புதன், 31 ஜூலை, 2019

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் 52% இடங்கள் நிரப்பப்படாமல் காலி...! July 31, 2019

பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. 
ஜூன் 28-ல் தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு இன்று அதிகாலை 3 மணியளவில் முடிவடைந்தது. இதையடுத்து மாணவர்கள் சேர்க்கை விவரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் மூலம் 83,396 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜூலை 3 முதல் 27 தேதி வரை நடந்த ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் 76,364 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணைக்கலந்தாய்வின் மூலம் 4,548 இடங்களும், சிறப்புப்பிரிவு கலந்தாய்வின் மூலம் 1,683 இடங்களும் நிரப்பட்டுள்ளன. மொத்தம்  உள்ள  1 லட்சத்து 67ஆயிரத்து 101 மொத்த இடங்களில் 83 ஆயிரத்து 396 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 
இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. பொறியியல் இடங்கள் நிரம்பாததற்கு வேலைவாய்ப்பின்மை தான் காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

creditr ns7tv

உன்னாவ் விவகாரம் : தலைமை நீதிபதி காட்டம்! July 31, 2019

ns7.tv
Image
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்‍கப்பட்ட பெண் பாதுகாப்பு கோரி எழுதிய கடிதத்தை, தாமதமாக சமர்ப்பித்தது குறித்து அறிக்கை அளிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
உன்னாவ் வழக்‍கில், பாதிக்‍கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்‍கறிஞர் உள்ளிட்டோருடன் சென்ற கார் மீது, கடந்த சில தினங்களுக்கு முன் லாரி மோதிய விபத்தில் பெண்ணின் தாய், உறவினர் உயிரிழந்தனர்.  பாதிக்கப்பட்டபெண்ணும், வழக்கறிஞரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், கட்சியிலிருந்து இடைநீக்‍கம் செய்யப்பட்டுள்ளார். 
இந்நிலையில் பாதிக்‍கப்பட்டபெண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்‍கு, பாதுகாப்புகோரி கடந்த 12ம் தேதியே கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று, வழக்‍கை வாபஸ் பெற வலியுறுத்தியதாகவும், குடும்பத்தினர் அனைவரையும், சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இந்த கடிதம் மீது முன்னரே பாதுகாப்பு அளித்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த முக்கிய கடிதத்தை தன்னிடம் தாமதமாக அளித்துள்ளது குறித்து, ஒரு வாரத்திற்குள் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிக்கை அளிக்கும்படியும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே உன்னாவ் சிறுமி மீதான விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த சீனா...! July 31, 2019

n s7.tv
Image

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும், ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. MOZI 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 8 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 
இந்த சோலார் விமானத்தை எரிபொருள் மூலம் இயக்காமல் முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சேமிக்கப்படும் சூரிய ஒளியை வைத்து, இரவு நேரத்திலும் இந்த விமானம் இயங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Mozi 2
கடந்த 2016-ம் ஆண்டு சீனா சோதனை செய்த MOZI 1 விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த ஆளில்லா சோலார் விமானமாகும். ஆய்வு மற்றும் உளவு பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம், பேரிடர் கால மீட்பு பணியிலும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

TAMILNADU BOVINE BREEDING சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என புகார்! July 31, 2019

