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் - 11-06-2022 இடம் : கானத்தூர் உரை : காஞ்சி ஏ. இப்ராஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)

தொடர்ந்து சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு

 

29 06 2022

முன் எப்போதும் இல்லாத வகையில்,அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பில் ரூபாய் 79 ஐ தாண்டியது. நாட்டின் பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணியா? என்ன நடக்கிறது.

அது குறித்து பார்க்கலாம். சர்வதேச வர்த்தகத்தில் பெரும்பான்மையான நாடுகளில் அமெரிக்க நாட்டின் பணமான டாலர் மதிப்பில் நடைபெற்று வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் டாலர் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. வர்த்தக நேரத்தின் இடையே 79.05 அளவுக்கு சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு 79ஐ தாண்டுவது இதுவே முதல்முறையாகும். இது இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியாகும்.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரக்காரணம், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இனி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்னும் கிழே இறங்கும்.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 80 ரூபாயை தாண்டும் அச்சமும் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். கடைசி கட்டமாக, ரூபாய் மதிப்பு சரிவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர் கரன்சிகளை, அதிக அளவில் வெளியிட்டு ரூபாய் மதிப்பு சரிவடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பில் வர்த்தகம் புரியும் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மட்டுமே இது பலனளிக்கும். ஆனால் நமது பொருளாதாரம் அதிக அளவு இறக்குமதியை சார்ந்து இருப்பதால் அதிக அளவு அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்திக்கிறது.

1947 ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய் 30 காசுகளாக இருந்தது. 1967 ஆம் அண்டு 7 ரூபாய் 50 காசுகளானது. 1990 ஆம் ஆண்டு 17 ரூபாய் ஆனது. உலகமயமாக்கலில் கையெழுத்திட்ட 1990 களின் மத்தியில் இரட்டிப்பாகி 32 ரூபாய் ஆனது. 2000 ல் 43 ரூபாயானது. 2012 ல் 60 ஆனது. தற்போது ஒரு 79 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில நேரங்களில் சர்வதேச நிதியம், உலக வங்கிகளின் அழுத்தங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்ட வரலாறும் உண்டு. இடையே உலக பொருளதாரம் சரிவு கண்ட 2007 ஆம் ஆண்டுகளில் 37 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவைக்கண்டு வருவது இந்தியப் பொருளாதாரத்திற்கு வழங்கும் எச்சரிக்கை மணியா, சர்வதேச வர்த்தகத்தில் சாதாரண நிகழ்வா… இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பர்ப்பாக உள்ளது.

-ரா.தங்கபண்டியன்

source https://news7tamil.live/the-value-of-the-indian-rupee-continues-to-fall.html

கைதான பத்திரிக்கையாளர் முகமது ஜீபைர் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் : டெல்லி காவல்துறை

 29 6 2022 

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது ஜீபைர் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

போலி செய்திகளை கண்டறிந்து, அதன் பின் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் வேலையை  ’ஆல்ட் நியூஸ்’ நிறுவனம் செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். இவர் 2018ம் ஆண்டு வலதுசாரி செய்தி ஒன்றை அடையாளம் கண்டு, இது தொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். அந்த ட்வீட் வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. அவரை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் முகமது ஜீபைர் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சைபர் காவல்துறை டிசிபி மல்கோத்ரா கூறுகையில், ‘முகமது ஜீபைர் வங்கி கணக்கிற்கு, கடந்த மூன்று மாதங்களில், ரூ.50 லட்சம் வரை பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. யார் இந்த பணத்தை அனுப்பி உள்ளனர் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சந்தேகத்திற்குரிய அமைப்புகளிடமிருந்து பணம் வந்திருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால், முகமது ஜீபைர் தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஆல்ட் நியூஸ் நிறுவனத்திற்கு வரும் பணம் எல்லாம், நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்குதான் போகும். எந்த தனிநபர் வங்கிகணக்கிற்கும் போகாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்களிடம் இருந்து பெறும் கூடு நிதி மூலம்தான் இந்நிறுவனம் செயல்படுகிறது. இதனால் இந்நிறுவனத்திற்கு வரும் பணப் பரிமாற்றம் வெளிப்படையாக நடந்துள்ளது. காவல்துறையினர் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்று முகமது ஜீபர் தரப்பு கூறியுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/zubair-arrest-police-allege-rs-50-lakh-transactions-in-account-472285/

புதன், 29 ஜூன், 2022

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை-அமைச்சர் மெய்யநாதன் வரவேற்பு 28 6 2022

 ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்

பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக மத்திய
அரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கான
விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் இன்று காலை
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். மாலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை
நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீர், நிலம், காற்று ஆகியவற்றை சிதைக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே இதற்கான தடைவிதித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறார்.

