ஞாயிறு, 31 ஜூலை, 2022

இரவில் அரிசி உணவு சாப்பிடுறீங்களா? பெஸ்ட் டைம் இதுதான்!

 பழங்காலம் முதல் இன்று வரை பெரும்பாலான மக்களின் முக்கிய உணவு அரிசி சாதம். குறிப்பாக தென்னிந்திய மக்கள் தினசரி 3 வேளையும் அரிசி சாதத்தை உணவாக உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அரிசி சாதம் மதிய வேளையில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.

அதே சமயம் உடல் எடையை குறைக்க அரிசி சாதம் ஒரு சிறந்த உணவு என்று சொல்லப்பட்டு வந்தாலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அரிசி சாப்பிடுவதற்கான சரியான நேரம் பார்த்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் சாதத்தை உணவில் சேர்ப்பது ஒரு தேவை மட்டுமல்ல, பெரும்பான்மையான இந்தியர்களுக்கு முன்னுரிமையும் கூட.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரிசி சாதம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டயட் செய்பவர்கள் முதல் டயட்டீஷியன்கள் வரை ஒவ்வொரு எடை குறைப்பு விமர்சகர்கள் வரை அனைவருக்கும் அரிசி பற்றி ஒரு கருத்து உள்ளது. சிலர் அதை தங்கள் உணவில் இருந்து முற்றிலும் விலக்கினாலும், சிலர் வாரத்தில் சில முறை சாப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் உங்கள் வயிற்றைப் பாதிக்காத சாதம் சாப்பிடுவதற்கு சரியான நேரத்தை தேர்வு செய்வது அவசியம். ஆய்வுகளின்படி, மதிய உணவு நேரம் சாதம் சாப்பிட சிறந்த நேரம். இது இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது. முதலில் பகல் நேரத்தில், நமது வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும், மேலும் நமது உடல் கனமான ஆரோக்கியமான உணவுகளை ஜீரணிக்கும்.

காலை உணவுக்குப் பிறகு, உங்கள் உடல் பசியை உணரும் நேரமாகும், மேலும் அடுத்த 8-10 மணிநேரம் உங்களின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

இரண்டாவதாக, பகல் நேரமும் உங்களின் உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும் நேரமாகும். இந்த ஆற்றலை சரியான முறையில் எரியூட்ட வேண்டும். அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கின்றன.

பிரவுன் ரைஸ் VS வெள்ளை அரிசி:

அரிசி ஆரோக்கியமானது. இதில் வெள்ளை அரிசிக்கும் பழுப்பு அரிசிக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், வெள்ளை அரிசி கனமானது மற்றும் ஜீரணிக்க நேரம் எடுக்கும். இது தவிர, வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் சாப்பிடுவதில் வேறுபாடு இல்லை, இரண்டையும் உட்கொள்ளலாம்.

இந்த ஆரோக்கியமான உணவில் சலிப்படையாமல் இருக்க, நீங்கள் சாதாரண வடிவத்தில் அரிசியைச் சேர்க்கலாம் அல்லது இட்லிகள், பூரிகள், ரொட்டிகள் அல்லது கிச்சடி போன்ற சுருக்கமான வடிவங்களில் சேர்க்கலாம். எந்த அரிசி சாதமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவை மனதில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.

source https://tamil.indianexpress.com/food/health-foods-right-time-to-have-eat-rice-for-body-health-487031/

இனி கடையில் வாங்காதீங்க.. நேச்சுரல் கிச்சன் கிளீனர் இப்படி செய்யுங்க!

 kitchen cleaner Recipe

DIY kitchen cleaner Recipe

சமையலறையில் நேரத்தைச் செலவிடுவது, அன்பானவர்களுக்கான உணவைச் சமைப்பது ஆகியவை வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும். நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதில் நேரத்தையும், சக்தியையும் செலவழித்தால், உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க ஏன் கடுமையான, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் உணவை மாசுபடுத்தக்கூடிய மோசமான இரசாயனங்களை பயன்படுத்தாமல் உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய ஏராளமான வழிகள் உள்ளன.

உங்கள் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த அனைத்து இயற்கை தீர்வுகளைப் பயன்படுத்தி நீங்களே சொந்தமாக வீட்டில் கிச்சன்  க்ளென்சர் செய்யலாம். இங்கே பாருங்கள்.

கிச்சன் க்ளென்சர்  செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

1 கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர்

1 கப் தண்ணீர்

3 சொட்டு டீ ட்ரீ எண்ணெய்

3 சொட்டு கிரேப்ஸ் எண்ணெய்

ஸ்பிரே பாட்டில்

எப்படி செய்வது?

ஸ்பிரே பாட்டிலில்’ வினிகரை ஊற்றவும், பின்னர் தண்ணீர் ஊற்றவும்.

மெதுவாக மூன்று சொட்டு டீ ட்ரீ எண்ணெய் மற்றும் மூன்று சொட்டு கிரேப்ஸ் எண்ணெய் பாட்டிலில் ஊற்றவும்.

பயன்படுத்துவதற்கு முன், அனைத்து பொருட்களையும் நன்கு கலக்க பாட்டிலை நன்கு குலுக்கவும்.