Image
மாடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள TAMILNADU BOVINE BREEDING என்ற சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.  
தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைளை முறைப்படுத்துவதற்காக, TAMILNADU BOVINE BREEDING ACT, 2019 என்ற சட்டத்தினை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் படி கால்நடைத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்த்து வருபவர்கள் பாரம்பர்யமான காளைகளான பூச்சிக் காளைகளையோ பொலி காளைகளையோ வைத்திருக்கக் கூடாது. 
அதுவே நாட்டு பசுக்களை வைத்திருப்பவர்கள், காளைகளை வளர்த்துக் கொள்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தக் காளைகளை அரசாங்கம் உருவாக்கவிருக்கன்ற புதிய அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை அந்தக் காளை உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில், அந்தக் காளைகளை அரசாங்கமே கொன்றுவிடவும் சட்டத்தில் இடமுள்ளது. இது மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு சினை ஊசிகள் மட்டும் தான் தீர்வு என்கின்ற அவல நிலையை நோக்கித் தள்ளும் நடவடிக்கை என்று சீறுகிறார்கள்  கால்நடைத்துறை ஆர்வலர்கள்.
இதுவரை தமிழகத்தில் மாடுகளுக்குத் தேவையான சினை ஊசிகளை அரசாங்கமே மலிவு விலையில் 40 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இந்த சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுநாள்வரை அரசாங்கத்திடம் இருந்த சினை ஊசித் தயாரிப்பானது தனியார் நிறுவனங்களின் வசம் சென்றுவிடும். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 80 லட்சம் மாடுகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை செயற்கை முறையில் கருவூட்டப்படும் 90 சதவீத மாடுகள் அரசாங்கம் வழங்குகின்ற மலிவு விலை சினை ஊசிகளைத் தான் பயன்படுத்துகின்றன. 
இந்நிலையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்  தனியார் நிறுவனங்கள் வைக்கிறது தான் விலை என்கிற நிலை ஏற்படும். இதனால் தற்போது நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சினை ஊசி 500 ரூபாய் வரைக்கும் விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் மாடு அல்லது காளை வைத்து இருக்கும் எந்த விவசாயியின் வீட்டையோ தோட்டத்தையோ, எப்பொழுது வேண்டுமானாலும், அரசாங்க அதிகாரிகளால் சோதனை இட முடியும் கஞ்சா, போதைப் பொருட்கள் வைத்து இருப்பவர்களைப் போல, மாடு வளர்ப்பவர்களின் வீடுகளை சோதனை இடுவது நியாயமா என்ற கேள்வியை எழுப்பிறார்கள் பொதுநல ஆர்வலர்கள். 
 
பூச்சி காளைகள் மற்றும் பொலி காளைகளை வளர்த்து வருபவர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் தங்களுடைய காளைகளைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படிப் பதிவு செய்யவிட்டாலோ, தவறாகப் பதிவு செய்து இருந்தாலோ, ஐம்பதாயிரம் ரூபாய் அதற்கான நிபந்தனையாக விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. 
25000  ரூபாய் கடனுக்கும், 40000 /- ரூபாய்க் கடனுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் வறுமையில்  இருக்கும் விவசாயிகளிடம், நிபந்தனைத் தொகையாக 50000 ரூபாய் செலுத்த வேண்டும் எனச் சட்டம் இயற்றி உள்ளது எந்தவகையில் நியாமானது எனக் கொதிக்கிறார்கள் விவசாய அமைப்புகள். சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியைத் தவிர வேறு எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 8,000 வருட காலமாக மாடுகளைப் பிள்ளைகள் போல பராமரித்து வந்த மக்களிடமிருந்து மாடுகளை அரசாங்கமே பிரிப்பது சரியா என்பதுவே கால்நடை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. 

credit ns7.tv

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா! July 31, 2019

மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல் பூதக்கண்ணாடி வழியாக, இந்த மசோதாவைப் பார்த்து, அதனை வாக்கு வங்கி அரசியலாக மாற்றிவிட வேண்டாம் என உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி ராகேஷ் சின்ஹா, முத்தலாக் தடை மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது, தாலிபான் சிந்தாந்தத்திற்கு ஆதரவளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என குறிப்பிட்டார். எனினும், முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு, மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மசோதாவுக்கு அக்கட்சி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மக்களவையில் ஆதரவு தெரிவித்த நிலையில்,  மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், முத்தலாக் தடுப்பு மசோதாவை, நாடாளுமன்ற சிறப்பு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என வலியுறுத்தினார். முத்தலாக் மசோதாவில் உள்ள சில பிரிவுகள், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த மசோதாவை தற்போதைய வடிவில் நிறைவேற்றக் கூடாது, என்றும் கேட்டுக்கொண்டார். 
இதுபோல், முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும், என்று அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார். அவரது பேச்சையடுத்து, முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுபோல், முத்தலாக் தடை மசோதாவுக்கு, மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இந்த மசோதா அரசியல் நிர்ணய சட்ட சாரத்திற்கு எதிரானது, என குறிப்பிட்ட அவர், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறும் இந்த மசோதா, முஸ்லிம் ஆண்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளுகிறது, என்றும் கூறினார். மேலும், பெண்களின் உரிமைகளுக்காக முத்தலாக் மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறும் பாஜக அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை?, என்றும் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. அமீயாஜ்னிக், ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பாதுகாக்கவே இந்த முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்படுவதாகவும், அனைத்து தரப்பு பெண்களுக்கும் சம உரிமை, அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவுடன், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தெலுங்கு தேசம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இதையடுத்து, முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்தார். அடுத்தகட்டமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, இந்தியாவில் முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வரும்
credit ns7.tv

