புதன், 31 ஜனவரி, 2018

இஸ்லாம் விமர்சனைத்தை கண்டு அஞ்சுகிறதா?


கடவுளை விட நீ பெரியவனா? சங்கர மட சர்ச்சை பழ.கருப்பையா அதிரடி பேட்டி


ஆன்மீக அடிப்படையில் அனைவரும் ஒற்றுமை தானே? ஆனால் வெளியே வந்தால் வேற்றுமையாக மாறுவது ஏன்?


தமிழ் மரபுத்திங்கள்


28-01-2018 press meet - namakkal | Seeman Press-meet


பெரம்பலூர்: அரசு பள்ளிக்கு சீர்வரிசை அனுப்பிய ஊர் பொதுமக்கள் January 31, 2018

Image

பெரம்பலூர் அருகே அரசு பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சீர்வரிசை செய்யும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை தரம் உயர்த்த உதவி செய்ய தலைமை ஆசிரியர் இளங்கோவன் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து பெற்றோர்கள், பொது மக்கள், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் ஆகியோர் தங்களது சொந்த பணத்தில் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்க முன்வந்தனர். 

இதையடுத்து பள்ளிக்கு தேவையான பொருளை சீர்வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான பொருட்களான ஏசி, கனிணி, நாற்காலி, ஸ்மார்ட் போர்டு, டேபிள், சேர், ஆகியவை வழங்கப்பட்டன. 

​55 கோடி இந்தியர்கள் மிகமோசமான காற்றை சுவாசித்து வாழ்கின்றனர் - அதிர்ச்சிகர ஆய்வு! January 30, 2018

Image

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வசிக்கும் மக்களில் பலகோடி பேர் சுவாசிக்கவே தகுதியற்ற காற்றை சுவாசித்து வாழ்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ’க்ரீன்பீஸ் இந்தியா’ அமைப்பின் சார்பாக செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 282 முக்கிய நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான சுவாசக்காற்று உள்ள நகரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லியைப் போலவே, தேசியத் தலைநகர் வட்டத்தில் இருக்கும் பரியாபாத், காசிதாபாத் ஆகிய நகரங்களும் இதேபோல் மிகமோசமான சுவாசக்காற்று உள்ள இடங்களாக உள்ளன. இவை பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்ட 282 நகரங்களில் சுமார் 63 கோடி வசிக்கிறார்கள். இவர்களில் 58 கோடி பேர் மோசமான காற்றை சுவாசித்து வாழ்வதாகவும் அதிலும் குறிப்பாக 55 கோடிபேர் மிகமோசமான சுவாசக்காற்று அபாயகரமான பகுதியில் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 4.7 கோடி குழந்தைகள் உள்ளனர். இதில், 1.7 கோடி குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இரண்டு மடங்கு மோசமான சுவாசக்காற்று இருக்கிறது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மிகமோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் டெல்லி, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் வசிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பகுதிகளில் மாசுபாட்டை அளவிடும் PM அளவீடு 10 ஆக உள்ளது. இந்த PM அளவு 2.5-ஐ தாண்டிவிட்டால் அது மோசமான காற்றாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவு மெல்ல அதிகரித்து தற்போது 10-ஐ எட்டியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இந்த PM அளவு பல்வேறு முயற்சிகளினால் கடந்த சில ஆண்டுகளில் 15%, 20% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேநேரம் இந்தியாவில் இந்த அளவு 13% உயர்ந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் மாசுகட்டுப்பாட்டு அமைப்புகள் தோற்றுப்போய்விட்டன என்றும், விரைவில் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் சுமார் 58 கோடி பேர் காற்று சுகாதாரம் பற்றிய தகவல்களே இல்லாத இடங்களில் வசிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​4வயது சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை! January 31, 2018

Image

4 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல் 
கிராமத்தை சேர்ந்த பரமசிவம் இவரது மகள் பச்சையம்மாள் 4 வயது இவர் 
மங்கலத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் 
கடந்த 10.6.2013 அன்று சிறுமி பச்சையம்மாள் மாயமானார். பின்னர் தன்மகளை  காணவில்லை என சிறுமியின் தந்தை பரமசிவம் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தனர். 