மேலும் மாற்று பொருளான மீண்டும் மஞ்சள் பை திட்டத்தையும் தமிழக முதல்வர் கொண்டு வந்து இந்த திட்டம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது 20% பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இது தமிழக அரசு கிடைத்த வெற்றி. இதற்காக மத்திய அரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை 1117 மெட்ரிக் டன் தடை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 174 பை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
105 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னமும் உள்ளது.

இதற்கு காரணம் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லாததுதான்.
தற்போது இந்த தடை மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் வராத
சூழ்நிலை ஏற்படும். மக்களிடையே மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முடியும்.

தமிழக அரசு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு எங்கெங்கெல்லாம் பிளாஸ்டிக்
பயன்பாடு உள்ளதோ அதை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சி மாநகராட்சி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரு நாளில் மட்டும் 187 டன் குப்பைகளை சேகரித்து உலக அளவில் சாதனையை புரிந்துள்ளார். இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் மெய்யநாதன்.


source https://news7tamil.live/minister-meyyanathan-welcomes-the-ban-on-plastic-products.html

பளபள சருமத்துக்கு சூப்பர் ஃபேஸ் மாஸ்க்!

 

நம் சமையலறையில் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பிரகாசத்தை பெற உதவுகிறது.

பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, அவை செல்லுலார் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எனவே ஆரோக்கியமான சருமத்தைப் பெற, நாம் நன்றாக சாப்பிட வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தமில்லாத வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான தோல் பராமரிப்பு வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஹோம்மேட் மாஸ்க்-உடன் ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள். இந்த மாஸ்க் அதன் கிளீன்சிங், ப்யூரிஃபயிங் மற்றும் பிரைட்னிங் நன்மைகளுக்காக அறியப்படுகிறது.

தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன் – முல்தானி மட்டி

1 தேக்கரண்டி – மஞ்சள்தூள்

1 டீஸ்பூன் – தயிர்

1 தேக்கரண்டி – தேன்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலக்கவும். உலர்ந்த ரோஜா இதழ்களையும் சேர்க்கலாம். உங்களிடம் முல்தானி மட்டி இல்லையென்றால், அதை கடலை மாவு அல்லது கொண்டைக்கடலை மாவுடன் மாற்றிக்கொள்ளலாம்.

*முகத்தை சுத்தமாக கழுவிய பிறகு இதை முகம், கழுத்து மற்றும் கைகளில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து, மெதுவாக ஸ்க்ரப் செய்து கழுவவும்.

*சிறந்த முடிவுகளுக்கு வாரம் 1-2 முறை இந்த மாஸ்கை பயன்படுத்தவும்.

பலன்கள்

*மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆகிஸிடண்ட். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது மந்தமான தோற்றமுடைய சருமத்தையும் புதுப்பிக்கிறது.

*முல்தானி மட்டி தோலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான எண்ணெய்களைச் சேர்த்து, ஊட்டமளித்து, இயற்கையாகவே பளபளக்கும்.

*தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்குகிறது. இது சருமத்தின் நுண்ணுயிரியான தோலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

*தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இயற்கையான பாக்டீரியாக்களுக்கு உணவளித்து, உங்கள் சருமத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.

பளபள முகத்துக்கு இந்த ஃபேஸ் மாஸ்கை நீங்களும் கண்டிப்பா டிரை பண்ணுங்க

source https://tamil.indianexpress.com/lifestyle/diy-face-mask-with-four-ingredients-471981/


ஜி7 நாடுகள் புதிய முடிவு: தங்கம் விலை இன்னும் கூடுமா?