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? -சுஹாசினி விளக்கம் July 29, 2019

திரைத்துறையைச் சேர்ந்த 49 பேர் சார்பாக பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம் கையொப்பம் இடவில்லை என்று மணிரத்னம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கையெழுத்திட்டது உண்மைதான் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 24ம் தேதி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து, இயக்குநர் அபர்ணா சென், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குகா உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், “துரதிர்ஷ்டவசமாக “ஜெய் ஸ்ரீராம்”என்ற போர் முழக்கம் ஆத்திர மூட்டும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை குழைக்கும் வகையிலுமான பிரச்சனையாகி வருகிறது. இதன் பெயரில் பலர் கும்பல் தாக்குதல்கள் நடைபெறுகிறது. மதத்தின் பெயரால் இதுபோன்ற வன்முறைகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. ராம் என்ற பெயர் தற்போது இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான இனத்திற்கு அச்சமூட்டும் வகையிலானதாக இருக்கிறது. இந்நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள், ராமரின் பெயரில் நடக்கும் இதுபோன்ற வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று எழுதியிருந்தனர். 
அந்த 49 பிரபலங்களின் பெயரில் இயக்குநர் மணிரத்னத்தின் பெயரும், அவரது கையொப்பமும் இடம்பெற்றிருந்தது. அந்த கடிதத்தில் இடம்பெற்ற கையெழுத்து மணிரத்னத்தினுடையது அல்ல என்று மணிரத்னம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் இதுபோன்ற கடிதம் எதையும் பெறவில்லை என்றும், அதில் மணிரத்னம் கையெழுத்தும் இடவில்லையென்றும் தெரிவித்துள்ளனர். அதோடு, மணிரத்னம் அவரது வரவிருக்கும் படத்தின் புரோமஷன் வேலைகளில் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து விளக்கும் ட்வீட் ஒன்றுக்கு பதில் தெரிவித்துள்ள சுஹாசினி மணிரத்னம் “தயவுசெய்து மணிரத்னம் சார்பாக பேசவோ, எழுதவோ செய்யாதீர்கள். தவறான விளக்கங்கள் மீது தள்ளியே இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
suhasini reply

மேலும், KVS Haridas என்பவர் மணிரத்னம் கையெழுத்திட்டிருப்பதாக சொல்வது பொய்யானது என்று தெரிவித்துள்ளார் என்று ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சுஹாசினி அவர் தவறாக சொல்வதாக தெரிவித்துள்ளார்.
suhasini reply to fan
மேலும், KVS Haridas-இடம், அந்த ட்வீட்டை நீக்குமாறு சுஹாசினி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
suhasini-tweet-removed
சுஹாசினி அளித்துள்ள பதில் மூலம் மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
பிரதமருக்கு 49 பேர் எழுதிய கடிதத்திற்கு பதிலடியாக “தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம் & தவறான விவரிப்புகள்” என்ற பெயரில் கங்கனா ரனாவத், ப்ரஷன் ஜோஷி, சோனல் மன்சிங், மண்டிட் விஷ்வ மோகன் பாத் உள்ளிட்ட 60 பேர் கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசால் எதற்காக கொண்டுவரப்படுகிறது அணைப்பாதுகாப்பு சட்டம்...? July 30, 2019


இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க மத்திய அரசு அணைப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அணைப்பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு சொந்தமான அணைகளின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
dam 1