இந்நிலையில் ஆர்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி பச்சையம்மாள் சடலமாக மீட்கப்பட்டர். சிறுமியின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிறுமியின் மரணத்துடன் தொடர்பு இருந்தது  தெரியவந்தது. இதனால் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த இறுதி கட்ட விசாரனையில் சிறுமி பச்சையம்மாள் கடத்தி கொலை செய்யப்பட்டது உறுதியானதாக நீதிபதி கூறினார். இதனால் இந்த வழக்கில் குற்றவாளியான பாலானந்தல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் சாகும் வரை தூக்கு தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். 

செவ்வாய், 30 ஜனவரி, 2018

முதலமைச்சரின் சாதனை

Image may contain: 2 people, people smiling

526கோடிக்கு வாங்க வேண்டிய போர்விமானத்தை 1570 கோடிக்கு வாங்குவது ஏன்? - நிர்மலாவுக்கு மணிசங்கர் கேள்வி! January 30, 2018

Image

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்ததித்தில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்திருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ‘காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டிருந்த ஒப்பந்தித்தில் இருந்ததைவிட குறைந்தவிலைக்குத்தான் போர்விமானங்கள் வாங்கப்படுகிறது” என விளக்கம் அளித்திருந்தார்.

மேலும், போர் விமானங்கள் வாங்கப்படும் தொகை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு தனக்கு கூச்சமில்லை எனவும், அமைச்சகத்தின் அதிகாரிகள் அவற்றை வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த ரபேல் போர்விமானங்கள் வாங்கப்படும் விவகாரத்தில் நிர்மலா சீத்தாரமனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரான்ஸின் ‘டிசால்ட் ஏர்கிராப்ட்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி 126 விமானங்களை சுமார் 54,000 கோடிக்கு வாங்க முடிவுசெய்திருந்ததாகவும், ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் வெறும் 36 விமானங்கள் 58,000 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் 526.1 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது ஒரு விமானம் சுமார் 1570.26 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

526-ஐ விட 1570 என்பது சிறிய தொகையா எனவும் நிர்மலா சீத்தாரமனுக்கு மணிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 126 விமானங்களில் 18 விமானங்கள் தயார் நிலையில் வாங்கப்படும் என்றும், மீதம் 108 விமானங்கள் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அவை எதுவுமே இல்லாமல் வெறுமனே 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டிருப்பதாகவும் மணிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், விமானத்தை உற்பத்திசெய்யும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் இந்தியாவிலேயே சுமார் 250 போர் விமானங்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள மணிசங்கர், ஆனால் பாஜக ஆட்சியில் இவை எதுவும் பின்பற்றப்படாமல் 36 விமானங்களை 58,000 கோடிக்கு வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவில் இருக்கும் ஒரேயொரு விமான உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிட். நிறுவனமும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

​நீல நிறமாகி பின்னர் சிவப்பு நிறமாக மாறப்போகும் நிலா! January 30, 2018

Image
நாளை நிகழும் முழு சந்திர கிரகணத்தின் போது, 3 அரிய நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வுகள் நடக்கவிருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகையில் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. 

நாளை மாலை 6.25 முதல் இரவு 7.25 வரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் மறைந்து இயல்பு நிலையை அடையும் நிலா மீது, வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம், நிலாவை அடைவதால் நிலா சிவப்பாக தோன்றும் 2-வது அரிய நிகழ்வு தோன்றும். 

150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. நிலா பூமியை சுற்றிவரும்போது மாதம் ஒரு முறை பூமியை நெருங்குகையில் நிலா வழக்கத்தைவிட பெரிதாக தோன்றும். சூப்பர் மூன் எனப்படும் இந்த 3-வது அரிய நிகழ்வும் சந்திர கிரகணத்தின்போது தோன்றுகிறது. 

​ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்..! January 30, 2018

Image

சென்னை பட்ரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது, மேலும் பொதுமக்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடினர். 

