சனி, 31 ஆகஸ்ட், 2019

GDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தநிலை: ஸ்டாலின்

உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருப்பதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பது, வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை மத்திய புள்ளியியல் துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, அதற்கு முந்தைய காலாண்டில் இருந்ததை விட 0.8 சதவீதம் குறைந்து 5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. 
மு.க.ஸ்டாலின் ட்வீட்
இந்நிலையில், இது குறித்து, ட்விட்டரின் பதிவிட்டுள்ள அவர், அலங்காரப் பேச்சுகளைப் பேசி மார்தட்டிக் கொள்வதை விடுத்து, இப்போதாவது பாஜக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். உண்மையான பிரச்னைகளான வேலை இழப்புகள், தொழிற்துறை சரிவு மற்றும் கிராமப்புற துயரங்கள் குறித்து பாஜகவினர் பேச வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
credit Ns7.tv

அறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை!

Image
அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட விளம்பர பேனரில்  காஷ்மீர் நிகழ்வு குறித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விளம்பர பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.  இதில் பாஜகவை சேர்ந்த முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் பிரதமர் மோடியின் படத்துடன் காஷ்மீரை மீண்டும் இந்தியாவிற்கு தந்த கணபதி எனவும், இந்துக்களை காத்த மோடி என்ற வாசகங்கள்  இடம்பெற்றுள்ளன. 
இதுகுறித்து புகார் எழுந்ததையடுத்து அறந்தாங்கி காவல்துறையினர், பாஜக நிர்வாகி முரளிதரனை தொடர்பு கொண்டு அந்த விளம்பர பேனரை அகற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால்,  அந்த பேனரை அகற்றக்கூடாது எனவும், அகற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக நிர்வாகி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம் பேரின் பெயர்கள் மிஸ்ஸிங்...!

Credit ns7.tv
Image
அசாமில் இன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் ஆவணத்தில், 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 
அசாமில் வங்கதேச நாட்டினர் அதிகளவில் குடியேறியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் ஆவணம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், அசாமில் வசிப்பவர்களில் 41 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனையடுத்து, இந்திய குடிமகன் என்பதற்கான ஆவணங்களை வைத்துள்ள பலரும், அதுகுறித்து முறையிட்டனர். 
19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் மிஸ்ஸிங்:
இதன் எதிரொலியாக அவர்களின் பெயர்களை சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதோடு, முதலில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் ஆவணம் திருத்தப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, புதிய தேசிய குடிமக்கள் ஆவணம் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய ஆவணத்தில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரின் பெயர்கள் ஆவணத்தில் இடம்பெறவில்லை. 
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
ஆவணத்தில் பெயர் இடம் பெறாதவர்கள், மேல் முறையீடு செய்யலாம் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் ஆவணம் வெளியிடப்பட்டதை முன்னிட்டு, அசாமில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 20 ஆயிரம் துணை ராணுவப்படையினர் அசாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு மேற்கொண்டுள்ள மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. 

சட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறைவேற்றியது ஹிமாச்சல் பிரதேச அரசு..!

Image
சட்டவிரோத முறையில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது ஹிமாச்சல் பிரதேச அரசு.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத முறையில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு பதிலாக தற்போது புதிய சட்டத்தை இயற்ற மசோதா ஒன்றை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான அரசு அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
இன்று இதற்காக நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தல், தூண்டுதல், திருமணம் மூலம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றை குற்றமாக கருதி இந்த சட்டத்தின் மூலம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
முன்னதாக இந்த மசோதா தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற, ​​காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷா குமாரி, சுக்விந்தர் சுகு, ஜகத் சிங் நேகி மற்றும் எம்எல்ஏ ராகேஷ் சிங்கா ஆகியோர் சில பிரிவுகளில் மாற்றங்களை கோரினர்.
சுக்விந்தர் சுகுவின் பரிந்துரைக்கு பதிலளித்து பேசிய முதல்வர். தாகூர், 13 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்த சட்டம் கடுமையானதாக  இல்லை என தெரிவித்தார். மேலும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் எட்டு பிரிவுகள் மட்டுமே கொண்டிருப்பதால் அதில் மேலும் 10 பிரிவுகளைச் சேர்ப்பது நல்லது அல்ல எனவே திருத்தம் செய்வதற்குப் பதிலாகவே புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளது என கூறினார்.
இதிலும், ஏற்கனவே உள்ள சட்டத்தை போல, ஒருவர் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினால் ஒரு மாதத்திற்கு முன்னதாக மாவட்ட நீதிபதியிடம் மனு வழங்க வேண்டும். மேலும் மதம் மாற்றி வைக்கும் பாதிரியார்களும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கடிதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தங்களது பெற்றோர்களின் மதத்திற்கே திரும்வோர்களுக்கு இந்த முறையில் இருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின் படி, பட்டியலினத்தவர்கள், பெண்கள் அல்லது சிறுவர்களை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை இருக்கும். மற்றும் இதில் உள்ள மசோதாவின் 10 வது பிரிவு, இதன் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் நாட்டிற்குள் அல்லது வெளியில் இருந்து எந்தவொரு நன்கொடை அல்லது பங்களிப்பையும் ஏற்க அனுமதிக்கப்படாது என்று கூறுகிறது.
இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு சட்டமாக மாறவிருக்கிறது.
credit ns7.tv