இந்தியா முழுக்க 5264 பெரிய அணைகள் உள்ளன. இதில் 293 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை. 1,041 அணைகள் 50 ஆண்டுகள் பழமையானவை. மேலும் 437 அணைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இயற்கை பேரிடர் காலங்களில் அணை உடைந்தால் உயிரிழப்பு, இயற்கை  சேதாரங்கள் உள்ளிட்ட இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன . இதனைத் தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது தான் அணைப்பாதுகாப்பு சட்டம். 
இந்தியாவில் 1950 ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை 36 அணை உடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய நீர் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 11 முறையும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகியவற்றில் ஒரு முறையும் அணை உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும், அணைகளை ஆய்வு செய்வது, அணைகளின்  செயல்பாட்டை கண்காணிப்பது மற்றும் அவற்றை பராமரிப்பது ஆகியவற்றுக்காகவும்  இந்த அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க தற்போதைய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  
credit ns7.tv

கீழடி அகழாய்வில் 4வது உறைகிணறு, மண்பானை, மூடி கண்டெடுப்பு! July 30, 2019


Image
கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர்,  வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்-மூடி  உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன. 
கீழடி
உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க  வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

credit ns7.tv

தமிழின் தொன்மை குறித்த தவறான தகவல் : 13 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்! July 30, 2019

Image
தேசிய அளவில் கல்வியில் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக அச்சடிக்கப்பட்டது பற்றி விளக்கம் கேட்டு, 13 பேருக்கு இப்போது நோட்டீஸ் பறந்திருக்கிறது.
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின், பக்கம் எண் 142ல், தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ் மொழி, கிறிஸ்து பிறப்பதற்கு முன், 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் 2000 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக கூறி, தமிழ் ஆர்வலர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது, பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, 12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தை வடிவமைத்த 13 பேர் கொண்ட குழுவிடம் விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.  
credit ns7.tv

திங்கள், 29 ஜூலை, 2019

மத்திய அரசை கடுமையாக சாடிய வைகோ..! July 29, 2019

Image
மத்திய அரசு வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், சமஸ்கிருதம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி எனவும், பொய்யை திணித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு, தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணித்து வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ் மொழியின் தொன்மை குறித்து, தவறாக எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுவதாக குறிப்பிட்டடார். மேலும், சமஸ்கிருதம் ஒரு உயிரற்ற மொழி என்றும் விமர்சித்தார்.

credit ns7.tv

25 ஆண்டுகள் கழித்தும் படித்த பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்.! July 29, 2019

Image
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஸ்ரீ விவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முக்கொம்பு ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில் உள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், 25 ஆண்டிற்கு பிறகு சந்திக்கும் வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்துடன் பங்கேற்ற மாணவர்கள், பள்ளிக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மற்றும் 500 மரக்கன்றுகளை வழங்கினர். 
மேலும், வரும் காலத்தில் ஆதிதிராவிட நலப்பள்ளி,மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி ஏதாவது ஒரு பள்ளியை தத்தெடுப்பதாக  உறுதியளித்தனர்.

credit ns7.tv

தமிழகத்தில் குறைந்து வரும் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை..! July 29, 2019

credit ns7.tv
Image
பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 16 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது, தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில், பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்ட மேற்படிப்புகளுக்கு, சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு கடந்த 3ம் தேதி துவங்கி நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதில், இதுவரை 76 ஆயிரத்து 364 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள 479 கல்லூரிகளில், இதுவரை 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 85 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதனால், சுமார் 90 ஆயிரத்து, 737 அரசு ஒதுக்கீடு இடங்கள் காலியாக உள்ளன. இதன்மூலம், பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவது தெரியவருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதில் அதிகபட்சமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை 63% மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு அடுத்ததாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடப்பிரிவை சுமார் 43% மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்,இதை தவிர இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு வழக்கம் போல் மாணவர் சேர்க்கை அதிகம் இருந்தாலும், இயந்திரவியல், விமான பொறியியல் பி.இ கட்டுமான பொறியியல், மின்னியல் மின்னணுவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளை விட பெரிதும் சரிந்துள்ளது. துணை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதிகபடியான எண்ணிக்கையில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்ய வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த 54.30% காலி இடங்களில் பெரிய மாற்றம் வர வாய்ப்புகள் இல்லை என தெரிய வருகிறது.
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து ஆராய்ந்து தர வரிசை பட்டியலை வெளியிடும்,அப்படி பல்வேறு அங்கீகாரத்தை பெற்றுள்ள சில முக்கிய பொறியியல் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்றால் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு உள்ள மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.