கொரட்டூர்-அம்பத்தூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் நின்றது. அந்த ரயிலில் இருந்த கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். 

மாணவர்கள் ரயிலில் இருந்து இறங்கி கத்தியுடன் ஓடும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்ஃபோனில் படமாக்கியுள்ளார். இதனிடையே போலீசாரின் விசாரணையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை மாநில கல்லூரியைச் சார்ந்த ஜெகதீஸ்வரன், தினேஸ்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்துள்ளது. மேலும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மோகன் உள்ளிட்ட 4 மாணவர்களையும் போலிசார் தேடி வருகின்றனர்.

“கள்ளத்துப்பாக்கி தமிழகத்தின் பிரச்சனை அல்ல, தேசத்தின் பிரச்சனை!" : நீதிபதி January 30, 2018

Image
கள்ளத்துப்பாக்கி தமிழகத்தின் பிரச்சனை அல்ல, தேசத்தின் பிரச்சனை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கள்ளத்துபாக்கி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 16ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசுக்கு தொழு நோயாளிகள் வைக்கும் கோரிக்கைகள்! January 30, 2018

Image

பேருந்து கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு கட்டணச் சலுகை வேண்டும் எனக் கேட்கின்றனர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழு நோயாளிகள். 

தொழு நோய் ஒழிப்பு தினமான இன்று அவர்களின் கோரிக்கைகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காண்போம். 

சமூகத்தில் சக மனிதர்களால் ஒதுக்கப்பட்டும் விரட்டப்பட்டும் தொழு நோயாளிகள் சந்திக்கும் அவமானங்கள் ஒன்றிரண்டு அல்ல. தொழு நோய் குறித்த எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன.   

மைக்ரோ பாக்டீரிம் என்ற பாக்டீரியாவால் உருவாகும் தொழுநோய் பொதுவாக தோல் மற்றும் நரம்புகளை வெகுவாக பாதிப்படையச் செய்துவிடும்.  முறையாக சிகிச்சை பெற்றால் இந்நோயிலிருந்து முழுமையாக விடுபடமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1986ம் ஆண்டுக்கு முன்பு வரை தொடர் சிகிச்சை ழூலமே தொழு நோயை குணப்படுத்த முடிந்தது ஆனால்  தற்போது கூட்டு மருந்து சிகிச்சை ழூலம் தொழுநோயை குணப்படுத்த முடிகிறது என அந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் கூறுகின்றனர். 

நமது உடலில் உணர்ச்சியற்ற தேமல் அறிகுறிகள் தென்பட்டால் அது தொழுநோயின் 
அறிகுறியாகக் கருதப்படுகிறது. தேசிய தொழுநோய் ஒழிப்பு மூலம் மாநில அரசிற்கு மருந்துகள் அனுப்பப்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவ மனை களில் மக்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 
அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 47 தொழு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூட்டு மருந்து சிகிச்சை பெற்றவர்களில் சிலருக்கு மருந்து உட்கொண்டதினால் மறுவினை பாதிப்புக்கும் சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது அவ்வாறு சிகிச்சை பெறும் காட்டு பிரிங்கியத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறும் போது சிகிச்கைக்காக தஞ்சைக்கு சென்று வர வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்.  

அவ்வாறு செல்லும் போது துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டியுள்ளது எனவும் ஆனால் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்ப்பட்டதால் அது தங்களுக்கு அதிக பொருளாதார சுமையை தருவதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார். தங்களுக்கு பேருந்து பயணக் கட்டணத்திலிருந்து சலுகை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரின் சகோதாரர் நடராஜனும் தொழு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தனது இரண்டு மகன்களை தொழு நோய் தாக்கியதால் மிகுந்த மன வேதனையில் இருக்கும் அவர்களின் தாயார் நல்லம்மாளுக்கு வறுமை கூடுதல் அவதியைக் கொடுக்கிறது. 