ட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகுந்து விளையாடிய ஹேக்கர்கள்!

ட்விட்டர்  நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) Jack Dorsey-ன் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் சிலர் ஹேக் செய்துள்ளது 
சிஇஓ Jack Dorsey-ன் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட Jack Dorsey-ன் கணக்கில் ஆச்சேபிக்கத்தக்க வகையிலான தகவல்களை ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இணப்பாகுபாடு குறித்த பதிவுகளைகளையும் அவர்கள் அதில் வெளியிட்டுள்ளனர். மேலும் ட்விட்டர் தலைமையிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு ட்வீட் செய்யப்பட்டிருந்தது. சுமார் 15 நிமிடங்களுக்கு இவ்வாறான தகவல்களை அந்த கணக்கில் பதிவிடப்பட்டு வந்துள்ளனர்.
ஹேக் செய்யப்பட்டது எப்படி?
இந்த ஹேக் விவகாரத்திற்கு Chuckling Squad என்ற ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.
Jack Dorsey-ன் ட்விட்டர் கணக்கில் உள்ள மொபைல் எண்ணை simswapping அல்லது "simjacking" என்ற முறையில் ஹேக் செய்த Chuckling Squad ஹேக்கர்கள் குழு இந்த சிம்மில் உள்ள தகவல்களை வேறொரு புதிய சிம்மிற்கு copy செய்து அதன் மூலம் அவரது ட்விட்டர் கணக்கினை எடுத்து மெசேஜ்கள் வாயிலாக இவ்வாறான தகவல்களை பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
credit ns7.tv

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

Image
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், திருவாரூர் கடைமடை பகுதிக்கு வந்து சேராததையடுத்து, விவசாயிகள் ஆற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
கடந்த 13 ஆம் தேதி மேட்டூரில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சம்பா சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லணை வந்து சேர்ந்த நீரை, கடந்த 23ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், திருவாரூர் கடைமடை பகுதிகளுக்கு எட்டு தினங்களில் இருந்து பத்து தினங்களுக்குள் தண்ணீர் வந்து சேரும் நிலையில், இதுவரை தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.  
ஆறுகளின் குறுக்கே பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக என விவசாயிகள் குறை கூறினர். இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், மாங்குடி பாண்டவையாற்றில் உள்ள கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  ஆற்றின் மேம்பால பணிகளை நிறுத்தி பாசனத்திற்கு தண்ணீரை உடனடியாக திறக்காவிட்டால், அடுத்தகட்டமாக சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

credit ns7.tv

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதித்ய சிந்தியா?

Image
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கட்சித் தலைமைக்கு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காவிட்டால் வேறு வழிகளை பார்க்க வேண்டியிருக்கும் எனவே இது தொடர்பாக உடனடியாக முடிவு கிடைக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கெடு விதித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் அரங்கை அதிரச் செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவரான சிந்தியா பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாகவும், மாநில தலைமை பதவி கிடைக்காவிட்டால் கட்சி தாவ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 
இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு முக்கிய தலைவரும் மாநில முதல்வருமான கமல்நாத், இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது, முதல்வர் வேட்பாளரின் பெயரில் சிந்தியாவின் பெயரும் முக்கியத்துவம் பெற்றது. எனினும் அனுபவம் வாய்ந்த கமல்நாத்தினை முதல்வராக அறிவித்தது காங்கிரஸ். அப்போது முதலே இந்த பிரச்சனை புகைந்து வந்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு மாநில தலைவர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு மாநில தலைவர் பதவி கொடுக்கப்படாவிட்டால் ஆதரவாளர்கள் 500 பேருடன் கட்சியில் இருந்து விலகப் போவதாக Datia பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அசோக் டாங்கி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

credit ns7.tv

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

Image
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். 
அரசு முறை பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் சுகதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. தமிழகத்தில் நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுத்து பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் இன்று கலந்துரையாடினார். 
அப்போது மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அவர்களிடம் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்தபடுத்த திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்தார்.