....பெற்றோர்கள் உஷார்

வாடா மாநிலத்தவர் தமிழகத்தில் ஊடுருவல், சிறுவர்களை கடத்தி விற்கும் அவலம், முஸ்லிம்கள் போல் பார்த்த அணிந்து, சிறுவர்களைக்கடத்தும் பெண்களை கன்யாகுமரியில் கைது ....பெற்றோர்கள் உஷார்




ஞாயிறு, 28 ஜூலை, 2019

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! July 28, 2019

Image
இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாதாந்திர பயனாளர்கள் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது. இதனால், இந்தியாவில் தற்சமயம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உள்ள நிலையில், வரும் 2022 ஆம் ஆண்டில் இது 80 கோடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

credit ns7.tv

வாழைப்பழத்திற்கும் GST வரி விதித்த ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்..! July 28, 2019

Image
2 வாழைப்பழங்களுக்கு 67 ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூலித்த விவகாரத்தில், சண்டிகரில் உள்ள JW Marriott நட்சத்திர ஹோட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ், தமிழில் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். படப்பிடிப்பு ஒன்றிற்காக சண்டிகர் சென்றிருந்த அவர், அங்குள்ள  நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அப்போது சாப்பிட இரண்டு வாழைப்பழம் கேட்ட ராகுல் போசுக்கு அதிர்ச்சியாக  2 வாழைப் பழத்தின் விலை 375 ரூபாய் என்றும், ஜிஎஸ்டி வரி 67 ரூபாயை சேர்த்து மொத்தம் 442 ரூபாய் 50 பைசா அவரிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர், ஹோட்டல் நிர்வாகத்தின் கட்டண ரசீதை கிண்டல் செய்யும் விதமாக, சமூக வலைதளத்தில் பதிவிட்ட, வீடியோ வைரலானது. 
இதைத்தொடர்ந்து ‘விளக்கம் அளிக்கக்கோரி ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சண்டிகர் வணிகவரித்துறை, ஜி.எஸ்.டி. சட்டத்தில் 
11-வது பிரிவை மீறியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வித்தித்துள்ளது. மேலும், பழங்கள் வரியில்லா வகையில் வரும் நிலையில், 2 வாழைப் பழங்களுக்கு எதற்காக 67 ரூபாய் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது என்றும் வணிக வரித்துறை நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதால், மும்பை தாஜ் ஹோட்டல் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

credit ns7.tv

மின்சார கார்களுக்கான ஜி.எஸ்.டி 5% குறைப்பு...! July 27, 2019

Image
மின்சார கார்களுக்கான ஜி.எஸ்.டி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் ஒன்று முதல் வரி குறைப்பு அமலுக்கு வரும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
36வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ கான்பரஸிங் மூலம் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 287 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 
credit ns7.tv

அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு! July 28, 2019

Image
மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 23 எம்.பி.பி.எஸ் அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 
 
இதில் 12 சுயநிதி எம்.பி.பி.எஸ் மருத்துவ கல்லூரிகளில் 69 இடங்கள் காலியாக உள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா அண்ணாமலையார் மருத்துவ கல்லூரியில் 24 இடங்கள்,கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் 7இடங்கள்,பெருந்துரை ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் 17 இடங்கள் என மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளது.அரசு பல் மருத்துவ கல்லூரியில் மட்டும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான 16 இடங்கள் காலியாக உள்ளது.இந்நிலையில் இன்று தொடங்கி வரும் 1ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

credit ns7.tv

வேலூர் தேர்தலில் அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டதா ரவீந்திரநாத்தின் முத்தலாக் ஆதரவு நிலைப்பாடு? July 27, 2019