இருவருக்கும் தானே சமையல் செய்து கொடுக்க வேண்டியுள்ளதாகக் கூறும் நல்லம்மான் வயதாகி விட்டதால் தனக்கு கூலி வேலை யாரும் தருவதில்லை என்று தனது வேதனையை பதிவு செய்கிறார். எனவே அரசாங்கம் உதவி தொகை வழங்கினால் மட்டுமே தங்களது மகன்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார். 

சகமனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் தொழு நோயாளிகளுக்கு வறுமையாலும் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுகிறது.

மோசமான சூழலில் பாலின பிறப்பு சமத்துவம் - பெண் குழந்தைகளை வெறுக்கும் இந்தியா! January 30, 2018

Image

பாலின சமத்துவம் என்பது தேசத்தின் வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சமுதாய சமநிலை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கியது. அடிப்படையில் ஆணாதிக்க - சாதிமைய சமூகமான இந்தியாவில் இதற்காகத்தான் பல சமூக நலத்திட்டங்களும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன.
சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு தளங்களிலும் இத்தகைய பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்தியாவில் ஆண் - பெண் பிறப்பு விகிதமும், பெற்றோர்களின் குழந்தைளின் பாலினத்தேர்வு குறித்த விருப்பமும் மாறவில்லை என்பதையே நேற்றைக்கு இந்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை காட்டுகிறது.

நேற்றைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவில் சுமார் 21 பெண் குழந்தை பிறப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, ஒரு குடும்பத்தில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும்பட்சத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்க பெற்றோர்கள் அனுமதித்துள்ளார்கள். அதேநேரம், பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் அத்தோடு குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளும் இயல்பு அதிகரித்திருக்கிறது. இப்படி பெண் குழந்தைகள் பிறப்பதைதடுப்பது ‘தவிர்க்கப்பட்ட பெண் சிசு’ என குறிக்கப்பட்டுள்ளது.
 இதனால், ஆண் - பெண் பாலின சமத்துவ விகிதாச்சாரத்தில் ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.  குடும்பத்தில் கடைசியாக பிறந்த குழந்தைகளை வைத்து கணக்கிடப்படும் இந்த அளவில், 2005-06 காலகட்டத்தில் பிறந்த குடும்பத்தின் குழந்தைகளில் 100 பேரில் 39.5% பெண்கள், மீதம் 60.5% ஆண்கள் என்று இருந்தது. இந்த அளவு 2015-16 காலகட்டத்தில், 100 பேருக்கு 39 ஆக உயர்ந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, ஆண் - பெண் பாலின விகிதாச்சாரம் 1.05 என்கிற அளவில் இருக்கவேண்டும். அதாவது ஒரு பெண்ணுக்கு 1.05 ஆண்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவில் குடும்பத்தில் முதலில் பிறந்த பெண்களுக்கு இந்த விகிதம் 1.82 என்றும், இரண்டாவது பிறந்த பெண்களுக்கு ஆண்கள் விகிதம் 1.55 என்றும், மூன்றாவது பிறந்த பெண்களுக்கு நிகரான ஆண்களின் பாலின விகிதாச்சாரம் 1.55 ஆகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தவிகிதம், பஞ்சாப், ஹரியாணாவில் இந்தவிகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள பெற்றோர்கள் அதிகம் ஆண்குழந்தைகளையே விரும்புகிறார்கள் என தெரியவந்துள்ளது.
அதேநேரம், ஆய்வறிக்கையில் சில நம்பிக்கையான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 74.5% பெண்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் நிலையில் கலந்தாலோசிக்கப்படுவதாகவும், 71% பெண்கள் உடல் அல்லது உணர்வு ரீதியிலான வன்முறைகளை எதிர்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

நேற்று வெளியான செய்திக்கு காவல்துறை ஆணையர் அலுவலகம் மறுப்பு January 30, 2018

Image

வாகன ஓட்டிகள் சோதனையின் போது நிற்காமல் சென்றால் அவர்களை துரத்திப் பிடிக்ககூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கடவில்லை என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினாலும், வாகன சோதனையின்போது நிற்காமல் போனாலும்கூட போக்குவரத்து காவல் அதிகாரிகள் துரத்திப்பிடிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியானது. இதனிடையே இந்த தகவலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் மறுத்துள்ளது. 