credit ns7.tv

வருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்...!


Image
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மீண்டும் நீட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகின்றன.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வருமான வரித்துறை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்றும், இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 31ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

credit ns7.t v

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

மரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் படம் பொறிக்கின்ற வேலை செய்யலாமா?


மரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் படம் பொறிக்கின்ற வேலை செய்யலாமா?

ஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் - சத்யபால் மாலிக்

Credit NS7.tv
Image
370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். எனினும் இதனால் யாரும் பெரிய காயம் அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
ஐம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு முதல்முறையாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜம்மு காஷ்மீரில்  தற்போது நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாக அப்போது அவர் கூறினார்.
காஷ்மீரில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு பிறகு அங்கு வன்முறையால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்தார். கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் சுட்டது உண்மைதான் எனக் கூறிய மாலிக், எனினும் இடுப்பிற்கு கீழேதான் சுடப்பட்டதாக கூறினார். ஒருவர்தான் கழுத்தில் காயம் அடைந்ததாகவும் அவரது உடல்நிலையும் தற்போது நலமாக உள்ளதாகவும் மாலிக் சத்யபால் தெரிவித்தார்.  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட செல்போன் சேவை மற்றும் இணையத்தள  சேவைகளை தீவிரவாதிகள்தான் பயன்படுத்தி வந்ததாகக் கூறிய சத்யபால் மாலிக், அதனாலேயே அங்கு அந்த சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
படிப்படியாக செல்போன் மற்றும் இணையத்தள சேவைகள் ஐம்மு காஷ்மீரில் வழங்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை விவரித்த அவர், அங்கு 3 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டுவருவதாகக் கூறினார். லடாக்கில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைதியாக செயல்பட்டு வருவதாகவும் சத்யபால் மாலிக் கூறினார்.

பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

Image
கர்நாடகாவை போன்று மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, அது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்
கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்று பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரே அரசு, ஒரே தலைவர், ஒரே கட்சி முறையை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருவதாக கூறினார். இந்தியாவில் அதிபர் முறையை கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும் அவர் விமர்சித்தார். 
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, இதனை எந்த கட்சியும் கண்டிக்கவில்லை என்று கூறினார். இதேபோன்று, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கப்போவதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருவதாகவும், அது ஒருபோதும் நடக்காது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

credit ns7.tv

சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பியூஷ் மானுஷ்...!

Image
சேலத்தில் பாஜகவினர் தாக்கியதில் காயம் அடைந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சேலத்தை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். 
அதன்படி சேலம் மரவநேரி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற பியூஸ் மானுஷ் அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கும், பியூஷ் மானுஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பியூஷ் மானுஷ் மீது செருப்பு மாலை அணிவித்த பாஜக நிர்வாகிகள், காவல் துறையினர் முன்பே அவரை கடுமையாகத் தாக்கினர்.
இதையடுத்து பியூஷ் மானுஷை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் மானுஷ், பல்வேறு கட்சி அலுவலகங்களுக்கு சென்று விவாதிப்பது போன்று தான், பாஜக அலுவலகத்துக்கும் சென்றதாக கூறினார்.
பல மாதங்களாக தங்கள் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் சிலர் மிரட்டல் விடுத்து வருவதாக, பியூஷ் மானுஷின் மனைவி மோனிகா புகார் தெரிவித்துள்ளார். 

credit ns7.tv

பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..!