நடைபெற இருக்கும் வேலூர் தொகுதி தேர்தல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் எதை வைத்து பிரச்சாராம் செய்யப்போகிறார்,எந்த விவகாரம் வேலூர் தேர்தலில் பேசு பொருளாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.எந்த அலையும் வீசாத வேலூரில் ஸ்டாலின் எதை முன்னிறுத்த போகிறார், எதை வைத்து பிரச்சாரம் செய்யப்போகிறார் என்ற சந்தேகத்தை தொடர்ச்சியாக எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த இடத்தில் தான் முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் ஒற்றை எம்.பி யான ரவீந்திரநாத்குமார் மசோதாவை ஆதரித்து வாக்களித்திருப்பது மிக பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.வெற்றியை தீர்மானிக்கும் கணிசமான இஸ்லாமிய வாக்குகள் நிறைந்துள்ள வேலூர் தொகுதி தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், ரவீந்திரநாத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.
ரவீந்திரநாத்தின் ஆதரவு நிலைப்பாடு கட்சி தலைமையின் உத்தரவா? அல்லது அவரின் தனிப்பட்ட முடிவா? என்பதும் விவாதிக்கவேண்டியுள்ளது. அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை இது இரட்டை தலைமையின் இரட்டை நிலைப்பாடு என கடுமையாக விமர்சிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.ஸ்டாலினின் கருத்துக்கு வலுசேர்த்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ,ரவீந்திரநாத்தின் ஆதரவு கட்சியின் நிலைப்பாடுதான், கட்சி தலைமையின் உத்தரவு படியே அவர் செயல்படுகிறார் என போட்டுடைத்திருக்கிறார். ஆனால் அமைச்சர் ஜெயகுமாரோ மக்களவையை விடுங்கள், மாநிலங்களவையில் எங்கள் கொள்கைகளை தெளிவுபடுத்துவோம், முத்தலாக்கை ஜெயலலிதா எதிர்த்ததுபோல நாங்களும் எதிர்ப்போம் என கூறுகிறார்.
உண்மையில் முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் உண்மை நிலைப்பாடுதான் என்ன?முத்தலாக் விவகாரத்தில் ரவீந்திரநாத் குமார் ஆதரித்து வாக்களித்தது கட்சிக்குள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டதா? என்ற சந்தேகமும் , முத்தலாக் விவகாரம் வேலூர் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை வேலூர் தேர்தலோடு முத்தலாக் விவகாரத்தை முடிச்சுப்போட்டு பேசுவேண்டி உள்ளது.
credit ns7.tv

சனி, 27 ஜூலை, 2019

மும்பை வெள்ளத்தில் சிக்கி கொண்ட ரயில்! July 27, 2019

Image
மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்கும் பணி நடந்து வருகிறது. 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாட்டுங்கா, முக்கிய வர்த்தகப் பகுதியான நரிமன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தொடர் மழை காரணமாக, பத்லாபூர் ரயில் நிலையத்தை மழை நீர் சூழ்ந்ததால், தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால், ரயில் போக்குவரத்து முடங்கியது. இதன் காரணமாக சுமார் 2 ஆயிரம் பயணிகளுடன் சென்ற மகாலட்சுமி விரைவு ரயில் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ரயில் பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலில் சிக்கித் தவித்த பயணிகளை ரப்பர் படகுகள் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் படையினர் மீட்டனர். 
அதன்படி பெண்கள், குழந்தைகள் என இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்புக்குழுவினர் மீட்டனர்.

credit ns7.tv

4 வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்.! July 27, 2019

Image
தமிழக அரசின் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக  விளை நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் மருதாடு பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் மடப்பட்டு வரை  நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு  விஸ்வநாதபுரம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, வெள்ளப்பாக்கம், மருதாடு, குமாரபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களையும் வீடுகளையும் நான்கு வழி சாலைக்காக தமிழக அரசு கையகப்படுத்தும் பனியை துவங்க ஏற்பாடு செய்து வருகின்றது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று குமாரபுரம் பகுதியில் உள்ள மக்கள் குமாரபுரம் தங்களின் வீடு மற்றும் கடைகளில் கருப்புக்கொடி கட்டியும் கிருஷ்ணசாமி கல்லூரி அருகில் இருந்து கையில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்தப் ஆர்பாட்டத்தில் குமாரபுரம் பகுதி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

credit ns7.tv

ப்ளஸ் டூ பாடப் புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்த தவறான பகுதி நீக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு! July 27, 2019


தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையானது என தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆங்கில பாடப்புத்தகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ்.எல்.ஹெர்ட் எழுதிய 'The Status of Tamil as a Classical Language' என்னும் பகுதி இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழி கி.மு 300 ஆம் ஆண்டுகள் பழைமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு 2000ம் ஆண்டுகள் பழமையானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
News7Tamil
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா என கேள்வி எழுப்பியுள்ளார். காவியை பூசிக் கொள்பவர்களின் ஆட்சியில் இது தானே நடக்கும் எனவும் விமர்சித்துள்ள அவர், இந்த கொடுமையை எப்படி சகிப்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமஸ்கிருதத்தை தாங்கி பிடிப்பதன் மூலம் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குகிற அவலநிலைக்கு அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி, சமஸ்கிருதத்திற்கு தொன்மையான தகுதியை வழங்கியிருக்கிற பகுதியை தமிழக அரசு நீக்காவிட்டால் 12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தை தீயிட்டு கொளுத்துவோம் என எச்சரித்துள்ளார். 
இந்த விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் டுவிட்டரில் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 
இதனிடையே, ப்ளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக குறிப்பிடப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ளஸ் 2 பாடப் புத்தகத்தில் திருத்தம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என  தெரிவித்தார். 
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, சைனிஸ் உள்ளிட்ட மொழிகளின் தொன்மை குறித்தும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, தமிழ் மொழியின் தொன்மை மிகவும் குறைவாக இருப்பதாக அச்சிடப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  

credit ns7.tv

வெள்ளி, 26 ஜூலை, 2019

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு! July 26, 2019

Image
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், பள்ளி வாகனத்தில் சென்ற மாணவியை, வாகன ஓட்டுநரும், அவரது உதவியாளரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக்கோரி கோபிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்களும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு மாதத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
credit ns7.tv

மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்வு...! July 26, 2019

Image
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில் மூன்று அடி உயர்ந்துள்ளது. 
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு ஒன்பதாயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏழாயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இதேபோன்று கபினி அணைக்கு வரும் ஏழாயிம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், மூன்று அடி உயர்ந்து 42.14 அடியாக உள்ளது. 
93 டி.எம்.சி. நீர் இருப்பு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 13.2 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஏழாயிரத்து 257 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 
credit ns7.tv

RTI சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! July 26, 2019

credit ns7.tv
Image
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தின் போது, மசோதாவை தேர்வுக்குழு பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்பாமல் விவாதத்துக்கு எடுக்க முடியாது என்று தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியது. 
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு நடுவே, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "RTI சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான எந்தவித உள்நோக்கமும் அரசுக்கு கிடையாது என்றும், இந்த மசோதாவை தேர்வுக் குழுக்கு அனுப்புவதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனும் RTI சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். 
தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவு செய்த எதிர்க்கட்சிகள், குலாம் நபி ஆசாத் தலைமையில் மாநிலங்களவை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக 117 உறுப்பினர்களும், ஆதரவாக 75 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தகவல் ஆணையரின் ஊதியம், பதவிக்காலம், நியமனம் ஆகியவை குறித்து மத்திய அரசு முடிவு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

விவசாய நிலத்தில் விண்கல்? July 26, 2019

Image
விவசாய நிலத்தில் நெருப்புடன் விழுந்தது விண்கல் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மகாதேவா என்ற கிராமத்தில் கடந்த புதன் கிழமையன்று மதியம் வயல்களில் விவசாயிகள் வேலையில் ஈடுபட்டிருந்த போது வானத்தில் இருந்து நெருப்பு மற்றும் புகையுடன் கூடிய மர்மப் பொருள் ஒன்று பெரும் சத்தத்துடன் திடீரென வந்து விழுந்தது.
மர்ம பொருள் விழுந்த இடத்தில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது. அங்கு கால்பந்து அளவு கொண்ட கல் ஒன்று விழுந்து கிடந்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வருவாய் அலுவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்றனர். இந்தக் கல் தற்போது பீகார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் இருந்து பின்னர் ஸ்ரீகிருஷ்னா அறிவியல் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே இது விண்கல்லா என்பது தெரியவரும். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் கல் பற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக காணப்படும் பாராங்கல் போலவே விண்கல் காட்சியளிக்கும், இதன் மேற்பரப்பு தீயினால் சுட்டது போல உள்ளது. மென்மையான மேற்பரப்பை கொண்டுள்ளது. 
அண்டவெளி உருவாதல் குறித்து ஆராச்சியாளர்கள் விண்கல் சோதனை மூலமாக தெரிந்து கொள்கின்றனர்.
கடந்த 2016ல் தமிழகத்தின் வேலூர் அருகிலுள்ள நாட்றாம்பள்ளியில் விண்கல் விழுந்ததில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது
credit ns7.tv 