இது தொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றம் செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கையும் எடுப்பது காவல் துறையின் கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த காவல் அதிகாரிகள், பொதுமக்களிடம் பரிவோடும் , கனிவோடும் நடந்த கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சட்டத்தை மீறுபவர்களிடம் மனித நேயத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

“நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அவருடைய தவறினால் தான்” - மாணவிகளை எச்சரித்த ஆசிரியை! January 30, 2018

Image

ராய்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரியும் ஆசிரியை தனது மாணவிகளிடம் நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு அவரே காரணம் என்றும், நிர்பயாவிடமே தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜீன்ஸ், டி-ஷர்ட் ஆடைகள், லிப்ஸ்டிக் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் இரவு நேரங்களில் ஆண்களுடன் தனியாக வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

அழகான முகம் இல்லாத பெண்கள் மட்டுமே கவர்ச்சியான உடை அணிவார்கள். இக்காலத்துப்பெண்கள் வெட்கமின்றி இருக்கிறார்கள், நண்பர் என்ற பெயரில் வேறு ஒரு ஆணுடன் இரவு நேரத்தில், நிர்பயா எதற்காக தனியாக செல்லவேண்டும்? நிர்பயாவின் பெற்றோர் இரவுநேரத்தில் அவரை எப்படி தனியாக அனுப்பினார்கள் என்றெல்லாம் பேசிய உயிரியல் ஆசிரியை மீது மாணவிகள் கடும் எரிச்சலிற்கு ஆளாகினர். மேலும், அவர் பேசியதை பதிவு செய்தும் வைத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் பேசிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த வியாழக்கிழமை, பள்ளி முதல்வருக்கு மாணவிகள் புகார்க் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், அது பொய்யான தகவல் என நினைத்த முதல்வர் அக்கடிதத்தினைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நேற்று அம்மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முதல்வரை சந்தித்து, ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். பெண்களை அவதூறாக பேசியதாகவும், சாபமிட்டதாகவும், ஆடியோ பதிவை கேட்டவர்கள், ஆசிரியை மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை இவ்வாறு பேசியது தங்களை மனதளவில் அதிகம் பாதித்தது என்று மாணவிகள் தெரிவித்தனர். இதனடிப்படையில், ஆசிரியை மீது விசாரணைக்குப்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித்தலைவர் கே.வி. சங்காதன் தெரிவித்துள்ளார்.

Why do Muslims not give importance to cleanliness?


தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - ஒர் இஸ்லாமிய பார்வை தலைமையக - இரண்டாம் உரை - 26-01-2018


திங்கள், 29 ஜனவரி, 2018

தப்புனா தட்டிக் கேக்கனும்


கிறிஸ்தவ ஆலயத் திருவிழாவின் போது பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலர்! January 29, 2018

Image
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயத்திருவிழாவின் போது பாதுகாப்புக்கு வந்த காவலர்களில் ஒருவர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்காசி அருகேயுள்ள கருத்தப்பிளையூர் என்ற கிராமத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று இரவு சிறப்பு திருப்பலியுடன் நற்கருணை ஆராதனையும் நடைப்பெற்றது. இந்த நற்கருணை ஆராதனை நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது, இரவு 10 மணிக்குமேல் பிராத்தணை செய்யக்கூடாது எனக்கூறி அங்கு பொதுமக்களுக்கு காவலாக இருந்த காவலர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஆராதனை நடைப்பெற்றுக்கொண்டிருந்த மேடைக்கு அருகில் சென்று ஆராதனையை உடனடியாக முடிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் பொதுமக்களில் சிலர் இன்னும் சிறிது நேரம் மட்டும் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் காவலர்களுக்கான சீருடையை கலைந்துவிட்டு பொதுமக்களுடன் சண்டைக்கு போய் இருக்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் போலீசாரை சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். பின்னர் டிஸ்.எஸ்.பி.க்கு தகவல் கொடுப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி. ஆலய பாதிரியார் மற்றும் நிர்வாகிகளுடன் சமதானப் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 