 

ஜி7 உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் நடந்து வரும் இந்த மாநாட்டில் ஜி7 உறுப்பு நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், ஐக்கிய பேரரசு (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்கா (அமெரிக்கா) உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக தங்கம் இறக்குமதி செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தி முடக்கும் வகையில் ஏற்கனவே நேட்டோ நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது ஜி7 உறுப்பு நாடுகளும் இந்த புதிய தடையை அறிவித்துள்ளன.

ரஷ்யா இயற்கை எரிபொருளுக்கு அடுத்தபடியாக தங்கத்தைத் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்து, பெருமளவில் அந்நியச்செலாவணியை ஈட்டி வருகிறது. ஓர் ஆண்டில் உலகம் முழுதும் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 10%, அதாவது 350 முதல் 380 டன் வரையிலான தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இவற்றின் தோராய ஏற்றமதி மதிப்பு சுமார் 15.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Gold, Silver Prices Today; 25 June 2022, gold price descends Rs.230

ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் அந்நாட்டு பொருளாதாரத்தை மேலும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பது சர்வதேச சந்தையில் எதிரொலிக்கும். ஏற்கனவே ரஷ்ய கச்ச எண்ணெய்க்கு தடை விதிப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நேரத்தில் ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிக்கப்பட்டால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்திடம் இருந்து தான் அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற வர்த்தக மையங்களில் ரஷ்யாவின் தங்கம் தான் அதிகம் புழங்கி வருகிறது. இந்த நாடுகள் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய மறுக்கும் பட்சத்தில், உலகில் சீனாவிற்கு பிறகு அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியாவிற்கு தேவையான தங்கம் கிடைக்காது.

முன்னர் கணிக்கப்பட்டது போல, ஜி – 7 உச்சி மாநாடு, அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவு வெளியீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கச்ச எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஓபேக் கூட்டம் ஆகியவை நிச்சயம் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

28 6 2022

source https://tamil.indianexpress.com/business/g7-countries-ban-russians-gold-would-gold-prices-still-rise-472124/

புதிதாக 40 விருப்பப் பாடங்கள்… அண்ணா பல்கலை. சூப்பர் முயற்சி!

 

28 6 2022 

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.

பொறியியல் படிக்கும் அனைவரும் தங்களின் 3 மற்றும் 4 ஆவது ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பாடங்களைத் தவிர, விருப்பப் பாடங்களாக சிலவற்றைத் தேர்வு செய்து படிக்கலாம். தங்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, தங்களின் விருப்பம், விரும்பிய துறை, தனித் திறமையை வளர்க்க, கூடுதல் திறனைப் பெற என இந்த விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.

இப்படியான விருப்ப பாடங்களின் பட்டியலை, ஓவ்வொரு பாடப்பிரிவு மற்றும் செமஸ்ருடருக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகம் அதன் பாடத்திட்டத்தில் வழங்கும். அதில் விருப்பமானதை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில், மாணவர்களின் விருப்பம் மற்றும் தேவை, தொழில் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களின் தேவை அடிப்படையில் 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என கல்வியாளர் ரமேஷ் பிரபா தெரிவித்துள்ளார்.

இவற்றில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தரவு ஆய்வு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட பாடங்களை விருப்ப பாடங்களாக வழங்குகிறது. அதேநேரம் இந்தப் பாடங்களின் தேவை கருதி, கட்டாய பாடங்களாக வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதேபோல் இறுதியாண்டில் 6 மாத தொழிற்பயிற்சி வழங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருவதாக ரமேஷ்பிரபா தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-introduce-40-new-elective-papers-in-engineering-syllabus-472073/

செவ்வாய், 28 ஜூன், 2022

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

 27 6 2022 TN class 11th results released Perambalur secured top: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழகம் முழுவதும் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.99% மற்றும் மாணவர்கள் 84.86% என்ற அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் 95.56% தேர்ச்சி விகிதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.44% பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடமும், 95.25% பெற்று மதுரை மதுரை மூன்றாம் இடமும் பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-class-11th-results-released-perambalur-secured-top-471271/

TNEA Counselling: அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரலாமா? தேர்ச்சி விகிதம் எப்படி?