இதயத்துடிப்பு குறைவதை எச்சரித்து ஒருவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! July 24, 2019

credit ns7.tv
Image
இதயத்துடிப்பின் வேகம் குறைவதை எச்சரித்ததால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இதழுக்கு, தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதித்தருபவர் பால் ஹட்டன். இவரது இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக மிக குறைவாக இருப்பதாக ஹட்டன் பயன்படுத்தும் ஆப்பிள் வாட்ச் எச்சரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதயத்துடிப்பானது சாதாரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கவேண்டும் என்ற நிலையில் ஹட்டனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 40 ஆக குறையத்தொடங்கியது. இதனை உணர்ந்த ஆப்பிள் வாட்ச்சானது ஹட்டனை தொடர்ந்து எச்சரித்தது. இதன் காரணமாக ஹட்டன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், ஹட்டனுக்கு வெண்ட்ரிகுலர் பைஜெமினி நிலையில் அவரது இதயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையானது சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் ரத்தத்தை சீராக வெளியேற்ற முடியாமல் இதயத்தை முடக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பேசிய ஹட்டன், தற்போது ஆப்பிள் வாட்ச்சில் எனது இதயத்துடிப்பை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது சீராக இருக்கிறது என்றார். ஆப்பிள் வாட்ச்சின் எச்சரிக்கையால் ஒருவர் உயிர்பிழைப்பது இது முதல்முறையல்ல.
கடந்த ஏப்ரல் மாதம் ஒருவரது இதயத்துடிப்பு திடீரென அதிகரிக்க, ஆப்பிள் வாட்ச் அவரை எச்சரித்ததோடு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தது. உடனடியாக விரைந்துவந்த மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். பின்னர் நடைபெற்ற மருத்துவ சோதனையில் அவருக்கு Tachycardia இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்சனை இருப்பவர்களது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100 முறைக்கு மேலே போகும். ஆப்பிள் வாட்ச் சரியான நேரத்தில் எச்சரித்ததால் அவரை காப்பாற்ற முடிந்தது.
இதயத்துடிப்பு மட்டும் அல்லாமல் கீழே விழுந்து படுகாயமடைந்தவர்கள் கூட ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கையால் உயிர்பிழைத்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நார்வேயைச் சேர்ந்த 67 வயதான் டோரல்வ் ஆஸ்ட்வாங் என்பவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் சுயநினைவை இழந்தார். அப்போது அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச்-4  உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்ததால், மீட்கப்பட்ட டோரல்வ் உயிர்பிழைத்தார்.
ஆப்பிள் வாட்ச்-4 சீரியஸானது இசிஜி மற்றும் சீரற்ற இதயத்துடிப்பை கண்டறியும் ஆப் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த இசிஜி ஆப்பானது இதயத்துடிப்பின் அளவை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கும். இதயத்துடிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியை ஆப்பிள் பெற்றிருக்கிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசிஜி தொழில்நுட்பம் கொண்ட இந்த வாட்சை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்துவருவதாக அந்த நிறுவனத்தின் ஹெல்த் வைஸ் ப்ரெசிடெண்ட்டான டாக்டர் சம்பல் தேசாய் தெரிவித்துள்ளார்.

வியாழன், 25 ஜூலை, 2019

கனிமொழி குரல்


தனியார் பள்ளி vs அரசு பள்ளி !


குழந்தைகள் கல்வி


ஸ்டாலினுடன் இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு! July 25, 2019

Image
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை, இஸ்லாமிய சமுதாயத்தை குறி வைத்து கைது நடவடிக்கை, சோதனைகளை மேற்கொண்டு வருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பீதியை எழுப்பும் வகையில் என்.ஐ.ஏ அமைப்பு செயல்படுவதாக குற்றம்சாட்டினர். 
இந்த விவகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு! July 25, 2019

Image
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கும் சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆறு வயதில் இருந்து மூன்றாவதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு முரணான அம்சங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, சமூக நீதிக்கு புறம்பாக உள்ள புதிய கல்விக் கொள்கையை, உடனடியாக, திரும்பப் பெற வேண்டும் என கல்லூரி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

credit ns7.tv