நேரடியாக கிச்சன் மேற்பரப்பில் அல்லது கிச்சன் துண்டு மீது தெளித்து, பகுதியை சுத்தமாக துடைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் பாட்டிலின் மேற்புறத்தில் தங்க முனைகின்றன, எனவே எந்த பரப்புகளிலும் தெளிப்பதற்கு முன் நன்கு குலுக்க வேண்டும்.

பாத்திரம் கழுவ

மளிகைக் கடையில் பாத்திரம் கழுவும் சோப் வாங்க மறந்து மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். நீங்களே சொந்தமாக வீட்டில் டிஷ் வாஷர் செய்யலாம்:

1 கப் பேக்கிங் சோடா, 1 கப் வாஷிங் சோடா, 1 கப் கோஷர் உப்பு மற்றும் 3 எலுமிச்சைப் பழச்சாறுடன் சேர்த்து கலக்கவும். உங்கள் டிஷ் வாஷர் சோப் ரெடி.

வழக்கமான சுமைக்கு, 1 தேக்கரண்டி, நிறைய பாத்திரங்களுக்கு 2 தேக்கரண்டி பயன்படுத்தவும்.


source https://tamil.indianexpress.com/lifestyle/kitchen-tips-in-tamil-diy-kitchen-cleaner-recipe-486883/

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

 30 7 2022 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,548 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று 1,624 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.


நேற்று வரை மொத்தம் 13,510 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 1,964 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக இன்றைய நிலவரப்படி 13,094 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அடுத்தபடியாக செங்கல்பட்டில் 158 பேர், கோவையில் 155 பேர், சேலத்தில் 65 பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டனர்.

இத்தகவல் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. எனினும், தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் இருப்போர், ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/todays-corona-affected-list.html

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வயது வீராங்கனை!

 30 7 2022 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

 இந்த ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வயதில் ஒரு வீராங்கனை களமிறங்கி விளையாடி வருகிறார். அவரது பெயர் ராண்டா செடர். இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வீராங்கனை ஆவார்.

இன்று தனது முதலாவது ஆட்டத்தில் விளையாடிய அந்த இளம் வீராங்கனை முதல் கேமில் வெற்றியை ருசித்தார்.

இந்த செஸ் ஒலிம்பியாடில் ராண்டா செடர் தான் மிக இளம் வயது வீராங்கனையாவார். இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

இவரிடம் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பிரதிநிதி யூ-டியூப் சேனலுக்காக நேர்காணல் செய்தார்.

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது எப்படி இருந்தது என்று எழுப்பிய கேள்விக்கு சிறப்பாக இருந்தது என்று தாய்மொழியில் இளம் வீராங்கனை பதிலளித்தார். அவருடன் மேலும் இரண்டு பாலஸ்தீனிய வீராங்கனைகளும் இருந்தனர். அவர்கள் இந்தியாவுக்கு நாங்கள் வருவது இதுவே முதல் முறை. மிகச் சிறந்த நாடு இந்தியா. செஸ் போட்டி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


source https://news7tamil.live/an-8-year-old-girl-who-participated-in-the-chess-olympiad.html

இலங்கை நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா?–ரகுராம் ராஜன் விளக்கம்

 

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளின் பொருளாதார நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளதாகக் கூறியுள்ளார். நமது நாடு வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவுதான் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய ரகுராம் ராஜன், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், பணவீக்கம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான பணவீக்கம்தான் அதிகமாகி இருப்பதாகத் தெரிவித்த ரகுராம் ராஜன், சர்வதேச அளவில் இந்த பணவீக்கம் குறையும்போது இந்தியாவிலும் குறையும் என குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 22 முடிந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 571.56 பில்லியன் டாலராக உள்ளது.


source https://news7tamil.live/will-india-face-sri-lanka-pakistan-like-economic-crisis-raghuram-rajan-reply.html

செயலியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு-நாளை முதல் அமல்

 

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன.

தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/attendance-registration-for-students-teachers-effective-from-tomorrow.html

சனி, 30 ஜூலை, 2022

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று வரை மொத்தம் 13,890 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 2,004 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.


ஒட்டுமொத்தமாக இன்றைய நிலவரப்படி 13,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அடுத்தபடியாக செங்கல்பட்டில் 171 பேர், கோவையில் 159 பேர், சேலத்தில் 70 பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டனர்.

இத்தகவல் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. எனினும், தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/todays-corona-situation-in-tamil-nadu-8.html

இளம் சாதனையாளர் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

 

YASASVI Scheme 2022: NATA invites applications for Young Achievers Scholarship entrance test; check details: துடிப்பான (வைப்ரண்ட்) இந்தியா (YASASVI) திட்டத்திற்கான PM Young Achievers Scholarship விருது திட்டத்திற்கான விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்போது விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 26 வரை அவகாசம் உள்ளது, மேலும் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களுக்கான திருத்தம் செய்யலாம்.