கிறிஸ்தவ ஆலயத்திருவிழாவின் போது காவலுக்கு வந்த காவலர் ஒருவர் பொதுமக்களிடமே சண்டைக்கு போன அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் January 29, 2018

Image

பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்ப பெறக் கோரும் விவகாரத்தில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னை கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் சிலர் தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பான குற்றச்சாட்டை அறிக்கையாக தயார் செய்து உரியவர்களிடம் அளிப்போம் எனக் கூறினார். மேலும், போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

இதே போல, சைதாப்பேட்டையில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அனுமதியின்று போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து பேட்டியளித்த வைகோ, பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய திருமாவளவன், தற்போதைய கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் எனவும், கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ராயப்பேட்டையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

மறக்கமுடியுமா ?

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

என்ன நடக்கிறது இந்திய செல்போன் மார்க்கெட்டில்? January 25, 2018

Image

இந்திய செல்போன் மார்க்கெட் சந்தையில் என்ன நடக்கிறது மிகவும் சுவாரசியமான விவகாரம். ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப செல்போன் வியாபாரம், அது தொடர்பான பொருளாதார இயக்கம், செல்போன்களுக்கான அலைபேசி மற்றும் இணைய வசதிகளை வழங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் என எல்லா துறையும் வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் செல்போன் சந்தையில் போட்டிபோட்டு இயங்கி வருகின்றன. தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங், சீனாவைச் சேர்ந்த விவோ, ஓப்போ, ஜியோமி, அமெரிக்காவின் ஆப்பிள், இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், கார்பன் ஆகிய நிறுவனங்கள் சந்தையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் செல்போன் மார்க்கெட் குறித்து கேனல்ஸ் மற்றும் கவுண்டர்பாயிண்ட் என்கிற ஆய்வுமையம் ஆய்வு முடிவுகளைக் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கான செல்போன் இறக்குமதி, விற்பனை, சந்தையில் எத்தனை சதவீதம் கையில் வைத்திருக்கின்றன என்பதைக் குறித்து ஆய்வு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் 300 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அக்டோபர் - டிசம்பர் மாத இடைவெளியில் மொத்த சந்தையில் சாம்சங் 23% பங்கு வைத்துள்ளது. அதேநேரம், ஜியோமி நிறுவனம் 25% பங்கு வைத்துள்ளது. இதன்மூலம், செல்போன் மார்க்கெட்டில் பெரும் ஜாம்பாவனாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தை ஜியோமி வீழ்த்தியுள்ளது.

ஆனால், இது ஒரு காலாண்டில் மட்டுமே நடந்துள்ளது. 2017ம் ஆண்டிலேயே ஜனவரி-மார்ச், மார்ச்-ஜூன், ஜுன் - செப்டம்பர் வரையிலான மற்ற மூன்று காலாண்டுகளிலும் சாம்சங் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வருகை, ஜியோமிக்கு பெரும் பூஸ்ட்டாக இருந்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் புதிதாக பல லட்சத்தில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான 4ஜி இணையச்சேவை உள்ள செல்போன்கள் ஜியோமியில் குறைந்தவிலையில் கிடைக்கின்றன. மேலும், இந்தவகை செல்போன்களை சாம்சங்கை காட்டிலும் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது.

அதேநேரம், மொத்த விற்பனையால் கிடைக்கும் லாபம், அதிக அளவில் செல்போன்களை சந்தையிலும், கடையிலும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றில் சாம்சங் நிறுவனமே முன்னணியில் உள்ளது. சீன நிறுவனங்களான விவோ மற்றும் ஓப்போ முறையே தலா 6% பங்குகளை வைத்துள்ளன.