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான, அபாய எச்சரிக்கையாகவே பியூஷ் மானுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
Credit NS7.tv


பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் @piyushmanush அவர்கள், சேலம் பாஜக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்!
இதைப் பற்றி 897 பேர் பேசுகிறார்கள்

ஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Image
ஹெல்மெட் வழக்கில், நீதிமன்றம் கேட்கும் விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி, கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 
தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தபோதும், அதை நடைமுறைப்படுத்த 12 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
ஹெல்மெட் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை ஏன் அமல்படுத்தவில்லை? என்பது குறித்து, தமிழக உள்துறை செயலாளரும், ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானோர் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாதது குறித்து, சுகாதாரத்துறை செயலாளரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாவட்ட வாரியாக, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு, டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  இந்த விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
credit ns7.tv

புதன், 28 ஆகஸ்ட், 2019

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Image
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீண்டும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 
காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசைக் காற்றின் சாதக போக்கின் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தென்மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

credit ns7.tv

ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்!

Image
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போல ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம் என்ற பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டது. இதேபோல் ஏடிஏம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, அவர்களுடைய செல்போன்களுக்கு ஓடிபி எண்களை அனுப்பவும் ஆலோசனை செய்யப்பட்டது.
கனரா வங்கியில் அமலில் உள்ள இந்த நடைமுறையை அனைத்து வங்கிகளும் விரைவில் கொண்டுவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv

பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..!

Image
பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.  
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள வரைவின்படி பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீது, இது மக்கக்கூடியது, இது மறுசுழற்சி செய்யக்கூடியதென அச்சிட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தனிநபர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பிளாஸ்டிக்கை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் என்றும், பொது இடத்தில் எரித்தால் 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் கழிவை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிடில் தனிநபருக்கு 100 ரூபாய் முதல், 5ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி வரைவு வெளியிட்டுள்ளது.

credit ns7.tv

சந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற்றி...!

Image
நிலவின் வட்டப்பாதையில் சந்திரயானை 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி இன்று வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது.
நிலவின் தென்துருவப்பகுதியை ஆராய சந்திரயான் விண்கலம், கடந்த மாதம் 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் கடந்த 20 ஆம் தேதி வெற்றிகரமாக நுழைந்தது. இதனை அடுத்து, விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவின் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. 
நிலவின் சுற்று வட்டப்பாதையில் தற்போது வலம் வரும் விண்கலத்தை நிலை உயர்த்தும் பணி 3 வது கட்டமாக இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வரும் 2 ஆம் தேதி விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி பிரியும் என்றும், வரும் 7 ஆம் தேதி நிலவில் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
credit NS7.tv

கடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்ற உபரிநிதி எவ்வளவு? August 28, 2019


ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாக மத்திய அரசுக்கு அளிக்கவிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்ற உபரிநிதி குறித்த விபரங்கள்:
➤2008 இல் 15 ஆயிரத்து 11 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி. ரெட்டி. 
➤2009 இல் 25 ஆயிரத்து 9 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2010 இல் 18,759 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2011 இல் 15 ஆயிரத்து 9 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2012 இல் 16 ஆயிரத்து 10 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சகம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2013 இல் 33 ஆயிரத்து 10 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
➤2014 இல் 52, 679 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
➤2015 இல் 65, 896 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
➤2016 இல் 65,876 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
➤2017 இல் 30,659 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்.
➤2018 இல் 50 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்.
➤2019 இல் 1,76,051 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். 
credit ns7.tv