 27 06 2022

TNEA 2022 Anna University campus and Govt Engineering colleges pass percentage details: பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரலாமா, அவற்றின் தேர்ச்சி விகிதம் எப்படி? என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில், சிலர் விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கிறார்கள், அதாவது அந்தக் கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவு கிடைத்தாலும் படிக்கிறார்கள்.

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி போன்ற ஒரு சில அரசு கல்லூரிகளை தவிர பிற அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்களிடம் தயக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இவற்றில் சில கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தன.

இருப்பினும் வசதி குறைவான மாணவர்களின் விருப்பமாக அரசுக் கல்லூரிகள் தான் உள்ளன. எனவே அரசு கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாமா? அவற்றின் தேர்ச்சி விகிதம் எப்படி? என்பதையெல்லாம் இப்போது பார்ப்போம்.

கேரியர் கைடன்ஸ் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளை அவற்றின், தேர்ச்சி விகித அடிப்படையில் தரவரிசைப்படுத்தியுள்ளார். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து தான் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது குறித்த விவரங்கள் கீழ்காணுமாறு:

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி 80.12% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக எம்.ஐ.டி கல்லூரி 79.24%, ஏ.சி.டெக் கல்லூரி 73.23% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 61.65% தேர்ச்சி விகிதத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. அடுத்ததாக, அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகக் கல்லூரி 55.85% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. கோவை பகுதியில் விரைவில் நிரப்பப்படும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

அடுத்தப்படியாக, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி காஞ்சிபுரம், 54.48% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த 6 கல்லூரிகள் தான் 50%க்கு மேலான தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

இவற்றிற்கு அடுத்தப்படியாக திருச்சி பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி 41.86% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. நாகர்கோவில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அடுத்த இடத்தில் 41.59% தேர்ச்சியுடன் உள்ளது.

அடுத்து பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி விழுப்புரம், 39.72% தேர்ச்சி விகிதத்துடனும், தூத்துக்குடி வி.ஓ.சி பொறியியல் கல்லூரி, 37.20% தேர்ச்சி விகிதத்துடனும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி திருநெல்வேலி வளாகம் 36% தேர்ச்சி விகிதத்துடனும் உள்ளன.

அடுத்ததாக பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான, திண்டிவனம் 34.20%, ஆரணி 33.21%, பண்ருட்டி 32.98%, மதுரை வளாகம் 32.35%, திண்டுக்கல் 25.21%, அரியலூர் 23.18%, திருக்குவளை 18.90%, ராமநாதபுரம் 16.77%, பட்டுக்கோட்டை 12.45% என்ற அளவில் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அரசு பொறியியல் கல்லூரிகள்

சேலம் அரசு பொறியியல் கல்லூரி – 76.85%, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 76.61%, காரைக்குடி அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – 70.24% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அடுத்தப்படியாக, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி – 59.84%, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி – 47.78% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

அடுத்த இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, பர்கூர் – 43.33%, வேலூர் தந்தை பெரியார் கல்லூரி – 43.17%, திருச்சி – 42.26%, தருமபுரி 30.24%, தஞ்சாவூர் – 27.52%, தேனி 24.63% தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

இவற்றை மனதில் வைத்து, கல்லூரிகளை நேரடியாக ஆய்வு செய்து, வேலைவாய்ப்புகளைத் தெரிந்துக் கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2022-anna-university-campus-and-govt-engineering-colleges-pass-percentage-details-471375/


திங்கள், 27 ஜூன், 2022

கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணக்கர்களின் வாழ்க்கை ?

 கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு  மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர்  ஆனால் அவர்களுக்கு எந்தவித மதிப்பெண்களும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமோ என்ற அச்சம் மாணக்கர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுதேவையற்ற அச்சம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

பத்தாம் வகுப்பில் சுமார்  9 லட்சம் மாணவர்களும் பதினொன்ராம் வகுப்பில் சுமார் 9 லட்சம் மாணவர்களும் ஆக மொத்தம் 18 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லாமல் பாஸ் என  மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் உள்ளது. இதனால் அரசுத்துறை போட்டி தேர்வுகள் எழுதும்போது தங்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது, மாணக்கர்கள் எழுதிய காலாண்டு  பரீட்சை , அரையாண்டு பரீட்சை அல்லது அவர்கள் எழுதிய  ஏதாவது ஒரு இரு தேர்வை கூட்டி அதிலிருந்து  சராசரி மதிப்பெண் போட்டு இருக்கலாம்.  ஆனால் அனைவருக்கும் அனைத்து பாடங்களிலும் பாஸ் என்று மட்டுமே வந்துள்ளது. இதனால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் மாணக்கர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுகுறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, இந்த பிரச்சனையை கண்டு பெற்றோர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. பேரிடர் காலத்தில் வேறு வழியின்றி அரசு இவ்விதமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக அரசு சிறப்பு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என்றார். அரசுத் தேர்வுகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலமே தேர்ந்தெடுக்கபடுவர் என்பதால் இந்த மதிப்பெண் தேவைப்படாது. அதுவும் பேரிடர் காலத்தில் பயின்ற எந்த மாணக்கர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்பதால் இதுபோன்ற பிரச்சனை எங்குமே எழாது. மாணக்கர்களும், பெற்றோர்களும் இதற்காக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனக்கூறினார்.

இராமானுஜம்.கி


source https://news7tamil.live/what-happend-to-corona-batch-students-life.html

அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மகளிர் மாணவர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன்,மாநில செய்தி தொடர்பு இணை செயலாளார் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், “எங்கள் கல்விக் கொள்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு மாணவனின் தனி திறமையும் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் நான் முதல்வன் திட்டம். அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாமெல்லாம் தமிழினம் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும் என்பதையே திமுக தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழ் மொழி செம்மொழி ஆக்கப்பட்டு இன்று வரை நம் மொழியை காப்பதில் திராவிட தலைவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆகவே மொழி உணர்வு நமக்கு வேண்டும் அதையே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூகநீதியை கொண்டு வந்தது திமுகதான். கொண்ட கொள்கையில் பிடிப்புடனும் சமுதாய உணர்வோடும் இருப்போம்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

source https://news7tamil.live/the-future-of-the-youth-is-in-question-due-to-the-agnibad-project-minister-geetha-jeevan.html


ஜெர்மனியில் பிரதமர் உரை; Fact-Check கோரும் ப.சி

 

27 6 2022 

ஜெர்மனியின் முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதின் சில தகவல்களின் உண்மை தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் நேற்று (ஜூன் 26) உரை நிகழ்த்தினார். அப்போது, நாம் நமது ஜனநாயகத்தை என்னி தற்போது பெருமைப்பட முடியும் என்றும், ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கலாச்சாரம், உணவு, உடை, இசை, பழக்க வழக்கங்கள் எனும் பன்முகத்தன்மை, இந்திய ஜனநாயகத்தை துடிப்ப மிக்கதாக ஆக்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகம் பலன் தரும் என்பதையும் தந்து கொண்டிருக்கிறது என்பதையும் இந்தியா உலகிற்கு நிரூபித்து வருவதாகக் கூறினார்.

தற்போது நமது நாட்டில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்றும், 99 சதவீத கிாமங்களில் மின்சாரம் உள்ளது என்றும், 99 சதவீத மக்கள் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமக உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது என குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஒவ்வொரு 10 நாட்களிலும் ஒரு யூனிகான் நிறுவனம் (சுமார் ரூ. 7,800 கோடி மதிப்புகொண்டது) உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியாவில் அரசின் கொள்கைகளை சார்ந்தது அல்ல என்று தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் என கூறினார்.

தற்போது நாட்டில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டது என்றும், இனி சுத்தத்தை பேணிக் காப்பது தங்கள் பொறுப்பு என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமரின் “நமது நாட்டில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை, 99 சதவீத கிாமங்களில் மின்சாரம் உள்ளது” உரையை மேற்கோள் காட்டி இந்த உரையின் உண்மை தன்மையை (fact-check) அறிய வேண்டும் என ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றி பிரதமரின் கூற்றுக்கு முன்னாள் அமைச்சர் fact-check கோரியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://news7tamil.live/prime-ministers-speech-in-germany-fact-check-requesting-p-c.html