ஒருகாலத்தில் சுமார் 50% சந்தையைக் கட்டுப்படுத்தி வந்த மைக்ரோமேக்ஸ், கார்பன், இண்டெக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தற்போது தள்ளாடி வருகின்றன எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​“நாளை திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம்!” : மு.க.ஸ்டாலின் January 28, 2018

Image

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேறு எந்த மாதிரியான போராட்டம் மேற்கொள்வது என்பது பற்றியும் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்டு மாநில துணைச்செயலர் வீரபாண்டியன், சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். எனவே, திட்டமிட்டப்படி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும், இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் எனவும் தெரிவித்தார். அரசின் நிலைப்பாட்டை பார்த்து மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

​‘புறம்போக்கு, களவாணி’ - பாஜக மீதான விமர்சனம் குறித்து ஸ்டாலின் விளக்கம்! January 28, 2018

Image

புறம்போக்கு என்ற வார்த்தை அரசாங்க கெஜட்டிலேயே இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், பின்னர் அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தனக்கு அய்யாதுரை என்று பெயர் வைக்கவே கருணாநிதி முதலில் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், காரணப் பெயர் என்ற வகையில் தமக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டியதாகவும் தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் என்ற பெயர் வைக்கப்பட்டதால், சென்னை சர்ச் பார்க் பள்ளியில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ஸ்டாலின், அந்தப் பள்ளியில் சேர முடியாமல் போனதற்காக இப்போது மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று தாம் பேசிய போது புறம்போக்கு என்று குறிப்பிட்டது சர்ச்சையாக்கப்பட்டதாக தெரிவித்த ஸ்டாலின், புறம்போக்கு என்ற வார்த்தை அரசாங்க கெஜட்டிலேயே இருப்பதாக விளக்கினார்.

களவாணி என்று சொல்லலாமா என கேட்கிறார்கள். திருடன் என்று சொல்வதை களவாணி என்று கூறலாம். ஜெயலலிதா களவாணி என்று பேசியது சட்டமன்றத்திலே பதிவாகியுள்ளது புறம்போக்கு என்பது அரசாங்க கெசட்டிலேயே உள்ளது

பைசா கணக்கில் பேருந்து கட்டணம் குறைப்பு - முழுவிவரம்! January 28, 2018

Image

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி தற்போது பார்ப்போம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு நன்கு பரிசீலித்து பேருந்து கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவுப்பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்படுகிறது. சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் ஒரு ரூபாய் 10 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாகவும் கட்டணம் குறைக்கப்படுகிறது. குளிர்சாதனப் பேருந்துகளில் ஒரு ரூபாய் 40 பைசாவில் இருந்து ஒரு ரூபாய் 30 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்படுகிறது. இதேபோல் சென்னை மாநகர் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இயக்கப்படும் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்படுகிறது எனவும், மேலும், அனைத்து நிலைகளிலும் ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

​காவிரிக்கு நிரந்தர தீர்வு: விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தலைவர்கள் கைது! January 28, 2018

Image

டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அனைத்து விவசாய சங்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தஞ்சையில், சோழன் விரைவு ரயிலை மறித்து மதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, காவிரி பிரச்னையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

இதேபோல், திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், திருச்சியில் ரயில் மறியல் செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ஜி.ராமகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.

சனி, 27 ஜனவரி, 2018

முதல்வரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட பெண்கள் யார் தெரியுமா? January 27, 2018

Image
முறையான மருத்துவம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து 20 ஆண்டு ஆகியும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை விளக்கும் செய்தி தொகுப்பை காணலாம்.

கல்லீரல் நோய் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கருத்தரங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான மருத்துவர் முகமது ரீலா 2 ஆண்டுகளுக்கு முன் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.

20 ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணை கௌரவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசு வழங்கினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாழ்வதால் மற்றவர்களை போல் தானும் இயல்பாக வாழ்வதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ஃபென்னா, ட்ரினிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் இவர் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். 

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறுவை சிகிச்சை செய்வது மிகுந்த சவாலாக இருந்தது, ஆனால் தற்போது அதன் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செல்கிறார் மருத்துவர் முகமது ரீலா, தமிழகத்தை சேர்ந்த இவர் உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதில் தலை சிறந்தவராக உள்ளார். 

உறுப்பு மாற்று சிகிச்சை பின்னும் தன்னம்பிக்கையுடன் வாழும் ஃபென்னா போன்றவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆக உள்ளார்.