பொருளாதார மந்த நிலை என்றால் என்ன? August 28, 2019

credit ns7.tvImage
பொருளாதார மந்த நிலை...சமீப காலமாய் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ள வார்த்தை இது...
பொருளாதார மந்த நிலை என்றால் என்ன?
ஒருவர் பல் துலக்க பயன்படுத்தும் ஒரு பேஸ்ட் டியூப்பை மாதத்தில் 25 நாட்கள் பயன்படுத்தி விட்டு, மீதமிருந்தாலும் அதை தூக்கிப்போட்டு விட்டு, புதிதாக ஒரு பேஸ்ட்டை வாங்கினால் கூடுதலாக ஒரு பொருள் விற்கும். அதுவே அந்த பேஸ்ட் தீரும் வரை அழுத்தி அழுத்தி, பயன்படுத்தினால், 35 நாட்கள் வரை பயன்படுத்துவார். இதனால் அவர் புதிதாக வாங்கும் பேஸ்ட் கடையில் தேங்கி நிற்கும். 
இதையே சந்தை முழுவதும் விரிவுப்படுத்தி பார்த்தால், தனி நபர் வருமான குறைவு, நுகர்வு குறைவு, பொருட்கள் தேக்கம், குறைக்கப்படும் உற்பத்தி, மூடப்படும் ஆலைகள் என பொருளாதார மந்த நிலையை விளக்க முடியும்.  
இந்த மந்த நிலையை மாற்றிவிட, மக்களின் கைகளில் பணத்தின் புழக்கத்தை அதிகரிக்க திட்டமிடுகிறது மத்திய அரசு. LIQUIDITY என ஆங்கிலத்தில் சொல்லப்படும் பணப்புழக்கம் மக்களிடம் குறையும்போது, பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறது. இந்த தேக்கத்தை போக்கவே ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. 
பண புழக்கத்தை அதிகரிக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள்:
* ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதன நிதி 70 ஆயிரம் கோடி ரூபாயை 
வழங்குதல். 
☛வீட்டு கடன் வழங்கும் வங்கிகளுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தருவது.
☛மத்திய அரசு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி 60 ஆயிரம் கோடியை விடுவிப்பது .
☛ஜிஎஸ்டி பாக்கியை உடனடியாக திரும்ப தருதல். 
☛வங்கிகளுக்கான ரெப்போ விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வங்கிகளுக்கு அழுத்தம் கொடுப்பது. 
இது போன்ற சீர்த்திருத்தங்கள் விரைந்து பலன் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். 
சமீபத்தில் சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட பண புழக்கத்தை அதிகரிப்பது குறித்தே அதிகம் பேசினார். ஆனால் யானை பசிக்கு சோளை பொறியாக இந்த நடவடிக்கை மாறிவிடக் கூடாது என்கிற அச்சமும் சந்தையில் உள்ளது. 
எதிர்வரும் பண்டிகை காலத்தை மனதில் வைத்து வேறு சில அறிவிப்புகளையும் வரும் நாட்களில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவி வருகிறது. நிதி மூலதனத்தை பலப்படுத்துவது என்கிற அம்சம் ஓரளவு தீர்வு தந்தாலும், அது நீண்ட கால பலன் தர வேறு சில நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்கிற வாதமும் மறுப்பதற்கில்லை.

ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் பட்டியல்!

credit ns7.tv
Image
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்க ஐ.நா அனுமதி அளித்துள்ள நிலையில் இதுவரை இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசியல் தலைவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஐ.நா மன்றத்தில் உரையாற்ற வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்தால் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்று பேச அனுமதி அளிக்கப்படும். இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில்
மார்ச் 27, 2017 அன்று ஐ.நா மனித உரிமை மன்றத்தில் பேசிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இலங்கையில் போர் நிறைவுப்பெற்ற பின்பும் தொடர்ந்து இனப்படுகொலை நடைப்பெற்று வருவதாகவும் ஆகவே ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 
செப்டம்பர் 25, 2017 அன்று ஐ.நா மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார். 
இந்நிலையில் மார்ச் 19, 2019 அன்று ஐ.நா. பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டுமென்றும், இலங்கையில் நடந்த போர் குற்றத்தை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என ஐ.நா மன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தனது கருத்தினை முன்வைத்தார்.  
 இந்த மன்றத்தில் 2015 செப்டம்பர் 15ம் தேதி அன்று பேசிய மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி இலங்கை போர் குற்றத்தை இலங்கை அரசு விசாரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். அதே போல ஐ.நா. மன்றத்தில் கடந்த 2018ம்ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசியது தொடர்பான சர்ச்சையில் கைது செய்யப்பட்டார். 
ஐ.நா மனித உரிமை மன்றத்தில் பேசுவதற்கு பங்கேற்பாளர்களுக்கு 3 நிமிடம் நேரம் ஒதுக்கப்படும், கருணாஸ் தமிழில் பேசியதால்  மொழிப்பெயர்புடன் 6 நிமிடம் பேசினார்.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க ஐ.நா மன்ற அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக திமுக தரப்பில் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே 2017ம்  ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட போது ஸ்டாலின் சட்டமன்ற பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை. 
தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள தன்னார்வ நிறுவனத்தின் விண்ணப்பம் மூலம் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நிலையில் ஈழப்படுகொலை குறித்து பேசுவார் என திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் இந்த கூட்டத்தில் ஈழப்படுகொலை குறித்த விவாதம் நடைபெறவில்லை. எனவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது  குறித்தும் நாட்டில் உள்ள வேறு சில மனித உரிமை பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.