இளம் சாதனையாளர் உதவித்தொகை: விண்ணப்பிக்கும் முறை

படி 1: முதலில் https://yet.nta.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

படி 2: உங்கள் பதிவு நிலையைப் பொறுத்து, முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் ‘பதிவு’ அல்லது ‘உள்நுழை’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அதாவது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உள்நுழை என்பதை கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யவில்லை என்றால், முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

படி 3: தேவையான அனைத்து தனிப்பட்ட மற்றும் கல்வி போன்ற தொழில்முறை விவரங்களை நிரப்பவும்.

படி 4: தேவையான ஆவணங்கள், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றவும்.

படி 5: இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால தேவைக்காக பதிவிறக்கி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தப்பட்ட பிறகு, NTA ஹால் டிக்கெட்களை செப்டம்பர் 5, 2022 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்.

இந்த ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில், மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். இது 100 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQகள்) அடங்கிய புறநிலை வகையாக இருக்கும். இது இந்தியா முழுவதும் 78 நகரங்களில் நடைபெறும், மேலும் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

MSJ&E ஆல் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் படிப்பதற்கான உதவித்தொகை வழங்குவதற்காக, OBC, EBC மற்றும் DNT பிரிவைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மற்றும் XI வகுப்புகளில் படிக்கும் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இளம் சாதனையாளர் உதவித்தொகை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/education-jobs/yasasvi-scheme-2022-nata-invites-applications-for-young-achievers-scholarship-entrance-test-check-details-check-last-date-eligibility-syllabus-yet-nta-ac-in-485899/

புத்தக அட்டை படத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: கோவையில் சர்ச்சை

 கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அட்டை படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருப்பதுபோல உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனிடம் கேட்டபோது ,” புத்தகத்தில் உள்ள உள்ளடகத்தை பாருங்கள். அதை தவிர்த்து கவிஞரின் உடையை பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvalluvar-saffron-dress-in-book-makes-controvery-in-coimbatore-486261/

சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் ரெடி: தீபாவளி முதல் பஸ்கள் இயக்கத் திட்டம்

 

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம்

Chennai Tamil News: தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு புதிய பேருந்து நிலையம் கிளம்பாக்கத்தில் தயாராகிவிட்டது. அதனால், வெளியூர் பேருந்து சேவைகள் அனைத்தையும் சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. 

பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தபின்பு, வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்கள் சென்னைக்கு வர நினைத்தாலோ அல்லது மற்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலோ அவர்களுக்கு தென்படும் ஒரே இடமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்தது. இதனாலேயே சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு அளவில்லாமல் போனது. 

இதற்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. இங்கு, 40 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடத்தப்பட்டது. 

2019ல் துவங்கிய இந்த கட்டுமானம், இந்த ஆண்டு விரைவில் நிறைவுக்கு வருகிறது என மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதனால் மக்களின் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய பேருந்து நிலையத்துக்கான அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு போன்ற பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேட்டில் செயல்படும் வெளியூர் பேருந்து சேவைகளை, கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை நடத்தப்படும் வேளையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமமான ‘கும்டா’ அதிகாரிகள் பங்கேற்றனர். பேருந்து சேவைகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை வகுக்க நியமிக்கப்பட்டுள்ள தனியார் கலந்தாலோசகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், மாநகர பேருந்துகள் நிறுத்தும் இட வசதிகள், மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான இட வசதிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், வெளியூரில் இருந்து சென்னைக்கு வருவோர், பிற போக்குவரத்து சேவைகளை என எல்லாவற்றையும் எளிதில் அணுகுவதற்கான வழிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வரும் தீபாவளியின் போது வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம்  என சி.எம்.டி.ஏ., நம்பிக்கை அளித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-new-bus-terminus-at-kilambakkam-486324/

வெள்ளி, 29 ஜூலை, 2022

தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி

Jul 28, 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாணடமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Credit BBC Tamil

பர்மார் அருகே போர் விமானம் விபத்து: இரண்டு வீரர்கள் பலி

source https://news7tamil.live/both-pilots-killed-in-accident-of-mig-21-aircraft-near-barmer.html

ராஜஸ்தான் பர்மார் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.


ராஜஸ்தான் மாநிலம், பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று மாலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 21 ரக போர் விமானத்தை பயிற்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இரவு 9.10 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. “அவர்கள் இருவரின் இழப்புக்கும் மிகவும் வருந்துகிறோம். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.” என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படை தளபதி வி.ஆர். சௌத்ரியிடம் பேசியுள்ளார். இதுகுறித்து ராஜ்நாத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் பர்மார் மாவட்டத்தில் ஏற்பட்ட போர் விமான விபத்தில் விமானப் படையின் இரண்டு வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நாட்டுக்காக அவர்கள் ஆற்றிய சேவை எப்போதும் மறக்கப்படாது. இந்த கடினமான நேரத்தில், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

“கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போதுவரை சுமார் 6 மிக் 21 விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளால் சுமார் 44 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மிக் 21 ரக விமானம் கடந்த 1963ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயன்பாட்டுக்கு வந்தது. ஒருகாலத்தில் விமானப் படைக்கு முதுகெலும்பாக இருந்திருக்கிறது. ஆனாலும், பழமையானாதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டியது.” என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

-ம.பவித்ரா